Posted in Uncategorized

பேஸ்புக்ல காதல் – முல்லைதீவில் 2 மாணவிகள் கற்பழிப்பு

பேஸ்புக்ல காதல் – முல்லைதீவில் 2 மாணவிகள் கற்பழிப்பு

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும்  புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்கள்.

சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு – செங்கலடிப்பகுதி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த இளைஞன் சிறுமியினை மட்டக்களப்பு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் மிதிவண்டியில் மாலைநேர கல்விக்கு

செல்வதாக சொல்லிவிட்டு மிதிவண்டியினை பற்றைக்காட்டிற்குள் போட்டுவிட்டு பேருந்தில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.

செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிச்சென்று, தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களை வீடுசெல்ல அழைத்துக்கொண்டுவந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளான்.

இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ் நகரப்பகுதியில் சுற்றிதிரிந்த வேளையில் கடை ஒன்றில் பொருட்களை வாங்கிய போது நள்ளிரவாகியுள்ளது.

இரண்டு சிறமிகளுக்கும் உதவிசெய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டுசென்று வீடு ஒன்றில் தங்கவைத்து மற்றைய சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இருவரிடத்திலும் பெறப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன்.

சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

    Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

    கூலிக்கு ஆள்வைத்து தந்தையை கொன்ற மகன்

    கூலிக்கு ஆள்வைத்து தந்தையை கொன்ற மகன்

    மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்த 22 வயதுடைய

    மகன் உட்பட இருவரை நேற்று (17) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வயல் பகுதியில் வேளான்மை காவலுக்காக அமைக்கப்பட்ட கொட்டகை

    ஒன்றில் இருந்து வெட்டுகாயங்களுடன் விவசாயியான 54 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான பரசுராமன் ஆறுமுகம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.

    3 பெண் பிள்ளைகள் 22 வயதுடைய ஒரு ஆண் பிள்ளையுமாக 4 பிள்ளைகளின் தந்தையான இவர் விவசாயம் மேற்கொண்டு வருகின்றார்.

    இந்த நிலையில் 22 வயதுடைய மகன் மதுபாவனைக்கு அடிமையாகியுள்ளதனால் மதுபானம் வாங்க தந்தையிடம் பணம் கேட்பது மற்றும் மாட்டுப்பட்டியிலுள்ள

    மாடுகளை திருடி விற்பது போன்ற நடவடிக்கையால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இதனையடுத்து சிந்துஜன் தனது தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு கிரான் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இட்ணராஜா நிரோசன் என்பனை கடந்த

    முதலாம் திகதி (1-3-2022) சந்தித்து தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாக பேரம் பேசியுள்ளான்.

    இதனைத் தொடர்ந்து அவனிடம் தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டு தந்தையை கொலை செய்வது தொடர்பில் பேசி வந்துள்ளான்.

    இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி பரசுராமன் வழமைபோன்று வேளாண்மை காவலுக்காக வயலில் உள்ள கொட்டகைக்கு தனிமையில் சென்று காவலில் ஈடுபட்டுள்ளார்.

    பரசுராமன் தனிமையில் சென்றிருப்பதை அறிந்த கூலிக்கு கொலை செய்ய அமர்த்தப்பட்ட இட்ணராஜா நிரோசன் அந்த கொட்டகைக்கு சென்றுள்ளார். மகனின்

    நண்பனான நிரோசனை கண்ட பரசுராமன் அவனுடன் பேசிக் கொண்டு அவனுக்கும் இரவு உணவை கொடுத்து இருவரும் சேர்ந்து உணவு உண்டுள்ளனர்.

    இதனையடுத்து இருவரும் உறங்கியுள்ள நிலையில் அதிகாலை 3.30 மணியளவில் கொலை செய்ய சென்றவன் கண்விழித்து பார்த்த போது பரசுராமன் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை கண்டு அங்கிருந்த கல் ஒன்றை எடுத்து அவரின் தலையில்

    போட்ட போது அவர் உயிரிழக்காததையடுத்து அவன் கொண்டு சென்ற கத்தியால் கழுத்தை வெட்டியுள்ளான். அப்போதும் அவருக்கு உயிர் போகவில்லை.

    அதனைத் தொடர்ந்து தனது இடுப்பிலுள்ள நாடா ஒன்றை எடுத்து அவரின் கழுத்தை சுற்றி இழுத்து நெரித்து அவரை கொலை செய்துள்ளான்.

    பின்னர் அங்கிருந்து தப்பி அதிகாலை 4 மணியவில் தனது நண்பனுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி நீ சொன்ன மாதிரி உனது அப்பாவை கொலை செய்துள்ளதாக தெரிவித்து விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளான்.

    எனவே பேரம் பேசியவாறு பணத்தை கொடுப்பதற்காக தனது நண்பனை தேடி கடந்த 14ம் திகதி கிரான் பகுதிக்கு சென்று நகை ஒன்றை ஈடு வைத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை நண்பனிடம் வழங்கியுள்ளான்.

    பேரம் பேசிய பணத்தை பெற்ற நிரோசன் அங்கு ஏற்கனவே நகைகடை ஒன்றில் 23 ஆயிரம் ரூபாவுக்கு ஈடுவைத்த நகையை ஈட்டில் இருந்து மீட்டுக் கொண்டு அங்கிருந்து

    இருவரும் பிரிந்து சென்றுள்ளதாக கைது செய்யப்பட்ட இருவரிடம் பொலிசார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்த கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் நாடா, கல் என்பவற்றை மீட்டுள்ளதாகவும் இந்த கொலை தொடர்பாக முதலில் கொலை செய்யப்பட்டவரின் மகiனை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் கொலையாளியை கைது

    செய்துள்ளதாகவும் இருவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

    இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

      Posted in இலங்கை செய்திகள்

      கிளிநொச்சியில் புயல் -5 வீடுகள் சேதம் – மரம் விழுந்து ஆட்டோ நாசம்

      கிளிநொச்சியில் புயல் -5 வீடுகள் சேதம் – மரம் விழுந்து ஆட்டோ நாசம்

      கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

      இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

      மாலை 5 மணி நிலவரத்தின் படி செல்வா நகரில் மூன்று வீடுகளும் கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

      இதேவேளை மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.

      பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஏற்பட்ட

      பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

        Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

        மணமகன் கழுத்து அறுத்து கொலை

        .மணமகன் கழுத்து அறுத்து கொலை

        கொம்பனித்தெரு – டோசன் வீதியில் நடந்த திருமண நிகழ்வில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மணமகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        சம்பவத்தில், மணமகளின் மூத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

        உயிரிழந்தவர் முச்சக்கரவண்டி சாரதியாக பணியாற்றிய 51 வயதான மொஹமட் ஷயாபிதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

        குறித்த நபர் தனது திருமணத்தை 16ஆம் திகதி பதிவு செய்துவிட்டு, நேற்று இரவு வீட்டில் திருமண வைபவத்தை நடத்தியுள்ளார்.

        இதன்போது, இரவு 10.00 மணியளவில் திருமண நிகழ்ச்சிக்கு ​வந்த மணமகளின் முன்னாள் கணவர், மணமகனிடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

        சம்பவத்தில் படுகாயமடைந்த மணமகன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

        சம்பவத்தையடுத்து சந்தேகநபர் தப்பியோடிய நிலையில், இன்று காலை கொம்பனித்தெரு பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

        மொரட்டுவை – சொய்சாபுர பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பெண்ணே மணமகளாவார். இவருடைய முதல் திருமணத்தில்
        அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          தீயில் எரிந்த பேரூந்து

          தீயில் எரிந்த பேரூந்து

          தம்புள்ளை – அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

          நேற்றிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற போது குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          அப்போது பேருந்தில் பயணிகள் இருந்த போதிலும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

          சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசேட விசாரணை ஆரம்பித்துள்ளனர்.

          செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
          Posted in இலங்கை செய்திகள்

          மரத்தில் நிர்வாணமாக தொங்கிய சடலம்

          மரத்தில் நிர்வாணமாக தொங்கிய சடலம்

          ஹோர்டன் சமவெளி அமைந்துள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில்

          நிர்வாணமாக தொங்கிய சடலமொன்று நேற்று (16) பட்டிபொல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

          குறித்த காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

          உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முதல் மதுபானம்

          அருந்தியுள்ளதுடன், தான் அணிந்திருந்த சகல ஆடைகளையும் கழற்றி தீவைத்துக் கொளுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது என்றனர்.

          மேலும் அவ்வாறு தீ வைத்து எரியூட்டப்பட்ட ஆடைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஆடையொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

          10 அடி உயரமான குறித்த மரத்தில் வயர் ஒன்றைப் பயன்படுத்தி தன்னுயிரை குறித்த நபர் மாய்த்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், சடலத்தை பிரேத


          பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            கோட்டாவே வீட்டுக்கு போ மக்கள் முழக்கம் – வெடித்து பறக்கும் போராட்டம்

            கோட்டாவே வீட்டுக்கு போ மக்கள் முழக்கம் – வெடித்து பறக்கும் போராட்டம்

            இலங்கையில் ஆளும் கோட்டா ஆட்சியில் பொருளாதரம் பெரும் வீழ்ச்சியடைந்து செல்கிறது ,நாடு பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உளளது ,

            தனி சிங்கள மக்கள் பெரும் பான்மை பலத்தை பெற்று அரியணை ஏறிய கோட்டாவுக்கு இப்போது பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது

            கோட்டாவே வீட்டுக்கு போ என மக்கள் வீதி இறங்கி கோசங்களை எழுப்பிய வண்ணம் செல்கின்றனர்

            இந்த போராட்டம் கோட்டாவுக்கு கொடுத்துள்ள மிக பெரும் சாட்டை அடியாக பார்க்க படுகிறது


            மகிந்தா ஆட்சி மீளவும் இலங்கையில் அரியணை ஏறிட முடியா நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்க படுகிறது

            • வன்னி மைந்தன் –
              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க நடவடிக்கை –

              இலங்கையில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க நடவடிக்கை –

              இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்தும் அதிக விலை அதிகரிக்க பட்ட வண்ணம் உள்ளது

              இவ்வாறான கால பகுதியில் மக்கள் சொல்லென்னா துயரத்தை சந்தித்த வண்ணம் உள்ளனர்

              இலங்கையில் போர்க் காலத்தில் கூட இவ்விதம் பொருட்கள் விலை

              அதிகரிக்கபடவில்லை ,இவ்விதம் இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை ,மகிந்த குடும்பம் ஆட்சியில்


              அமர்ந்த நாள் முதல் தற்போது இலங்கை வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளமை கவலை தருகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                கோட்டா- கூட்டமைப்பு பேச்சு இரத்து

                கோட்டா- கூட்டமைப்பு பேச்சு இரத்து

                இலங்கை ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்

                இடையில் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது

                மோடி வருகையை அடுத்து நடத்த படவிருந்த கண்துடைப்பு பேச்சும் திடீரென இரத்து

                புரிய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  மலம் கலந்த நீரை குடிக்கும் மக்கள் – இலங்கையில் நடக்கும் பயங்கரம்

                  மலம் கலந்த நீரை குடிக்கும் மக்கள் – இலங்கையில் நடக்கும் பயங்கரம்

                  தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான டெஸ்போட் லோன் டிவிசன்

                  (கிரிமிட்டிய) கடை வீதியை அண்மித்த சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்த குடியிருப்பு மக்கள் தினமும் பயன் படுத்தும் குடிநீர் குழாய், கிணறு மிகவும் மோசமான நிலையில் உள்ளது .

                  இதில் பறவைகள், விலங்குகள் மலம் கழிப்பதால் குறித்த நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.

                  இது தொடர்பாக தோட்ட சுகாதார வெளிக்கள உத்தியோகஸ்தரிடமும், தோட்ட முகாமையாளரிடமும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

                  எனினும், குறித்த நீரை பயன்படுத்தும் பொது மக்கள் தோட்டத்தில் தொழில் செய்யாத

                  படியால், இதை சுத்தம் செய்ய முடியாது என அசமந்தமான பதிலை தெரிவிப்பதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்

                    Posted in இலங்கை செய்திகள்

                    கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

                    கோட்டா அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்

                    இலங்கையில் ஆளும் கோட்டா அரசின் ஆட்சி காலத்தில் நாடு நாசமாக்க பட்டுள்ளது

                    ,இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாப்பபோம் என கூறியவாறு எதிர்க்கட்சியினர் கொழும்பு பகுதியில் பெரும் பேரணி ஒன்றை நடத்துகின்றனர்

                    இலங்கையில் எதிர்க்கட்சி பலம் இழந்துள்ள நிலையிலேயே இவ்விதமான

                    செயல்பாடுகளை ஆளும் அரசு புரிந்து வருகிறது என்ற குற்ற சாட்டு முன்வைக்க

                    பட்டுள்ள நிலையில் இந்த போராட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு

                      மூன்று இலட்சம் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்பு

                      இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலைவாய்புகளுக்காக மூன்று இலட்சம் இலங்கையர்களை அனுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

                      இதற்கமைவாக டோஹா கட்டாரில் தொழில் வாய்ப்புக்காக கூடுதலான இலங்கையர்களை அனுப்பி வைக்கும் வழிவகைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது .

                      இதற்காக இலங்கை தூதுக்குழுவொன்று தற்போது கட்டாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

                      அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ராஜாங்க அமைச்சர்களான பியங்கர ஜயரட்ன, டீ.வி.சானக்க,

                      இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மேஜர் ஜென்ரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோர் இந்த தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

                      இவர்கள் அண்மையில் கட்டாரின் சர்வதேச தொடர்புகளுக்கான பணிப்பாளர் மேஜர் ஜென்ரல் அப்துல்

                      அஸிஸ் அன்சாரியை சந்தித்து இலங்கையர்களுக்கு கூடுதலான தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து கலந்துரையாடியுள்ளனர்

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் செல்வந்தர்கள் கடத்தப்படலாம் – வங்கியில் பணம் முடக்கப்படலாம் – பீதி

                        இலங்கையில் செல்வந்தர்கள் கடத்தப்படலாம் – வங்கியில் பணம் முடக்கப்படலாம் – பீதி

                        இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை

                        வெள்ளை வான் ஊடாக செல்வந்தர்கள் கடத்த படலாம் எனவும் அவர்கள் சொத்துக்கள்

                        அரசுடைமையாக்க படலாம் என்ற ஐயம் வியாபாரிகள் மத்தியில் நிலவுகிறது

                        வங்கிகளில் உள்ள பெரும் தொகை பணமும் முடக்கப்படலாம் என்பதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

                        வங்கிகளில் வட்டிக்கு பணம் வைப்பு வைத்துள்ள மக்கள் பணமும் அவசர தேவைக்காக

                        அரசு உடமையாக்க படலம் என எதிர் பார்க்க படுகிறது ,எதிர்வரும் நாட்களில் எதுவும் இலங்கையில் நிகழ கூடும் என்பது களநிலவரமாக உள்ளது

                        மேலும் பணத்தை மீள பெறுபவர்கள் தொகையும் கட்டு படுத்தப்படலாம் என உள்ளக கசிவுகள் தெரிவிக்கின்றன

                          Posted in Uncategorized

                          பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்லவேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவுறுத்தல்

                          பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்லவேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவுறுத்தல்

                          இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நிலை காரணமாக பிரிட்டன் மக்கள் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது

                          மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த அபாய அறிவிப்பு வெளியிட

                          பட்டுள்ளது ,பிரிட்டனை தொடர்ந்து ஏனைய நாடுகளும் இந்த அறிவிப்பை
                          வெளியிடலாம் என எதிர்பார்க்க படுகிறது

                            Posted in இலங்கை செய்திகள்

                            றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி

                            றோவின் விளையாட்டு -யாழ்ப்பாண விமான நிலையத்தில் தரை இறங்கும் மோடி

                            இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று முக்கியதத்துவம் வாய்ந்த இலங்கை பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்

                            இவர் எதிர்வரும் முப்பதாம் திகதி யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயர் மாற்ற பட்டுள்ள பலாலி விமான நிலையத்தில் தரை இறங்குகிறார்

                            இந்தியாவில் இருந்து நேரடியாக தமிழர் வான் தளத்தில் தரை இறங்கும் முதலாவது வெளிநாட்டு தலைவர் என்ற பெருமையை இவர் தட்டி செல்கிறார்

                            இலங்கையின் பொருளாதார நிலை தொடர்பாக முக்கிய விடயங்கள் இதில் பேச படும் என எதிர் பார்க்க படுகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              உணவகத்தை சுற்றிவளைத்த பொலிஸ் – 39 பேர் கைது

                              உணவகத்தை சுற்றிவளைத்த பொலிஸ் – 39 பேர் கைது

                              இலங்கை வென்னப்புவ பகுதியில் உள்ள உணவாக விருந்தகம் ஒன்றில் பார்டி ஒன்று இடம்பெற்றுள்ளது

                              அங்கு முப்பது வயதுக்கு உள்பட்ட வாலிபர்கள் இணைந்து விருந்து ,போதையில் மிதந்துள்ளனர்

                              உள்ளே நுழைந்த போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் போதை பொருள் பாவித்துள்ளதும் ,
                              அதிக போதையில் இருந்துள்ளதும் கண்டறிய பட்ட நிலையில் 39 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் 20 ரூபாவினால் அதிகரிப்பு

                                இலங்கையில் பேரூந்து கட்டணங்கள் 20 ரூபாவினால் அதிகரிப்பு

                                இலக்கையில் மக்கள் அதிகம் பயன் படுத்தும் பேரூந்து கட்டணங்கள் இன்று இரவு முதல் இருபது ரூபாவினால் அதிகரிக்க படுகிறது

                                எரிபொருள் தட்ட பாடு காரணமாக இந்த திடீர் விலை உயர்வு அதிகரிக்க பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது

                                நாள்தோறும் ஏற்ற படும் விலைவாசிகளினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் ,
                                ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் பொங்கி எழும்காலம் தற்போது உருவாகியுள்ளது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  தந்தையை குற்றி கொன்ற மகன்

                                  தந்தையை குற்றி கொன்ற மகன்

                                  இலங்கை கொச்சிக்கடை பகுதியில் போதையில் வீடு வந்த தந்தை உணவு

                                  கேட்டுளளார் ,அப்பொழுது அதனை தயாரிக்க மகளுக்கும் தந்தைக்கும் இடையில்

                                  வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது ,இவ்வேளை தந்தைக்கும் சகோதரிக்கும் இடையில்

                                  ஏற்பட்ட வாய்தகராறு முற்றிய நிலையில் சீற்றம் உற்ற மகன் ,சகோதரியை தந்தை தாக்க முற்பட்ட பொழுது கத்தியை எடுத்து குற்றியுள்ளார்

                                  இதில் சம்பவ இடத்தில தந்தை பலியாகியுள்ளார் ,22 வயதுடைய மகன் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்

                                  ஒரு உணவு தயரிப்பால் ஒரு உயிர் பறிபோனது ,இன்னொரு உயிர் சிறையில் வாட போகிறது ,இது யார் குற்றம் ..?

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது

                                    திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது

                                    இலங்கை காத்தான் குடி பகுதியில் உள்ள கைபேசி கடை ஒன்றுக்குள் புகுந்து

                                    கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                                    கைதானவர்கள் விசாரணையின் பின் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

                                    இந்த திருட்டில் முக்கிய நபர் தப்பி ஓடிய வண்ணம் உளளார்
                                    இவர்களிடம் இருந்து எட்டு லட்சம் ரூபா பெறுமதியான கைபேசிகள் மீட்க பட்டுள்ளன

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    பணத்தை திருடும் ஆளும் ஆட்சியாளர்கள் – பொன்சேகா முழக்கம்

                                    பணத்தை திருடும் ஆளும் ஆட்சியாளர்கள் – பொன்சேகா முழக்கம்

                                    இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்கள் மக்கள் வயிற்றில் அடித்து பணத்தை திருடி

                                    வருவதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்

                                    தமிழர்கள் மீது படையெடுப்பை நடத்தி அந்த மக்களை கொன்று குவித்த மகிந்தவின்

                                    நம்பிகையாளராக விளங்கியவர் பொன்சேகா என்பது குறிப்பிட தக்கது