Tag: மாவீரர் கவிதை
மாவீரர்
மாவீரர்
கார்த்திகையில் சுடர்ந்து கனன்றெரியும் கனலிகளே
கார்த்திகையின் நாயகர்களே
உமை நினைந்துருகி
கார்த்திகைப் பூவெடுத்து
கார்த்திகை 27 இல்
உம் பாதந் தொழுதிடுவோம்!
விழித்திரையில் நீர் வழிந்திட
எம் மி(ம)னத்தின் குறைகளை சொல்லிக் கதறிட
மொழியுரை ஏதுமற்று
நடைப் பிணமாக
உமைத் தேடி
நிரை நிரையாக வந்து
விம்மி யழுதிடுவோம்!
கல்லாக இருந்து எமைக் காக்கும் கடவுளர் போல்
தில்லாக நின்று
எமை யழித்த படையழித்து
ஈழவளின் மானம் காத்து
கார்த்திகைக்கு பெருமை சேர்த்த
உமை கணமும்
நினைந்து ருகிடுவோம்!
இளமைக் காலக் கனவுகளைத் துறந்து
எமதினத்தின்
வருங்கால சந்ததிக்காக
ஈழத்தின் யாகத் தீயில்
ஆகுதியாகிய உமை
நிதமும்
போற்றித் துதித்திடுவோம்!
ஈழத்தின் தலைமகனின் கனமறிந்து தோள் கொடுத்து
காலத்தின் தேவையை
ஈடேற்றி
ஞாலத்தில் வரலாறாகிய
தீரர்களே
உம் கனவை ஈடேற்ற எமக்கு வல்லமை
தாருமென்று இறைந்துருகி
நெய் விளக்கேற்றிடுவோம்!
நிலாதமிழ்.17.11.2023.
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்








