செந்தமிழ் வாழ வழி காட்டு
Posted in கவிதைகள் வினோத வீடுப்பு

செந்தமிழ் வாழ வழி காட்டு

செந்தமிழ் வாழ வழி காட்டு

பட்டம் பெற்றால் பாராட்டு
படைத்தாய் சாதனை தேரோட்டு
பெற்ற பொருளை முதல் காட்டு
பெருமை உள்ளதா அதில் சுட்டு

திறனை அறிந்து வாலாட்டு
திரிபுகள் திணித்தால் அது தீட்டு
பறந்தால் பட்டம் உன் திறனா
பறப்பின் வாயு உன் அரணா ..?

அவையில் அணியும் அசை காட்டு
அவையின் அழகை அதில் தீட்டு
அகத்தின் அழகை அதில் காட்டு
அகிலம் அழைக்க அதில் சூட்டு

மொழியின் புலமை அதில் காட்டு
மொழியும் மொழியில் உயிர் கூட்டு
மெய்யாய் மேனி அதில் காட்டு
மேன்மை கொள் நீதி நிலைநாட்டு

சொல்லும் செயலும் ஓர் நாற்று
சொன்னதை செய்தால் நீ போற்று
செத்தும் வாழும் நிலை நாட்டு
செந்தமிழ் வாழ வழி காட்டு …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-04-2024

Posted in சீமான் பேச்சு

வழக்கில் சிக்க வைக்கப்பட்ட சீமான் வீடியோ

வழக்கில் சிக்க வைக்கப்பட்ட சீமான் வீடியோ

செந்தமிழர் சீமான் வர்கள் மீது தொடராக வழக்கு தொடுக்க பட்டு
அவர் உள உரனில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சிறை வழக்கு என
சிறை படுத்தும் பயமுறுத்தலை ஆளும் ஆட்சிகள் தொடுத்த வண்ணம் உள்ளன

அதனை எதிர் கொண்டு செந்தமிழ் சீமான் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளார்


இவரை சிறையில் அடைத்தால் ,நாம் தமிழர் கட்சி செயல் இழந்து விடும் என்பது அவர்கள் கருத்தாக உள்ளது

வழக்கு தொடுக்க பட்டு சிறையில் அடைக்க பட்ட சீமான் வெகுண்டெழுந்து ஆட்சியில் அமர்வார் என்பது
தமிழர்கள் கருத்தாக உள்ளது

இதில் அழுத்தி காணொளி பார்க்க