பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள்

ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள்

ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இருக்கும் இடத்தில் செளக்கியமாக இருக்கிறோம்.

கோதாபய ராஜபக்ச போனாலும், அவரது பாவத்தின் நிழல் போகவில்லை. சட்டப்படி கோதாபய ராஜபக்ச 16 ஆம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இந்த அரசு நடக்கிறது.

அந்த பாவத்தில் எமக்கு பங்கு வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

நாட்டில் உருவாகிவரும் புதிய கூட்டணிகளிடமிருந்து தமது அணியை நோக்கி வரும் அழைப்புகள் பற்றி, தென்கொழும்பு கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் தெரிவிக்கையில்,

30 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட புதிய கூட்டணி நண்பர்கள் என்னுடன் பேசிய போது தெளிவாக ஒன்றை சொன்னேன்.

ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம் என்று சொன்னேன்.

நாம் இன்று இருக்கும், ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற இடத்தில் நாம் செளக்கியமாகவே இருக்கிறோம் எனவும் சொன்னேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி நினைத்து இருந்தால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகிய அடுத்த நாளே அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால், அதை நாம் செய்யவில்லை.

ஏனென்றால் பேரினவாதம், ஊழல் ஆகிய இரண்டு பேரழிவுகளுக்கும் ஏகபோக உரிமையாளர்களான ராஜபக்சர்களுடன் கலப்பு கல்யாணம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் இல்லை.

ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள்

எங்கள் இந்த கொள்கை நிலைப்பாடு காரணமாகத்தான் நாம் இன்று ராஜபக்ச ஆதரவு ரணில் அரசாங்கத்தில் இடம்பெறவில்லை.

இன்று இந்த ராஜபக்ச ஆதரவு ரணில் அரசில் அங்கம் வகிப்பவர்கள், தாம் ஏதோ வெட்டி முறித்து விட்டதாக தப்பு கணக்கு போட்டு விடக்கூடாது. நாம் அங்கே கொள்கை நிலைப்பாடு காரணமாக இல்லை.

ஆகவேதான் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள். அதுதான் உண்மை. சட்டப்படி கோதாபய ராஜபக்ச 16ம் திகதி நவம்பர் 2019 தேர்தலில் பெற்ற மக்கள் ஆணையுடன்தான் இன்றுவரை இந்த அரசு தொடர்கிறது. அந்த பாவத்தின் நிழலில் அங்கமான உங்களுக்கு பாவத்தின் சம்பளம் அடுத்த தேர்தலில் கிடைக்கும்.

16 ஆம் திகதி நவம்பர் 2019 முதல் இன்று வரை, நான்கு வருடங்கள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசாங்கத்தின் பதவிகளில் இருக்கின்ற தமிழ் அரசியல்வாதிகளிடம், நீங்கள் இதுவரை வெட்டி முறித்த சாதனைகளை முடியுமானால் பட்டியல் இடுங்கள் என பகிரங்க சவால் விடுகிறேன். அபிவிருத்தி செய்ய நிதி இல்லை என்பீர்கள்.

சரி, அபிவிருத்தியை விடுங்கள். அரச நிர்வாகரீதியாக தமிழ் மக்கள் தொடர்பில் நீங்கள் அமைச்சர்களாக, துணை அமைச்சர்களாக, அரசாங்க எம்பிகளாக இதுவரை என்ன செய்து கிழித்துள்ளீர்கள் என பகிரங்கமாக

சொல்லுங்கள்? வேண்டுமானால், நாம் ஆட்சியில் இருந்த நான்கு ஆண்டுகளில் நாம் செய்த சாதனைகளையும், இன்று நீங்கள் இந்த நான்கு ஆண்டுகளில் செய்ய தவறிய சீர்கேடுகளையும் நான் பகிரங்கமாக பட்டியல் இடுகிறேன்.

எனவேதான், இந்த புதிய, பழைய பாவங்களின் கூட்டணியில் நாம் இல்லை. நாங்கள் சோரமும் போகவில்லை. பாவமும் செய்யவில்லை.

ஆகவே இந்த பாவத்தின் சம்பளம் எமக்கு கிடையாது. எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற முற்போக்கு அரசியல் இயக்கம், அடுத்து வரும் புதிய அரசாங்கத்தில், புதிய பலத்துடன், நேர்மையாக அங்கம் வகிக்கும் என தெரிவித்தார்.

பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
மனோ கணேசன்

இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்
மனோ கணேசன்

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கட்டாயம் சந்தித்து, தான் கடைசியாக போர் முடிந்த சில நாட்களில் இலங்கை வந்து, தமிழினம் எதிர்கொண்ட

போரழிவுகளை பார்த்து விட்டு, ஊர் திரும்பும் போது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுகள் நடத்தி, இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த கோருகிறேன்.

மே 24, 2009 அன்று வெளியிடப்பட்ட அந்த கூட்டறிக்கையில் அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் தமிழ் கட்சிகளுடன் பேச்சு நடத்தி 13ஐ அமுல் செய்து, அதை மென்மேலும் மேம்படுத்த (13+) உடன்படுவதாகவும்,

அதேபோல் சர்வதேச மனித உரிமை நியமங்களை ஏற்று இலங்கையில் கடை பிடிப்பதாகவும் உலக மன்றமான ஐநாவுக்கு, அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியான ஐநா செயலாளர் பாங்கி-மூன், என்ற தனக்கு உறுதி

இலங்கை வந்துள்ள பாங்கி-மூன், மகிந்தவை சந்தித்து 2009 மே கூட்டறிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும் மனோ கணேசன்

அளித்ததை, இன்றைய அரசின் பிரதான கட்சியான பொதுஜன முன்னணியின் அதிகாரபூர்வ தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும், அவரது

எம்பிகளுக்கும், இவர்களின் பின்னால் இன்னமும் நிற்கும் சில பெளத்த பிக்குகளுக்கும் ஞாபகப்படுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

இன்று, பொறுப்பை நிறைவேற்றாத தவறுகை செய்து, குற்றவாளி கூண்டில் நிற்பது அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல. ஒட்டு மொத்த ஐநா அமைப்பும் என நான் நம்புகிறேன். இவர்கள் அனைவரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

பாங்கி-மூன் – மகிந்த கூட்டறிக்கையில், கையெழுத்து இட்ட ஒரு தரப்பு வார்த்தை தவறுமானால், அடுத்த தரப்பு அதை தட்டிக்கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் பெயர்தான் கூட்டறிக்கை. ஆனால், அதை ஐநா செய்யவில்லை. அது மட்டுமல்ல, போர் நிகழ்ந்த போது, வன்னியில் இருந்த ஐநா அலுவலகத்தை இலங்கை அரசு சொன்னது, என்பதற்காக மூடி விட்டு நாட்டை விட்டு

வெளியேறிய அன்றைய ஐநாவின் முடிவுக்கு முன்னாள் ஐநா செயலாளர் இந்த பாங்கி-மூன் பொறுப்பேற்க வேண்டும்.

அதனால்தான், இலங்கையின் இறுதி யுத்தம், சாட்சியமில்லா யுத்தமாக நிகழ்ந்தது. இன்று போர் முடிந்து ஏறக்குறைய 14ம் ஆண்டுகள் ஓடுகின்றன. முன்னாள் ஐநா செயலாளர் இலங்கை போர் தொடர்பில் அன்று உலக

மாமன்றமான ஐநா சபை விட்ட தவறை இன்றாவது ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்று அவர் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர் அதை பற்றி பேச வேண்டும். அது உலக அளவில் எடுபடும். அன்று இலங்கை யுத்தம் தொடர்பாக

ஐநா விட்ட தவறு தொடர்பில் அன்றே ஐநா சபைக்குள் ஒரு உள்ளக அறிக்கை தயார் செய்யப்பட்டதை நான் அறிவேன். அது பற்றி, முன்னாள் ஐநா

செயலாளர் பாங்கி-மூன் இனியாவது பகிரங்கமாக பேச வேண்டும். இலங்கையின் ஊடகவியலார்கள் பாங்கி-மூனை கண்டு இது பற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.

இலங்கை வந்துள்ள முன்னாள் ஐநா செயலாளர் பாங்கி-மூன்,
சந்திக்கும் நபர்களின் நிகழ்ச்சி நிரலில் நான் இல்லை. நான் அவரை கண்டால் இதை அவர் முகத்துக்கே சொல்லி கேட்க விரும்புகிறேன்.

No posts found.
பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்

ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எமது பிரச்சினைகள் பற்றியும் பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ளவேண்டும்?” என்ற கேள்வியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்,

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல்

அபிலாஷைகள் தொடர்பில் பேசுங்கள்” என நாம் திரும்ப, திரும்ப ஜனாதிபதி விக்கிரமசிங்கவிடம் கோரினோம். “எமது பிரச்சினைகள் பற்றி பேச உங்கள் தலைமையில் விசேட அதிகாரம் கொண்ட குழுவை நியமியுங்கள்” எனவும் கோரியுள்ளோம்.

ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்

ஆனால், பகிரங்க மேடைகளில் இருந்து கூறப்பட்ட சில கருத்துகளை தவிர, இது தொடர்பில் இதுவரை ஜனாதிபதி விக்கிரமசிங்க அதிகாரபூர்வமாக எதுவும் செய்யவில்லை. ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல்

தொடர்புகளில் வடகிழக்கு கட்சிகளுடன் நடத்தப்படும் பேச்சுகளை நாம் முழு மனதுடன் வரவேற்கிறோம். ஆனால், மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகள் இன்று “தோட்ட வரம்புகளுக்கு” வெளியே வளர்ந்து விட்டன என்பதை அனைத்து

தரப்பினரும் அறிய வேண்டும். தேசிய இனப்பிரச்சினை என்பது இன்று வடக்கு கிழக்கை மட்டும் மையம் கொண்டதல்ல, அது தேசியமயமானது என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, ஒரு எதிரணி கட்சியாக இருந்தாலும்கூட, “தேசிய இன பிரச்சினை தொடர்பில் பேச்சுகளை நடத்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இருக்கிறதா” என நாம் கேள்வி எழுப்பவில்லை. இந்நாட்டின் பிரதான

பிரச்சினை தேசிய இன பிரச்சினை ஆகும். இந்நாட்டின் எந்தவொரு அரசு தலைவருக்கும் இதற்காக விசேட மக்களாணை அவசியமில்லை என்பது எமது நிலைப்பாடு.

இந்த கருத்தை நாம் நமது வடகிழக்கு நட்பு கட்சிகளுடனும் பரிமாற்றி கொண்டுள்ளோம்.


ஆகவே, இன்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தையில் நாம் அதிருப்தியடைந்துள்ளோம்.

No posts found.
நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம், 8ம் திகதி ஞாயிறன்று ஹட்டனில் நடைபெறும்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம்,
எதிர்வரும் 8ம் திகதி ஞாயிறன்று நண்பகல் 12.30 மணிக்கு ஹட்டன் கிருஷ்ண பவன் விடுதியில் நடைபெறும்.


இக்கூட்டத்தில், தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பிலும்,


நடப்பு அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும் என
கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No posts found.
கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு
அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்

கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு
அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்

அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு முஸ்லிம் எம்பியும் இப்போது பெயரிடப்பட்டுள்ளார்கள்.

இறுதி ஏழாவது எம்பியாக ஒரு தமிழ் எம்பி இருக்க வேண்டும் என்பது மிக, மிக நியாயமான ஒரு எதிர்பார்ப்பு. ஆனால், இதையும்கூட தட்டி பறிக்க உதயகம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரின் “உத்தர சபை” கட்சி முயல்கிறது.

அந்த நியமனம் உதய கம்மன்பில எம்பிக்கு வழங்க வேண்டும் என அந்த கட்சி பிடிவாதம் பிடிக்கிறது. இது உச்சக்கட்ட பெரும்பான்மைவாதம். திருத்த முடியாத திமிர்வாதம்.

இதை எதிர்த்து முறியடிப்பதில், தமிழ் தேசிய கூட்டமைப்புடன், தமிழ் முற்போக்கு கூட்டணி, இரட்டை குழல் துப்பாக்கியாக இணைந்து செயற்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்

அரசியலமைப்பு பேரவை நியமனங்களில் ஏற்பட்டுள்ள இழுபறி நிலைமை தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

அரசியலமைப்பு பேரவையில் சட்டப்படி பத்து உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். அதில் ஏழு எம்பிக்களும், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இடம் பெற வேண்டும்.

இந்த எம்பிகளில், நான்கு சிங்கள எம்பிகளும், தலா ஒரு எம்பியாக மூன்று எம்பீக்கள், வடகிழக்கு தமிழர், முஸ்லிம்கள், இலங்கை இந்திய தமிழர் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இதுவே நியாயமான நடவடிக்கை. ஆனால், இது நடைபெறவில்லை.

சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சி தலைவர் ஆகிய மூவரும் தம் பதவிநிலை காரணமாக அரசியலமைப்பு பேரவையில் இடம் பெறுகின்றார்கள்.

ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவரும் தம் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும். இதன்படி ரணில் விக்கிரமசிங்க, தமது பிரதிநிதியாக எம்பி நிமல் சிறிபால சில்வாவையும், சஜித் பிரேமதாச தமது பிரதிநிதியாக எம்பி கபீர் ஹசீமையும் நியமித்துள்ளனர்.

கூட்டமைப்பு நிலைப்பாட்டுக்கு ஆதரவு அரசியலமைப்பு பேரவை நியமனம் தொடர்பில் மனோ கணேசன்

அரசாங்கம், பிரதான எதிர்கட்சி ஆகிய கட்சிகளை சாராத சிறுகட்சிகளின் பிரதிநிதியாக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது சட்டம்.

அதன்படி, எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்துள்ளது. இப்போது இதுவே பிரச்சினையாக மாறியுள்ளது.

மொட்டு கூட்டணியில் தெரிவாகி விட்டு, அரசாங்கங்கத்தின் எல்லா தவறுகளுக்கும் காரணமாகி விட்டு, இப்போது எதிர்கட்சி பக்கத்தில் வந்து உட்கார்ந்துள்ள உதயகம்மன்பில, விமல் வீரவன்ச கும்பல், இதையும் தட்டி பறிக்க பார்க்கிறது.

உண்மையில், இந்த விவகாரத்தில் மலையக இந்திய வம்சாவளி தமிழரே முதலில், அநீதிக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம், அவர்கள் நியமிக்கும் எம்பியாக இந்திய வம்சாவளி தமிழரை பிரதிநித்துவம் செய்யும் ஒரு எம்பியை நியமிக்கும்படி, நானும், எம்பி பழனி திகாம்பரமும் கோரிக்கை விடுத்தோம்.

தான் ஏற்கனவே, எம்பி நிமல் சிறிபால சில்வாவை பெயரிட்டு விட்டதாகவும், முதலிலேயே கூறி இருந்தால், பரிசீலிக்க இடமிருந்தது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்மிடம் கூறினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பி ஒருவரை தமது பிரதிநிதியாக நியமிக்க முதலில் எம்மிடம் உடன்பட, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பிறகு தமது கட்சியில் இருந்து, எம்பி கபீர் ஹீசிமை நியமிக்க வேண்டிய கட்டாயம் தனக்கு உள்ளதாக கூறினார்.

எம்பி கபீர் ஹீசிம் சகோதர முஸ்லிம் எம்பி என்பதால் அதை நாம் புரிந்துக்கொண்டோம்.

இந்நிலையில், மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களில் ஒருவர், கட்டாயம் மலையக இந்திய வம்சாவளி தமிழராக இருக்க வேண்டும் என்ற

கோரிக்கையும், அதற்கான பெயரையும் நாம், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக, பிரதமர், எதிர்கட்சி தலைவர்ஆகியோரிடம் சிபாரிசு செய்து வழங்கியுள்ளோம்.

இத்தகைய பின்னணியில், இறுதியான ஒரேயொரு எம்பி நியமனத்தில்,
எம்பி சித்தார்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சிபாரிசு செய்துள்ளது.


அது சட்டப்படியும், அரசியல் நியாயப்படியும் சரியானது. ஆகவே அதை நாமும் ஆதரிக்கிறோம்.


இதையே இன்று பிரச்சினைக்கு உள்ளாக்கி, அதையும் தட்டிப்பறித்து, ஈழத்தமிழ்,மலையக தமிழ் என்ற பேதமில்லாமல் ஒரு தமிழ் எம்பிகூட அரசியலமைப்பு பேரவையில் இடம்பெற முடியாத நிலைமையை இனவாதிகள் ஏற்படுத்த முயல்கிறார்கள்.

No posts found.
உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இது நல்ல தருணம் எரிக் சொல்ஹெய்மிடம் மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இது நல்ல தருணம்
எரிக் சொல்ஹெய்மிடம் மனோ கணேசன்

உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இது நல்ல தருணம்
எரிக் சொல்ஹெய்மிடம் மனோ கணேசன்

உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இதுதான் வேளை. நல்ல தருணம். பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள் என

இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிமிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை, இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிம் சந்தித்தார்.

மனோ கணேசனின் இல்லத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பில் தமுகூ நுவரெலிய மாவட்ட எம்பி எம். உதயகுமாரும் கலந்துக்கொண்டார்.

இதன்போது எரிக் சொல்ஹெய்ம் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது,

நான் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவரது காலநிலை ஆலோசகராக இங்கே வந்துளேன். இந்த சந்திப்பில், மனோ கணேசன் எனக்கு சமீபத்தில் ஜனாதிபதி நடத்திய சர்வ கட்சி மாநாட்டை பற்றி எடுத்து கூறினார்.

அது நல்லது. இந்நாட்டில் இனப்பிரச்சினை தீர இது நல்ல வேளை. இந்நாட்டில் சிங்கள, வடகிழக்கு தமிழர், முஸ்லிம்களுடன், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சமமாக இணைந்து வாழ விரும்புவதை அவர் எனக்கு கூறினார்.

மேலும், பெருந்தோட்டங்களில் வறுமை நிலையில் வாழும் மக்களை பற்றியும் கூறினார். உணவின்மை, வறுமை காரணமாக துன்புறும் அவர்கள் மீது சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.


நண்பர் மனோ கணேசன், தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளையும் இங்கு பேசுகிறார்.

அது மிகவும் சிறந்தது. அவரது பிறந்த நாளுக்கு எனது வாழ்த்துக்கள்.

மனோ எம்பி மேலும் கூறியதாவது,

வரலாற்றில் எல்லோரும் தவறிழைத்துள்ளோம். கடைசி சமாதான முயற்சி தோற்றது.

இதற்கு சில தரப்புகளோ, அனைத்து தரப்புகளுமோ காரணம். அதுபற்றி ஆராய்ச்சி செய்ய இது வேளையல்ல. அது எனது வேலையுமல்ல.

இப்போது நாம் வரலாற்றில் இருந்து பாடம் படித்துள்ளோம். ஆகவே முன்னோக்கி நகர எமக்கு உதவுங்கள்.

உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இது நல்ல தருணம்
எரிக் சொல்ஹெய்மிடம் மனோ கணேசன்

இங்கே நண்பர் எரிக் சொல்ஹெயிம் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எரிக் சொல்ஹெயிம் இலங்கையில் மிகவும் அறியப்பட்ட ஒரு வெளிநாட்டுக்காரர்.

அவரது தொடர்புகளையும், அனுபவத்தையும் பயன்படுத்த இதுதான் வேளை. பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள்.

உங்கள் நண்பர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதை எடுத்து கூறுங்கள். இதை நீங்கள் செய்து இந்நாட்டின் இனப்பிரச்சினை தீர்வுக்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் என் பிறந்த நாளை கொண்டாடுவேன்.

இலங்கையின் சமூக பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சி போக்கை நீங்கள் கவனிக்க வேண்டும்.
கடந்த காலங்களை விட இன்று இந்திய வம்சாவளி மலையக மக்கள் ஒரு இனமாக வளர்ச்சி அடைந்துள்ளார்கள்.

அவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர் மட்டுமே, அவர்களது பிரச்சினை பெருந்தோட்ட பிரச்சினைகள் மட்டுமே,
என்ற காலம் மாறி விட்டது. இன்றைய இனப்பிரச்சினை தீர்வில் அவர்களுக்கும் சம பங்கு வேண்டும்.


வடகிழக்கு சகோதர உடன்பிறப்பு, முஸ்லிம் உடன்பிறப்பு மற்றும் சிங்கள உடன்பிறப்புகளுடன் நாம் சமமாக வாழ விரும்புகிறோம்.


இனிவரும் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் இந்த புது வளர்ச்சி போக்கை கவனத்தில் கொள்ளுங்கள்.

No posts found.
பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என

அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் நலிவடைந்த பிரிவினர் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர திசாநாயக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்

ஆகியோர் கூட்டாக கொண்டு வந்த கவன ஈர்ப்பு பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்நாட்டில் நாம் 1958, 1977, 1983 கால கட்டங்களில் இனவாத கலவரங்களை பார்த்துள்ளோம். 1971, 1988, ஆண்டுகளில் தெற்கில் ஆயுத போரை பார்த்துள்ளோம். 2004ல் சுனாமி அழிவை பார்த்துள்ளோம். அதன் பின் 30 ஆண்டுகால போருக்கு முகம் கொடுத்துள்ளோம்.

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

எதுவாக இருந்தாலும், எக்காலத்திலும் இன்றைய நிலைமையை போல் நமது மக்கள் நெருக்கடியை சந்திக்கவில்லை என எண்ணுகிறேன். எக்காலத்திலும் மக்கள் எப்படியாவது மூன்று வேளையும் சாப்பிட்டார்கள்.

பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தபடி வாழ்ந்தார்கள். இந்த காலத்தில்தான் இப்படி மிகவும் மோசமான நெருக்கடிக்கு முகம் கொடுக்கிறார்கள்.

நாம் இன்று இந்த யோசனையை கொண்டு வந்ததன் நோக்கம், இந்த நெருக்கடிக்குள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பிரிவினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிவாரணங்களை ஏற்பாடு செய்யுங்கள் என்ற கோரிக்கையின்படி ஆகும்.

அது அரசின் கடப்பாடு. அரசு கடமைப்பட்டுள்ளது. எதிரணி என்ற முறையில் நாம் அதை அரசுக்கு எடுத்து கூட கடமைப்பட்டுள்ளோம்.

சபை தலைவர் அவர்களே, நான் அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். இன்று இந்நாட்டில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, துன்புறும், நலிவுற்ற பிரிவினர், தோட்ட தொழிலாளர் ஆகும்.

இடதுசாரி தலைவர் என்பதால் இது உங்களுக்கு நன்கு தெரியும். இதை நாம் எப்போதும் சொல்லி வந்தோம்.

யாரும் கவனத்தில் பெரும்பாலும் எடுக்கவில்லை. இன்று உலகம் சொல்ல ஆரம்பித்து விட்டது. இன்று ஐநா அமைப்புகள் கூறுகின்றன.

ஐநா உணவு விவசாய ஸ்தாபனம் தனது விசேட அறிக்கையில் என்ன கூறுகிறது? இந்நாட்டில் அதிகூடிய உணவின்மை நிலைமையினால், அதிகம் வாழ்க்கை சுமையை சுமக்கும் பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறுகிறது.

தோட்டப்புறத்தில் பெண்கள் மேலதிக மையை சுமந்து குடும்பங்களை நடத்துகிறார்கள்.

அதேவேளை உலக உணவு நிறுவனம், தோட்டப்புறங்களில் உணவின்மை 51 விகிதம் என கூறுகிறது.

நகர பகுதிகளில் 43 விகிதமும், கிராம பகுதிகளில் 34 விகிதமும் என கூறுகிறது. இந்த உணவின்மை என்பது ஜனாதிபதி அவர்கள் தினந்தோறும் பேசும் ஒரு விஷயம் ஆகும்.

நான் சொன்னது போன்று, மூன்று வேளை உணவு என்பது, இன்று இரண்டு வேளை ஆகிவிட்டது.

இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் இன்று ஒருவேளைதான் சாப்பிடுகிறார்கள். அது அதிகம் நிகழ்வது இங்கேதான்.

இதை இன்று நாம் கூறுவதை விட ஐநா கூறுகிறது. உலகம் கூறுகிறது என்பதை அரசாங்கம் அறிய வேண்டும்.

அது மட்டுமல்ல, ஐநாவின் நவீன அடிமைத்துவத்துக்கான அறிக்கையாளர் டோமாயா ஒபகாடா, சமீபத்தில் நடந்து முடிந்த ஐநா மனித உரிமை ஆணையக அவைக்கு அறிக்கை சமர்பித்துள்ளார்.

அவர் என்ன கூறுகிறார்? இலங்கையில் பெருந்தோட்டங்களை காணப்படும் ஒடுக்கு முறைக்கு பின்னால் இனத்துவ காரணம் இருக்கிறது என கூறுகிறார்.

பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் துன்பங்களுக்கு காரணமாக அவர்கள் தொழிலாளர் என்பதை விட, அவர்கள் சிறுபான்மை தமிழர்கள் என்ற காரணமும் உள்ளது என அவர் கூறுகிறார். இது ஒரு பாரதூரமான குற்றச்சாட்டு.

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு, சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்.

நாம் அநேகமான பாரபட்சங்களுக்கு முகம் கொடுக்கின்றோம். இங்கே கல்வி அமைச்சர் இருப்பதால் ஒன்றை அவர் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.

நீங்கள் கல்வி துறையில் பல புனர்மாற்றங்களை செய்கிறீர்கள். கொழும்பு நகர கல்வி வலயத்தை வட-மத்திய கொழும்பு வலயம் என்றும், தென் கொழும்பு வலயம் என்றும் இரண்டாக பிரிக்க நாம் முடிவு செய்துள்ளோம்.

அது நல்லது. நுவரேலியாவில், நுவரேலியா, ஹட்டன், நோர்வுட், தலவாக்கலை ஆகிய நான்கு வலயங்கள் உருவாக வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஏனெனில், இன்றுள்ள நுவரேலியா, ஹட்டன் வலயங்களில் சுமார் 250 பாடசாலைகள் உள்ளன.

80,000 மாணவர்கள் உள்ளனர். ஆகவே நான்கு வலயங்கள் என்பது மிக நியாயமான கோரிக்கை.

மலையக பிரச்சனைகளை ஜெனீவாவுக்கு கொண்டு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம்

உண்மையில் எமக்கு அங்கே ஆறு வலயங்கள் வேண்டும். ஆனால், மூன்று வலயங்களுடன் முடித்து விட விட சிலர் முயல்கிறார்கள்.

அதேபோல், நமது நல்லாட்சி காலத்தில் 2019ம் வருடம் வர்த்தமானி பிரகடனம் மூலம், புதிய பிரதேச செயலகங்கள், நுவரெலியாவில், மேலதிகமாக ஐந்தும்

இரத்தினபுரியில் இரண்டும், காலியில் இரண்டும் அமைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதில் இரத்தினபுரி, காலி என்பவற்றில் புதிய பிரதேச செயலகங்கள் அமைக்கப்பட்டு விட்டன. ஆனால், நுவரெலியாவில் இல்லை. ஏன் இந்த அநீதி?

அதேபோல் நாட்டின் ஏனைய இடங்களில் 500 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு சென்றால், பெருந்தோட்ட பகுதிகளில் 1000 முதல் 5000 குடும்பங்களுக்கு ஒரு கிராம சேவகர் பிரிவு அமைக்கபட்டு உள்ளது.

ஏன் இந்த அநீதி? இப்போது போலிஸ் அதிகாரம் கிராம சேவகர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது என்ன பாரபட்சம்?

அடுத்த வருடம் 2023 ஆகும் பொழுது இந்த மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 வருடங்கள் நிறைவடைய போகின்றன. இவர்கள் இங்கே நாடு பிடிக்க வரவில்லை. நாட்டை உருவாக்கவே வந்தார்கள்.

அவர்கள் இங்கே வந்த பாதையே ஒரு சோக பாதை. பல கதைகள் உள்ளன. வரும் வழியிலேயே 25 விகிதமானோர் இறந்து போனார்கள்.

இங்கே வந்து காடுகளை வெட்டி, இன்றுள்ள தேயிலை, இறப்பர் தோட்டங்களை உருவாக்கினார்கள். பின்னர் அந்த தேயிலை, இறப்பர் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் கொழும்பு துறைமுகத்தை உருவாக்கவும் அவர்களது உழைப்பு பயன்பட்டது.

பின்னர் மலைநாட்டுக்கும், கொழும்பு துறைமுகத்துக்கும் இடையில் ரயில் பாதைகளை உருவாக்கவும், நெடுஞ்சாலைகளை உருவாக்கவும் அவர்களது உழைப்பு பயன்பட்டது.

200 வருடங்களாக உழைத்துக்கொண்டு இருக்கும் இம்மக்களுக்கு இந்நாடு தரும் பரிசு என்ன? இங்கே தீர்வு, நியாயம் இல்லை என்பதால்தான் இவர்களது இன்றைய நிலைமையை ஐநா அமைப்புகள் பேசும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இதை மாற்றுவோம். புதிதாக சிந்திப்போம்.

இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாக விரும்புவதை தவிர, சமீபத்தையை இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களது அபிலாஷைகள் வேறு ஒன்றும் இல்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். தேசிய நீரோட்டத்தில் எம்மை உள்வாங்குங்கள்.

இந்நாட்டின் ஏனைய மக்களுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்ட மக்களுக்கு இன்று காணி உரிமை,
வீட்டு உரிமை இல்லை.

வறுமை அதிகம். மந்தபோசனம் அதிகம். வேலை வாய்ப்புகள் குறைவு.
அவர்களது நிர்வாக கட்டமைப்புகள் தோட்ட நிர்வாகங்களிடம்தான் அதிகம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


நாட்டின் ஏனைய மக்களை போல அவர்களையும் மாவட்ட செயலக, பிரதேச செயலக,


கிராம செயலக தேசிய நிர்வாக கட்டமைப்புக்கு உள்ளே கொண்டு வாருங்கள்.
இன்று மலையக தமிழ் இனத்தின் உள்ளே வாழும் பெருந்தோட்ட பிரிவினரை
பின்தங்கிய பிரிவு மக்களாக கருதி அவர்களை தேசிய மட்டத்துக்கு கைதூக்கி விடுங்கள்.

நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை
Posted in இலங்கை செய்திகள்

நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை

நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை

வாழ்வாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் நவம்பர் 8ம் திகதி முழுநாள் விவாதம்
மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை ஏற்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியினால், வாழ்வாதார துன்பங்களை மிக அதிகமாக எதிர்கொள்ளும் மிகவும் நலிந்த (Most Vulnerable) பிரிவினர் தொடர்பில், முழுநாள் விவாதம் ஒன்றை நடத்த தமிழ்

முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பியும், தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி) தலைவர் அனுரகுமார திசாநாயக்க எம்பியும் முன்வைத்த

கோரிக்கையை இன்று, பாராளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது.

நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை

இதன்படி வரவு செலவு திட்டத்துக்கு முன்னர் கூடும் பாராளுமன்ற வாரத்தின் முதலாம் நாளான நவம்பர் எட்டாம் திகதி செவ்வாய்கிழமையன்று இந்த

கருப்பொருளில் முழு நாள் விவாதம் நடத்த கட்சி தலைவர்கள் குழு ஏற்றுக்கொண்டது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

பெருந்தோட்ட துறை 51 விகிதம், நகர துறை 43 விகிதம், கிராமிய துறை 34 விகிதம், என்ற ஐநா நிறுவனங்களின் கணக்கெடுப்பின்படி, கடந்த வாரம், இந்நாட்டின் மிக மோசமான நெருக்கடியை சந்தித்துள்ள பெருந்தோட்ட துறை

மக்களின் வாழ்வாதார விவகாரங்கள் தொடர்பில், ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை, நான் கொண்டு வந்து விவாதத்துக்கு உள்ளாக்கி இருந்தேன்.

நாட்டில் வாழும் அனைத்து நலிந்த பிரிவினர்கள் தொடர்பில் கூட்டாக பிரேரணை கொண்டு வந்து முழுநாளும் விவாதிப்போம் என்ற யோசனையை ஜேவிபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்கவும், நானும் அதன்பின் பேசி முடி செய்தோம்.

அதன்படி இன்று அனுரகுமார திசாநாயக்க அதுபற்றி கருத்திட, அதை நான் ஆதரிக்க கட்சி தலைவர்கள் தற்போது எமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி கணக்கெடுப்புகளின்படி மிக அதிகமாக துன்புறும் நலிந்த பிரிவு குடும்பங்கள் தொடர்பாக முழு தேசமும், உலகமும் அறிந்து கொள்ளும் வண்ணம் நமது பிரேரணை அமையும்.

பெருந்தோட்ட உழைக்கும் குடும்பங்கள், நாளாந்த வருமான நகர பாமர குடும்பங்கள், மீனவ குடும்பங்கள், விவசாய குடும்பங்கள், ஆடை தொழிற்சாலை தொழிலாள குடும்பங்கள்,

மத்திய கிழக்கு உழைப்பாளர் குடும்பங்கள், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் தொடர்பில் நாம் விவாதிக்க உள்ளோம்.

இந்த பிரிவினருக்கு விசேட ஒதுக்கீடு அடிப்படைகளில் நிவாரணங்கள் வழங்க வேண்டும் என்பதும், சமுர்த்தி வாழ்வாதார
உதவி பெருகின்றவர்களின் பட்டியல் அரசியல் தலையீடுகளினால், பாகுபாடு மிக்கதாக அமைத்துள்ளது என்றும்,


ஆகவே அந்த அப்பட்டியல் உண்மையிலேயே நலிந்த பிரிவினரை உள்வாங்கும் முகமாக திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும்,
நான் கோர விரும்புகிறேன்.

எனது இந்த நிலைபாட்டை ஆதரிக்கும்படி நாடு முழுக்க வாழும் மக்கள்,
தாம் வாக்களித்து தெரிவு செய்த தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூற வேண்டும் எனவும் கோருகிறேன்.

டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார் மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன், ஐக்கிய மக்கள் கூட்டணி ஆதரவு
-தேர்தல் மேகம் சூழ்கிறது என்கிறார் மனோ கணேசன்-

22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன், ஐக்கிய மக்கள் கூட்டணி ஆதரவு
-தேர்தல் மேகம் சூழ்கிறது என்கிறார் மனோ கணேசன்-

22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவு அளிக்க பிரதான எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழு கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டதாகவும் மனோ எம்பி கூறினார்.

இதுபற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மேலும் கூறியதாவது,

இரட்டை குடியுரிமை கொண்டோர் பாராளுமன்றத்தில் உறுப்புரிமை வகிக்க முடியாது. சமர்பிக்கப்பட்டுள்ள வரைபில் உள்ளதை மாற்றி, அமெரிக்க பிரஜை

பெசில் ராஜபக்சவின் எண்ணப்படி செயற்பட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு நாம் ஒருபோதும் இடம் தர மாட்டோம். பெசில் ராஜபக்ச அமெரிக்க காங்கிரசில் இடம் தேடி கொள்ளட்டும்.

அதேவேளை பாராளுமன்றத்தை, அடுத்த வருட முதல் காலாண்டில் கலைக்க இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரம் தரும்,

22ம் திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன், ஐக்கிய மக்கள் கூட்டணி ஆதரவு
-தேர்தல் மேகம் சூழ்கிறது என்கிறார் மனோ கணேசன்-

“இரண்டரை வருடம்”, என்ற விதி மாற்றப்படக்கூடாது. இந்நாட்டு மக்கள் இன்று, இந்த பாராளுமன்றத்தை மாற்றி, புதிய பாராளுமன்றத்தை அமைக்க

விரும்புகிறார்கள். ஆகவே, இரண்டரை வருடத்தில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் தொடர்ந்து விடப்படுவதை நாம் தந்திரோபாய நோக்கில் ஆதரிக்கிறோம்.

அதேவேளை, பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 113 உறுப்பினர்கள் கூடி
பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தால்,


அதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுக்க முடியாது. அதை அவர் ஏற்று பாராளுமன்றத்தை

பங்கு சந்தைக்காணொளிகள் பார்க்க இதில் அழுத்துங்க


கலைத்து புதிய தேர்தலுக்கு செல்ல தீர்மானிக்க வேண்டும் என நாம் நம்புகிறோம்.

ஆகவே அடுத்த வருடம் தேர்தல் மேகம் சூழும்.
புதிய மக்களாணையை பெற கட்சிகள் தயாராக வேண்டும்.


தேர்தலை சந்திக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தயார் நிலையில் இருக்கிறது.
அந்நிலையை இன்னமும் மெருகூட்டும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

மனோ கணேசன் - ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

மனோ கணேசன் – ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன் சந்திப்பு

மனோ கணேசன் – ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன் சந்திப்பு

மனோ கணேசன் – ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபன் சந்திப்பு
-நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுக்கோல்கள் பற்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும்-

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும்,

கொழும்பில் உள்ள இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய தூதுவரின் இல்லத்தில் நேற்று நிகழ்ந்த இந்த சந்திப்பு பற்றி மனோ கணேசன் எம்பி தெரிவித்ததாவது,

சமீபத்தில் நான் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணம் தொடர்பில் உரையாடினோம்.

ஆஸ்திரேலியாவில் திகழும் பன்மைத்துவ கலாச்சாரம் பற்றிய பாடங்கள் இலங்கைக்கு அவசியம் என்பதை ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபனுக்கு தெரிவித்தேன்.

குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசு நிலை அரசியல் பிரமுகர்கள் அங்கு வாழும், இலங்கையர்களுடன் குறிப்பாக புலம் பெயர்ந்துள்ள சிங்கள

ஆஸ்திரேலியர்களுடனும், அவர்களது அமைப்புகளுடனும் தொடர்புகளை மேம்படுத்தி அவர்கள் மூலம் பன்மைத்துவ சிந்தனையை இலங்கைக்குள் கொண்டு வர உதவ வேண்டுமென வலியுறுத்தினேன்.

இலங்கையின் நெருக்கடி நிலைமையும், அதற்கான மாற்றமும் வெறுமனே பொருளாதார விடயங்களை சார்ந்தது அல்ல என்ற எமது நிலைபாட்டை அவருக்கு வலியுறுத்தினேன்.

பொருளாதார விடயங்களுக்கு அப்பால், மூல காரணமாக திகழ்வது இலங்கையில் பன்மைத்துவ கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமையே என்ற தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை அவருக்கு சுட்டிக்காட்டினேன்.

ஆகவே இலங்கையில் ஏற்படுகின்ற எந்தவொரு மாற்றமும் இலங்கை பன்மொழி, பன்மத, பல்லின நாடு என்ற பன்மைத்துவ கொள்கை அரசியலமைப்புரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவதிலேயே தங்கி உள்ளது.

அதுவே மாற்றத்திற்கான ஆரம்ப புள்ளி என தெளிவுபடுத்தினேன்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, மலையக தமிழர்கள், மிகவும் பின்தங்கிய தோட்ட தொழிலாளர்கள், நடைபெற்ற அரகலய கிளர்ச்சி, எதிர்கட்சிகளின் உடனடி தேர்தலுக்கான கோரிக்கை ஆகியவை பற்றியும் உரையாடினோம்.

இலங்கை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நலிவுற்ற பிரிவினரான தோட்ட தொழிலாளர்கள், தொழில்ரீதியாகவும், தமிழ் சிறுபான்மையினர் என்ற இனரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்து கூறினேன்.

பின்தங்கிய நலிவுற்ற பிரிவினருக்கு என ஆஸ்திரேலியா உட்பட உலக அரசாங்கங்கள் வழங்கும் உதவி தொகைகள், நன்கொடைகள் தோட்ட தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை.

நலிவுற்ற பிரிவினரை அடையாளம் காண்பதில் அரசு கடைபிடிக்கின்ற அளவுக்கோல்கள் பிழையானவை.

அவை அரசியல் மற்றும் சில வேளைகளில் தவறான இன அடிப்படைகளை கொண்டவை.

இதன் காரணமாக நலிவுற்ற பிரிவினரான தோட்ட தொழிலாளர்கள் நலிவுற்றோர் பட்டியலில் இடம் பெறுவதில் தவிர்க்கப்படுகிறார்கள்.

ஆகவே இந்த நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுக்கோல்கள் பற்றி ஆஸ்திரேலியா, இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

உடனடியாக பாராளுமன்ற தேர்தலை நடத்தி, புதிய மக்களாணையை பெறுவதன்
மூலமாகவே நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை, உலகரீதியான ஏற்புடைமை,
பொருளாதார மீட்சிக்கான வழிவரைபு (Road Map) ஆகியன ஒழுங்கமைக்கப்படும் என கூறினேன்.

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் - கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக கொண்டு வரப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம்.

இதுபற்றி சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மாஅதிபர் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு உடன் நிறுத்துவதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர்.

ஜனாதிபதியின் பிரதம செயலாளர் சமன் இதுபற்றி பொறுப்பில் உள்ள சகலருக்கும் அறிவிப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளார்.

“பொலிஸுக்கு அல்ல, எந்த ஒரு அரசு நிறுவனத்துக்கும், தனிப்பட்ட வீட்டு தகவல்களை கொடுக்க நாம் விரும்ப மாட்டோம்.

கொடுத்தால் அது எங்கெங்கு போகும் என எனக்கு தெரியும். மேலும் இது ஒரு பொலிஸ் ராஜ்யம் அல்ல. பொலிஸ் சட்டத்தில் பதிவு செய்ய இடம் இருக்கிறது.

கொழும்பில் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – கொழும்பு மாநகர மக்களுக்கு மனோ கணேசன்

அது எனக்கு தெரியும். ஆனால், அதை விசேட அவசர காலங்களிலேயே பயன்படுத்த வேண்டும். எங்காவது சட்டத்தை மீறுபவர்கள் இருப்பார்கள் எனில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யுங்கள். விசாரியுங்கள்.

அதில் எனக்கு மாறுபட்ட கருத்தது இல்லை. ஆனால், பொதுவாக வீடு வீடாக போக வேண்டாம். இன்று போர் நடைபெறுகின்ற, சட்ட விரோத ஆயுத அமைப்புகள் செயற்படுகின்ற அவசர காலங்கள் அல்ல.

போர் காலத்திலும் நான் இங்கே தான் இருந்துள்ளேன். அந்த காலத்திலேயே இதை பொறுத்துக்கொள்ளாதவன், நான். இன்று இந்த சமாதான காலத்தில் இந்த பொலிஸ் படிவங்களை வீடு

வீடாக கொண்டு சென்று பதிவு செய்வதா? உடன் நிறுத்துங்கள்!”, என சம்பந்தபட்ட அரசியல், மற்றும் நிர்வாக தரப்பினரிடம் நான் கூறியுள்ளேன்.

“அரகல”காரர்களை கொழும்பில் வீடு வீடாக தேடுவதாக ஒரு பொலிஸ் நிலைய அதிகாரி என்னிடம் சொன்னார்.

அவருக்கு நான் என்ன பதில் கூறினேன் என்பதை பகிரங்கமாக கூற முடியாது. அரகலையை வெள்ளவத்தை, பம்பலபிட்டியில் தேட வேண்டாம் எனவும் இவருக்கு கூறினேன். அதை எங்கே தேட வேண்டும் எனவும் கூறினேன்.

கொழும்பில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் இத்தகைய நடவடிக்கை தொடருமானால், அவற்றை உடன் என் கவனத்துக்கு கொண்டு வாருங்கள் என

ஊடகங்களை கோருகிறேன். நமது மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பரமேஸ்வரன் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள். நாம் உடன் நடவடிக்கை எடுப்போம்.

இதுபற்றி, . சந்திரா பெர்னாண்டோ,
கொழும்பு பிரதி பொலிஸ் மாதிபர் சந்திரக்குமார, வெள்ளவத்தை பொறுப்பதிகாரி பிரசாந்த சில்வா,


பம்பலபிட்டி பொறுப்பதிகாரி பத்மலால் ஆகியோருக்கும் அறிவித்துள்ளேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்

  • தேசிய சபை கூட்டத்தின் பின் மனோ கணேசன்

தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரலாறு முழுக்க தவற விட்ட வாய்ப்புகள்தான் அதிகம். ஆகவே எந்த ஒரு வாய்ப்பையும் தவற விட இனி நாம் தயார் இல்லை.

எமது மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூற எமக்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்துவோம். அந்த அடிப்படையிலேயே நாம் இங்கே வந்துள்ளோம்.

ஆனால், இதுவும் கதைக்கள கதாகாலேட்சபம் என்றால் நாம் விலகி விடுவோம். ஆனால், முன் கூட்டியே முடிவு எடுத்து, இது சரி வராது, என எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் நிராகரிக்கும் தேவை எமக்கு கிடையாது.

அதேபோல் இன்று நடந்தது, தேசிய சபை கூட்டம். இது தேசிய அரசாங்கமல்ல. தேசிய அரசில் நாம் இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று நிகழ்ந்த முதலாவது தேசிய சபை கூட்டத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில், தலைவர் மனோ கணேசன்,

பிரதி தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கூட்ட நிறைவின் பின் கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது,

நமது மக்கள் பற்றி எடுத்துரைக்க வரலாறு தரும் எல்லா வாய்ப்புகளையும் நாம் பயன்படுத்துவோம்-மனோ கணேசன்

எங்கள் மக்களின் பிரச்சினைகளை, துன்பங்களை, துயரங்களை, கண்ணீரை, சொல்ல வேண்டிய இடங்களில் எல்லாம் சொல்லியே தீருவோம் என்ற, குரல் கொடுத்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் நமது கட்சி இருக்கிறது.

அந்த அடிப்படையிலேயே நானும், திகாம்பரமும் இதில் இன்று கலந்துக்கொண்டோம். ஏனெனில் எங்கள் மக்களில் குறிப்பிட்ட பிரிவினர் விளிம்பு நிலையில் வாழ்கிறார்கள்.

இவர்களை பற்றி கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும், கிடைக்கும் எல்லா மேடைகளிலும் பேசா விட்டால், நாம் எதற்காக பாராளுமன்றம் வந்தோம்? ஆகவே அதை செய்வோம்.

ஆனால், விழிப்புடன் இருப்போம். சந்தர்ப்பம் கொடுத்து பார்ப்போம். வெறும் கதைக்களம்தான் என்றால் நாம் விலகி விடுவோம்.

மேலும் இன்று நாட்டின் நிதி உரிமை தொடர்பான பாராளுமன்றத்துக்கு இருக்கும் உரிமையை நாம் கோரினோம்.

குறிப்பாக பாராளுமன்றத்தின் நிதி கணக்காய்வு தொடர்பான கண்காணிப்பு குழுக்களின் தலைமை பதவிகளை எதிரணிக்கு தரும்படி நாம் கோரினோம்.

அப்படி இருந்தாலே அரசின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன்னமேயே, கோதாபய ஆட்சி செய்த போது, இந்த நிதிக்குழுக்களின் தலைமை பதவிகள் எதிரணிக்கு வேண்டும் என நாம் கோரினோம்.

ஆனால், அரசாங்கம் அதை எமக்கு தரவில்லை. தமது ஆட்களை போட்டே அதை நிரப்பினார்கள்.

அரசாங்க அமைச்சர்கள், எம்பீக்கள் பாராளுமன்றத்துக்கு வந்து நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் உண்மைக்கு புறம்பாக பொய் சொன்னார்கள். அவர்களுடன் சேர்ந்து சில அரசு அதிகாரிகளும் பொய் சொன்னார்கள்.

குறிப்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் பொய் பேசினார். எமக்கு வேண்டிய அளவு பணம் இருக்கிறது.

டொலர் இருக்கிறது. ரூபா இருக்கிறது. ஸ்டேர்லிங் பவுண்ட் இருக்கிறது என எல்லோரும் கூட்டாக பொய் சொன்னார்கள்.

கடைசியில், நாடு தலைகுப்புற கவிழ்ந்த போதுதான் உண்மை வெளிப்பட்டது. கஜானா காலி என்ற உண்மை வெளியானது.

இதனால்தான் இத்தனை துன்பமும் என்பது நாம் எடுத்து கூறினோம்.

ஆகவே இந்த நிதி கணக்காய்வு தொடர்பான கண்காணிப்பு குழுக்களின் தலைமை பதவிகளை எதிரணிக்கு தருவார்களா என பார்ப்போம்.

பொருளாதாரத்தை கண்காணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் இந்த தேசிய சபை சாத்தியமாகும்.

அதேவேளை, பொருளாதார மீட்சிக்கு அப்பால் எமது மக்களின் தேசிய,
சமூக, அரசியல் பிரச்சினைகளாகும் முன்வைக்க நாம் உத்தேசித்துள்ளோம்.

பாராளுமன்ற வாரங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும், பிற்பகல் இந்த சபை கூடும்.

பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்

கொழும்பிலும், பெருந்தோட்டங்களிலும் பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக

மண்ணெண்ணெய் விலையேற்றத்தை சமாளிக்கும் முகமாக, குறைவருமான மக்களுக்கு,
பணக்கொடுப்பனவுகளை நேரடியாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமது தினசரி வாழ்வு
தேவைகளுக்காக மண்ணெண்ணெயை பயன்படுத்தும் பின்தங்கிய மக்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

பின்தங்கிய மக்களுக்கு மண்ணெண்ணெய் பணக்கொடுப்பனவு வழங்குக மனோ கணேசன்

எனினும் இந்த நிவாரணம், மண்ணெண்ணெயை தவறாது பயன்படுத்தும் மலைநாட்டு பெருந்தோட்டங்களில்
வாழும் பின்தங்கிய மக்களுக்கும், கொழும்பு மாநகரத்தில் வாழும் பின்தங்கிய குடியிருப்பு மக்களுக்கும் வழங்கப்படுவதை
கட்டாயமாக உறுதிப்படுத்தும்படி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன்,
மின்சக்தி மற்றும் வலுசக்தி கஞ்சன விஜேசேகரவிடம் வலியுறுத்தி தெரிவித்துள்ளார்

    Posted in இலங்கை செய்திகள்

    ஜனாதிபதியை தமிழ் முற்போக்கு கூட்டணி 11ம் திகதி சந்திக்கும் மனோ கணேசன்

    ஜனாதிபதியை தமிழ் முற்போக்கு கூட்டணி 11ம் திகதி சந்திக்கும். நாளை ஐமகூ-ஜனாதிபதி சந்திப்பிலும் இடம்பெறும்
    – தமுகூ தலைவர் மனோ கணேசன்

    தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆகஸ்ட் 11ம் திகதி நேரடியாக சந்தித்து மலையக தமிழ் இலங்கையர்களின் அபிலாசைகள் தொடர்பில் குறிப்பாகவும்,

    தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவாகவும் கலந்துரையாடும். “பொருளாதார மற்றும் சமூக

    ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம் ஒன்றினை செயல்படுத்துதல்” தொடர்பில், ஜனாதிபதி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு விடுத்துள்ள அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெறும்.

    அதேவேளை, நாளை ஆகஸ்ட் 5ம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியின்
    தூதுக்குழுவிலும் இடம்பெற்று பொதுவான தேசிய பிரச்சினைகள்


    தொடர்பிலும் கலந்துரையாடுவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      தேசிய அரசு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்

      தேசிய அரசு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்

      இலங்கை ,கொழும்பு ; தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து எமக்கு இதுவரை அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வரவில்லை. ஏனைய எதிர்கட்சிகளுக்கும் அதிகாரபூர்வ அழைப்புகள்

      வரவில்லை. ஆகவே அதற்குள் “பேச்சுகள் நடக்கின்றன; அமைச்சர்கள் ஆகிறார்கள்” என்பவையெல்லாம் வெறும் சுவாரசிய செய்திகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ரணில்

      விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும், அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல்

      ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி நம்புகிறது என கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

      அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்

      இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

      தேசிய அரசு அல்லது சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில் அதிகாரபூர்வ அழைப்பு வரவில்லை. ஆனால், கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்னிடமும், ஏனைய கட்சி

      தலைவர்களிடமும் நேரடியாக இது பற்றி கூறினார். ஆனால், கட்சிகளுக்கு சர்வ கட்சி அரசு அமைப்பது தொடர்பில், அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு வரவேண்டும்.

      அதன் பிறகு நாம் எமது கட்சிகள் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழுக்கள் மத்தியில் இதுபற்றி பேசுவோம். அதேபோல் ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமைக்குழுவிலும் பேசுவோம்.

      இதுதான் ஒரு பொறுப்புள்ள நேர்மையுள்ள ஜனநாயக அரசியல் கட்சி செய்ய வேண்டிய முறைமை.

      அரசாங்கத்திடமிருந்து அதிகாரபூர்வ அழைப்பு எவருக்கும் வரவில்லை மனோ கணேசன்

      அதை நாம் செய்வோம். எமது முடிவுகளை எமக்கு வாக்களித்து தெரிவு செய்துள்ள, எமது மக்களின் நலன்களை முன்னிட்டு, நாம் ஒற்றுமையாக எடுப்போம்.

      அதேவேளை, நாடு இன்று இருக்கும் அவதி நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அவகாசம் கொடுக்க வேண்டும் எனவும்,

      அவசரப்பட்டு எதிர்ப்பு அரசியல் ஆர்ப்பாட்டங்களை செய்யக்கூடாது எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணி திடமாக நம்புகிறது.

      அதுவே எங்கள் மக்களின் நிலைப்பாடாகவும் இருக்கிறது. பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் நலன்களை சார்ந்து மாத்திரம் தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் செய்யாது.

      அரசில் சேருகிறோமோ, இல்லையோ, புதிய அரசியலமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள


      அமைச்சருடன் நாம், மலையக தமிழ் இலங்கையர்களின் அரசியல் அபிலாஷைகளை முன் வைப்போம்.

      அடுத்து வரும் அரசியலமைப்பு திருத்தத்தில் எமது மக்களின்
      எதிர்பார்ப்புகளை இடம்பெறச்செய்ய எம்மால் ஆனதை நாம் பொறுப்புடன் செய்வோம்.

        Posted in இலங்கை செய்திகள்

        பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள்நாங்கள் மனோ கணேசன்

        கொழும்பு ; பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள் நாங்கள் மனோ கணேசன்

        நீங்கள் பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்!
        மத-அரசியல்-சிவில் பிரதிநிதிகள் கூட்டத்தில் மனோ கணேசன்
        காலிமுக திடல் போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம்.

        ஆனால், போராட்டத்தை நாம் அங்கிருந்து கற்றோம் என நீங்கள் நினைக்க கூடாது. நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்.

        நாம் மதவாதத்தால், இனவாதத்தால், அரச பயங்கரவாதத்தால் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு இனம்.

        பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள்நாங்கள் மனோ கணேசன்

        இந்த அநீதிகளுக்கு எதிராக நாம், இன்று, நேற்று அல்ல, பல்லாண்டுகளாக போராடி வருகிறோம்.

        நாம் எப்போதும் ஜனநாயக போராளிகள்தான். அரசியலில் இருந்து மதம் அகற்றப்பட வேண்டும்.

        இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். அதுவரை எம் ஜனநாயக போராட்டம் தொடரும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறினார்.

        கொழும்பு பத்தரமுல்லை இம்பீரியல் மொனார்ச் விடுதியில் இன்று நடைபெற்ற “சீர்திருத்தத்திற்கான கூட்டு” என்ற சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஓமல்பே சோபித தேரர் உட்பட மதத்தலைவர்கள்,

        நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பீக்கள் கலந்துக்கொண்ட கலந்துரையாடலில் உரையாற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது.

        225 பேர் கொண்ட நாடாளுமன்றம் என்ற சொற்பதம் இங்கே ஏற்பாட்டாளர்களினால் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது.

        அந்த கும்பலில் எங்களை போடாதீர்கள். இந்த கோதாபய அரசாங்கத்தை நாங்கள் கொண்டு வரவில்லை. நாம் எப்போதும் இந்த ராஜபக்சர்களை எதிர்த்தே வந்துள்ளோம்.

        நாங்கள் ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகள். நீங்கள் சொல்லும் அந்த 225 பேர் வேறெங்கோ இருக்கிறார்களோ எனக்கு தெரியவில்லை.

        நான் அந்த கும்பலில் இல்லை என்பது எனக்கு தெரியும். நான் மக்களுடனேயே இருக்கிறேன். நான் கட்சி மாறி சோரம்போன அரசியல்வாதி இல்லை.

        பாற்சோறு பரிமாறி கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள்நாங்கள் மனோ கணேசன்

        காலிமுக திடல் போராட்டத்தை நாம் கொள்கைரீதியாக ஆதரிக்கிறோம். “கோதா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை நாம் ஆதரிக்கிறோம்.

        ஆனால், அதற்காக இங்குள்ள பலரை போல நாங்களும், “கோதா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை, காலிமுக திடலில் இருந்தே கற்றோம் என எண்ண வேண்டாம்.

        ஜனாதிபதி கோதாபய, இதைவிட பலமாக பாதுகாப்பு செயலாளர் கோதாபயவாக இருந்த போதே, “கோதா-கோ-ஹோம்” என கோஷம் எழுப்பி போராடியவர்கள், நாங்கள்.

        எங்கள் கொழும்பில் எங்கள் மக்களை வெள்ளை வானில் வந்து, பலவந்தமாக தூக்கி சென்ற வேளையில், 2005ம் ஆண்டிலேயே ராஜபக்சர்களை எதிர்த்து போராடியவன்,

        நான். எனது சக போராளி நண்பன் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். என்னை கொலை செய்ய முயற்சிகள் நிகழ்ந்தன.

        இந்த அநீதிகளுக்கு எதிராக நாம், இன்று, நேற்று அல்ல, பல்லாண்டுகளாக போராடி வருகிறோம். மதவாத, இனவாத, அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடியவர்கள், நாம். நீங்கள் பாற்சோறு உண்டு கொண்டாடிய வேளையிலும் போராடியவர்கள், நாங்கள்.

        ஆகவே காலிமுக திடல் போராட்டத்தில் இருந்து போராட நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.

        நாங்கள் கற்க அங்கு எதுவும் இல்லை. நாம் புது போராளிகள் அல்ல.


        நாம் எப்போதும் ஜனநாயக போராளிகள்தான். காலிமுக திடல் போராட்டத்தை நாம் கொள்கைரீதியாக ஆதரிக்கிறோம்.


        அந்த போராட்டம் மூலம் வரும் மாற்றத்தை நாம் வரவேற்கிறோம்.
        அந்த மாற்றத்தின் மூலம் இலங்கை அரசியலில் இருந்து மதம் அகற்றப்பட வேண்டும்.


        இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட வேண்டும். அதுவரை எம் ஜனநாயக போராட்டம் தொடரும்.

          Posted in இலங்கை செய்திகள்

          தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்

          தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்

          ஒடுக்கப்படும் தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்கள். நாம் அன்றிலிருந்து “கோடா-கோ-ஹோம்”தான்..!


          போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன்
          “தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள்.

          எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள். இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக எமக்கு தகுதி இல்லாமல் இல்லை. அவை நிச்சயமாக எமக்கு இருக்கின்றன.

          ஆனால், நாம் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுள்ள எமது மக்களை விடுவிக்கவே இன்று துடிக்கிறோம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

          தமிழ் முற்போக்கு கூட்டணி- அனைத்து கட்சி போராளிகள் குழு சந்திப்பு, இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் இல்லத்தில் நிகழ்ந்தது. தமிழ் முற்போக்கு

          கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

          தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், காலிமுகதிடல், “அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) தூதுக்குழுவினக்கும் இடையில் எனது இல்லத்தில் நிகழ்ந்தது. இந்த சந்திப்பில்

          திகாம்பரம் எம்பியும் கலந்துக்கொண்டார். அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) சார்பில், விபீதக பொத்துவகே, நிராஷான் விதானகே, மனிஷ் கலப்பத்தி, கெலும் அமரதுங்க ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

          இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நடைபெற்ற பேச்சுகளின் போது, தொடர்ந்து தமுகூ-அகபோ இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணி செயற்படுவது என்று முடிவானது. மலையக மக்கள், இலங்கை தேசிய தளத்தில் உள்வாங்கப்படுவது தொடர்பான, தமுகூ யின் மலையக அபிலாஷை ஆவணமும் அனைத்து கட்சி போராளிகளுக்கு வழங்கப்பட்டது.

          இவர்களிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான் எடுத்து கூறியது, “தம்பி, நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆக வேண்டும் என துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை

          ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்”

          “தமிழர்களாகிய எங்களுக்கு இந்த உணவு இல்லை, மின்சாரம் இல்லை,.. என்பவை பழகிப்போன பிரச்சினைகள். போர் காலத்தில் பல்லாண்டுகளாக தமிழ் மக்கள் இப்படி

          வாழ்ந்தார்கள். மலை நாட்டில் போர் இல்லாமலேயே நம் மக்கள் தோட்ட சிறைகளுக்குள் இப்படிதான் வாழ்கிறார்கள்.”

          தமிழ் கட்சிகளை நட்புடன் பாருங்க-மனோ கணேசன்

          “கலவர காலங்களில் எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆகவே இவை எமக்கு சகஜம். ஆகவே புதிய இலங்கையை உருவாக்குவோம். இவை அனைத்திற்கும் தீர்வு தேடுவோம். மாற்றத்தை கொண்டு வர சொல்லிவிட்டு, நீங்கள்

          ஓரமாய் ஒதுங்கி நிற்காதீர்கள். அந்த தேடலில் நீங்களும் நேரடியாக பங்களியுங்கள். அந்த தீர்வு உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால் இருக்க வேண்டும்.”

          “மலையக தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோட்டங்களில் பின்தங்கி வாழ்கின்றனர். அவர்களை தேசிய தளத்தில் உள்வாங்க அரசு இயந்திரத்தில் பெரும் தயக்கம் காணப்படுகிறது. அதை நாம் முறியடிப்போம். நீங்களும் உதவ வேண்டும்.”

          இவற்றுக்கு, அனைத்து கட்சி போராளிகள் (அகபோ)
          சார்பில் பதிலளித்த பேச்சாளர் கெலும் அமரதுங்க கூறியதாவது,
          “நாம் உங்களை தேடி வந்து சந்தித்தமைக்கு காரணம் உண்டு. ஏனைய தமிழ்,


          முஸ்லிம் கட்சிகளையும், ஜனநாயக கட்சிகளையும் நாம் சந்திக்கிறோம்.
          இன்று விலகி போக இருந்த கோதாபய ராஜபக்ச,
          ரணில் விகிரமசிங்கவின் உள்நுழைவால் கொஞ்சம் மூச்சு வாங்குகிறார்.

          நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நீங்கள் கூறுவது போன்று,
          உணவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு அப்பால் ஆனது. அதில் நாம் இந்நாட்டின் அனைத்து இன,
          மத மக்களுடன் பயணிக்க விரும்புகிறோம். நாம் பலரை சந்தித்தோம்.

          மாற்றத்துக்காக எம்மை நேரடியாக பங்களிக்கும்படி இதுவரை யாரும் கூறவில்லை.


          நீங்கள்தான் திறந்த மனதுடன் அதை கூறுகிறீர்கள். உங்களுடன் தொடர்புகளை பேண விரும்புகிறோம்.
          மலையக தமிழ் மக்களையும் நாம் சரிசமமாக கவனத்தில் எடுப்போம்.”

            Posted in இலங்கை செய்திகள்

            மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள்.

            மலையக தமிழரின் அரசியல் அபிலாஷைகளை போராட்டக்காரர்கள் உள்வாங்க உதவிடுங்கள்.

            • முன்னிலை சோஷலிச கட்சியிடம் மனோ கணேசன்
              இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.

            குறிப்பாக, பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள் சிறு தோட்ட நில உடைமையாளர்களாக மாற வேண்டும். வீடு கட்டி வாழ காணியும், உழைத்து வாழ விளை நிலமும் பெற்று அவர்களை வாழ வைக்க விரும்பும் எமது நோக்கங்களை

            முன்னிலை சோஷலிச கட்சி ஆதரிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினரிடம், கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, பிரதி தலைவர் திகாம்பரம் எம்பி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

            தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில், கூட்டணியினரை முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவின் சார்பில் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் புபுது ஜாகொட, சஞ்சீவ பண்டார ஆகியோர் சந்தித்தனர்.

            முன்னிலை சோஷலிச கட்சி தூதுக்குழுவினருக்கு, மலையக அபிலாஷை ஆவணங்களை கையளித்த கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

            இந்நாட்டு மலையக தமிழரின் ஜனத்தொகை சுமார் பதினைந்து இலட்சம். இதில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் இன்னமும் தோட்ட சிறைகளுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களாக

            தோட்ட குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். இந்த தோட்ட குடியிருப்பு பிரதேசங்களை அரச பொது நிருவாக கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்து, தேசிய நீரோட்டத்தில் உள்வாங்க வேண்டும்.

            இதன் மூலம், நாட்டின் ஏனைய கிராமிய பிரதேசங்களில் நடைபெறுவதற்கு சமானமாக, தோட்ட பிரதேசங்களிலும் கிராம சேவகர் வலயங்கள், பிரதேச செயலக வலயங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வேண்டும். தோட்ட நிறுவனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ள

            தொழிலாளர் என்ற நிலையிலிருந்து விடுபட்டு, கிராமிய, பிரதேச, மாவட்ட மட்டங்களில் பரவலாக்கப்பட்ட அரச நிறுவனங்களின், நிருவாக மற்றும் நலவுரிமை சேவைகளை

            பெருகின்ற முழுமையான குடிமக்களாக தோட்டங்களில் உழைக்கும் மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

            அதேவேளை இந்த தோட்ட சிறைகளுக்குள் வாழும் மலையக மக்களை உள்ளடக்கிய மலையக தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷகளை புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்.

            இன்று நாட்டில் காலிமுக திடல் முதல், முழு நாட்டுக்குள்ளும் ஆங்காங்கே சிங்கள மக்கள் போராடுகிறார்கள். இந்த போராட்டக்காரர்கள் மத்தியில், முன்னிலை

            சோஷலிச கட்சிக்கு ஒரளவு செல்வாக்கு உண்டு என எமக்கு தெரியும். ஆகவே எமது இந்த கருத்துகளை அங்கே கொண்டு செல்லுங்கள்.

            காலிமுக திடலில் போராடும் வேறு பல அணியினரும், எம்முடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் இன்று சொல்லலும் “கோடா-கோ-ஹோம்” என்ற கோஷத்தை நாம் பத்தாண்டுகளுக்கு முன்னமே எழுப்பியவர்கள். நாம் ஒடுக்கப்பட்ட இனத்தை

            பிரதிநிதித்துவம் செய்கிறோம். போராடும் சிங்கள குழுக்களிடம் இக்கருத்துகளை நாம் கூறியுள்ளோம். இந்நாட்டில் வாழும் மலையக தமிழர்களின் அரசியல்

            அபிலாஷைகளையும் போராடும் சிங்கள இளைஞர் கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்மூலமே உண்மையான புதிய இலங்கையை கட்டி எழுப்ப முடியும்.

              Posted in Uncategorized

              இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனோ கணேசன் நன்றி தெரிவித்து உரை

              இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனோ கணேசன் நன்றி தெரிவித்து உரை

              பொருளாதார நெருக்கடி எங்களுக்கு புதிதல்ல. வடகிழக்கில் யுத்தம் காரணமாகவும், மலைநாட்டு தோட்டங்களில் யுத்தமில்லாமலும் பல்லாண்டுகளாக இந்த “உணவில்லை, மருந்தில்லை” என்ற பொருளாதார நெருக்கடி விடயங்கள் நிலவின. ஆகவே அவை

              எமக்கு புதிதல்ல. ஆனால், இந்நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கு இன்றைய நெருக்கடி புதிது. ஆகவேதான் நாடு முழுக்க போராட்டங்கள் நிகழ்கின்றன.

              இந்த பின்னணியில், தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இலங்கையருக்கும் உதவ தீர்மானித்து, அதற்காக இந்திய ஒன்றிய அரசின் அனுமதியையும், இலங்கை அரசின் ஒப்புதலையும் பெற்றதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்

              வாழ்ந்த, எங்கள் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே; யாவரும் கேளீர்” என்ற கூற்றுக்கு மெய்யான சமகால அர்த்தத்ததை வெளிப்படுத்தி உள்ளீர்கள் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விளித்து இன்று இலங்கை நாடாளுமன்றத்தில்

              உரை நிகழ்த்திய தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், இலங்கை தலைநகர கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

              தமுகூ தலைவர் மனோ கணேசன் பா.உ. தனது உரையில் மேலும் கூறியுள்ளதாவது,

              இலங்கை ஒருபோதும் இல்லாத விதத்தில் நெருக்கடியை சந்தித்த இவ்வேளையில், இதற்கு எவர் பொறுப்பு கூற வேண்டும் என இச்சபையில் சண்டை இடும்

              இவ்வேளையில், இருண்ட குகைக்குள் ஒரு ஒளிக்கீற்றாக நிகழ்ந்த ஒரு நிகழ்வை இந்த மாமன்றத்தின் கவனத்துக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், தலைநகர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறைகளில் கொண்டு வர விரும்புகிறேன்.

              இந்தியாவின் தமிழ் மாநில தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழக முதல்வர் கெளரவ மு.க. ஸ்டாலின், கண்ணீரால் சூழ்ந்துள்ள இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்காகவும் நிவாரண உதவிகளாக அரிசி, பால்மா, மருந்து ஆகியவற்றை வழங்க உள்ளதாக

              அறிவித்துள்ளார். அதற்கான ஒன்றைய அரசின் அனுமதியையும், இலங்கை அரசின் ஒப்புதலையும் அவர் பெற்றுள்ளார்.

              ஆரம்பத்தில் இலங்கையில் வாழும் தொப்புள் கொடி உறவுகளான தமிழருக்கு மாத்திரம் உதவ போகின்றோம் என முதல்வர் கூறிய போது, இலங்கை வாழ் தமிழக வம்சாவளி மலையக தமிழர் சார்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக

              நானும், வடகிழக்கில் வாழும் இலங்கை வம்சாவளி ஈழத்தமிழர் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக நண்பர் சுமந்திரனும், ஒரு செய்தியை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமாகவும் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பினோம்.

              “முதல்வர் அவர்களே, இலங்கையில் இன்று நாம் அனைவரும் நெருக்கடியில் இருக்கின்றோம். நாம் அனைவரும் போராடுகிறோம். சிங்களவர், தமிழர், முஸ்லிம்,

              பெளத்தர், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என்ற பேதங்களை மறக்க ஆரம்பித்துள்ளோம். ஆகவே உங்கள் உதவிகள் எமது நாட்டின் அனைவருக்குமாக அனுப்பி வையுங்கள்” என கோரினோம்.

              முதல்வர் இதை சடுதியாக புரிந்துக்கொண்டு, மனதை உருக்கும் விதத்தில் சட்டமன்றத்தில் உரை நிகழ்த்தினார். ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் உதவிடுவதாக கூறினார். அது தம் கடமை என்றார். இலங்கை நாட்டையோ, இலங்கை

              மக்களையோ, பிற நாட்டவராக பார்க்க தோன்றவில்லை என்றார். எங்கள் கண்கள் கலங்க அவரது உரையை நாம் செவி மடுத்தோம்.

              இலங்கை மக்களின் பசியை போக்கும் அதேவேளை, பால்குடி பாலகர்களின் அழுகையை போக்கும் அதேவேளை, நோய் நொடிகளை போக்கும் அதேவேளை, தமிழ்

              , சிங்கள மக்களுக்கும், தமிழகத்துக்கும், இலங்கைக்கும் இடையில் வரலாற்றுரீதியாக நிலவிய சந்தேகங்கள், அச்சங்கள், ஆகியவற்றையும் போக்கும் பாதையில் இது முதலடியாக அமைந்துள்ளது.

              தெற்கிலும், வட-கிழக்கிலும் வாழும் தமிழ் மக்களின் எதிர்காலம், சிங்கள மக்களுடனும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடனும் பின்னி பிணைந்துள்ளது. இதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் அடிப்படை. இதை இன்று தமிழக முதல்வர்

              புரிந்துக்கொண்டுள்ளார் என நம்புகிறேன். தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.

              Posted in இலங்கை செய்திகள்

              28ம் திகதி அரச எதிர்ப்பு வேலை நிறுத்தத்தில் தோட்டத்தொழிலாளர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்!-மனோ கணேசன்

              28ம் திகதி அரச எதிர்ப்பு வேலை நிறுத்தத்தில் தோட்டத்தொழிலாளர்கள் கலந்துக்கொள்ள வேண்டும்!

              • தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு
                28ம் திகதி நாடு தழுவிய நடைபெறவுள்ள ராஜபக்ச அரச எதிர்ப்பு கூட்டு தொழிற்சங்க வேலை நிறுத்தத்தில் மலையக தோட்டத்தொழிலாள உடன்பிறப்புகள் முழுமையாக கலந்துக்கொள்ள வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.
                தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதிதலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கொழும்பிலும், பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன் மலையகத்திலும் நடத்திய விசேட ஊடக சந்திப்புகளில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

              இதுபற்றி மனோ கணேசன் எம்பி கூறியுள்ளதாவது,

              ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அனைத்து ராஜபக்ச அரசியல்வாதிகளும் தத்தம் பதவிகளை இராஜினாமா செய்து வீட்டுக்கு போக

              வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு தழுவிய உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டத்தில், மலைநாட்டு தேயிலை, இறப்பர் பெருந்தோட்ட உழைக்கும் மக்களும் கலந்துக்கொள்ள வேண்டும்.

              வேறு எவரையும் விட எமக்கே இதற்கான முழு உரிமை இருக்கிறது. “கோதா-கோ-ஹோம்” என்று இன்று சொல்லப்பட்டாலும் நாம் அன்றே “கோதா-டோன்ட்-கம்” என்று சொன்னவர்கள். அதாவது, “கோதா-வீட்டுக்கு-போங்கள்” என்று இன்று

              சொல்லப்பட்டாலும், நாம் அன்றே “கோதா-வர-வேண்டாம்” என்று சொன்னவர்கள். ஆகவே இன்று முழு நாடும் எமது கோசத்தையே எதிரொலிக்கின்றது.

              எனவே 28ம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள இந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் முழு அளவில் கலந்துக்கொண்டு அமைதியாக எமது எதிர்ப்பை

              எடுத்துக்காட்டுமாறு தோட்டத்தொழிலாள உடன்பிறப்புகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் அழைக்கின்றோம்.