Tag: கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை
ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை
ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை ,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.
கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
- செல்லப்பா எங்க செல்லப்பா |705| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேசம் மறக்குமா எங்க தேசம் மறக்குமா செல்லப்பா |704| தேனிசை செல்லப்பா பாடல்|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
கோட்டாபய தொலைபேசி உரையாடல் அம்பலம்
கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம் ,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆம் ஆண்டு என்னுடன்
தொலைபேசியில் உரையாடிய போது என்னிடம் கூறியதை மறுக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மைய அறிக்கையை குறிப்பிட்டு, கர்தினால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்த முடியாது, ஏனெனில் தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கூறியதை மறுக்கிறார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்
“2021 பிப்ரவரி 2ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி என்னுடன் தொலைபேசியில் பேசியதை நானும் எனது செயலாளரும் உறுதிப்படுத்தி நிரூபிக்க முடியும். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை விசாரித்த
கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
ஜனாதிபதி ஆணைக்குழு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய மட்டுமே பரிந்துரைத்துள்ளது என்று சமீபத்தில் ராஜபக்சே கூறினார்.
இஸ்லாமியம் அல்லாத ஒரு அமைப்பையும் தடை செய்யுமாறு அறிக்கை தெளிவாக பரிந்துரைத்துள்ளது, இந்த உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மறுக்க முடியாது” என்று கர்தினால் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரிகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இடமாற்றம்
செய்துள்ளதாக கர்தினால் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக கர்தினால் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்த போதிலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கர்தினால் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தற்போதைய அரசாங்கம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைத்தையும் கம்பளத்தின் கீழ் தொடர்ந்து தள்ளுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
Featured
தாய்லாந்தில் கோட்டபாய நாடு நாடாக ஓடும் பரிதாபம்
தாய்லாந்தில் கோட்டபாய நாடு நாடாக ஓடும் பரிதாபம்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது மனைவியுடன் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
தாய்லாந்துக்கு தப்பி சென்றுள்ள கோட்டபாய ராஜபக்ச அங்கு மூன்று மாதம் மட்டுமே தங்க வைக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது.
சிங்கப்பூரில் கோட்டபாய ராஜபக்ச வாசிப்பதற்கான விசா வழங்குதல் நிறுத்த பட்ட நிலையிலேயே அங்கிருந்து தாய்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளார் .
கோட்டபாயவுக்கு விசா வழங்குதலை நிறுத்துமாறு முக்கிய வல்லரசு நாடு ஒன்று அழுத்தம் கொடுத்து வரும் நிலையியல் இந்த பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் அந்த வல்லரசு ஈடுபட்டுள்ளது.
சீனாவுடன் ஒட்டி உறவாடிய நிலையில் கோட்டபாயவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
தமிழர்களை கொன்று குவித்து ஏப்பம் விட்ட இதே கோட்டபாய ராஜபக்ச இன்று நாடு நாடாங்க ஓடும் அவளை நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர் சாபம் கோட்டபாய ராஜபக்சாவை துரத்துகிறது என்பதை இதில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
கோட்டாவை துரத்தும் சிங்கப்பூர் கண்ணீரில் ஐயா
கோட்டாவை துரத்தும் சிங்கப்பூர் கண்ணீரில் ஐயா
சிங்கப்பூர் ; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் சிங்கப்பூரில் தங்கியிருப்பார் என தகவல் உறுதிப்படுத்தியுள்ளன.
கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இலங்கை திரும்புவார் என நேற்று(26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் நாட்டில் தங்குவதற்கு சிங்கப்பூர் அவகாசம் வழங்கியுள்ளது.
தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு
தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா
மாளிகையில் இன்று (05) முற்பகல் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்களை, தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.
தலதா மாளிகைக்கு வழிபாட்டுக்காக வருகை தந்திருந்த பொதுமக்களும், ஜனாதிபதி அவர்களுக்கு அமோக வரவேற்பளித்தனர். இதன்போது அந்த மக்களுடன் சுமூகமாகக்
கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அவர்களின் நலன் விசாரித்தறிந்து கொண்டார்.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும்
புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஒக்டோபர் 1ஆம் திகதி நாடு திறப்பு
கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஒக்டோபர் 1ஆம் திகதி நாடு திறப்பு
ஏற்கெனவே கடைப்பிடிக்கப்பட்டதைப் போல் இல்லாமல், கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஒக்டோபர் 1ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் நாடு திறக்கப்படக்கூடுமென தகவல்கள் வெளியாககியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, நியூயோர்க் சென்றுள்ளார். அதனால், கொவிட்-19 தொற்றொழிப்பின் ஜனாதிபதி செயலணியின் நேற்றைய (24) கூட்டம் நடைபெறவில்லை.
எனினும், ஒக்டோபர் முதலாம் திகதிக்குப் பின்னர் நாட்டை திறப்பதற்கு தேவையான கட்டுப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கையிடுமாறு கட்ட கூட்டத்தின் போது, விடயதானத்துக்குப்
பொறுப்பானவர்களிடம் ஜனாதிபதி பணித்திருந்தார்.
கொவிட்-19 தொற்றொழிப்பின் ஜனாதிபதி செயலணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடி ஆராய்ந்து முடிவெடிக்கும். எனினும், ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர், ஒக்டோபர் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர், பிறிதொருநாளில் அச்செயலணி கூடி
முடிவெடுக்கக்கூடும் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாடு, தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்ததன் ஊடாக நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன எனத் தெரிவித்த ராகம வைத்திய பீடத்தில் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா, கடுமையாக கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கான ஏற்பாடுகளை
முன்னெடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணியாளர்களை அழைப்பது 25 சதவீதத்தில் மட்டுப்படுத்தவேண்டும். பொது போக்குவரத்தில் பயணிகளை ஏற்றிச்செல்வது 50 சதவீதமாக இருக்கவேண்டும் என்றும் பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.
திருமண வைபவங்கள் உள்ளிட்ட மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுகூடும் நிகழ்வுகளை முழுமையாக தடைசெய்யமுடியும் எனத் தெரிவித்துள்ள அவர், நாட்டை முழுமையாக திறக்கவேண்டுமாயின் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் செயற்றிட்டம் 70-80 சதவீதங்களுக்கு அண்மித்திருக்க வேண்டும்.
நாட்டை முடக்கியிருந்த இந்தக்காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை திருப்தியடையும் வகையில் இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார்
கோட்டாபய ராஜபக்ஷ நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார்
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, ஐக்கிய அமெரிக்க இராச்சியம் நோக்கிப் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், நியூயோர்க் நகரை அடைந்தார்.
அந்நாட்டு நேரப்படி, 18ஆம் திகதி பி.ப 2.30 மணியளவில், நியூயோர்க் ஜோன் எஃப் கெனடி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினரை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் அவர்கள் வரவேற்றார்.
“கொவிட் 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின்
மறுமலர்ச்சி” என்ற தொனிப்பொருளில், 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ளது. இதனையொட்டிய வெளிநாட்டு அமைச்சுகள் ரீதியிலான கூட்டத்தொடர், நாளை முற்பகல் ஆரம்பிக்கவுள்ளதோடு, இந்தக் கூட்டத்தொடர்களில் பங்கேற்பதற்காக, அரச தலைவர்கள் பலரும், நியூயோர்க் நகரைச் சென்றடைந்துகொண்டிருக்கின்றனர்.
அரச தலைவர்கள் மாநாட்டின் இரண்டாவது நாள் முற்பகல் வேளையில், ஜனாதிபதி அவர்கள் தனதுரையை ஆற்றவுள்ளார். அத்துடன், 23ஆம் திகதி இடம்பெறவுள்ள உணவுக் கட்டமைப்புக் கூட்டத்தொடரிலும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ள எரிசக்தி தொடர்பான உயர்மட்டக்
கலந்துரையாடலின் போதும், ஜனாதிபதி அவர்கள் தனது கருத்துகளை முன்வைக்க எதிர்பார்த்திருக்கிறார். இதற்கிடையே, கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுடன், இரு தரப்புக் கலந்துரையாடல்களையும் ஜனாதிபதி அவர்கள் மேற்கொள்ளவுள்ளார்.
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே
ஆகியோரும், ஜனாதிபதியுடன் இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர்களை பாதுகாக்க உதவுவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு
கலைஞர்களை பாதுகாக்க உதவுவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு
கொவிட் நோய்த்தொற்றை ஒழித்து உலக நிலைமைகள் சீராகும் வரை பார்த்திராது கலைஞர்களை தேசிய பொருளாதாரத்துடன்
இணைத்து பாதுகாப்பதற்கு உதவுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல சந்தர்ப்பங்களில் கலைஞர்கள் அவ்வாறு
இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். அதன் மூலம் அனைத்து மட்டங்களிலும் கலைஞர்களுக்கு தமது படைப்பு ரீதியான
பங்களிப்பை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
கடந்த காலத்திலும் கொவிட் நோய்த்தொற்றின் காரணமாகவும் இழந்த சந்தர்ப்பங்களை மீண்டும் உருவாக்குவதற்கான பின்புலத்தை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
கலைஞர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் பற்றி நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.
9ஆம் வகுப்பில் நிறுத்தப்படும் அழகியல் பாடத்தை க.பொ.த சாதாரண தரம் வரை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க
சுட்டிக்காட்டினார். இந்த முன்மொழிவை தேசிய கல்விக்கொள்கைக்கான செயலணிக்கு சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைத் தொகை கிடைக்கப்பெறாமைக்கான காரணங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சர்வதேச
ரீதியாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை இதன் காரணமாக நாடு இழந்துள்ளது. இலத்திரனியல் ஊடகங்களினூடாக ஒளிபரப்பப்படும் பாடல்களுக்கும் உரிமைத்
தொகை கிடைக்கப்பெறாமை குறித்து கலைஞர்கள் ஜனாதிபதி அவர்களிடம் குறிப்பிட்டனர். இதுபற்றி அரச மட்டத்தில் நடவடிக்கை
எடுத்த தயாரிப்பாளர்களின் உரிமையை பாதுகாப்பதாக ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் தெரிவித்தனர்.
கலைஞர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட
நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், அரச வங்கிகளின் ஊடாக அது உரிய முறையில் இடம்பெறாமை கவலைக்குரியதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு வரித் தொகையை அறவிட்டு அதனை கலைஞர்களின் நன்மைக்கு பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கலைஞர்கள் சுட்டிக்காட்டினர்
. வெளிநாட்டு திரைபடங்களை நாட்டில் படமாக்குவதற்கு சந்தர்ப்பங்களை வழங்கி அந்நியச் செலாவணியை சம்பாதிப்பதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவை
நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. கிராமிய கலைஞர்கள் மாகாண மற்றும்
பிரதேச மட்டத்தில் ஒழுங்குபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் திரைப்பட இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட
கலைத்துறையின் பல்வேறு தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலைஞர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.



















