Tag: விமல்
அரசை கடுமையாக சாடும் விமல்
அரசை கடுமையாக சாடும் விமல்
அரசை கடுமையாக சாடும் விமல் ,நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் கருத்துக்களைத் தாம் வன்மையாக கண்டிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கடந்த சர்வதேச தொழிலாளர் தினமான மே தின மேடை
கடந்த சர்வதேச தொழிலாளர் தினமான மே தின மேடைகளில், அரசாங்கத் தரப்பினர் நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்துப் பலத்த சந்தேகத்தையும்
அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
நீதிமன்றத்தில் இருந்து எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள தீர்ப்புகள் மற்றும் அவற்றுக்கான திகதிகளைக் குறிப்பிட்டு, அந்தத் தீர்ப்புகளைக் கைதட்டி
வரவேற்கத் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இலங்கையின் நீதி வழங்கும் முறைமை
இவ்வாறான செயல்பாடுகள் இலங்கையின் நீதி வழங்கும் முறைமை முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாக விமல் வீரவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மட்டுமன்றி, அமைச்சர்கள் சிலரும் மே தினப் பேரணிகளில் இத்தகைய பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இது நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்துப் பாரிய சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவிப்பது நீதிபதிகளின் கௌரவத்தையும், நீதிமன்றத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- ஈரான் மீதான போர் உலகத்திற்கு ஆபத்து ஐரோப்பா

- அமெரிக்காவால் பறிமுதல் செய்யப்பட்ட முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க ஈரான் கோரிக்கை

- அனுராதபுரத்தில் 5000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற குழந்தைகள்

- போலி போக்குவரத்து அபராத மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ஏழு இலங்கை இளைஞர்கள்

- களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் தொழிலதிபர் பலி

- குவைத்தில் உள்ள அமெரிக்க விமானத் தளத்தைத் தாக்கியதாக ஈரான்

- 52வது அமெரிக்கன் மியூசிக் விருதுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிப்பு

- இலங்கையின் அனைத்துக் குடிமக்களிடமும் சமாதானம் நம்பிக்கை மற்றும் விசுவாசத்தை வளர்க்க சஜித் அழைப்பு

- இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்

- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்
மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்
மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல் ,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தங்காலை கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை செவ்வாய்க்கிழமை (16) சந்தித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர், விமல்
மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர், விமல் வீரவன்ச தனது பேஸ்புக் கணக்கில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:
“பல தசாப்தங்களாக வளர்க்கப்பட்ட விடுதலைப் புலி பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் அரசியல்
தலைமைத்துவத்தை வழங்கிய 5வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள்
இருந்தபோதிலும், கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து திரும்பி தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் என்ற
உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த செய்தி
செய்தி, இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த செய்தியாகும்.
அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், பயங்கரவாதத்தை தோற்கடிக்க அவர் வழங்கிய அரசியல் தலைமைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு செயலாகும்.
தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜெயந்த சமரவீர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பிற பிரதிநிதிகள் தங்காலை கார்ல்டன்
இல்லத்தில் அவரைச் சந்தித்து அவரது நலம் குறித்து விசாரித்து எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம்.”
நாமல் ஒரு ப்ரொய்லர் கோழி திட்டித்தீர்த்தார் விமல்
நாமல் ஒரு ப்ரொய்லர் கோழி திட்டித்தீர்த்தார் விமல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒரு ப்ரொய்லர் கோழி போன்றவர் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொது வெளியில் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
”மக்கள் துன்பத்தில் இருக்கும் போது சில பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து நாமல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
நாமலுக்கு எந்தவித அனுபவமும் அரசியல் அறிவும் இல்லை.
அவரும் ரணில் போன்றவர் தான். இன்றுவரை அவர் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. மக்கள் ஆத்திரமடைவதில் ஒரு நியாயம் இருக்கிறது. அவர் எப்போதும் கற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர் முன்கூட்டியே வளர்ந்த ஒரு ப்ரொய்லர் கோழி.
நாமல் ஒரு ப்ரொய்லர் கோழி திட்டித்தீர்த்தார் விமல்
தகுதி இல்லாதவர்களும் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்சிப்பீடம் ஏறியது தான் இந்த நாட்டினதும் ராஜபக்ஷ குடும்பத்தினதும் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
கடந்த பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித்த ராஜபக்ஷவை களமிறக்க அவர்கள் திட்டமிட்டனர். டலஸ் அழகப்பெரும தான் கோட்டாபய ராஜபக்ஷவிடம் அதை தடுத்து நிறுத்தும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார்” என ஹம்பாந்தோட்டையில்
நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தயாரிப்பாளர் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார்.
மன்னர் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார்.
நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் மகள் புகார்
விமல் – தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா
நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும்
திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப
தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின் மகள் ஹேமா இன்று (25-04-2022) காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியதாவது,
பொருள் : ரூபாய் 1,73,78,000/- திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி, அதன் பின்னர் சிறிய சிறிய
தொழில்கள் செய்து தன்னை ஒரு தொழில் அதிபராக நிலை நிறுத்தி கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். சினிமா மீது தீராத ஆவல் கொண்டிருந்த அவரை
மூளைச்சலவை செய்து ” மன்னர் வகையறா ” என்ற திரைப்படத்தை துவக்க வைத்தவர் நடிகர் விமல்.
படத்தின் பட்ஜெட்டை ரூ. 5 கோடி என்றும், ரூ. 1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதி தொகையை சினிமா உலகத்திற்குள் கடனாக பெற்று கொள்ளலாம் என்றும் நடிகர் விமல் அளித்த உத்தரவாதத்தை நம்பிய எனது தந்தை சென்னைக்கு வந்து ஒரு
அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வைத்து கொண்டு பட தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தார். அப்போதே எங்கள் குடும்பத்திற்குள் கலகம் ஆரம்பமாகிவிட்டது. நானும்
எனது தாயாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எங்கள் பேச்சை கேட்காமல் விமல் போன்ற மண் குதிரைகளை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்.
விமல்
விமல்
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு துவங்கியது. 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஆறு மாத காலத்திற்குள் படத்தை வெளியிட்டு விட்டு, பின்னர் சினிமாவிற்குள் கால் வைக்க மாட்டேன் என எனது
தந்தையும் எங்களுக்கு உறுதி அளித்ததால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பணிகளை பார்வையிட எனது அம்மாவும் சம்மதித்தார்.
17 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த வேளையில், விமலுக்கும் கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை வர, இரண்டு நாட்கள் படப்பிடிப்பு
நடைபெறாமல் இருந்ததால் மனம் வெறுத்து போன என் தந்தை அதற்கு மேல் படப்பிடிப்பை தொடர மனமில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்ய சொல்லிவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார்.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தந்தையை சந்தித்த விமலிடம் ” உன்னை நம்பி தான் இந்த துறைக்கு வந்து முதலீடு செய்தேன். தனி மனித ஒழுக்கம் இல்லாத உன்ன நம்பி மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. இந்த படம் அப்படியே
கிடக்கட்டும். என் நஷ்டத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுகட்டி விடுவேன் ” என்று கூறி மேற்கொண்டு படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று ஆணித்தரமாக
சொல்லிவிட்டார். சில நாட்கள் கழித்து அப்பாவை சென்னைக்கு அழைத்த விமல், இந்த படத்தை நம்பி தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்து, படத்தை வெளியிட்டு விட்டு, நான் செலவு செய்த தொகை போக
மீதமிருக்கும் தொகையில் தங்கள் தொகையை தங்களிடம் கொடுத்து விடுகிறேன் என கூறியதாலும், விமலின் எதிர்காலம் இந்த படத்தில் இருக்கிறது என்பதாலும் விமலின்
யோசனைக்கு என் தந்தை ஒப்புகொண்டு 10.03.2016 அன்று ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.
தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா
தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா
மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஒப்பந்தத்தை பெற்று கொண்ட பின்பு ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை விமல் படத்தை ஆரம்பிக்காமல், படத்தின் மீது கடன் வாங்கி
ஊதாரித்தனமாக செலவு செய்து வந்ததால், ஜூன் மாதம் 15 ஆம் தேதி விமலை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்து தரும்படி கேட்டார் அப்பா. அதற்கு மறுத்து விட்டார் நடிகர் விமல்.
இதனால் ஜூன் மாதம் 17 ஆம் தேதி முறைப்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் எனது தந்தை. திரையுலகுக்கு எனது தந்தை புதியவர்
என்பதாலும், விமல் ஒரு முக்கிய பிரமுகர் என்பதாலும் எனது தந்தைக்கு சாதகமான பதில் சங்கத்திலிருந்து வரவில்லை. இதனால் மனம் உடைந்து போன என் தந்தை அமைதியாகிவிட்டார்.
அதன் பிறகு படத்தை தயாரித்து, வெளியீட்டிற்கு விமல் தயாரான போது, விமலை சந்தித்து தான் முதலீடு செய்த தொகையை திருப்பி கேட்டார் அப்பா. விமலிடமிருந்து
சாதகமான பதில் வராததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனது தந்தை (வழக்கு எண் : C.S.No.58/2018)
இந்த வழக்கின் காரணமாக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு எனது தந்தையுடன் சமரசம் செய்து கொண்ட நடிகர் விமல் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை
உயர்நீதிமன்றத்தில் Memorandum of Settlement (ஆவண எண் : 7782/2018) தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை
விமல் திருப்பித்தரவில்லை. பணத்திற்கு ஈடாக தருவதாக சொன்ன கால்ஷீட்டையும் தரவில்லை.
இந்நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் மற்ற மொழி டப்பிங் உரிமைகள் என் தந்தை வசம் வந்துவிட்டது. ஆனால் என் தந்தைக்கு
தெரியாமல் 21.06.2019 அன்று படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வேறொருவருக்கு விற்று எங்களை மோசடி செய்துவிட்டார் நடிகர் விமல்.
எனவே ஐயா அவர்கள் மோசடி செய்த நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு சேர வேண்டிய ரூபாய்.1,73,78,000/-
தொகையை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை எடுக்க படும் விமல் கூவல்
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் மிகவும் கடுமையான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் அவசர கூட்டத்தின் பின்னர்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.











