காக்கை தீவு மீன் சந்தை, இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை
காக்கை தீவு மீன் சந்தை, இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை
காக்கை தீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை போன்றவை, சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி
மன்றத்தினால் சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை, இதனை ஆராய்ந்து தனக்கு
அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
காக்கைதீவு மீன் சந்தை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றைய (06) தினம் விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த முறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்து தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குறித்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை மின்விளக்கு பொருத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை பிரதேச கடற்றொழில் செயற்பாட்டாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்தனர்.
குறித்த கோரிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக் கொண்ட கடற்றொழில் அமைச்சர், முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானம்
அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானம்
தென்கொரியாவின் எப் 35 ரக போர் விமானம் ஒன்று திடீரென தரை இறக்க பட்டது ,இயந்திரத்தில்
ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தரை இறக்கம் இடம் பெற்றுள்ளது
விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட இந்த கோளாறு தற்போது சீர் செய்ய பட்டு வருகிறது
,எனினும் எவருக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது தப்பித்து கொண்டனர்
காரால் இடித்துவிட்டு தப்பி சென்ற சாரதி
காரால் இடித்துவிட்டு தப்பி சென்ற சாரதி
அவுஸ்ரேலியாவில் மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த நபரை அவ்வழியால பயணித்து கொண்டிருந்த
கார் ஒன்று அந்த நபரை இடித்து கொன்று விட்டு தப்பி சென்றுள்ளது
பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட நபர் சிகிச்சை பலனின்றி பலியானார்
தற்போது தப்பி சென்ற கார் கண்டு பிடிக்க பட்டு சாரதி கைது செய்ய பட்டுள்ளார்
மூன்று பிள்ளககை கொன்று வீசிய தாய்
மூன்று பிள்ளககை கொன்று வீசிய தாய்
பிரிட்டனில் இருபத்தி ஏழு வயதுடைய தாய் ஒருவர் தனது 18 மத சிசு மற்றும் மூன்று சிசுக்களை கொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போதை வஸ்துக்கு அடிமையான நிலையில் இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பான
விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்க பட்டுள்ளது
ரசிய நீர்மூழ்கியை துரத்திய பிரிட்டன் கடற்படை
ரசிய நீர்மூழ்கியை துரத்திய பிரிட்டன் கடற்படை
ரசிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று பிரிட்டன் ஸ்கொட்லாந்து கடலில் இருந்து இருநூறு மைல்
தொலைவில் பயணித்து கொண்டிருந்த பொழுது பிரிட்டன் போர் கப்பல் கண்காணிக்க பட்டு துரத்த பட்டுள்ளது
ஆங்கில கடல் பகுதியிக்குள் நுழைய ரிஷ்ய கப்பல் பிரிட்டனின் கடலடியால் எடுத்துவர படும்
இணைய தொடர்ப்பு வசதிகள் மாற்று எரிபொருள் குழாய்களை தாக்கி அழித்து வருகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதனை குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது
தொடர்ந்து நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் பனிப் போர் பெரும் மோதலை ஏற்படுத்தும்
நிலைக்கு சென்று கொண்டுள்ளதாக நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்
- தேசிய தலைவர் பிரபாகரன் 72 வது பிறந்த நாள் National Leader Prabhakaran’s 72nd Birthday

- மோட்டார் சைக்கிள் திருட்டர்கள் 4பேர் கைது

- டி-56 ரக துப்பாக்கித் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரி துபாயில் கைது

- எரிபொருள் எண்ணெய் இன்றி திணறும் அனுரா அரசு Anura government struggling without fuel oil

- அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fall

பெண்களை முடக்கிப்போடும் மூட்டுவலி
பெண்களை முடக்கிப்போடும் மூட்டுவலி
பொதுவாக வயதானவர்கள்தான் மூட்டுவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு மூட்டு தேய்மானம் முக்கிய காரணமாக அமைகிறது.
மூட்டு வலியால் அவதிப்படுகிறவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இது எல்லா வயது பெண்களை தாக்குகிறது. பெண்களும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
மூட்டு வலி பாதிப்புகளுக்கு உள்ளாகிறவர்களின் அன்றாட வாழ்க்கை சிரமம் நிறைந்ததாகிவிடுகிறது.
பயணிக்க முடியாமலும், வேலைகளை செய்ய முடியாமலும் அவதிப்படுகிறார்கள். அதனால் சரியான வாழ்வியல் முறைகளை பின்பற்றி மூட்டுவலியின்றி வாழ அனைவரும் முயற்சிக்கவேண்டும்.
மூட்டுவலி ஏற்பட்டாலும், தொடக்கத்திலே விழிப்படைந்து அதற்கு தீர்வுகாணவும் முன்வரவேண்டும். மூட்டுவலி தொடர்புடைய பொதுவான விஷயங்கள் பற்றி பார்ப்போம்!
மூட்டுவலிக்கு முக்கியமான காரணங்கள்:
- தசைநார்களிலோ, மூட்டு எலும்பிலோ ஏற்படும் காயங்கள்.
- மூட்டுகளின் இயக்கத்தை எளிதாக்கும் `ப்ளூயீடு’ நிறைந்திருக்கும் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள்.
- காலில் தொடை எலும்பில் இருந்து கால் மூட்டிற்கு கீழே உள்ள எலும்புவரை தசைநார் நீண்டிருக்கிறது. ‘ஆன்டிரியர் க்ருஷியேட்டட் லிகமென்ட்’ எனப்படும் அதனை சுருக்கமாக ‘ஏ.சி.எல்’ என்று அழைக்கிறோம்.
- இந்த தசைநாரில் ஏற்படும் காயங்கள் ‘ஏ.சி.எல் இஞ்சுரி’ எனப்படுகிறது. இந்த காயமும் கடுமையான வலியை ஏற்படுத்தும்.
- கால்பந்து, கைப்பந்து விளையாடு பவர்கள் விளையாட்டின்போது இயல்புக்கு மாறாக கால்களை இயக்கும்போது திடீரென்று இந்த வகை காயங்கள் தோன்றும்.
- மூட்டில் இருக்கும் எலும்புகளிலோ, மூட்டுக் கிண்ணத்திலோ ஏற்படும் லேசான காயங்கள் கூட அதிக வலியை தோற்று விக்கும்.
- நாற்காலியில் ஏறி நின்று வேலை செய்து கொண்டிருக்கும்போது கீழே விழுந்தாலும், இருசக்கர வாகன பயணத்தில் கீழே விழுந்தாலும் மூட்டில் காயம் ஏற்படலாம். எலும்பு பலவீனமாக உள்ளவர்கள் நடக்கும்போது கீழே விழுந்துவிட்டால்கூட மூட்டில் காயம் ஏற்பட்டுவிடும்.
- நாம் பணி செய்யும்போது உடலில் ஏற்படும் அதிர்வுகளை தாங்கும் ‘ஷாக் அப்சர்பர்’ போன்று செயல் படுபவை, மெனிஸ்கஸ் எனப்படும் ஜவ்வு போன்ற திசுக் களாகும்.
- கால்மூட்டுகளின் அதிர்வுகளை தாங்கும் விதத்தில் இவை செயல்படும். எலும்புகள் பாதுகாப்பாக இயங்க உதவும் இந்த மெனிஸ்கஸ் பகுதியில் முறிவு ஏற்பட்டாலும் மூட்டு வலி தோன்றும். நமது முழு உடலையும் மூட்டு
- பெண்களை முடக்கிப்போடும் மூட்டுவலி
- தாங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென்று இயல்புக்கு மாறாக இயங்கும் சூழ்நிலை ஏற்படும்போது இந்த மெனிஸ்கஸ் பகுதியில் பாதிப்பு ஏற்படுகிறது.
- மூட்டுகளின் சிறப்பான இயக்கத்திற்காக சில வகை திரவங்கள் உள்ளன.
- மூட்டுக்கிண்ணத்தின் கீழ்ப்பகுதியிலும் ஒருவகை திரவம் உள்ளது. அதில் நீர் சேர்ந்தால் மூட்டின் இயல்பான இயக்கம் தடைபடும். அப்போதும் மூட்டு வலி தோன்றும்.
- இடுப்பு பகுதி முதல் மூட்டு வரை தசை போன்ற பகுதி ஒன்று உள்ளது. அதனை இலியோட்டிபியல் பான்ட் (iliotibial band) என்போம்.
- இந்த தசை முறுக்கிக்கொண்டாலும் மூட்டு வலி தோன்றும். ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுகிறவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப் படுவார்கள்.
- மூட்டுக் கிண்ணம் இடம்பெயர்ந்து போகுதல், இடுப்பு மற்றும் கால் பாதங்களில் வலி ஏற்படுதல் போன்றவைகளாலும் மூட்டுவலி ஏற்படுவதுண்டு.
- சிலவகை வாத நோய்களும் மூட்டு வலிக்கு காரணமாக இருக்கிறது. ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ், ரூமட்டோய்ட் ஆர்த்தரைட்டிஸ் போன்றவை இந்த வகை நோய்களாகும்.
இதுபோல் மூட்டு வலி ஏற்பட இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.
பொதுவாக வயதானவர்கள்தான் மூட்டுவலி யால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 60 வயதைக் கடந்த பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதற்கு மூட்டு தேய்மானம் முக்கிய காரணமாக அமைகிறது.
மூட்டு வலி கொண்டவர்களுக்கு சாதாரணமாக ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. மூட்டு தேய் மானத்தை கண்டறிய எக்ஸ்ரே சோதனை, எலும்பு முறிவை நுட்பமாக அறிய சி.டி.ஸ்கேன் பரிசோதனை, தசைநார்களில் கிழிவு ஏற்பட்டிருப்பதை கண்டறிய எம்.ஆர்.ஐ.ஸ்கேன், மூட்டுகளின் உள்பகுதி பாதிப்பை தெரிந்துகொள்ள ஆர்த்ரோஸ்கோப் பரிசோதனை போன்றவை வழக்கத்தில் உள்ளன.
பரிசோதனை மூலம் காரணத்தை கண்டறிந்த பின்பு அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மூட்டு வலியை நீக்கும் மருந்து களோடு, சிகிச்சைக்கான மருந்துகளும் தரப்படும். சில பாதிப்புகளுக்கு ஊசிகளும் போடப்படும்.
மூட்டுகளை பலப்படுத்துவதுதான் மூட்டு வலியை குறைப்பதற்கான சிறந்த தீர்வு. மூட்டை சுற்றியுள்ள தசைகள் பலப் படுத்தப்பட்டால்தான் மூட்டின் இயக்கம் சீராகும்.
குறிப்பாக தொடைப்பகுதியின் முன்னும், பின்னும் இருக்கும் தசைகள் வலுப் படுத்தப்பட வேண்டும். அதற்கான உடற்பயிற்சிகளும் அவசியமாகும்.
பெண்களுக்கு மூட்டுவலி மருந்து களோ, உடற்பயிற்சிகளோ முழுமையான பலன் தராதபோது அறுவை சிகிச்சை அவசியமாகும். பாதிப்புக்கு ஏற்ப பலவகையான நவீன அறுவை சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆபரேஷனுக்கு முன்பு அது பற்றி முழுமையாக நோயாளிகள் அறிந்துகொள்வது மிக அவசியம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ஆபரேஷன் தேவைப்படுவதில்லை.
நம்மை தூக்கி சுமக்கும் எலும்புகளையும், அதற்கு பக்க பலமாக இருக்கும் மூட்டு களையும் சரியாக பராமரித்தால் வலியின்றி நிம்மதியாக வாழலாம்!
கொரோனா பாதிப்பு… வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு
கொரோனா பாதிப்பு… வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு… வீட்டு தனிமையில் நடிகர் மகேஷ் பாபு
மகேஷ் பாபு
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில்
வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், சமீபத்தில்
தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் மகேஷ் பாபு குணமடையவேண்டும் என அவரது ரசிகர்கள் ஆறுதல் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.
துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை
துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவை தனுஷ் படத்தில் நடித்த நடிகை ஒருவர் துபாயில் அவரை சந்தித்து பேசியிருக்கிறார்.
துபாயில் நயன்தாராவை சந்தித்த தனுஷ் பட நடிகை
நயன்தாரா
நடிகை நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுக்காகவும் சுற்றுலா செல்லவும் ஏதாவது ஒரு நாட்டிற்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில்
கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின் போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
நயன்தாரா துபாயில் இருந்த நாட்களில் நடிகை மெஹ்ரீன் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார்.
நடிகை மெஹ்ரீன், தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எரிவாயு தட்டுப்பாடு – பல நூறு உணவகங்கள் அடித்து பூட்டு
எரிவாயு தட்டுப்பாடு – பல நூறு உணவகங்கள் அடித்து பூட்டு
இலங்கையில் சிலிண்டர் தட்டு பாடு மற்றும் வெடித்து சிதறி வந்த நிலையில் இருபது வீதமான
உணவகங்கள் தற்காலிகமா அடித்து மூட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
கோட்டா ஆட்சியில் மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
போலி சீன உர கப்பலுக்கு -6.7 மில்லியன் டொலர் செலுத்தும் இலங்கை
போலி சீன உர கப்பலுக்கு -6.7 மில்லியன் டொலர் செலுத்தும் இலங்கை
சீனாவில் இருந்து இலங்கைக்கு எடுத்து வரப்பட்ட உரம் போலியான ,தரமற்ற முறையில் உள்ளவை
என கோரி குறித்த கப்பல் சீனாவுக்கு திருப்பி அனுப்ப பட்டது
மேற்படி விடயம் தொடர்பில் சர்ச்சைகள் முறுகல் எழுந்து வந்த நிலையில் தற்போது குறித்த
கப்பலுக்குரிய 6,7 மில்லியன் டொலரினை இலங்கை நாளை செலுத்த உள்ளது என தெரிவிக்க பட்டுள்ளது
காணமல்போன சிறுவர்கள் மீட்பு
காணமல்போன சிறுவர்கள் மீட்பு
2021 ஆண்டு நவம்பர் மாதம் காணமல்போன சிறுவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொட்டதெனியாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தேமுல்ல, பாதுராகொட பகுதியை சேர்ந்த உறவுக்கார சகோதரர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் முறைப்பாடு செய்யப்பட்டது.
10 மற்றும் 12 வயதுடைய சிறுவர்கள் இருவரே இவ்வாறு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 முக்கிய பகுதிகளில் 16 மணித்தியால நீர் தடை
8 முக்கிய பகுதிகளில் 16 மணித்தியால நீர் தடை
வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
சனிக்கிழமை (08) காலை 08 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கீழ்கண்ட பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைபடும்.
கொழும்பு மாநகர சபை
தெஹிவளை – கல்கிசை மாநகர சபை
கோட்டே மாநகர சபை
கடுவலை மாநகர சபை
மஹரகம
பொரலஸ்கமுவ
கொலன்னாவ
கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேசங்கள்
10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம்
10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம்
எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை மாற்றத்தின் போது பல அமைச்சுப் பதவிகள் மாற்றப்படவுள்ளதுடன் விவசாய அமைச்சு பதவியும் மாற்றப்படவுள்ளதாக தெரியவருகிறது.
தற்போது காணி அமைச்சராக உள்ள எஸ்.எம்.சந்திரசேன புதிய விவசாய அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு
தனியார் துறை ஊழியர்களுக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு
வாழ்க்கை சுமைக்காக அரச ஊழியர்களை போன்று தனியார் துறையில் பணியாற்றுவோருக்கும் ஒரே மாதிரியாக கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் தனியார் துறைக்கும் 5,000 ரூபா கொடுப்பனவு அவசியம் கிடைக்க வேண்டும் என்று நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர், இந்த விடயம் தொடர்பிலான முதலாவது சுற்று பேச்சுவார்த்தை இம்மாதம் 7 ஆம், 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் தொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
தனியார் துறையில் ஆடை தொழில்துறை, பெருந்தோட்ட தொழில்துறை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை நேரடியாக மற்றும் அலுவலக சேவை சட்டத்தில் உள்வாங்கும்
நிறுவனங்கள் அடங்கலாக அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளிமார்களை அழைத்து அவர்களுடன் இந்த 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும்
நட்புறவுடனான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது 12 ரொக்கட் தாக்குதல்
ஈராக் அமெரிக்கா இராணுவ முகாம் மீது 12 ரொக்கட் தாக்குதல்
மேற்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா கூட்டு படைகளின் US Ain al-Assad airbase
இராணுவ தளம் மீது புதின் கிழமை 12 ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
அணைத்து ரொக்கட்டுக்களும் துல்லியமாக வீழ்ந்த்து வெடித்துள்ளன
இதில் ஏற்பட்ட சேத விபரங்களை அமெரிக்கா இராணுவ தலைமையகம் இதுவரை வெளியிடவில்லை
ஒரே நாளில் இரு நாடுகளில் உள்ள அமெரிக்கா படைகள் தளங்கள் தாக்குதலுக்கு
உள்ளாகியுள்ளது அமெரிக்கா படைகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ முகாம் மீது ரொக்கட் தாக்குதல்
கிழக்கு சிரியாவில் அமைந்துள்ள அமெரிக்காவின் Al-Omar oil இராணுவ நிலைகள் மீது எதிரி
படைகள் திடீர் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்
இந்த தாக்குதலில் கணிசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடர்ந்து இராணுவ தளம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
தமிழர்களிடத்தில் மன்னிப்புக் கேட்டால் பிரச்சினை தீரும்
தமிழர்களிடத்தில் மன்னிப்புக் கேட்டால் பிரச்சினை தீரும்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களமக்களிடம் அடிமட்டத்துக்கு இறங்கி பகிரங்கமாக, தேசிய ரீதியில் மன்னிப்புக் கோரினாலேயே எமது நாட்டின் அரைவாசிப்
பிரச்சினைகள் தீா்ந்து விடுமென யுத்தம் முடிவடைந்த காலகட்டத்தில் மீள் புனா்வாழ்வு மற்றும் அத்தியாவசிய சேவை ஆணையாளராக இருந்த எஸ்.பி.திவாரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்தோன்றி சாட்சியமளிக்கும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவா் அங்கு தொடா்ந்து சாட்சியமளிக்கையில், தமிழ், முஸ்லிம் மக்கள் நல்லவர்கள், எனது 40
வருடகால அரச சேவையில் அவர்களோடு இணைந்து சிறப்பாக சேவையாற்றியுள்ளேன். கொடுத்த ஒரு விடயத்தை அவா்கள் சிறப்பாக செய்து தருவார்கள் எனவும் தெரிவித்தார்.
நாட்டில் இன்றும் மொழிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இன்றும் தெற்கில் உள்ள அரச
அதிகாரிகள் தனிச் சிங்களத்திலேயே வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு அலுவலக கடிதங்களை அனுப்புகின்றார்கள்.
இம்மொழிப்பிரச்சினைக்கு அரசமட்டத்தில் இருந்து கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்க
வேண்டும். இந்த மொழிப்பிரச்சினைகள் இன்று மட்டுமல்ல ஜி.ஜி.பொண்னம்பலம் காலம்தொட்டு தொடர்கிறது எனவும் தெரிவித்தார்.
- தேசிய தலைவர் பிரபாகரன் 72 வது பிறந்த நாள் National Leader Prabhakaran’s 72nd Birthday
- மோட்டார் சைக்கிள் திருட்டர்கள் 4பேர் கைது
- டி-56 ரக துப்பாக்கித் திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரி துபாயில் கைது
- எரிபொருள் எண்ணெய் இன்றி திணறும் அனுரா அரசு Anura government struggling without fuel oil
- அனுரா அரசு விரைவில் கவிழும் The Anura government will soon fall
வெடிகுண்டுகளை கடத்தி செல்லமுற்பட்ட 6 பேர் கைது
வெடிகுண்டுகளை கடத்தி செல்லமுற்பட்ட 6 பேர் கைது
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினரால் விடுவிக்கப்பட்ட காணியில்
கைவிடப்பட்ட பாரிய இரண்டு வெடிகுண்டுகளை இரும்பிற்காக கடத்தி செல்லமுற்பட்ட 6 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
ஜனவரி 4ஆம் திகதியன்று விடுவிக்கப்பட்ட காணியில், வேலி அமைப்பதற்காக, சென்றிருந்த நபர், பாரிய குண்டுகளை கண்டுள்ளார். அதனை இரும்புக்காக விற்பனை செய்வதற்கு எடுத்துச் செல்ல
முற்பட்ட போதே கைவேலி பகுதியைச் சேர்ந்த, அறுவர் கைது செய்யப்பட்டனர். ஒவ்வொன்றும் சுமார் 400 கிலோக்கிராம் நிறை கொண்டது.
கைது செய்யப்பட்ட அறுவரையும் மாங்குளம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (05)
முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக புதுக்குடியிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்
சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்
பிரபல நடிகையாக பல மொழிகளில் நடித்து வரும் நிதி அகர்வால் தற்போது மதுபான விளம்பர படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்
மதுபான விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்
நிதி அகர்வால்
நடிகைகள் சினிமாவில் நடிப்பதை தாண்டி விளம்பர படங்களில் நடித்தும் கோடிக்கணக்கில் சம்பாதிக்து வருகிறார்கள் அவ்வப்போது இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி சிக்கலில் மாட்டி
கொள்கின்றனர். சமீபத்தில் முன்னணி நடிகைகள் ஹன்சிகா, பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள்
அதிக பணம் வாங்கிக்கொண்டு வெளிநாட்டு மதுபானங்களை அவர்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் தமிழில் ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்துள்ள நிதி அகர்வாலும் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவருடைய சமூக வலைதள பக்கத்தில் மது பாட்டிலை திறந்து கையில் உள்ள கோப்பையில்
மதுவை ஊற்றி முகர்ந்து பார்ப்பது போன்றும் அந்த பிராந்தியை நன்றாக பருகலாம் என்று பேசியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நிதி அகர்வால் மது விளம்பரத்தில் நடித்தது சமூக ஆர்வலர்களை ஆத்திரப்படுத்தி உள்ளது. இளைஞர்களை நிதி அகர்வால் மது
அருந்த தூண்டுவதாக வலைத்தளத்தில் பலர் விமர்சித்தும், கண்டித்தும் வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் இந்த பதிவு பேசு பொருளாகியிருக்கிறது.
11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிசய மனிதர்
11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிசய மனிதர்
மருத்துவமனைக்கு சென்று 12வது முறையாக கொரோனா தடுப்பூசி போட முயன்றபோது மாட்டிக் கொண்டார்.
10 மாதங்களில் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அதிசய மனிதர்
11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரம்மாதேவ் மண்டல்
பீகார் மாநிலத்தை சேர்ந்த 84 வயதான பிரம்மாதேவ் மண்டல், தற்போது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
மாதேபுரா மாவட்டத்தில் உள்ள அவுரை கிராமத்தைச் சேர்ந்த அந்த முதியவர், கடந்த 10 மாதங்களில் பல்வேறு இடங்களில் 11 முறை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார்.
என்ன நடக்கிறது என்பதை அதிகாரிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே 11 முறை தடுப்பூசியைப் பெற்றதாக பிரம்மாதேவ் கூறுகிறார்.
தடுப்பூசி போட்டதில் இருந்து முழங்கால் வலி பிரச்சனை குறைந்துள்ளது என்கிறார். அதனால்தான் பல தடுப்பூசிகளை அவர் போட்டுக் கொண்டுள்ளார்.
தபால்துறை ஊழியராக நீண்ட காலம் பணியாற்றிய பிரம்மாதேவ், 12 வது முறையை கொரோனா
தடுப்பூசி போட சென்றபோது, சுகாதாரத்துறை பணியாளர்களால் அடையாளம் காணப்பட்டார். இதன் விளைவாக அவர் 11 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டது அம்பலமானது.
தொலைபேசி எண்களை மாற்றி மாற்றிக் கொடுத்து தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டதாக
கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, மருத்துவ அதிகாரி டாக்டர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.
தமது அடையாள அட்டையை மாற்றி தடுப்பூசியை பலமுறை போட்டுக் கொள்வது சட்டத்திற்கு
எதிரானது என மருத்துவமனை தலைமை மருத்துவர் அமரேந்திர நாராயண் ஷாஹி கூறியுள்ளார். பிரம்மதேவ் மண்டல் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




















