Posted in சினிமா

கேள்வி கேட்ட ரசிகர் அதிரடியாக பதில் அளித்த யாஷிகா ஆனந்த்

கேள்வி கேட்ட ரசிகர் அதிரடியாக பதில் அளித்த யாஷிகா ஆனந்த்

பிக்பாஸ் மூலம் அனைவராலும் அறியப்பட்ட யாஷிகா அவருடைய ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விற்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.

கேள்வி கேட்ட ரசிகர் அதிரடியாக பதில் அளித்த யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த்


தமிழில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘இருட்டு அறையில்

முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பின்னர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் ஈர்த்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் யாஷிகா ஒரு பயங்கர விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கை ஆனார். மருத்துவமனையில் பல மாத சிகிச்சைக்கு பின்னர் தற்போது பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறார்.

அதேவேளை சமூக வலைதளங்களில் யாஷிகா ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர், ‘நீங்கள்

கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா?’ என எடக்குமடக்கான கேள்வி கேட்டார். இதற்கு சற்றும் தாமதிக்காமல், ‘இல்லை, நான் யாஷிகா’ என பதிலடி கொடுத்துள்ளார்

யாஷிகா. யாஷிகாவின் இந்த துணிச்சல் பேச்சுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    அட்லீ - நெல்சன் - லோகேஷ் கனகராஜ்
    Posted in சினிமா

    விஜய் எடுத்த புகைப்படம்…. நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்

    விஜய் எடுத்த புகைப்படம்…. நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்

    தமிழ் சினிமாவில் இருக்கும் 3 இளம் இயக்குனர்களை விஜய் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    விஜய் எடுத்த புகைப்படம்…. நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்
    விஜய்


    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் திரைப்படம் தயாரித்து வரும்

    இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

    விஜய்யின் முந்தைய படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அதுபோல் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை அட்லீ இயக்கி

    இருந்தார். இந்த மூன்று இளம் இயக்குனர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை நடிகர் விஜய் கிளிக் செய்திருக்கிறார்.

    இந்த புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள

    பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

      காஜல் அகர்வால்
      Posted in சினிமா

      காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கோல்டன் விசா

      காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கோல்டன் விசா

      மோகன்லால், மம்முட்டி, அமலா பால், துல்கர், திரிஷாவை தொடர்ந்து காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

      காஜல் அகர்வாலுக்கு கிடைத்த கோல்டன் விசா
      காஜல் அகர்வால்


      அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும்

      வர்த்தகர்கள், விளையாட்டு வீரர்கள், திரைபிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5

      அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

      ஏற்கனவே நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மோகன்லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா,

      பிருத்விராஜ், துல்கர் சல்மான், திரிஷா, அமலா பால் ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு, தற்போது பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கோல்டன் விசா

      வழங்கியுள்ளது. இத்தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கோல்டன் விசா வழங்கிய அமீரக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

      இவர் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

        நடிகர் கமல்
        Posted in சினிமா

        சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய நடிகர் கமல்

        சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய நடிகர் கமல்

        அசோக் செல்வன், அபி ஹாசன் நடிப்பில் வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

        சமீபத்தில் வெளியான படத்தை பாராட்டிய நடிகர் கமல் – வைரலாகும் புகைப்படம்
        கமல்
        சூது கவ்வும், தெகிடி போன்ற படங்களில் நடித்து பிரபலமான அசோக் செல்வன், மணிகண்டன், அபிஹாசன் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கித்தில் வெளியாகியுள்ள

        திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இப்படத்தில் ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராதன்

        இசையமைத்துள்ள இப்படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏஆர் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது.

        இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வந்தனர்.

        இந்நிலையில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தைப் பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில்

        படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு கமலுடன் புகைப்படம் எடுத்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

          திவ்யா சத்யராஜ்
          Posted in சினிமா

          அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்

          அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்

          தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார்.

          அரசியலில் களமிறங்கும் திவ்யா சத்யராஜ்
          திவ்யா சத்யராஜ்


          தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம்

          செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ்.

          ஊட்டச்சத்து நிபுணரான இவர், கொரோனா தொற்று நோய் பரவும் நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற

          இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தினார். மேலும் கொரோனா நேரத்தில் பெரும்

          இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

          அதுபோல் சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் பிரதமர் மோடிக்கு திவ்யா சத்யராஜ் கடிதம்

          எழுதினார். இந்நிலையில், திவ்யா சத்யராஜ் அரசியலில் களமிறங்க இருக்கிறார்.

          இவருக்கு ஆதரவாக இவரது தந்தை சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் திவ்யா சத்யராஜ் கூறியிருக்கிறார்.

            நடிகையின் மச்சங்களை
            Posted in சினிமா

            நடிகையின் மச்சங்களை எண்ணிய நடிகர்

            நடிகையின் மச்சங்களை எண்ணிய நடிகர்

            நடிகையின் மச்சங்களை எண்ணி விட்டீர்களா…? பத்திரிகையாளரின் கேள்வியால் அதிர்ந்துபோன நடிகர்

            டி ஜே டில்லு படத்தின் டிரைலரில் நாயகன் சித்து, “உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது?” என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

            நடிகையின் மச்சங்களை எண்ணி விட்டீர்களா…? பத்திரிகையாளரின் கேள்வியால் அதிர்ந்துபோன நடிகர்
            டிஜே தில்லு படத்தின் காட்சி

            தெலுங்கு திரை உலகின் பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் படத்தயாரிப்பாளர் சுரேஷ் கொண்டேத்தி. அவர் சந்தோஷம் என்ற வார இதழை நடத்தி வருகிறார்.

            இந்நிலையில், அவர் நடிகரிடம் அறுவறுக்கத்தக்க வகையில் கேட்ட கேள்வியால் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

            நேற்று நடைபெற்ற ‘டிஜே டில்லு’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டு பேசினார். அப்போது படத்தின் கதாநாயகன் சித்து ஜொன்னாலகடாவிடம், படத்தின் டிரைலரில் குறிப்பிடப்பட்டு உள்ளது போல்,

            நிஜத்திலும் நடிகை நேஹா ஷெட்டியின் உடம்பில் மொத்தம் எத்தனை மச்சங்கள் உள்ளன என்பதை கணக்கிட்டு உள்ளீர்களா? என்று கேட்டு அதிர்ச்சியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தினார்.

            இப்படத்தின் டிரைலரில் நாயகன் சித்து, “உன் உடலில் எத்தனை மச்சம் உள்ளது?” என்று நாயகி நேஹா ஷெட்டியிடம் கேள்வி கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.

            அதனை குறிப்பிட்டு பேசிய சுரேஷ், “நடிகையின் உடம்பில் 16 மச்சங்கள் உள்ளன என்று படத்தில் கண்டுபிடித்துள்ளீர்கள். அதை போல நிஜ வாழ்க்கையிலும் அவரது

            மச்சங்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தீர்களா?” என்று நாயகன் சித்துவை நோக்கி கேட்டார். இந்த கேள்வியால் அதிர்ந்துபோன சித்து, எந்த பதிலும் அளிக்கவில்லை.

            இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை மதிக்கத் தெரியாத சுரேஷ் என பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகை நேஹா ஷெட்டியும் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

            ‘இது துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. சுரேஷ் பெண்களை மதிக்கும் முறை அவரது கேள்வியின் மூலம் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது’ என்று நேஹா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

            ஆனால் தனது கேள்வியை நியாயப்படுத்திய சுரேஷ், ‘நான் எவ்வித இரட்டை அர்த்தத்திலும் அவ்வாறு கேட்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

            “இது ஒரு காதல் படம், நான் ரொமான்டிக் கேள்வி கேட்டேன். எனது நோக்கம் தூய்மையானது. தயவு செய்து என்னை தவறான முறையில் பேசாதீர்கள்” என்கிறார் சுரேஷ்.

              அஜித் - ஷாலினி
              Posted in சினிமா

              அது போலி… நம்பாதீங்க… ஷாலினி அஜித்

              அது போலி… நம்பாதீங்க… ஷாலினி அஜித்

              நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி பெயரில் புதிதாக ஒரு டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டது, இதுதொடர்பாக அஜித் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

              அது போலி… நம்பாதீங்க… ஷாலினி அஜித் தரப்பில் விளக்கம்
              அஜித் – ஷாலினி


              பெரும்பாலான சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் அறிவிப்புகளையும் அவர்களுடைய ரசிகர்களுடன் உரையாடல்களையும் நகிழ்த்துவர். இதன் மூலம் ரசிகர்களை எளிதில் தொடர்புகொள்ள முடிவதால் பல நடிகர் நடிகைகள்

              சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி பெயரில் நேற்று ட்விட்டர் கணக்கு

              தொடங்கப்பட்டது. மேலும் அந்த கணக்கில் ஷாலினி புதியதாக தொடங்கப்பட்ட டுவிட்டர் கணக்கு என்று பதியப்பட்டிருந்தது.

              இந்த பதிவை கண்டு அவருடைய ரசிகர்களும் நடிகர் நடிகைகளும் அந்த கணக்கை பின் தொடர்ந்தனர். இந்நிலையில் அந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்றும்

              அதனை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் அஜித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில், “ஷாலினி அஜித்க்குமார் என்ற பெயரில் போலி

              ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நடிகை ஷாலினி, டுவிட்டரில் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

              இதற்கு முன் நடிகர் அஜித்குமார் சமூக வலைதளங்களில் இருந்து விலகி விட்டார். அவர்

              மட்டுமின்றி அவரது குடும்பமே சமூக வலைதளங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                கவின் - ரெபா மோனிகா ஜான்
                Posted in சினிமா

                நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி

                நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி

                நட்புனா என்னானு தெரியுமா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கவின் அடுத்து நடிக்கும் வெப் தொடரின் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

                ”நீ ஒரு குப்ப” – கவினின் ஆகாஷ் வாணி
                கவின் – ரெபா மோனிகா ஜான்


                பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான ‘லிஃப்ட்’

                திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

                இதனிடையில் நடிகர் கவின் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில்

                இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். இந்த வெப்தொடரில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடித்துள்ளார்.

                மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட், மேகி ஆகியோர் இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுவாரசியமாக உருவான இந்த

                வெப் தொடரின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                  Posted in சினிமா

                  பிக்பாஸ் நிகழ்ச்சி fake ஷோ – கஸ்தூரி

                  பிக்பாஸ் நிகழ்ச்சி fake ஷோ – கஸ்தூரி

                  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சி பேக் ஷோ என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

                  பிக்பாஸ் நிகழ்ச்சி fake ஷோ – கஸ்தூரி காட்டம்
                  கஸ்தூரி
                  90-களின் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் பல படங்களில் நடித்து தனக்கான இடத்தை பிடித்துவைத்திருந்தார். இவர் சமீபத்தில்

                  பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

                  தற்போது பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஓடிடி தளத்தில் தொடங்கியுள்ளது. இதில் கடந்த 5 சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீண்டும் கலந்து கொண்டுள்ளனர்.


                  இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கஸ்தூரி இடம்பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்நிகழ்ச்சியில் அவர் இடம் பெறவில்லை. ஏன் பிக்பாஸ்

                  அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று கஸ்தூரியிடம் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து காட்டமாக பதிலளித்துள்ளார்.

                  கஸ்தூரி
                  கஸ்தூரி

                  அந்த பதிவில் அவர் கூறியிருப்பது, “எனக்கு குடும்பம் இருக்கு, வேலைகள் நிறைய இருக்கிறது. இந்த நச்சுதன்மை வாய்ந்த நிகழ்ச்சிக்கு வர நேரம் இல்லை. குறிப்பாக

                  இந்த போலி நிகழ்ச்சிக்கு பின்னால் பணத்துக்காக ஓட முடியாது. உங்கள் எதிர்பார்ப்பை வேறு எங்கேயாவது கொண்டு செல்லுங்கள்” என கஸ்தூரி பதில் அளித்திருந்தார்.

                    Posted in சினிமா

                    தனுஷை பிரிந்த ஐஸ்வர்யாவுக்கு வந்த சோதனை.

                    தனுஷை பிரிந்த ஐஸ்வர்யாவுக்கு வந்த சோதனை.

                    இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சில தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷை விவகாரத்து செய்து இருப்பதாக அறிவித்தார்.

                    தனுஷை பிரிந்தவுடன் ஐஸ்வர்யாவுக்கு வந்த சோதனை
                    ஐஸ்வர்யா – தனுஷ்


                    கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்து வருகிறது. சமீப காலங்களில் பல சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

                    தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

                    இதைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள், சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள் என்று பதிவு செய்து வருகிறார்கள். சிலர் தனுஷ் எப்படி இருக்கிறார் என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

                    ஐஸ்வர்யா

                    ஐஸ்வர்யா கடந்த ஜனவரி 17 ஆம் தேதி நடிகர் தனுஷை விவகாரத்து செய்து விட்டதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                      அஸ்வின் சரவணன்
                      Posted in சினிமா

                      மாயா’ பட இயக்குனருக்கு திருமணம்

                      மாயா’ பட இயக்குனருக்கு திருமணம்

                      நயன்தாரா நடித்து வெளியாகி வெற்றி பெற்ற ‘மாயா’ போன்ற சில படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

                      ‘மாயா’ பட இயக்குனருக்கு திருமணம்
                      அஸ்வின் சரவணன்


                      2015-இல் நயன்தாரா நடித்த வெளியான ‘மாயா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன். அதன்பின் டாப்ஸி நடித்த ‘கேம் ஓவர்’ படத்தை இயக்கினார். இவர்

                      2018ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ‘இறவாக்காலம்’. என்ற படத்தை இயக்கினார். பொருளாதார நெருக்கடியால் இந்தப் படம் தற்போது வரை வெளிவராமலே இருக்கிறது.

                      இன்று வரை ரசிகர்கள் பலரும் ‘இறவாக்காலம்’ படத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது நயன்தாரா நடிப்பில் ‘கனெக்ட்’ என்ற படத்தை அஸ்வின் இயக்கி வருகிறார்.

                      இந்நிலையில் அஸ்வின் சரவணன் – காவ்யா ராம்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய திருமணம் நேற்று (ஜனவரி 30) புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது. இதனை அஸ்வின் சரவணன் அவருடைய சமூக

                      வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்பதிவில் அவர் “பேனா மற்றும் பேப்பருடன் தொடங்கிய இந்த உறவு, கவிதையில் முடிந்திருக்கிறது. ஒவ்வொறு முறையும்

                      என்னோடு சேர்ந்து புயலை கடக்கும் உனக்கு நன்றி. குறிப்பாக மூன்றாம் அலையின் போது உன்னோடு இப்படி செய்வதே ஒரு சாகசம் போலிருக்கிறது” என்று பதிவிட்டிருக்கிறார்.

                      இவருக்கு அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

                        நான் ஏன் காந்தியை கொன்றேன்
                        Posted in Uncategorized சினிமா

                        நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்தை வெளியிடுவதற்கு தடை

                        நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

                        இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு முன் உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாடியிருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

                        “நான் ஏன் காந்தியை கொன்றேன்” படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
                        நான் ஏன் காந்தியை கொன்றேன் திரைப்படத்தின் போஸ்டர்

                        மகாத்மா காந்தியை கொலை செய்தது தொடர்பாக கோட்சே முன்வைத்த வாதங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் “நான் ஏன் காந்தியை கொன்றேன்”. இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

                        ஆனால் மகாத்மா காந்தியின் கொலையை நியாயப்படுத்தும் நோக்கில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி பல்வேறு தரப்புகள் கண்டனம் தெரிவித்தன.

                        இதையடுத்து இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது. பின் இந்த படத்தை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

                        அதில், இந்த திரைப்படம் வெளியாவதை தடுக்காவிட்டால், மீளமுடியாத பாதிப்பு ஏற்படும். நாட்டின் பொது அமைதியை சீர்குலைத்து, ஒற்றுமையின்மையையும்,

                        வெறுப்பையும் விதைப்பதை நோக்கமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் காந்தியின் நற்பெயருக்கு களங்களத்தை ஏற்படுத்துகிறது.

                        உச்சநீதிமன்றம்

                        அவரை கொன்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த கோட்சேவை புனிதப்படுத்துகிறது. எனவே இந்த படத்தை தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

                        இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை

                        நாடுவதற்கு முன் உயர்நீதிமன்றத்தை மனுதாரர்கள் நாடியிருக்க வேண்டும். இப்போதும் கூட மனுதாரர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தியுள்ளது

                          கஜோல்
                          Posted in சினிமா

                          நடிகை கஜோலுக்கு கொரோனா

                          நடிகை கஜோலுக்கு கொரோனா


                          இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கஜோலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

                          நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று உறுதி
                          கஜோல்


                          கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.


                          Posted in சினிமா

                          விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ்

                          விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ்.

                          நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளிவர காத்திருக்கும் கடைசி விவசாயி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.

                          விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
                          விஜய் சேதுபதி


                          காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’.

                          விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர்

                          முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

                          ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படங்களில் கடைசி விவசாயி படமும் சேரும். இந்த படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகிவிட்டது.

                          தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்களின் ரிலீஸ் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

                            யோகிபாபு
                            Posted in சினிமா

                            யோகிபாபுவின் பன்னிக்குட்டி புரோமோ – கொண்டாடும் ரசிகர்கள்

                            யோகிபாபுவின் பன்னிக்குட்டி புரோமோ – கொண்டாடும் ரசிகர்கள்

                            தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் யோகிபாபு நடித்து வெளிவர காத்திருக்கும் பன்னிக்குட்டி படத்தின் புரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

                            நடிகர் யோகிபாபுவின் பன்னிக்குட்டி புரோமோ – கொண்டாடும் ரசிகர்கள்
                            யோகிபாபு


                            தமிழ் திரையுலகில் காமெடியனாக களம் இறங்கி கதாநாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் யோகிபாபு. இவர் தற்போது விஜய்யுடன் இணைந்து பீஸ்ட்,

                            அஜீத்துடன் இணைந்து வலிமை, சிவகார்த்திகேயனுடன் அயலான், விஜய் சேதுபதியுடன் கடைசி விவசாயி, விஷாலுடன் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் முன்னணி காமெடியனாக நடித்து வருகிறார்.

                            இதனிடையே யோகிபாபு கதாநாயகனாக நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் பன்னிக்குட்டி. கிருமி பட இயக்குனர் அனுசரண் முருகையன் இயக்கத்தில்

                            யோகிபாபு மற்றும் கருணாகரன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் திண்டுக்கல்.ஐ.லியோனி, சிங்கம் புலி, ராமர், டைகர் கார்டன் தங்கதுரை ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

                            லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 11:11 புரோடக்சன்ஸ் வழங்கும் பன்னிகுட்டி திரைப்படத்திற்கு கிருஷ்ணகுமார் இசையமைக்க, சதீஷ் முருகன் ஒளிப்பதிவு

                            செய்திருக்கிறார். இந்நிலையில் பன்னிக்குட்டி திரைப்படத்தின் பாடல் புரோமோ

                            வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புரோமொ வீடியோவை அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

                              விக்ரம்
                              Posted in சினிமா

                              இணையத்தை சுற்றி வளைக்கும் மகான் பாடல்

                              இணையத்தை சுற்றி வளைக்கும் மகான் பாடல்

                              விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் ‘மகான்’ படத்தின் எவன்டா எனக்கு கஸ்ட்டடி பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

                              இணையத்தை சுற்றி வளைக்கும் மகான் பாடல்
                              விக்ரம்


                              கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் ‘மகான்’. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய

                              எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

                              செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. மகான் திரைப்படம் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

                              சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாடலான எவன்டா எனக்கு

                              கஸ்ட்டடி என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி அந்த பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர்

                              விவேக் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ள இப்பாடல் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

                                ராஷ்மிகா மந்தனா
                                Posted in சினிமா

                                ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்

                                ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்

                                தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவின் செயலால் ரசிகர்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.

                                ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்
                                ராஷ்மிகா மந்தனா


                                தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில்

                                தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

                                அதேநேரம் ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது. ஆனால் நல்ல மனது இல்லை என்று ரசிகர்கள் எரிந்து விழும் அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இதற்கு காரணம்

                                உள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுமி அவரிடம் எதாவது கொடுங்கள் என்று கேட்கிறாள். அந்த சிறுமியை ராஷ்மிகாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர்.

                                ராஷ்மிகா மந்தனா

                                ஆனாலும் அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

                                ஆனால் ராஷ்மிகா அந்த குழந்தைக்கு எதுவும் கொடுக்காமல் சிரித்துக்கொண்டே சென்று காரில் உட்கார்ந்து விட்டார்.

                                இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி பலரும் ராஷ்மிகாவின் செயலை சாடி

                                வருகின்றனர். மேலும் பல ரசிகர்கள் அந்த குழந்தைக்கு எதாவது கொடுத்திருக்கிலாம் என்றும் பதிவு செய்து வருத்தமடைந்திருக்கிறார்கள்.

                                  விஜய் ஆண்டனி
                                  Posted in சினிமா

                                  விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் 3 கதாநாயகிகள்

                                  தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

                                  விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் 3 கதாநாயகிகள்
                                  விஜய் ஆண்டனி


                                  ‘தமிழ்படம்’ மூலம் பிரபலமானவர், டைரக்டர் அமுதன். இவரது இயக்கத்தில், ஒரு புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ‘ரத்தம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

                                  இதில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிகளாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள்.

                                  விஜய் ஆண்டனி
                                  மகிமா நம்பியார் – நந்திதா ஸ்வேதா – ரம்யா நம்பீசன்

                                  அரசியல் திகில் படமாக உருவாகி வரும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இன்பினிடி பிலிம் வென்சர்ஸ் தயாரித்து வரும் இதன்

                                  படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதே பட நிறுவனத்துடன் இணைந்து,

                                  ‘கொலை’, ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி பணிபுரிகிறார்

                                    Posted in சினிமா

                                    ரசிகர்களை ஏமாற்றிய விஷால்

                                    ரசிகர்களை ஏமாற்றிய விஷால்

                                    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தனது ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார்.

                                    ரசிகர்களை ஏமாற்றிய விஷால்
                                    விஷால்


                                    விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில்

                                    விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

                                    நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின்

                                    படப்பிடிப்பு முடிந்து ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இப்படம் இன்று வெளியாகவில்லை.

                                    விஷால்

                                    கொரோனா ஊரங்கு காரணமாக தியேட்டர்களில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் வீரமே வாகை சூடும் திரைப்படம் வெளியாகவில்லை. இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

                                      பிக்பாஸ் அல்டிமே
                                      Posted in சினிமா

                                      சாதனையாக்க பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்… யார் தெரியுமா?

                                      சாதனையாக்க பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்… யார் தெரியுமா?

                                      பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் அடுத்த போட்டியாளர் பற்றிய புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

                                      சோதனைகளை சாதனையாக்க பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் போட்டியாளர்… யார் தெரியுமா?
                                      பிக்பாஸ் அல்டிமேட்


                                      பிக்பாஸ் 5-வது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இதில் ராஜு ஜெயமோகன்

                                      பிக்பாஸ் சீசன் 5-ன் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை பிரியங்காவும், மூன்றாவது இடத்தை பாவ்னியும் பிடித்தனர்.

                                      பிக்பாஸ் 5 நிகழ்ச்சி முடியும் தினத்தில், பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும்

                                      ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்கள். அதன்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியானது.

                                      ஜூலி

                                      அதன்படி நேற்று முதல் போட்டியாளராக சினேகன் செல்ல இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

                                      தற்போது பிக்பாஸ் முதல் சீசனில் அதிகம் பேசப்பட்ட ஜூலி, 2வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் செல்ல இருப்பதாக புரமோ வெளியாகியுள்ளது.