திரும்பினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதியில் காதல் ஆல்பத்தை வெளியிட இருந்த நிலையில், கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
நலமுடன் திரும்பினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி காதல் ஆல்பம் ஒன்றை டைரக்ட் செய்து வந்தார்.
காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதியில் அந்த ஆல்பத்தை வெளியிட இருந்த
நிலையில், கடந்த வாரம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் படப்பிடிப்பு ஸ்தம்பித்தது.
14-ந்தேதி ஆல்பம் வெளியாவது சந்தேகமானது. தற்போது அவர் பூரண குணமடைந்து ஐதராபாத்தில் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு திரும்பினார்.
நாளை அவர் மீண்டும் காதல் ஆல்பம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பை
தொடங்க இருக்கிறார். இதனால் 14-ந் தேதி ஐஸ்வர்யா இயக்கும் காதல் ஆல்பம் வெளியாவது உறுதியாகி உள்ளது.






