Tag: பெற்றோல்
பெற்றோல் பௌசர் விபத்து 140 பேர் பலி 50 பேர் காயம்
பெற்றோல் பௌசர் விபத்து 140 பேர் பலி 50 பேர் காயம்
பெற்றோல் பௌசர் விபத்து 140 பேர் பலி 50 பேர் காயம் ,நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் பெற்றோல் ஏற்றிச்சென்ற பௌசர் விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை (16), நெடுஞ்சாலையில் செல்லும்போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பௌசர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால் பௌசரில் இருந்த பெற்றோல் கசிந்து வெளியேறியது. அங்கிருந்த மக்கள் கசிந்த பெற்றோலை சேகரிக்க விரைந்தனர்.
அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடிய நிலையில், பௌசர் தீப்பிடித்து எரிந்தது. இதில் 140 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர் என, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நைஜீரியாவில் சரக்கு ரயில் போக்குவரத்து மிகப்பெரிய தோல்வி அடைந்ததால், வீதி மார்க்கமாக பௌசர்களில் எரிபொருள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்
மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன்
மனைவியை பெற்றோல் ஊற்றிக் கொளுத்திய கணவன் ,புத்தளம் – வென்னப்புவ பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (17) உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வாய்க்கால் – சிந்தார்த்திரி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குறித்த பெண் கடந்த ஒன்பது வருடங்களாக தொழில் நிமித்தம் வெளிநாட்டில்
வசித்து வந்துள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இலங்கை திரும்பிய குறித்த பெண் தனது வீட்டிற்கு வருகை தந்து மூன்று நாட்கள் மாத்திரம் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் தாங்கிய நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக வீட்டை
விட்டு வெளியேறி கொச்சிக்கடை பகுதியில் வாடகை வீடொன்றில் தங்கியுள்ளார் என விசாரணையின் தெரியவந்துள்ளது என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, 11 ஆம் திகதி தனது பிள்ளையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடந்த 7 ஆம் திகதி குறித்த பெண் மீண்டும் வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
வீட்டிற்கு வருகை தந்த நாள் முதல் கணவனுக்கும் – மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கடந்த 13 ஆம் திகதி மாலை நபர் ஒருவருடன்
தொடர்புகொண்ட குறித்த பெண் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு தொலைபேசியில் கூறியுள்ளார் என்றும் கணவன் பொலிஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
தனது மனைவி கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் நீண்ட காலமாக கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், தன்னுடனான உறவைத் துண்டித்து வாழ்ந்து வந்ததாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.
மனைவி வெளிநாட்டில் வசித்த வந்த போது தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறித்து வந்ததாகவும், வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பியதும், கள்ளத் தொடர்பில் இருந்த நபருடன் வாழ விருப்பம் என்றால்
நான்கு பிள்ளைகளையும் பராமறித்துக் கொண்டு அந்த நபருடனேயே இருக்குமாறும் மனைவியிடம் கூறியதாகவும், பிள்ளைகளை தனது பராமறிப்பில் வைத்துக் கொள்ள மனைவி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கணவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 14 ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறிச் செல்ல தயாரான போது, பிள்ளைகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இங்கேயே தங்கியிருக்குமாறு கணவன் தனது மனைவியிடம் கேட்டுக்கொண்டேன்.
தனது பேச்சை நிராகரித்த மனைவி தன்னுடன் வாக்குவாதப்பட்டதாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில்,
ஆத்திரமடைந்த தான் சமயலறையில் இருந்த பெற்றோலை எடுத்து மனைவியின் உடல்மீது ஊற்றி தீவைத்ததாகவும் கணவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடும் தீக்காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறி அயலவர்களின் உதவியை நாடிய நிலையில், அங்கிருந்தவர்கள் அந்தப்
பெண்ணை உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தின் பெயரில் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தனது நான்கு பிள்ளைகளையும் தானே பராமறிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாகவும் தனக்கு பிணை வழங்குமாறும் சந்தேக நபர் சார்பில்
கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சந்தேக நபர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரீசிலனை செய்த நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியிருந்தது.
எனினும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த குறித்த பெண் மூன்று நாட்களின் பின்னர் நேற்று (17)
காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உயிரிழந்த பெண்ணின் கணவரான 43 வயதுடைய நபர் சந்தேகத்தின் பெயரில் நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் குற்ற விசாரணை பிரிவு
பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.டி.பி.ஸ்ரீவர்தன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

பெற்றோல் குண்டுத் தாக்குதல்
பெற்றோல் குண்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த குண்டு தாக்குதல் ஏன் நடத்த பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
நேற்று இரவு இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
சீனா பெற்றோலினால் பெற்றோல் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்
சீனா பெற்றோலினால் பெற்றோல் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் சினோபெக் ஒக்டேன் 92 பெற்றோலை குறைந்த விலையில் விற்பனை செய்வதால் இவ்வாறு எரிபொருள் தேவை குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சீனா சினோபெக் நிறுவனம் ஒக்டேன்ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலினை 358 ரூபாவிற்கும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி நிறுவனம் ஆகியவை ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெற்றோலினை 365 ரூபாவிற்கும் விற்பனை செய்கிறது.
இந்நிலைமை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபத்தில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனா பெற்றோலினால் பெற்றோல் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்
அத்துடன், இதுவரையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஏறக்குறைய 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சீனாவின் சினோபெக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் சுமார் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
எவ்வாறாயினும், தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களை சீன நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் எரிபொருள் பிரிவினையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சினோபெக் நிறுவனம் முன்வைத்த ஒப்பந்தங்களை அவர்கள் பணிகளை தொடங்கும் முன் பூர்த்தி செய்யாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், சினோபெக் குறைந்த விலையில் எரிபொருளை விற்கும்போது, பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி நிறுவனங்கள் அதிக விலைக்கு எரிபொருளை விற்பது நியாயமற்றது என பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சீனா பெற்றோலினால் பெற்றோல் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம்
பெற்றோலியம் தொடர்பாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படாததால், அதற்கு எதிராக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (11) பிற்பகல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதிக்கு அறிவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்
- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்
- ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது
- புட்டீன் ஈரன் சந்திப்பு
- நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
யாழில் பெற்றோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை
யாழில் பெற்றோல், டீசல் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கை
தேசிய எரிபொருள் விநியோக திட்டத்திற்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் (21) தொடக்கம் பெற்றோல் மற்றும் டீசல் விநியோகத்தை
சீராக முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோக நடைமுறைகள் தொடர்பில் நேற்றைய தினம் (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 8 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகமும், 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகமும் இடம்பெறுகின்றன..
நேற்று (21 ஆம் திகதி) தொடக்கம் 29 ஆம் திகதி வரை பெற்றோல் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது.
மக்கள் எந்த விதமான நெருக்கடி மற்றும் குழப்பங்களை
ஏற்படுத்தாது அமைதியான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை சராசரியாக 7 – 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 25 ஆம் திகதி வரையில் டீசல் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான
அட்டவணை இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு குழப்ப நிலையை தோற்றுவிப்பதற்கான சூழலை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதற்கமைவாக அரசாங்கத்தினால் தேசிய எரிபொருள் விநியோக அனுமதிப் பத்திரம் ( National fuel Pass வெளியிடப்பட்டுள்ளது.
QR code முறை மூலமாக இதனை பெற வேண்டும்.
இதனைப் பெறுவதில் சில நடைமுறை பிரச்சினைகள் காணப்படுவதனால் அது முதல்கட்டமாக மேல் மாகாலத்திலும் அடுத்த கட்டமாக நாடு பூராகவும்
அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் 25ஆம் திகதிக்கு பின்னர் அமுலில் இருக்கும்.
இந்த திட்டம் யாழ் மாவட்டத்தில் அமுல்படுத்தப்படும் வரையில் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விநியோக
பங்கீட்டு அட்டைகளை பயன்படுத்துமாறும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களின் இறுதி இலக்க அடிப்படையில் இந்த விநியோகம் இடம்பெறும்.
பொதுமக்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நெருக்கடி நிலையை ஏற்படுத்தாமல் அமைதியாக அந்தந்த பிரதேசங்களில் உள்ள எரிபொருள்
நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
எரிபொருள் பங்கீட்டு அட்டை இதுவரை கிடைக்கப் பெறாதவர்கள் கிராம அலுவலர் ஊடாக பிரதேச செயலகங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிற மாவட்டங்களில் பணிபுரியும் அரச உத்தியோகத்தர்கள் தங்களின் உரிய ஆவணங்களை அந்தந்த பிரதேச செயலகங்களில் சமர்ப்பிப்பதன் மூலம் அவர்களுக்குரிய எரிபொருள் பங்கீட்டு அட்டையை
பெற்றுக் கொள்ள முடியும். யாழ் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பதற்காக யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்கம் மட்டுப்படுத்திய எரிபொருள் விநியோகத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்கு எரிபொருளை பெறுபவர்கள் கட்டாயமாக மாவட்ட செயலகங்களில் முன் அனுமதியை பெற்றிருத்தல் வேண்டும்.
யாழ் மாவட்டத்தில் கருப்பு சந்தை எரிபொருள் விற்பனையை தடுக்கும் முகமாக
இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது பொது மக்களை அசௌகரியத்திற்கு
உட்படுத்தப்படும் செயல் அல்ல. எனவே அனைவரும் ஒத்துழைத்து எரிபொருள் விநியோகத்தை
முன்னெடுப்பதற்கு உதவுமாறும் அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு
பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு
பிரிட்டனில் 17 வருடங்களின் பின்னர் முதன் முறையாக லீற்றர் பெற்றோல் M2 சாலை பகுதியில் 202.9பவுண்டாகவும் அத்துடன் டீசல் 204.9p ஆக விலை அதிகரிக்க பட்டுள்ளது
பிரிதானியாவில் இடம் பெற்றுள்ள இந்த விலையின் உயர்வு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உக்கிரேன் ரசியாவுக்கு இடையிலான போரினால் பெற்றோல் விலை அதிகரிக்க பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
பெற்றோல் விலை உயர்வு காரணமாக பொதி சேவைகள் மற்றும் டிலிவரி சேவைகள் என்பனவற்றின் விலை எகிறும் நிலை ஏற்படலாம் என முக்கிய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன
உக்கிரேன் ரசியாவின் போரினால் உலக நாடுளில் நாள் தோறும் பொருட்களின் விலை அதிகரிக்க படுகிறது
இவ்வாறான தொடர் விலை உயர்வினால் அப்பாவி மக்களே பாதிக்க படுகினறனர் ,
பிரிட்டனில் லீட்டர் பெற்றோல் 2 பவுண்டாக விலை உயர்வு
,உக்கிரேன் போரை முடிவுக்கு கொண்டுவர துடிக்கும் ரசியாவுக்கு எதிராக ,பிரிட்டன் அமெரிக்கா குறுக்கே நிற்பதால் இந்த விலை உயர்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
அமெரிக்கா பிரட்டன் ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்காது விட்டால் ,உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுற்றால் இயல்பு நிலைக்கு உலகம் திரும்பிடும் சாத்தியங்கள் அதிகம் உள்ளன ,
ஆனால் அதனை தடுப்பது பிரிட்டன் அமெரிக்காவாகும் ,இந்த போரை முன் தள்ளி செல்வது இவர்களேயாகும் ,
இதனால் தான் என்னவோ ரசியா மக்களை கொதித்தெழ வைக்கும் மறுமுனை ஆட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளது
இலங்கையை போல பிரிட்டனிலும் பொருட்களின் விலை அதிகரித்து செல்வதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை மேலோங்கியுள்ளது
இலங்கையை போல நெருக்கடிக்குள் பிரிட்டன் சிக்கி விடுமோ என்றோ அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது
மின்சார விலை,எரிவாயு விலை ஐம்பது வீதம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை சொல்லென்னா துயரில் ஆழ்த்தியுள்ளது
45 லீட்டர் கொள்ளளவு கொண்ட தாங்கி 100 பவுண்டுக்கு நிரப்ப பட்டது ,தற்போது அதுவே 111 பவுண்டாக அதிகரித்துள்ளது .
- வன்னி மைந்தன் –






















