பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிலாபம் விபத்தில் 22 வயது இளைஞன் பலி

சிலாபம் விபத்தில் 22 வயது இளைஞன் பலி

சிலாபம் – திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு அருகில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை நிரப்பிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன், அதேவீதியில் சென்ற டிப்பர் லொறியில் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் – திகன்வெவ, மாரக்கெல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியின் அருகே நின்றுகொண்டு உழவு இயந்திரத்திற்கு எரிபொருள் ஊற்றிக்கொண்டிருந்த இளைஞன் மீதே இவ்வாறு டிப்பர் வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது தந்தைக்கு சொந்தமான சிறிய பெக்கோ இயந்திரத்தை தனது சொந்த உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற போது, உழவு இயந்திரத்தில் திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, எரிபொருளை எடுத்து உழவு இயந்திரத்திற்கு நிரப்பிக் கொண்டிருந்த போது, அவ்வீதியூடாக அதிவேகமாக பயணித்த டிப்பர் வாகனம் வீதியை விட்டு விலகி அந்த இளைஞன் மீதி மோதி கவிழ்ந்துள்ளது.

விபத்தில் இளைஞன் தூக்கி வீசப்பட்டு சிறிய பள்ளமொன்றில் விழுந்ததாகவும், விபத்தில் கவிழ்ந்த டிப்பரின் முன்பக்க இரண்டு சக்கரங்கள் இளைஞனின் மார்பில் கடுமையாக தாக்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையக போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

வைத்தியசாலையில்… கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிய லொறி ஒன்று டயர் வெடித்து வீதியை விட்டு விலகி எதிர் திசையில் ஓடி மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொஸ்கம, அலுபோடல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

அனுராதபுரம் ரம்பேவ கோர விபத்தில் மூவர் பலி

அனுராதபுரம் ரம்பேவ கோர விபத்தில் மூவர் பலி

அனுராதபுரம் ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் மீதே கெப் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர் கெப் ரக வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறி போக்குவரத்து லொறியுடன் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொத்துஹெர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நொரச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

புளச்சேனை நோக்கிச் சென்ற லொறியுடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த 4 வயது குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் கடந்த 2 மாதங்களில் வீதி விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

வாகன விபத்தில் அருட்தந்தையொருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் அருட்தந்தையொருவர் பலி

வாகன விபத்தில் அருட்தந்தையொருவர் பலி

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன் நாற்சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (4) பதிவாகியுள்ளது .

மன்னார் மறை மாவட்டம் , சலேசியன் சபையைச் சேர்ந்த 34 வயதுடைய அருட்தந்தை மரிசால் டிலான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெற்றுள்ளதுடன் அதில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வருகையில் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

இதன் போது படுகாயமடைந்த அருட்தந்தையை மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வாகன விபத்தில் நால்வர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலைய விபத்தில் வெளிநாட்டு தம்பதி உட்பட 3 பேர் காயம்

கட்டுநாயக்க விமான நிலைய விபத்தில் வெளிநாட்டு தம்பதி உட்பட 3 பேர் காயம்

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வெளிநாட்டு தம்பதியரை ஏற்றிச் சென்ற கார், கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோத விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதில், வெளிநாட்டு தம்பதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இத்தாலிய தம்பதி (76-78) மற்றும் அநுராதபுரம் பந்துலகமைச் சேர்ந்த 42 வயதான சாரதி ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

வெளிநாட்டுக் கணவனும் மனைவியும் நேற்று இரவு 09 மணியளவில் தமது பயணத்தை முடித்துக் கொண்டு இத்தாலி செல்வதற்காக காரில் ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்

தன்னாமுனை விபத்தில் ஒருவரி பலி: மூவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

தன்னாமுனை விபத்தில் ஒருவரி பலி: மூவர் படுகாயம்

தன்னாமுனை விபத்தில் ஒருவரி பலி: மூவர் படுகாயம்

மட்டக்களப்பு – தன்னாமுனை பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (16) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

காத்தான்குடியை சேர்ந்த நான்கு பேர் முச்சக்கர வண்டியில் ஏறாவூரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது தன்னாமுனையில் வைத்து முச்சக்கர வண்டியும் சிறிய லொறியும் மோதுண்டு இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த காத்தான்குடி ஷைகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரியாஸ் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி குழந்தை உட்பl 3 பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தன்னாமுனை விபத்தில் ஒருவரி பலி: மூவர் படுகாயம்

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

இவரின் ஜனாஸா தொழுகை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளிவாயலில் சனிக்கிழமை (17) இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வாகன விபத்தில் நால்வர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது

அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15 ஆம் தூண் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அளுத்கம மேல் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த எச்.எம். ஹர்ஷன பிரதீப் என்பவரே விபத்தில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது

பாராளுமன்ற உறுப்பினர் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது, ​​பாராளுமன்ற உறுப்பினரின் கார் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காரின் சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடம்பன் விபத்தில் இளைஞன் பலி இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் விஹார சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (05) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளத்திலிருந்து பிரதான வீதியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியோரத்தில் இருந்த நபர் ஒருவரையும், குழந்தை ஒன்றை சுமந்து சென்ற பெண் ஒருவரையும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

விபத்தில் படுகாயமடைந்த நபரும், குழந்தையை சுமந்து சென்ற பெண்ணும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண்ணும் நபரும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பெண்ணின் 9 மாத கைக்குழந்தை தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரகம பகுதியில் வசிக்கும் 45 வயதுடைய ஒருவரும், அடையாளம் காணப்படாத 43 வயதுடைய பெண்ணுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்துள்ளதுடன், அவர் பொலிஸ் பாதுகாப்பில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி

கல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்பிட்டி – பலாவியா வீதியில் உள்ள குரிங்கம்பிட்டிய கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்பாக வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்பிட்டியிலிருந்து பலாவியா நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் திரும்பும் போது அந்த வீதிக்கு முன்னால் வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின் போது 2 முச்சக்கர வண்டிகளில் சாரதிகள் உட்பட 8 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

65 வயதுடைய கல்பிட்டி – மண்டலக்குடாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்

செங்கடலில் இரு கப்பல்கள் விபத்தில் சிக்கின ஹவுதி தாக்குதலா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

செங்கடலில் இரு கப்பல்கள் விபத்தில் சிக்கின ஹவுதி தாக்குதலா


செங்கடலில் இரு கப்பல்கள் விபத்தில் சிக்கின ஹவுதி தாக்குதலா

செங்கடலில் வழியாக பயணித்த இரு சரக்கு
கப்பல்கள் விபத்தில் சிக்கின கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது .


ஹவுதி தாக்குதலால் இவை விபத்தில் சிக்கினவா என்பது தொடர்பாக
அவை ஏதும் தெரிவிக்கவில்லை

வீடியோ

பஸ் மற்றும் பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்

விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்

கொழும்பு – கண்டி வீதியின் தித்தவெல்லகட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்று வேனை கடந்து சென்று கொண்டிருந்த போது வேன் மீது மோதியதுடன் முன்னால் வந்த 2 வேன்களுடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் ஒருவர் பலி நால்வருக்க காயம்

வேன் ஒன்றின் சாரதி மற்றும் பின்னால் பயணித்த மூவர் படுகாயமடைந்து வத்துப்பிட்டிவல மற்றும் வரக்காபொல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த சாரதி உயிரிழந்தார். 58 வயதுடைய கம்பளை, மரியாவத்தை பகுதியைச் சேர்ந்த சாரதியே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் ருமேனிய பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது

வீடியோ

வவுனியாவில் விபத்து ஐவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்தில் 9 பேர் படுகாயம்

கோர விபத்தில் 9 பேர் படுகாயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தளம் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இரு கார்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 09 பேர் காயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில்

கோர விபத்தில் 9 பேர் படுகாயம்

அனுமதிக்கப்பட்டதுடன், அதில் எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

காலி-கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறிய ரக லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் 5 பேர் காயமடைந்தவர்கள் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக அம்பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

மொரட்டுவ பிரதேசத்தில் கட்டிட நிர்மாணிப்பதற்காக வந்து பத்தேகமவிற்கு மீண்டும் சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதி தூங்கியதால், லொறி வீதியை விட்டு விலகி கொன்கிரீட் தூண் ஒன்றில் மோதி கவிழ்ந்தது.

லொறியின் பின்னால் பயணித்தவர்களில் ஒருவர் வாகனத்தில் இருந்த கொங்கிரீட் இயந்திரத்தால் நசுக்கப்பட்டு பலத்த காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

ஆட்டோ பேருந்து விபத்தில் இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்தில் பலர் காயம்

பேருந்து விபத்தில் பலர் காயம்

வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

வெலிகந்த சிங்கபுர வீதியில் 8 ஆவது கிலோ மீற்றர் தூண் பகுதியில் பேருந்து சாரதிக்கு பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 75 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்து விபத்தில் பலர் காயம்

தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

video

விபத்தில் யுவதி ஒருவர் பலி தாய் தந்தை சகோதரி படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் யுவதி ஒருவர் பலி தாய் தந்தை சகோதரி படுகாயம்

விபத்தில் யுவதி ஒருவர் பலி தாய் தந்தை சகோதரி படுகாயம்

தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் மகள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கலேவெல நகரில் நேற்று (23) பிற்பகல் தார் ஏற்றிச் சென்ற வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த தாய், தந்தை மற்றும் ஏனைய மகள் ஆகியோர் சிகிச்சைக்காக தம்புள்ளை மற்றும் கலேவெல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெஹியத்தகண்டிய சிறிபுர பிரதேசத்தில் இருந்து குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

சிறிபுர பகுதியைச் சேர்ந்த எஸ். எச். லோச்சனா காவ்யாஞ்சலி என்ற 19 வயது இளம்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று (24) இவரது 20வது பிறந்தநாள் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் யுவதி ஒருவர் பலி தாய் தந்தை சகோதரி படுகாயம்

முச்சக்கரவண்டி குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​கலேவெல நகரின் பிரதான வீதிக்கு அருகில் கெப் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் பின்னால் வந்த தார் ஏற்றிச் சென்ற வாகனம் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் பின்னர் முச்சக்கரவண்டிக்குள் இருந்த யுவதி தூக்கி வீசப்பட்டு தார் ஏற்றிச் சென்ற வானத்தின் சில்லில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியின் சாரதி மற்றும் தார் ஏற்றிச் சென்ற வாகனத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு விபத்தில் நிறைவு
Posted in இலங்கை செய்திகள்

தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு விபத்தில் நிறைவு

தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு விபத்தில் நிறைவு

காலி – கொழும்பு பிரதான வீதியில் பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (16) அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தைக்கும்

மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடு காரணமாக, சிறிய ரக வேனும் காரும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வர்த்தகரான தந்தை இன்று காலை பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி கப்பலை பரிசோதிப்பதற்காக பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு

சென்ற போது பேருவளையில் இருந்து வந்த மகன் பேருவளை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் எதிரில் வந்த கார் தனது தந்தையுடையது என அடையாளம் காண்டுள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே முரண்பாடு விபத்தில் நிறைவு

பின்னர், மகன் தன்னுடைய வாகனத்தால், தந்தையின் வாகனத்தை மோதி சேதப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் மகனின் வேனும் சேதமடைந்துள்ளது, ஆனால் மகனுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

சம்பவத்துடன் தொடர்புடைய கார் மற்றும் வேன் தற்போது பேருவளை பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை உயிரிழப்பு

தலங்கம பகுதியில் அமைந்துள்ள ஜெயந்தி புர இரண்டு மாடி கட்டிடத்தின் குளியலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குளிரூட்டியில் ஏற்பட்ட தீப் பரவலினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கோட்டை மாநகர சபையின் தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்

வீடியோ

நடந்து சென்ற பெண்ணை இடித்து கொன்ற ஆசாமி
Posted in இலங்கை செய்திகள்

16 வயது பாடசாலை மாணவி விபத்தில் பலி

16 வயது பாடசாலை மாணவி விபத்தில் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து நேற்று (02) மாலை மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 09 ஆம் கம்பம் கெம்பிலிதியெத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த சாரதியும் பின்னால் அமர்ந்து சென்ற மகளும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 16 வயதுடைய மகள் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

கஹபத்வல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

பஸ் மற்றும் பவுஸர் விபத்தில் 6 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

கற்பிட்டி – நுரைச்சோலை ஜூம்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக வியாழக்கிழமை (19) இரவு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஐந்து வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

கற்பிட்டி – தலவில பகுதியைச் சேர்ந்தவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி பகுதியிலிருந்து பாலாவியை நோக்கிப் பயணித்த மகேந்திர ரக லொறியொன்றும், எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

உயிரிழந்த சிறுவனின் தாய் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், தனது தந்தையோடு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த ஐந்து வயது சிறுவன் உட்பட மூவர் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த சிறுவன் உட்பட மூவரையும் சிகிச்சைக்காக அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதன்போது, காயமடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தளம் தள வைத்தியசாலையில் இருந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் கூறினார்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிள் சாரதி, முறையற்ற வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமையால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கற்பிட்டி விபத்தில் சிறுவன் பலி

இந்த விபத்து சம்பவம் இடம்பெற்ற விதம் பற்றி வீதியோரத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.ரி.வி கமராவிலும் பதிவாகியுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சுனில் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.