Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்

சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்

அண்டை நாட்டு கொண்டையில
ஆடுதடா இந்த லங்கா …..
மண்டையிலே எதுமில்லா
மாமனாகி போன லங்கா …

வல்லவனாம் சீனா வாலு
வாடி போயு பிடித்த ஆளு ….
துள்ளி இன்று பேசிறாங்க
தூர கணை கொண்டவராம் …..

பண்டை நாட்டு புத்தனவன்
பாரதத்தை கொண்டவனாம் …..
அந்த நாட்டு மடி தடவி
ஆகா நல்லா பாடுதடா ……..

சிங்கபூரா சிங்கள நாடு - சிரிக்குது வாய்
சிங்கபூரா சிங்கள நாடு – சிரிக்குது வாய்

சிங்க பூரா ஆக்குவாராம்
சிரிக்குதடா வாய்கள் எல்லாம் ….
வண்டி போகும் சாலை கண்டா
வலியெடுக்கும் உடல்கள் எல்லாம் ….

இந்த லங்கா எண்ணத்தில
இருக்கு லஞ்சம் உள்ளத்தில …
நாட்டை கொள்ளை அடிப்பவர்கள்
நடு வாரா சிங்க பூரா …?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -18/11/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உனக்காக காத்திருக்கிறேன் வா

    உனக்காக காத்திருக்கிறேன் வா

    உன்னை தேடுது என் மனமே
    என்னை தேடுது உன் மனமோ ..?
    பாடும் தென்றலே கூறிடுவாய் – இந்த
    பால் நிலவை வென்றிடுவாய் ….

    வானிலே உனக்கொரு வீடு கட்டி
    வைத்தேன் அதிலே ஊஞ்சல் கட்டி ….
    ஆடிட வந்தால் போதுமடி
    அகிலம் எந்தன் கையிலடி …..

    புல்லை மேயும் பனி துளியே
    பூவை சுமக்கும் அழகிடையே ….
    வெள்ளை ரோயா வாசமதை
    வெறி ஏற்ற தருவாயா ..?

    அன்பு கலந்த தேனமுதே
    அழகாய் சுரக்கும் தேம்ஸ் நதியே …
    எவரெஸ்ட் சிகரம் ஏறிடுவோம்
    எந்தன் அன்பே வந்திடுவாய் …..!

    வன்னி மைந்தன் ( ஜெகன் )
    ஆக்கம் -18/11/2017

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      உன்னை தேடி வருவேன் காத்திரு

      உன்னை தேடி வருவேன் காத்திரு

      விழுந்து விழுந்து நீ பேசும்
      விடயங்களை இரசிக்கிறேன் …
      விடலையில நான் தொலைத்த
      விடயங்களை ருசிக்கிறேன்….

      மூச்சு வாங்கி பேசும் உந்தன்
      முன்னழகு பிடிச்சிருக்கே …
      காற்று வந்து ஆடை விலக்கி
      காட்டும் மேனி பிடிச்சிருக்கே ….

      தடக்கி விழும் வார்த்தைகளின்
      தடையங்களை முகர்கிறேன்
      தனிமையதை தேடும் உந்தன்
      தாகமதால் துடிக்கிறேன் ….

      மேனி களைத்து உடல் வேர்த்து
      மோகத்தாலே துடிக்கிறாய் ..
      வெள்ளி நிலா ஓடிவர
      வேகம் பிடிக்க நினைக்கிறாய் ….

      தேகம் வேர்க்கும் வேலை வரும்
      தேவதையே பொறுத்திருப்பாய்
      தேடி வந்த பணி முடித்து
      தேடி வருவேன் காத்திருப்பாய் ….!

      வன்னி மைந்தன் (ஜெகன் )
      ஆக்கம் -25,08,2017

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        காரை நகர்

        காரை நகர்

        அலை வந்து தாலாட்டும்
        அழியாத ஊரு ….
        அதன் உள்ளே ஆடுதடா
        ஆக்கினைகள் நூறு …..

        சிங்களத்து வால் பிடிகள்
        சிரிக்கின்ற கூடு – இங்கே
        சிந்தை தமிழ் வாழ வைத்தார்
        சிலர் உள்ள வீடு ….

        முந்தை தமிழ் சாதிகளால்
        மூழ்கின்ற ஊரு …..
        முனேற்றம் காணாது
        மூட்டும் சண்டை பாரு ….

        உப்பு மண் போலான
        உள்ளங்கள் பாரு –
        உதவாத சிந்தையால்
        உதிர்கின்ற காடு ….

        கரை காண முடியாத
        காரை மா நகரு …..
        காலம் இக்கால
        களியாட்ட பேரு ……

        வன்னி மைந்தன் ( ஜெகன் )
        ஆக்கம் -21/09/2017

        வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          தூக்கில் போட்டு நீதியை நாட்டு …!

          தூக்கில் போட்டு நீதியை நாட்டு …!

          பதை பதைக்க வதை வதைத்து
          பாவையவள் கொன்றாய்- அட
          பால் நிலவு தேவைதையை
          பல் இழித்து தின்றாய் ….

          கூட்டம் வைத்து கூடி நின்று
          கூவி கூவி தின்றாய் …
          கூவுதடா உலக தமிழ்
          கூண்டில் தூக்கில் போடாய் ….

          வேடர்களை காத்திட தான்
          வேட்டிகளும் துணையோ …?
          பாடு பட்டு வாதடா
          பைந்தமிழும் துணையோ ..?

          கோட்டு போட்டு வாதிட்டால்
          கோட்டும் அதிருமோ ..?- அட
          நோட்டு வாங்கி வாயாட்ட
          நேர்மை செழி விடுமோ …?

          மனு நீதி செழியனவன்
          மன்றம் நீதி தருமே – இந்த
          மறை கழன்றார் நிலையழிய
          மரண உடை இடுமே …!

          வன்னி மைந்தன் ( ஜெகன் )
          ஆக்கம் -13/09/2017
          வித்தியா கொலை வழக்கு இறுதி முடிவுற்று நீதிக்காய்
          காத்திருக்கும் இவ்வேளை ….!

          Home » kaathalkavithai » Page 2
            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி …!

            என்னை காப்பாற்றுங்கள் கதறும் கிளி …!

            கூண்டில் அடைத்து சிரிக்கும் மனிதா
            கூண்டை திறந்து மகிழ்வாய் …
            வாழும் எந்தன் வாழ்வை ஏனோ
            வாடும் சிறையில் அடைத்தாய் ….?

            நீதி பேசும் மாந்தன் என்றால்
            நீதி கூறி நிற்பாய் ..?
            நீ பெற்ற பிள்ளை ஒன்றை
            நீயா வைப்பாய் கூண்டில் ..?

            சிறகை வெட்டி வைத்தால் நானும்
            சிரித்தே உலவி திரிவேன் ….
            சிறகு அடிக்க முடியா கூண்டில்
            சிறையில் வைத்தாய் பாவம் …

            நாளும் வடியும் எந்த கண்ணீர்
            நல்ல வாழ்வு தருமா ..?
            பிள்ளை என்று பிரியம் கொட்டும்
            பிரியமானீர் சொல்வீரோ …?

            இறந்த பின்னர் என்னை எண்ணி
            இதயம் கலங்கி அழுகாதே …
            இதயம் இல்லா நீவீர் எல்லாம்
            இருந்தா அழுவீர் மறக்காதே ….!

            வண்ணை மைந்தன் (ஜெகன் )
            ஆக்கம்-03/09/2017
            அன்பு தோழி ரேணுகா வீட்டில் கிளி ஒன்று சிறை பட்ட போது….

            Home » kaathalkavithai » Page 2
            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            துயர் கண்டு சோராதே

            துயர் கண்டு சோராதே

            இடர் கண்டு ஓரு நாளும் இடியாதே
            இதயம் ஒடிந்து உயிர் மாயாதே ….
            வருகின்ற தடை எல்லாம் வளமாக்கு
            வருங்காலம் முடியும் தலை தூக்கு ..,,

            அறியாமை உனை பற்ற அழுகின்றாய்
            அதனாலே உயிர் விட முனைகின்றாய் ….
            ஏதொரு பொழுதிலும் எழுந்தாடு
            எமனோடும் நின்று போராடு …

            உனக்குள்ளே வலிமையை உள்ளேற்று
            உரமாகி எழுவாய் உனை நம்பு ….
            மாற்று சிந்தையில் மடம் கட்டு
            மலர்ச்சியை உந்தன் கை ஊட்டு .,.

            சிந்தையில் புதிதாக கொடி கட்டு
            சீக்கிரம் வெற்றிகள் உன் தோள்தட்டு …
            ஆக்கினை கூடிட என் செய்வாய் ?
            அழுவதால் என்ன நீ கண்டாய்..?

            தேற்றியே உன்னை நீ எழுப்பு .
            தேடிடும் உலகு உன் விருப்பு …,,
            ஏசிய உதடெல்லாம் உனை பாடும் -நீ
            எங்களின் உதராணம் என கூவும் ….!

            வன்னி மைந்தன் ( ஜெகன் )
            ஆக்கம் -29/08/2017
            அதிகரிக்கும் தமிழர்கள் தற்கொலைகளை எண்ணிய போது…..

            வன்னி மைந்தன் கவிதைகள்

              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              நான் இறந்த பின் என் சொல்வாய் …?

              நான் இறந்த பின் என் சொல்வாய் …?

              கண்ணீரில் நீ குளிக்க
              காளை மனம் வாடுதடி …
              இது தீர வழியென்ன
              இதயமே கேட்குதடி ….

              அழுதழுது நீ களைத்து
              அன்றாடம் களித்திருக்க …..
              பொழுது வந்து எனை திட்டி
              பொல்லாப்பை விதைக்குதடி ….

              நீ எறிந்த கண்ணீர்க்கு
              நியமாக நான் தானோ …?
              ஏ தறிந்து எனை அடித்தாய்
              ஏ மனமே பதில் சொல்லு …..

              பழிக்குள்ள நான் சிக்கி
              பலியாடாய் துடிக்கிறேன் ….
              இருந்தென்ன லாபம் எண்ணு
              இதயமும் உடைஞ்சிருச்சு ….

              முச்சடங்கி வீழ்ந்தாலும்
              முன்னே என்னை பார்க்காதே …
              பேச்சடங்கி போன பின்னே
              பேசியென்ன நீ காண்பாய் …?

              -வன்னி மைந்தன் (T-ஜெகன் )
              அக்கம் -15/08/2017

              Home » kaathalkavithai » Page 2
              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              உன் துயரில் …..அழுகிறோம் ….!

              உன் துயரில் …..அழுகிறோம் ….!

              செந்தமிழ் பாடிய செந்நிற மேனியை
              செந்தணல் இன்று தின்பதோ ..?
              எம்முடல் ஆவியாய் எமக்குள் நின்றானை
              எமனே நீயும் கொல்வதோ…?

              வந் தமிழ் ஊரினில் வளமுடன் நிமிர்ந்தான்
              வாஞ்சை வீசியே எழுந்தான் ….
              உறவுகள் மிளிர உணர்வுடன் நின்றான்
              உயிரை ஏனோ பறித்தாய் …?

              பாடியே அழைத்து பாசத்தை வீசி
              பா வலனாகியே நின்றான் …
              தொட்டியை கட்டி நீரது தேக்கி
              தொழும் மாடுகள் குடிக்கவே வைத்தான் ….

              அறமது நீட்டி ஆர தழுவிய
              அகமது வீழ்ந்தது பேரிழப்பு …
              உரமது இட்டே உயர வளர்ந்தவர்
              உன்னை சுற்றியே அழுதனர் ….

              வேதனை தாங்கி விழிகள் கதறிட
              வேலவா ஏனடா சென்றாய் …?
              சாதனை நாட்டி சாவிலும் எழுந்தாய்
              சாதனை யாளனாய் சென்றுவா ….!

              • வன்னி மைந்தன் -(ஜெகன் )
                ஆக்கம் -10/08/2017
                முரசுமோட்டை -இரண்டாம் கட்டை -ராசன் அண்ணாவின் ஆறா துயரில் தவிக்கும் குடும்பத்தார்க்கு என் கண்ணீர் சமர்ப்பணம்
              Home » kaathalkavithai » Page 2
              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              என்னை கொன்றிடு ….!

              என்னை கொன்றிடு ….!

              துயர் ஒன்று வந்தென்னை துண்டாடுதே
              தூளாக்கி மனம் வீச பந்தாடுதே ….
              வீசும் புயலாகி வலியாடுதே
              விழியோடி மழையாகி குளிப்பாட்டுதே

              கரை காண முடியாத கடலாகுதே – இறுதி
              கல்லறை தேடும் முடிவாகுதே ….
              வாலிப தவறொன்று இடியாகுதே
              வான்வழி மின்னல் பொறியாகுதே….

              கேள்விக்கு பதிலின்றி மனம் வாடுதே
              கேலிக்கையாகி வாழ்வோடுதே …..
              சதியென்று புதிராடி உறவாடுதே
              சாவதை தேடியே மனம் ஓடுதே ….

              இதுவென்ன வாழ்வா மனம் பேசுதே
              இனியென்ன வாழ்வோ உயிர் கூசுதே
              கண்ணீர்க்கு சொந்தம் யாரானதோ ..?
              கை கூப்பி கும்பிட்டேன் எனை கொன்றிடு ….!

              வன்னி மைந்தன் – (ஜெகன்-T )
              ஆக்கம் -03,05,2017

              Home » kaathalkavithai » Page 2