Tag: ஏமர்ந்த காதல்
ஏமார்ந்த காதல்
Author: நிருபர் காவலன் Published Date: 01/05/2025
ஏமார்ந்த காதல்
உன்னை பார்த்த நாள் முதலாய்
ஊன் உறக்கம் தொலைத்து விட்டேன்
கண்ணுக்குள்ள வீழ்ந்தவளே
காணாமலே போனதெங்கே
சொல்லி ஆற முடியாத
சோகமதை தந்து விட்டு
பைங்கிளியே போனதெங்கே
பார்க்க என்னை மறந்ததென்ன
கண்ணுக்குள்ள நீ இருக்க
கற்பனையில் நீ உலவ
சொற்கள் எல்லாம் உன்னை தேட
சொந்தம் உன்னை இழந்தேனோ
பக்கத்தில நீ இருக்க
பார்த்து பார்த்து உனை இரசிக்க
முடியாமல் போனதினால்
முழு நெஞ்சும் வலிக்குதடி
கத்தும் கடல் மேல் எழுந்து
கதறுகின்ற அலைபோல
கண்கள் எல்லாம் நீராச்சு
காதல் இன்று புன்னாச்சு
செத்திடத்தான் துடிக்கிறேன்
முடியமால் தவிக்கிறேன்
இப்படி ஒரு தண்டனையை
இனி யாருக்கும் நீ கொடுத்திடாதே..!
அக்கம் -01-05-2025
வன்னி மைந்தன்
- மீள வருவாயா

- ஒரு நாள் வெல்வேன்

- எப்படி நான் பேசிடுவேன்

- என்னை விடு

- நேரில் வந்து விடு

- என் உயிரே நான் வெல்வேன்

- என்னை ஏற்று விடு

- என்னை அழைப்பாயா

- அடைத்து வைக்க வாவேண்டி

- கவலைப் படுகிறேன்

- யார் மேல் குற்றம்

- காதலே சோகமா

- கண்டதெல்லாம் கனவு

- ஏமார்ந்த காதல்

- அர்ச்சுனா ஆவி பேசிறது

- எனக்கு என்ன ஆச்சு

- எனக்கொரு பதில் சொல்லாயோ

- உன்னால் தவிக்கிறேன்

- மன்னித்து விடு

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்

- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

- அழும் நீதி

- அர்ச்சுனா

- ஏன் அழுகின்றாய்

- அர்ச்சுனா எங்கள் அவதாரம்









