Posted in உலக செய்திகள்

பாரிய நிலநடுக்கம் 34 பேர் பலி – 600 பேர் காயம் பலரை காணவில்லை

பாரிய நிலநடுக்கம் 34 பேர் பலி – 600 பேர் காயம் பலரை காணவில்லை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தில் சிக்கி

இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர்

மேலும அறுநூறு பேர் படு காயமடைந்துள்ளனர்

பலரை காணவில்லை ,வீடுகள் மருத்துவமனைகள் உள்ளிட்டவை

இதனால் பலத்த சேதமடைந்துள்ளது

மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது ,மரண

எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

நிலநடுக்கம்
நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

நோர்வேயில் நிலநடுக்கம் – நால்வர் சடலமாக மீட்பு

நோர்வேயில் நிலநடுக்கம் – நால்வர் சடலமாக மீட்பு

வடகிழக்கு நோர்வே பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி

வீடுகள் இடிந்து வீழ்ந்தன ,இந்த
விபத்தில் சிக்கி நல்லவர் பலியாகியுள்ளனர் ,அவர்களது சடலங்கள் மீட்க பட்டுள்ளன

மேலும் பல டசின் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

நிலநடுக்கம்
நிலநடுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

இலங்கையில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

மகாவலி நீர்த்தேக்க பகுதியில், எதிர்வரும் காலங்களில் சிறிய, சிறிய நிலநடுக்கங்கள், குறுகிய காலத்துக்குள் ஏற்படக்கூடுமென ​

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் சி.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

இத்தகைய அதிர்ச்சிகள் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அழுத்தம் அல்லது நீர்த்தேக்கங்களுக்கு அருகிலுள்ள சுண்ணாம்பு

கற்பாறைகளின் வெடிப்பால் ஏற்படுகின்றன எனத் தெரிவித்த அவர், நீர்த்தேக்கத்தின் நீர் அதிகரித்து, குறைவடையும் போது

இவ்வாறான அதிர்வுகளை எதிர்பார்க்க முடியுமென பேராசிரியர் திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

“ஓகஸ்ட் 29ஆம் திகதி இரவும் அதன்பின்னர் அவ்வப்போது, விக்டோரியா நீர்த்தேகத்தை அண்மித்த பிரதேசத்தங்களில் 2

ரிக்டருக்கு குறைவான அலகில், பூமியதிர்ச்சி பதிவாகியிருந்தது. இது, விக்டோரியா நீர்த்தேக்கத்துக்கு கீழே மையப்பகுதியில்

ஏற்பட்டது; சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை” என்றார்.

“பாறைகளில் ஏற்பட்டிருந்த அழுத்தம் குறைந்து, கூடும். அதுவே, கண்டியில் ஏற்பட்டிருந்த இரண்டு, பூமியதிர்வுகளுக்கும் காரணமாக

அமைந்திருந்தது. இதனை சிறிய விடயமெனக் கருதி, நிராகரித்துவிடக்கூடாது. விக்டோரியா, ரத்தெனிகல, ரத்டெம்பே

ஆகிய நீர்த்தேக்கங்களில் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞைக் கருவி தொகுதிகளிலும் நில அதிர்வு பதியப்பட்டுள்ளது” என்றார்

Posted in உலக செய்திகள்

அந்தமான் நிகோபரில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபரில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் நிகோபரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
நிலநடுக்கம்
போர்ட்பிளேர்:

அந்தமான் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை 2.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை.

மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் பூகம்ப மண்டலத்தில் அந்தமான் தீவுகள் உள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

      Posted in உலக செய்திகள்

      வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?

      வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?

      வட கொரியாவில் திங்கட்கிழமை இரவு ஏழு முப்பது மணியளவில் பாரிய

      நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கினறன்

      இந்த நில நடுக்கமானது வடகொரியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Gangwon மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது

      இதே பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தலாம் என எதிர்வு கூறப்பட்டு இருந்தது


      அவ்விதம் இங்கு ஏதும் ஏற்பட்டு இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது

      எனினும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

      புதிய ஏவுகணை தளம் ஒன்றினை அமைத்து வருவதாகவும் விரைவில்

      அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் புதிய சோதனையை

      வடகொரியா நடத்த கூடும் என எதிர் பார்க்க பட்டு வரும் நிலையில் இந்த சம்பவவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிட தக்கது

      quake strikes North Korea
      quake strikes North Korea
      Posted in உலக செய்திகள்

      இந்தோனேசியாவில் நில நடுக்கம் -ஆடிய வீடுகள் – ஓடிய மக்கள்

      இந்தோனேசியாவில் நில நடுக்கம் -ஆடிய வீடுகள் – ஓடிய மக்கள்

      இன்று இந்தோனேசியா உள்ளூர் நேரம் ,9,30 மணியளவில் பாரிய நில

      நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது ,.
      இந்த நிலநடுக்கம் ,7,2 புள்ளியாக பதிவாகியுள்ளது

      இதன் போது வீடுகள் குலுங்கின,எனினும் இதுவரை இந்த நில நடுக்கத்தால்

        ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,மக்கள் பீதியில் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர்

        தற்போது இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளுக்குள் உறைந்த

        வேளையில் இந்த நடுக்கம் ஏற்பட்டுள்ளது

        இந்தோனேசியாவில் நில ந
        இந்தோனேசியாவில் நில ந
            Posted in உலக செய்திகள்

            ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்

            ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்

            இன்று திங்கட்கிழமை அதி காலை கிழக்கு ஜப்பான் கடல் பகுதியை அண்மித்து

            இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன ,இந்த நில அதிர்வு 6.4 ஆக பதிவாகியுள்ளது

            சுனாமி அனர்த்தம் நிகழும் அபாயம் உளதாக எதிர் பார்க்க படுகிறது ,

            மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் ,வீடுகளை விட்டு வெளியில் உலாவுவதை அவதானிக்க முடிகிறது

            இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவிலை ..சில

            மணித்தியாலங்களில் இதே பகுதியில் முழுமையான விபரங்கள் இணைக்க படும்

            quake,strikes,off Japan,coast,
            quake,strikes,off Japan,coast,
            Posted in உலக செய்திகள்

            ஈரான் அணு உலைக்கு அருகில் நிலநடுக்கம்-7 பேர் காயம்

            திடீரென- ஈரான் அணு உலைக்கு அருகில் நிலநடுக்கம்

            ஈரானில் உள்ளூர் நேரம் காலை 06.49 மணியளவில் Borazjan. பகுதியில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .

            இந்த நில நடுக்கம் 4.5 ஆக பதிவாகியுள்ளது ,
            இந்தநில நடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு

            அருகிலேயே ஈரானின் மிக பெரும் அணு உலைகள் நிறுவ பட்டுள்ளன .

            இந்த நில நடுக்க அதிர்வால் குறித்த அணு உலைகளிற்கு பாதிப்பு ஏற்பட்டனவா என தெரியவில்லை .

            இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன (பெறவில்லை .)

            தற்போது கிடைத்த தகவலின் படி ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

            எனினும் அணுமின் நிலையத்திற்கு சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை

            மேலதிக தகவல்கள் விரைவில் இணைக்க படும் …..

            Posted in இலங்கை செய்திகள்

            இந்தினேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி பீதி

            இந்தினேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி பீதி

            சற்று முன்னர் இந்தோனேசியா சுமத்திரா தீவில் 6,2 புள்ளி அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .இதனால் அங்கு சுனாமி பீதி நிலவுகிறது .

            இங்கிருந்தே சுனாமி ஏற்பட்டது ,எனினும் அவ்வாறான அபாயம் தற்போது இல்லை என தெரிவிக்க பட்டுள்ள போதும் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது

            இதுவரை இங்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை