Tag: சாடும் விமல்
அரசை கடுமையாக சாடும் விமல்
அரசை கடுமையாக சாடும் விமல்
அரசை கடுமையாக சாடும் விமல் ,நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் கருத்துக்களைத் தாம் வன்மையாக கண்டிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கடந்த சர்வதேச தொழிலாளர் தினமான மே தின மேடை
கடந்த சர்வதேச தொழிலாளர் தினமான மே தின மேடைகளில், அரசாங்கத் தரப்பினர் நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்துப் பலத்த சந்தேகத்தையும்
அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
நீதிமன்றத்தில் இருந்து எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள தீர்ப்புகள் மற்றும் அவற்றுக்கான திகதிகளைக் குறிப்பிட்டு, அந்தத் தீர்ப்புகளைக் கைதட்டி
வரவேற்கத் தயாராக இருக்குமாறு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இலங்கையின் நீதி வழங்கும் முறைமை
இவ்வாறான செயல்பாடுகள் இலங்கையின் நீதி வழங்கும் முறைமை முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாக விமல் வீரவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மட்டுமன்றி, அமைச்சர்கள் சிலரும் மே தினப் பேரணிகளில் இத்தகைய பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இது நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்துப் பாரிய சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களைத் தெரிவிப்பது நீதிபதிகளின் கௌரவத்தையும், நீதிமன்றத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- மேற்குக் கரையில் நடந்த சோதனைகளின் போது பாலஸ்தீனியர் காயம்

- ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

- அபேத் அபு ஷெஹாதே இஸ்ரேலிய காவல்துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

- ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய்க் கப்பல்கள் தீப்பிடித்து

- கொழும்பு வெள்ளப்பெருக்கு குறித்து அரசாங்கத்தை சஜித் விமர்சித்தார்

- காலி மீன்பிடித் துறைமுகத்தில் தீ விபத்தில் ஏழு மீன்பிடிப் படகுகள் அழிந்தன

- கொழும்பு இரத்தினபுர பிரதான சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து தடைபட்டது

- 4 பேர் நீரில் மூழ்கி பலி

- கனமழையால் அவிசாவெல்ல தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது

- நவகமுவவில் பல வாகனங்கள் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்

- பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை மீண்டும் கட்ட ஈரான் அனுமதிக்காது

- காசா போர்க்குற்றங்கள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு நெதர்லாந்துக்கு வருகை தந்த அமெரிக்க-இஸ்ரேலிய முன்னாள் ராணுவ வீரர்










