Tag: இலங்கை செய்திகள்
பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்
பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும் ரணில்
பிச்சைக்கார நாடாக இலங்கை மாறியிருக்கும், ரணில் இலங்கை விழுந்துபோன பொருளாதாரத்தை ,உடனடியாக நாங்கள் சமநிலை செய்யாவிட்டிருந்தால் இலங்கை ஒரு கென்யாவாக ஒரு சூடானாக மாற்றம் பெற்றிருக்கும் என தெரிவித்துள்ளார் .
வறுமை நாடாக சென்ற நிலையை மாற்றியுள்ளேன் என இலங்கையின் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமா சிங்கா தெரிவித்துள்ளார் .
இன்று நாட்டில் இடம்பெறுகின்ற கலவரங்கள் ,பல மர்ம கொலைகள் மற்றும் ,இடம்பெறுகின்ற யுத்தம், ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தம் ,இவை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
மக்கள் உயிர் பலிகள் தடுக்கப்பட வேண்டும் ,உலகம் அமைதியான வழியில் பயணிக்க வேண்டும் .
இலங்கையிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் வாழ்வாதாரத்தில், மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர் .
இவ்வாறான காலப்பகுதியிலேயே, படுகொலைகள் அதிகரித்த காணப்பட்டதாக தெரிவித்துள்ளார் .
இப்பொழுது இலங்கையில் இடம்பெறுகின்ற, நாள்தோறும் கண்டெடுக்கப்படுகின்ற சடலங்களும், இலங்கை வறுமையில் உள்ளதா என்பதை தெளிவுபடுத்தும் .
நோக்குடன் நடத்தப்படுகின்ற கொலைகள் என்பதை ,ரணில் விக்ரமசிங்க சூட்சமமாக தெரிவித்து இருக்கின்றார் .
அரசியல் படுகொலைகள் உள்ளிட்டவை முதல் சாதாரண பட்ட கொலைகள் வரை அவர் தெரிவிக்கின்றார்.
உடனடியாக இலங்கையினுடைய பொருளாதாரத்தை நிமிர்த்தி சரியான வழியில் நாங்கள் எடுத்துச் சென்றால் மட்டுமே, இந்த நாட்டை உரிய முறையில் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும் .
அல்லா விட்டால் பேரழிவில் இலங்கை சிக்கி கொள்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார் .
கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கை மிகப் பெரும் பொருளாதார சரிவை சந்தித்தது .
அதிகமாக ஊழல் லஞ்சம் காரணமாக, நாடு கீழ் நிலையில் சென்றதாக, அந்த மக்கள் ஆர்ப்பரித்து ,கோட்டபாய ராஜபக்ஷவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி இருந்தனர் .
அதுபோலை ஆட்சி அதிகாரமின்றி தவித்துக் கொண்டிருந்த ராணிலை, நாட்டினுடைய ஜனாதிபதியாக ,கோத்தபாயை மாற்றி ,நாட்டை விட்டு தப்பி சென்று இருந்தார் .
அன்றிலிருந்து இன்றுவரை யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து ,மக்களது யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து, நாட்டை சீரான முறையில் வழிநடத்திச் செல்கிறார்ரணில் .
இவ்வாறான எ காலப்பகுதியில் இந்த தேர்தலை சந்தித்திருக்கும் அவர் ,உரிய முறையில் வெற்றி பெற்று மீளவும் மக்களை வழி நடத்துவாரா என்பதே கேள்வி குறியாக உள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

அரசியலை விட்டு விலக தயார் கொத்து போட்ட புள்ளி
அரசியலை விட்டு விலக தயார் கொத்து போட்ட புள்ளி
65 வயதுக்கு முன்னர் அரசியலை விட்டு விலகி, நாட்டுக்கு புதிய முன்னுதாரணமாக விளங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், அரச சேவையில் ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை இருப்பது போல், அரசியலுக்கும் அது நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நுகேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசியலை விட்டு விலக தயார் கொத்து போட்ட புள்ளி
“என்றாவது ஒரு நாள் என் கண் பார்வை குறையும், ஒரு நாள் என் செவித்திறன் குறையும். ஆனால் அதுதான் நிதர்சனம். அரசுப் பணியில் இருந்து 60 வயதில் ஓய்வு பெறுவது ஏன்? நீதிபதியும் 65 ஆண்டுகள் பணியாற்றலாம். கடந்த கால வரலாற்றில் ஒரு
ஆளுநருக்கு 80 வயது இருக்கும் போது, அவருக்கு பணிபுரியும் மன உறுதி உள்ளதா? எனது அரசியல் வாழ்க்கையில் நாங்கள் முன்னுதாரணமாக இருக்கிறோம். 65
ஆண்டுகளுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராக இருக்கிறோம். இங்கே எல்லோரும் அப்படித்தான். அதற்கு முன்னுதாரணமாக இருக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.
கமாஸ் தளபதி பலி வெடித்து பறக்கும் ரொக்கட்|israel hamas war news today|Hamas military chief killed
கமாஸ் தளபதி பலி வெடித்து பறக்கும் ரொக்கட்|israel hamas war news today|Hamas military chief killed
கமாஸ் போராளிகள் தளபதி இஸ்ரேலினால் படுகொலை ,
வெடித்து பறக்கும் ரொக்கட் ,1500இஸ்ரேலியர்கள் காயம் ,
எரியும் இஸ்ரேல் தலைநகர் ,களமிறாங்கும் அமெரிக்கா ஆயுதம் ,
இருளில் மூழ்கிய காசா .
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்

- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி

- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்

- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்

- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு

இலங்கை கிரிக்கட் சபை விசா மோசடி தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை கிரிக்கட் சபை விசா மோசடி தொடர்பில் வெளியான தகவல்
கடந்த 2022 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக வீசா கோரியவர்களில், விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவின் இரண்டு மகள்மாரின் பெயர்களும் அடங்கியிருக்கலாம் என சந்தேகம் வெளியடப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விஜயத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் 68 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
இலங்கை கிரிக்கட் சபை விசா மோசடி தொடர்பில் வெளியான தகவல்
அதே நேரத்தில் 35 தனிப்பட்டவர்களின் பெயர்களையும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியிருந்தது.
இந்தநிலையில் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரகத்திடம் கோரப்பட்ட வீசா ஒப்புதல் கடிதத்தில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் சமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சரின் மகள்கள் என தெரிவிக்கப்படும் ஆர் சனலி தினுஸிகா மற்றும் ஆர் ஏ சாரா தினாலி உட்பட்ட 21 பேர் உள்ளடங்கியிருந்தனர்.
இந்தநிலையில் தனி நபர்கள் உலகக் கிண்ண போட்டிகளை காண பயணித்ததாகக் கூறி விசா நோக்கங்களுக்காக கடிதங்களை வழங்கியிருந்தாலும், அவர்களின் பயணங்களுக்கு நிதி வழங்கவில்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
எனினும் அமைச்சரின் மகள்மார் என்ற சந்தேகம் தொடர்பில் அது எதனையும் கூற விரும்பவில்லை என்று இலங்கை கிரிக்கெட் குறிப்பிட்டிருந்தது.
இதனை தவிர விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இது தொடர்பில் கருத்தை கோர தொடர்பு கொண்டபோதும்இ அவர் பதிலளிக்கவில்லை எனவும் கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.
யாழ் இந்திய துணைத்தூதரின் பங்கேற்புடன் இலவச சித்த மருத்துவ முகாம்
யாழ் இந்திய துணைத்தூதரின் பங்கேற்புடன் இலவச சித்த மருத்துவ முகாம்
வவுனியாவில் யாழ் இந்திய துணைத் தூதரகமும், வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச சித்த மருத்துவ முகாம் ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் இன்று (29.07) காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை இடம்பெற்றிருந்தது.

இலவச சித்த மருத்துவ முகாமில் கிசிச்சைகள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டமையுடன் இரத்த அழுத்தம், சங்கரையின் அளவுகள் என்பனவும் இலவசமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இவ் இலவச முகாமினால் அப்பகுதியினை சேர்ந்த மக்கள் பலர் பயனடைந்திருந்தமையுடன் யாழ் இந்திய துணைத் தூதரகத்தினருக்கு தமது நன்றிகளை தெரிவித்தனர்.

யாழ் இந்திய துணைத்தூதரின் பங்கேற்புடன் இலவச சித்த மருத்துவ முகாம்
இவ் முகாமில் பிரதம அதிதியாக யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீமான் ராகேஷ் நடராஜ் அவர்கள் கலந்து கொண்டிருந்தமையுடன், வடமாகாண சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பரமாரிப்பு சேவைகள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் அ.சாந்தசீலன், வடமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளர் ஜெ.நாமகணேசன், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா மாவட்ட சுதேச மருத்துவ திணைக்கள ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, பாடசாலை அதிபர் ராமநாதன் மற்றும் கிராம சேவையாளர், அபிவிருத்தி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதார சேவை வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி முதல் முறையாக இலங்கைக்கு வருகை
பிரான்ஸ் ஜனாதிபதி முதல் முறையாக இலங்கைக்கு வருகை
பிரான்ஸ் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இலங்கை வந்தடைந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியுடன், அந்நாட்டின் ஐரோப்பிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் அவர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி முதல் முறையாக இலங்கைக்கு வருகை
இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.
வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு
வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு
வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் இன்று (29.07) காலை மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த இடத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட இளைஞருக்கு அருகே கட்டுத்துப்பாக்கியும் அவ் இளைஞரின் மோட்டார் சைக்கிலும் காணப்பட்ட நிலையில் இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்பு
குறித்த இளைஞரின் சடலத்தின் அருகில் இடியன் துப்பாக்கி மற்றும் மோட்டர் சைக்கிள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.
அதே, கிராமத்தினை சேர்ந்த 21வயதுடைய சற்குணராசா டிசாந்த் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரும் புதிய கட்டுப்பாடு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரும் புதிய கட்டுப்பாடு
கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையான பேருந்து சேவையை நிறுத்துவதற்கு விமான நிலைய அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விமான நிலைய வளாகத்திற்குள் நுழைவதை நிறுத்தியிருந்த பேருந்து சேவை, இரண்டு நாட்களுக்கு முன்னர் விமான நிலைய வளாகத்திற்குள் பேருந்துகள் நுழைய ஆரம்பித்தது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரும் புதிய கட்டுப்பாடு
இரு தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார், பேருந்து சாரதிகளை அழைத்து விமான நிலைய தலைவர் அனுமதி வழங்கியதன் பேரில் பேருந்து பயணத்தை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், இன்று பொலிஸார் பேருந்துகளை அகற்றுமாறு தகவல் தெரிவித்ததையடுத்து மீண்டும் எவரிவத்தை பேருந்து நிலையத்திற்கு மட்டும் பேருந்துகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை முச்சக்கர வண்டி சாரதிகள் சந்தித்த பின்னர், விமான நிலையத்தைச் சுற்றி இருந்த பேருந்துகளை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு: வாளை பறித்து வீட்டு உரிமையாளர் வெட்டியதில் திருடனுக்கும் காயம்
வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு: வாளை பறித்து வீட்டு உரிமையாளர் வெட்டியதில் திருடனுக்கும் காயம்
வவுனியா நொச்சுமோட்டையில் இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில் வீட்டு உரிமையாளர் வாளை பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்திய நிலையில் திருடர்கள் காயமடைந்த நிலையில் தப்பி ஓடியுள்ளனர்.
நேற்று (27.07) இரவு வீட்டில் மாரிமுத்து செல்வநாயகம் (58) அவரது மனைவி செ.செல்வராணி இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த நிலையில் திருடர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீட்டினுள் புகுந்து இருவர் மீதும் வாளால் வெட்டியுள்ளனர்.
வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு: வாளை பறித்து வீட்டு உரிமையாளர் வெட்டியதில் திருடனுக்கும் காயம்
இந் நிலையில் மா.செல்வநாயகம் திருடர்கள் கொண்டுவந்த வாளை பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார். இதனால் திருடர்களில் ஒருவன் காயமடைந்த நிலையில் வீட்டில் இருந்த தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கொக்கிளாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு மாகாணம் முழுமையாக முடக்கம்
கொக்கிளாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு மாகாணம் முழுமையாக முடக்கம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முல்லைத்தீவு, கொக்கிளாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான அகழ்வு மற்றும் நீதி கோரி விடுக்கப்பட்ட முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

குறித்த கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கின் யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் முடங்கின.
கொக்கிளாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு மாகாணம் முழுமையாக முடக்கம்

மருந்தகங்கள், உணவங்கள் தவிர ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்ததுடன், போக்குவரத்து சேவையும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் பெரியளவில் சமூகமளிக்காமையால் பல பாடசாலைகள் இயங்கவில்லை.

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு புகையிரத சேவைக்கு கோரிக்கை
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு புகையிரத சேவைக்கு கோரிக்கை
நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரிப் தொடருந்து சேவையை முன்னெடுக்க வேண்டும் என தொடருந்து திணைக்கள பொது முகாமையாளருக்கு நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு புகையிரத சேவைக்கு கோரிக்கை
குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது,
தற்போது தொடருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருந்திருவிழா 21.08.2023 ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தினமும் தொடருந்து சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிதது அடியவர்களின் பயணவசதிகளை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழர் தாயகத்தில் நடைபெறும் நாளைய பூரண முடக்கத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ஆதரவு
தமிழர் தாயகத்தில் நடைபெறும் நாளைய பூரண முடக்கத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ஆதரவு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28.07.2023) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் பூரண ஆதரவினை வழங்குகின்றது.
யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், இணைச்செயலாளர் த.சிவரூபன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகத்தில் நடைபெறும் நாளைய பூரண முடக்கத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ஆதரவு
அதேவேளை இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் இதுகால வரையிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் விவகாரங்கள் பூசி மெழுகப்பட்டு, காத்திரமான நடவடிக்கைகள் எதுவுமின்றி நீர்த்துப்போகச் செய்யப்பட்டமையே வரலாறு. இதேபோன்று மேற்படி கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்திலும் நடைபெறாது இருக்க வேண்டும் என்பதோடு, கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி உட்பட தமிழர் பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளும் உரிய வகையில் சர்வதேச கண்காணிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டியது அவசியமானது என்பதனை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இவ்விவகாரத்தின் நியாயத்தன்மையினை புரிந்துகொண்டு, இதனை தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்கோ, அரசியல் தேவைகளுக்கோ பயன்படுத்தாது உண்மையான தீர்வினை வலியுறுத்தி சிங்கள முற்போக்கு சக்திகள் உட்பட்ட அனைத்து தமிழ்த் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்பதோடு அனைவரினதும் முழு ஆதரவினையும் வேண்டி நிற்கிறோம்.
இலங்கையில் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வரும் புதிய நடைமுறை
இலங்கையில் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வரும் புதிய நடைமுறை
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் செயல்படுத்தப்படும் கட்டாய நடைமுறை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் கீதாமணி சி. கருணாரத்னவின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் அனைத்து மேலதிக செயலாளர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அனைத்து பிரதம நிதி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை தீர்மானத்தின் படி சுகாதார அமைச்சின் மூத்த மற்றும் இளநிலை நிர்வாக அதிகாரிகள் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வரும் புதிய நடைமுறை
இதன்படி மேலதிக கடமை கொடுப்பனவுகளைப் பெறும் சுகாதார அமைச்சின் மருத்துவ நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய நிறைவேற்று தர உத்தியோகத்தர்களின் தினசரி வருகை மற்றும் புறப்பாடுகளுக்கு கைரேகை இயந்திரத்தைப் பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கடமைக்கு சமூகமளிக்கும் போது கைரேகை பதியும் முறைமை இதுவரையில் இருந்ததில்லை எனவும், அவ்வாறான தீர்மானம் வைத்தியர்களின் சேவை அமைப்புக்கு எதிரானது எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுனருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு
கிழக்கு மாகாண ஆளுனருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு
கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்களத்தில், கணக்காய்வு அலுவலராக தங்களை நியமனம் செய்ய வேண்டும் என 8 வருடம் கணக்காய்வு திணைக்களத்தில் கடமையாற்றிய அரச உத்தியோகத்தர்கள் நால்வர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் மற்றும் 11 எதிர் மனுதாரர்களுக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த நால்வரையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தில் கணக்காய்வு உத்தியோகத்தர்களாக நியமனம் செய்யும் படி கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு, திருகோணமலை மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செழியனால் இன்று (27.07) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
13 வது திருத்தச் சட்டத்தில் அதிகார பரவலாக்கல் வழங்கப்பட்ட போதும் வடக்கு மாகாணம் மற்றும் தென் மாகாணமும் இத்தகைய நியமனம் வழங்கி இருக்கும் நிலையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர், அதிகாரியின் அசமந்தப் போக்கு, கவனயீனமான செயற்பாடுகள், 13வது திருசத்தச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்ட போதும் அதை செயற்படுத்தாமை, கடந்த 10 ஆண்டுகளாக இவ்வழக்கின் மனுதாரர்களுக்கு குறிக்கப்பட்ட நியமனங்களை வழங்காது இழுபறி நிலைமையை ஏற்படுத்தி காலதாமதப்படுத்தியமை போன்ற பல சட்ட விடயங்களை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியின் உடன் நடைமுறைக்கு வர வேண்டும் என புதிய ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுனருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி உத்தரவு
இன்றைய கட்டளையை உடனடியாக புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு அனுப்பி வைக்குமாறு மேல் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஆளுநர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி இளஞ்செழியன் புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரிடம் இந்த நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய ஆளுநர் இவ்வழக்கில் எந்தவித விடயங்களையும் கையாளவில்லை என்றபோதும் பழைய ஆளுநர்களின் தவறுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி இந்த மனுதாரர்களின் எதிர்பார்க்கும் நியமனத்தை புதிய ஆளுநர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டளை பிறப்பித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்
பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்
பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மேக்ரோன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அவர் எதிர்வரும் 28ஆம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அவர், பபுவா நியூகினி நாட்டுக்கான அதிகாரபூர்வ விஜயத்தின் பின்னர் அவர் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.
28ஆம் திகதி இரவு இலங்கையில் தங்கி இருக்கும் நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவர் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த பிக்கு விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த பிக்கு விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களும் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களை நேற்று கடுவலை நீதிவான் விசாரணைகளுக்காக முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட 8 பேரையும் தலா 100,000 ரூபா சரீரப் பிணையிலும் கடுமையான பிணை நிபந்தனைகளிலும் விடுவிக்குமாறு கடுவலை நீதவான் சனிமா விஜேபண்டார உத்தரவிட்டுள்ளார்.
நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
தகாத உறவில் ஈடுபட்ட பௌத்த பிக்கு விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்களை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 8 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் தெரியாது என்கிறார் வடக்கு ஆளுனர்
வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் தெரியாது என்கிறார் வடக்கு ஆளுனர்
வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண ஆளுனர் பீ.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஆளுனரின் இணைப்பு அலுவகத்தை திறந்து வைத்த பின் ஊடகவியலாளர்கள் ‘சீனித் தொழிற்சாலைக்கு வவுனியாவில் காணி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது’ இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி கொடுப்பது தொடர்பில் எனக்கு தெரியாது. இது சம்மந்தமாக ஊடகங்களுக்கு மறைக்க வேண்டிய தேவை இல்லை. உண்மையில் இது தொடர்பில் எனக்கு தெரியாது எனத் தெரிவித்தார்.
வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கொழும்பில் இருந்து வந்த பொலிசார் விசேட சோதனை
வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கொழும்பில் இருந்து வந்த பொலிசார் விசேட சோதனை
வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிசாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று சோதனை செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன், வீட்டிற்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர்.
இச் சம்பவத்தில் 21 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரில் குறித்த பெண்ணின் கணவரான 32 வயது இளம் குடும்பஸ்தர் இன்று (26.07) அதிகாலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டில் கொழும்பில் இருந்து வந்த பொலிசார் விசேட சோதனை
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த வீடு எரியூட்டப்பட்டமை மற்றும் அங்கு எரிந்த பொருட்கள் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிசார் வருகை தந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு இரசாயன பகுப்பாய்வு செய்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு தரப்புக்களிடமும் வாக்கு மூலம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி
வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் பலி
வவுனியா, மன்னார் வீதயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் நள்ளிரவு (20.07) இரவு இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக இளைஞன் ஒருவர் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, குறித்த மோட்டர் சைக்கிள் 4ம் கட்டைப் பகுதியில் பயணித்த போது சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவத்தில வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த வவுனியா மின்சார சபையில் கடமையாற்றும் 32 வயதுடைய சஜந்தன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னளனர்.
தமிழர் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
தமிழர் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (21.07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்
இதில், அப்பகுதியைச் அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

































