Tag: ரம்யா கிருஷ்ணன்
பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் கமல்ஹாசனுக்கு பதிலாக பிரபல
நடிகை ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்று தொகுத்து வழங்கி இருக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 5 – கமலுக்கு பதிலாக களமிறங்கிய பிரபல நடிகை
கமல்
தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன்
தொகுத்து வழங்கி வந்தார். அவருடைய எளிமையான அணுகுமுறையும், விஷய ஞானமும் இந்த நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்து சேர்த்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் தொகுத்து வந்த பிக்பாஸ்
நிகழ்ச்சியை கமலுக்குப் பதில் தொகுப்பாளராக நியமிக்க, ரம்யா கிருஷ்ணன், சூர்யா, விஜய் சேதுபதி, மாதவன், ஸ்ருதிஹாசன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது.
இறுதியாக ரம்யா கிருஷ்ணன் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று வெளியான புரமோவில் வீடியோ மூலம் போட்டியாளர்களிடம் பேசிய கமல், எனக்கு உதவியாக எனது தோழி
ரம்யா கிருஷ்ணன் எனக்கு உதவியாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று கூறி அறிமுகம் படுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு
ஜோதிகா இடத்தைப் பிடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
ஜோதிகா இடத்தைப் பிடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்தப்
படம் எதிர்பார்த்ததை விட அளவுக்கதிகமான வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.
ரம்யா கிருஷ்ணன்
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் ஜோதிகா, சலார் படத்தில்
பிரபாஸுக்கு சகோதரியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இது ஜோதிகா
தரப்பில் மறுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது
50-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்
50-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்
தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது ஐம்பதாவது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடி இருக்கிறார்.
50-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணன்
90-களில் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்யா கிருஷ்ணன். இவர் 1999-ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டினார்.
2003-ம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியை திருமணம் செய்து கொண்டார் ரம்யா கிருஷ்ணன். இவர்களுக்கு ஒரு மகன்
உண்டு. 50-வயதைத் தொட்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் அதை மறைக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு தான்
குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
ரம்யா கிருஷ்ணன்
ரம்யா கிருஷ்ணனுக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன்
ரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தற்போது ரொமாண்டிக் என்ற திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
காதல் காமெடி படமான இந்த திரைப்படத்தில் ஆகாஷ் பூரி மற்றும் கித்திகா ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணாவின் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ரம்யா கிருஷ்ணன்
இதற்காக படக்குழுவினர் கோவா சென்றிருக்கின்றனர். அடுத்து வரும் 30 நாட்களுக்கு ரம்யாகிருஷ்ணன் படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் படம் பிடிக்கப்படும் எனவும் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.






