Tag: இலங்கை
பறங்கி அற்று – மணல் கொள்ளையர்கள் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பறங்கியாற்று பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் அதன் சாரதிகள் நட்டாங்கண்டல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது
நட்டாங்கண்டல் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த இரு உழவு இயந்திரங்ளையும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாகன சாரதி இருவரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்கு பொலிஸாரின் ஆதரவுடன் மணல் கொண்டு செல்லப்படுவதாக கடந்த மாத பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொதுமக்களால் குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வில்
ஈடுபடும் வாகனங்கள் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரியை உயர்த்தி நாட்டை காப்பாற்றுக – இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் இடித்துரைப்பு
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தனது Article iv அறிக்கையை நேற்று (25) வெளியிட்டது.
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து நீண்ட ஆய்வுக்கு பின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்பதற்கு நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை தேவை என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதன் மூலம் வறுமையைக் குறைக்க சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், வருமானத்தை மேம்படுத்த வரிகளை உயர்த்த வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடனுக்கு இடையிலான விகிதம், வரி குறைப்பு காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக 95 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியும் இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டு பின்னர் அந்த அறிவிப்பை மீளப்பெறுவதாக தெரிவித்திருந்தது.
மத்திய வங்கி தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆய்வு செய்து விளக்கம் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
ரத்த கறையுடன் விஜய்.. வைரலாகும் புகைப்படம்
ரத்த கறையுடன் விஜய்.. வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய் ரத்த கறையுடன் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரத்த கறையுடன் விஜய்.. வைரலாகும் புகைப்படம்
விஜய்
விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் படம் பீஸ்ட். மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு,
ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்
விஜய், பீஸ்ட்
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. இந்நிலையில் சட்டையில் ரத்த
கறையுடன் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் புகைப்படமும், கோடாரியுடன் இருக்கும் விஜய் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்கள் பீஸ்ட் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
248 கைதிகளுக்கு கொரனோ
248 கைதிகளுக்கு கொரனோ
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள 248 கைதிகளுக்கு கொரனோ
நோயானது தொற்றியுள்ளதாக சிறைச்சாலை நாயகம் தெரிவித்துள்ளார்
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கை வந்தடைந்த இரு எண்ணெய் கப்பல்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 12 நாட்களாக நங்கூரமிட்டிருந்த டீசல் ஏற்றிச் வந்த கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக 20,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் வந்த கப்பல் சுமார் 12 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டிருந்தது.
கப்பலின் உரிமையாளரான சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தப்பட்டதை அடுத்து டீசலை இறக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
35,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பெட்ரோல் தொகை இந்திய கடன் வசதியின் கீழ் பெறப்பட்டது
துப்பாக்கி சூட்டில் இருவர் மரணம்
.கடவத்தை 9 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவரே இவ்வாறு இனந்தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேலியகொட பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பில் -தீயில் எரிந்த 23 வீடுகள்
கொழும்பு – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் சுமார் 23 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்து நேற்றிரவு 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 2 தீயணைப்பு இயந்திரங்களை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்
இலங்கை தூதரகங்களுக்கு மூடுவிழா
இலங்கை தூதரகங்களுக்கு மூடுவிழா
டொலர் பிரச்சினையைக் காரணங்காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஈராக், நோர்வே, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை தற்போதைய அரசாங்கம் மூடியுள்ளது. சைப்பிரஸில் ஆயிரக்கணக்கான
இலங்கையிர்கள் வாழ்கிறார்கள் இவ்வாறான நிலையில் அங்குள்ள தூதரகத்தையும் அரசாங்கம் மூடியுள்ளதாக சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவித்தார்.
மனைவிக்காக பலாக்காய் பறிக்க சென்ற நபர் கொலை
மனைவிக்காக பலாக்காய் பறிக்க சென்ற நபர் கொலை
பலாக்காய் ஒன்றை பறித்த நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவமொன்று எல்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் 2ஆம் தூண் பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கர்ப்பிணி மனைவியின் பசியை போக்குவதற்காக காணியின் அருகில் இருந்த பலா மரத்தில் ஏறி பலாக்காய் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது பக்கத்து வீட்டுக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் பின்னர் பக்கத்து வீட்டுக்காரர் குறித்த நபரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
ஒருவர் வெட்டி கொலை
ஒருவர் வெட்டி கொலை
அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (22) பிற்பகல் கிரான்ட்பாஸ், வெஹரகொடெல்ல சந்திக்கு அருகில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இறந்தவருக்கு வானொலியை அடகு வைத்துள்ளார்.
அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய வெஹரகொடெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு 9 ஆண்டுகள் சிறை
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு 9 ஆண்டுகள் சிறை#
எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மோசடி மற்றும் நீதிமன்ற
அவமதிப்புக்காக 9 ஆண்டுகள் கடுகாவல் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013-ம் ஆண்டு அலெக்ஸி மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் கடந்த வருடம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தனது தண்டனையை எதிர்த்து கடந்த சில மாதமாகவே அலெக்ஸி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
கோட்டாவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
கோட்டாவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி, இன்று(23) பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
தெல்கந்த முதல் நுகேகொட வரை ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் வாங்கும் இலங்கை
அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் வாங்கும் இலங்கை
அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளார்.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளார்.
பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக இந்த கடன் கோரப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுள்ளதுடன்,
சீனாவிடமும் 2.5 பில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
கடும் நடவடிக்கை எடுக்க படும் விமல் கூவல்
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் மிகவும் கடுமையான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளின் அவசர கூட்டத்தின் பின்னர்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை பத்திரிகை பேரவையின் 22 வது ஆண்டின் தேசிய விருது!
இலங்கை பத்திரிகை பேரவையின் 22 வது ஆண்டின் தேசிய விருது!
பைஷல் இஸ்மாயில் –
மட்டக்களப்பு மாவட்ட சீலாமுனை பிரதேசத்தைக் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி துஷ்யந்தி சுரேஸ் இலங்கை பத்திரிகை பேரவையின் 22 வது ஆண்டின் 2019 – 2020
இற்கான தேசிய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டு அவருக்கான விருது நேற்று (22) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த விருது துறைசார்ந்த விஷேட வைத்திய நிபுணர்களின் மருத்துவ நேர்காணல் தொகுப்புக்கள், மூலிகையின் மருத்துவப் பயன்கள் பற்றி பத்திரிகையில் எழுதி
வந்தமைக்காகவே வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
பதவி விலகும் அமைச்சர்கள்
.இலங்கையில் நிகழ் கலா அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் கோட்டாவுக்கு இடையிலான முறுகளை அடுத்து
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இவர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார் என அறியமுடிகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெற்ற அசாதாரண
சம்பவங்களை அடுத்து, இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார்
இலங்கைக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார்
இலங்கைக்கு தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹேங் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சீன திட்டங்கள் ஊடாக 11 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுக நகரத்துக்கு 1.5 அமெரிக்க மில்லியன் டொலர்கள் முதலீடு கிடைத்திருப்பதாகவும் சீன தூதுவர் குறிப்பிட்டார்.
உத்தேச அம்பாந்தோட்டை தொழிற்சாலை வலயத்தில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு ஒன்று தசம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் சீனத் தூதுவர் கூறினார். கொழும்பில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதுதொடர்பாக சீன தூதுவர் மேலும் தெரிவிக்கையில்.இலங்கைக்கு சீனா மேலும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.இது கடன் அடிப்படையில் வழங்கப்படவிருப்பதாகவும் கூறினார்.
2020 ஆம் ஆண்டு தொடக்கம் சீனாவினால் இதுவரையில் 2.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக வழங்கப்பட்டுள்ளது.1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நாணய பரிமாற்றல் நடவடிக்கைக்காக வழங்கப்பட்டவையாகும்.இலங்கை தற்பொழுது எதிர்கொண்டுள்ள நிலைமையை பயன்படுத்தி பயனடைவதற்கு சீனா எந்த வகையிலும் தயார் இல்லை என்றும் குறிப்பிட்டார்
இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் வெளிநாட்டு செலாவணி நெருக்கடி ஏற்பட பிரதான காரணம் கொவிட் தொற்றும் உலக நாடுகளில் நிலவும் யுத்த முரண்பாடும் ஆகும் என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதலீடு செய்யுமாறு தமது நாட்டு முதலீட்டாளர்களுக்கு சீன அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது. நாட்டின் வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீன முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீட்டு வாய்ப்புக்கள் துணை புரியும். இதற்காக சீன அரசாங்கம் நேரடியாகத் தலையிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் வைரஸ் பரவலுக்கு மத்தியில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட சீனாவில் கல்வி கற்ற மாணவர்கள் மீண்டும் சீனா செல்லும் போது எதிர்நோக்கும் நெருக்கடி பற்றியும் இதன் போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சீனத் தூதுவர், தமது நேரடி மத்தியஸ்தத்தின் கீழ், இதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலினால் சீனாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தாய்நாடு திரும்பினார்கள் என்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹேங் தெரிவித்துள்ளார்
இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு
இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு
பிம்ஸ்ரெக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இம்முறை இந்த அமைப்பின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் வரவுள்ளார். அடுத்த தலைமைத்துவம் அவருக்கு வழங்கப்படவுள்ளது.
ஏனைய நாடுகளின் தலைவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி 7 உறுப்பு நாடுகளின் வெளிவிவகார
அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும்
அமெரிக்கா முக்கிய அதிகாரி இலங்கை வருகிறார்
அமெரிக்கா முக்கிய அதிகாரி இலங்கை வருகிறார்
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா
நுலாண்ட் எதிர்வரும் புதன்கிழமை (23) இலங்கைக்கு உத்தியோகபூர்வ
விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது







