செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணியில் எலும்புக்கூடுகள் மீட்பு நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தமிழர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் அதிகாலை செம்மணி சிந்துபாத்தி இந்த மயானத்தில் ஒரு குழியில் மனித சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவை அடுத்து அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

செம்மணியில் ஏழு எலும்பு கூடுகள் மீட்பு

இந்த புதைகுழிகளில் இருந்து நேற்று வரை ஏழு எலும்பு மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 வயதிற்கு தக்க சிறுமி எலும்புக்கூடும் காணப்படுகின்றது.

சுமார் 20 வருடங்களாக புதைக்கப்பட்ட காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் மனித எலும்பு கூடுதலாக இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து காலப்பகுதியில் படுகொலை

குறித்த பகுதியில் இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து இருந்த காலப்பகுதியில் இவர்கள் படுகொலை செய்யப்பட்டு இங்கு புதைக்கப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.

சிறுவர்கள் பெரியவர்கள் கைது செய்யப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொடூரமாக வதைக்கு உள்ளான நிலையில் பின்னர் அங்கு வயல் வெளிகளில் புதைத்துள்ள நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

அவ்விதம் இந்த மனிதப் படுகொலை இடம் பெற்று இருக்கக்கூடும் என தெரிய வருகிறது.

தமிழ் பகுதிகளை ஆக்கிரமித்து நிலை கொண்ட சிங்கள பேரினவாத ராணுவம் இவ்வாறான மனித படுகொலைகளை நடத்தி, தமிழ் மகளை அடக்கி ஒடுக்கி வந்தது மீளவும் ஒரு முறை அம்பலப்பட்டு நிற்கிறது.

கிருசாந்தி முதல் வித்தியா வரை இடம்பெறும் பல கொலைகளுக்கு பின்னணியில் இலங்கையினுடைய புலனாய்வு அரசு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளது ,

அம்பலமாக இருந்த நிலையில் இந்த செம்மணி புதைகுழி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செம்மணியில் ஒரு மனித புதைகுழி
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் ஒரு மனித புதைகுழி

செம்மணியில் ஒரு மனித புதைகுழி

செம்மணியில் தோண்ட தோண்ட மிதக்கும் மண்டையோடுகள் ஆகவே செம்மணி ஒரு மனித புதைகுழி என பிரகடணம் செய்யபப்டவுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.

அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது.

இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , மண்டையோடு ஒன்றும்,, கை எலும்பு ஒன்றும் மீட்கப்பட்டன.

இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.

அந்நிலையில் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை மீள அகழ்வு பணிகள் ஆரம்பமான போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி அப்பகுதி சகதியாக காணப்பட்டமையால்,

பிறிதொரு பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் போது, ஐந்து மண்டையோடுகளுடன் , எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் , எலும்பு கூட்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மூன்று மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால்

அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

அதனால், அப்பகுதியை மனித புதைகுழி என பிரகடனப்படுத்துமாறு யாழ் . நீதவான் நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைக்க உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்னர்.

Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்ட நல்லூர் வளைவு

நல்லூர் ஆலயத்தின் வரலாற்றையும் கலை கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில்

யாழ்ப்பாணம் செம்மணியில் பிரம்மாண்டமான வகையில் நல்லூர் வளைவு அமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

இந்த வளைவு அமைப்பதற்காக முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.

அந்த நிதிக்கு அமையவே இந்த வளைவு அமைக்கும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.