Posted in Uncategorized

ஐரோப்பாவை கதற விட்ட ரஷியா இராணுவம் – அந்தர் பெல்ட்டி அடித்த நேட்டோ

ஐரோப்பாவை கதற விட்ட ரஷியா இராணுவம் – அந்தர் பெல்ட்டி அடித்த நேட்டோ

உக்கிரேன் நேட்டோ நாட்டுடன் இணைந்திட தனது எதிர்ப்பை தெரிவித்தது , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் பேச்சுக்களில் ரசியா ஈடுபட்டது ,

ஆனால் அவை ரசியாவின் கோரிக்கை ஏற்க மறுத்து நிராகரித்தனர் ,அவ்வேளை தனக்கு வேறு வழி உள்ளதாக அவர் எச்சரித்தார் ,ஆனால் அதனை செவிசாய்க்காது

அலட்சியம் புரிந்த நிலையில் தனது இராணுவ நடவடிக்கையினை ரசியா மேற்கொண்டுள்ளது

போரில் ஏற்பட்ட மாற்றம்

ரசியா மூன்று நாட்களுக்குள் உகிரேனை தனது காட்டு பாட்டுக்குள் கொண்டு வந்து

விடும் என நாம் எதிர்பார்த்த அந்த நிகழ்வு இங்கு இடம்பெறாமை உள்ளது ஏமாற்றத்தை அளித்துள்ளது என நீங்கள் கருதலாம்

ஆனால் நிலவரம் அதுவல்ல ,இதுவரை ரஷியா தனது முழு ஆயுத பலத்தையும் உக்கிரேன் மீது காண்பிக்கவில்லை

தனது முழு இராணுவ பலத்தையும் அது ஈடுப்படுத்தவில்லை ,இதில் புட்டீன் ஒரு யுத்த விளையாட்டை காண்பித்த வண்ணம் கிளித்தட்டு நடத்திய வண்ணம் உள்ளார்

புட்டின் போடும் திட்டம்

உலக நாடுகளை கதற வைத்துள்ளார் ,அத்துடன் நேட்டோ மற்றும் அமெரிக்கா

பிரிட்டன் நாடுகளின் நகர்வுகளை துல்லியமாக கண்காணித்த வண்ணம் புட்டீன் தனது திட்டங்களை வகுத்த வண்ணம் உள்ளார்

இந்த போர் அதி வேகமாக வரும் வாரம் இடம்பெறும் என நாம் நம்புகிறோம் அதற்கு மேற்குறிய சில காரணங்கள் அடித்தளம் இட்டுளள்து

நேட்டோ பெல்ட்டி

நேட்டோ தலைவர் ஊடக சந்திப்பு மேற்கொண்ட பொழுது தாம் உக்கிரேன் இராணுவத்துடன் இணைந்து போரிடவில்லை எனவும் ,ஆனால் தமது நாடுகளின்

எல்லைக்கு 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தை குவித்துள்ளதாகவும் ,அதற்குரிய ஆயுதங்கள் நகர்த்த பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து அந்தர் பெல்ட்டி அடித்துள்ளார்

உக்கிரேன் அதிபர் போட்ட குண்டு

உக்கிரேன் அதிபர் கூறியது போன்று ரசியா ,ஜெர்மனியின் பெர்லின் சுவரில் சென்று முடிவடையும் போரை ஆரம்பித்துள்ளது என்ற அவர் கருத்து சரியானதா ,

அது நிலைக்குமா ..?என்பது உலக நாடுகள் மேற்கொள்ளும் ஆசியா மீதான பொருளாதார தடைகள்


அவர்கள் மன நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதுடன் போரினை தொடர்ந்து மேற்கொள்ள
உந்தும் என்பதே களநிலவரமாக உள்ளது

  • வன்னி மைந்தன்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் புகையிரதத்தில் மோதுண்டு வாலிபர் மரணம்

யாழில் புகையிரதத்தில் மோதுண்டு வாலிபர் மரணம்

இன்று மதியம் 1.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கோவில் வீதி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த நபர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அததெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் அரசியல்வாதி வீட்டில் ரவுடிகள் அட்டகாசம்

யாழில் அரசியல்வாதி வீட்டில் ரவுடிகள் அட்டகாசம்

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர்

ஒருவர் வெருடைய தந்தையை தாக்க முற்பட்டதுடன், வீட்டின் வேலிகளை சேதப்படுத்திச் சென்றுள்ளார்.

மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் உறுப்பினரான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பண்டத்தரிப்பில் உள்ள அவரது வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளை மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர்,

பாராளுமன்றில் ஆளும் கட்சியை சேர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை கூறி, அவரின் ஆதரவாளர் தான் என கூறி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் போது , பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் அதனை தடுக்க முற்பட்ட

வேளை அவரை தள்ளி விழுத்திய பின்னர் வீட்டின் கேற்றை சேதப்படுத்தியதுடன் , வேலி தகரங்களையும் சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது

    கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
    Posted in Uncategorized

    உக்கிரேனில் இந்திய மாணவன் சுட்டு கொலை

    உக்கிரேனில் இந்திய மாணவன் சுட்டு கொலை

    உக்கிரேனில் இடம்பெற்று வரும் போரில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்

    ரசிய இராணுவம் போரை தொடர்ந்து வரும் நிலையில் அங்கு போர்வலய பகுதியில் சிக்கியுள்ள மக்களில் பலர் இறந்த வண்னம் உள்ளனர்

    ஏனையவர்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் பரவும் மர்ம நோய் – செயல் இழக்கும் காதுகள்

      இலங்கையில் பரவும் மர்ம நோய் – செயல் இழக்கும் காதுகள்

      சமீப காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

      செவித்திறன் கருவிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே இந்நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் யசத் வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.

      உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

      உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்

        Posted in இலங்கை செய்திகள்

        கோட்டா மீது சிறிதரன் பாய்ச்சல்

        கோட்டா மீது சிறிதரன் பாய்ச்சல்

        எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளையும்

        இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற கோட்டபாயவின் தோற்றுப்போன மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

        கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (2) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

        தொடர்ந்து தெரிவித்த அவர்,

        அரசாங்கத்திடமிருந்து எரிபொருள் கிடைக்காத காரணத்தால் கிளிநொச்சியில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை நாங்கள் பார்க்கின்றோம்.

        இது அவர்களைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் மற்றுமொரு அடியாக உள்ளது.

        எனவே,இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகும். அவர்கள் தமிழ், சிங்கள மக்களை வதைத்து அதன் ஊடாக தமது குடும்ப நலனை கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக உள்ளது.

        தனியார் ஊடாக உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக அரசாங்கம் சொல்கின்றபொழுதிலும், வடக்கில் தமிழ் மக்கள் உரத்தினை பெற்றுக்கொள்ளவோ

        அல்லது காணவோ முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆகவே இது மிகப்பெரிய பின்னடைவையும், இந்த மக்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கின்றது என்றார்

          கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
          Posted in Uncategorized

          காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

          காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

          இலங்கை நாவுல, எலஹெர பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கும்

          நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகளை அடுத்து 32 வயதுடைய நபர் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்

          மேற்படி படுகொலை சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            நீர் இன்றி தவிக்கும் கொழும்பின் பல பகுதிகள்

            .நீர் இன்றி தவிக்கும் கொழும்பின் பல பகுதிகள்

            இலங்கை கொழும்பின் பல கிராம பகுதிகள் நீர் ஒன்றி துவைத்து அவருகிறது ,14

            மணித்தியாலம் நீர் வெட்டு இடம்பெறும் என அறிவிக்க பட்ட நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது

            மின்சாரம் இன்றி மக்கள் தவித்து அவரும் நிலையில் தற்பொழுது நீரும் இன்றி மக்கள் தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in Uncategorized

              ரசியாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

              .புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு இருப்பதால் உலகில் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

              சர்வாதிகார செயல்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை- புதினை கடுமையாக தாக்கிய ஜோ பைடன்

              ரஷியா-உக்ரைன் போருக்கு இடையே இன்று அமெரிக்கா பாராளுமன்றம் கூடியது. கூட்டத்தில் அதிபர் ஜோபைடன் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

              ரஷிய அதிபர் புதினையும் மிக கடுமையாக தாக்கி பேசினார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-

              ரஷிய அதிபர் புதின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் நியாயமில்லாதவை. அவரது செயல்பாடுகள் உலகை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. ரஷியா நடத்தி வரும் போர் மிகவும் தவறானது.

              புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார். இதனால் உலகுக்கு மாபெரும் ஆபத்தும், அச்சுறுத்தலும் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் உக்ரைன் மக்கள் பக்கம் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டுடன் உள்ளது.

              தற்போது ஏற்பட்டுள்ள சண்டையில் அமெரிக்கா நேரடியாக ரஷியாவுடன் மோதல் போக்கை கடை பிடிக்காது. உக்ரைனுக்குள் சென்று ரஷிய படைகளை எதிர்த்து போராடும் திட்டம் எதுவுமில்லை. அதே சமயத்தில் நேட்டோ நாடுகளுக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படும்.

              புதின் சர்வாதிகாரி போல் நடந்து கொண்டு இருப்பதால் உலகில் ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் நிச்சயம் ஜனநாயகம் வெற்றி பெறும்.

              புதின் உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி ஏராளமான பீரங்கிகளை நிறுத்தலாம். கீவ் நகருக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தலாம். ஆனால் ஒருபோதும் உக்ரைன் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியாது.

              இந்த உலகம் சுதந்திரமாக இயங்குவதை முடக்க புதின் முயற்சி செய்கிறார். ஆனால் அதை அமெரிக்கா அனுமதிக்காது.

              உக்ரைன் நாட்டுக்கு தேவையான எல்லா உதவிகளும் செய்யப்படும். அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளுடன் சேர்ந்து கூட்டு முயற்சியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நேட்டோ நாடுகளின் ஒரு இஞ்ச் இடத்தை கூட யாராலும் அபகரிக்க முடியாது.

              உக்ரைன் நாட்டு மக்கள் உண்மையான வீரத்துடன் போராடி வருகிறார்கள். புதின் அவர்களை வெல்லலாம். ஆனால் இதற்கு ரஷியா நீண்ட நாட்கள் மிக அதிக விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.

              புதின் உக்ரைன் போரை தவறாக கணித்து விட்டார். அவரது கணிப்பு நிச்சயம் நிறைவேறாது. அவரது முடிவால் ரஷிய பொருளாதாரம் வரலாறு வகையில் பலவீனம் அடையும் என்பது உறுதி.

              ரஷியாவால் ஏற்பட்டிருக்கும் குழப்பம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. உலகில் அமைதியை ஏற்படுத்தவே இரண்டாம் உலகப்போருக்கு பிறகு நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது. அதில் அமெரிக்கா உறுப்பினராக இருக்கிறது. நேட்டோ அமைப்பு தனது கடமைகளை செய்யும்.

              இதன் காரணமாக உக்ரைன் மீண்டும் வலிமை பெறும். புதின் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய வலிமை உண்டாகும். அதே சமயத்தில் ரஷிய பொருளாதாரம் மிகப்பெரிய சீரழிவை சந்திக்கும்.

              உக்ரைன் விடுதலை பெற நேட்டோ முழு அளவில் உதவி செய்யும். தொடர்ந்து உக்ரைனுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். மனிதாபிமான அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ராணுவ அடிப்படையிலும் அனைத்து உதவிகளும் தொடர்ந்து செய்யப்படும்.

              விமானம் பறக்க தடை

              ரஷியா விமானங்கள் அமெரிக்க வான்வெளியில் பறப்பதற்கு தடை விதிக்கப் படுகிறது. ரஷியா இனியாவது தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.

              ரஷியாவின் நியாயமற்ற செயலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. தவறுக்கு மேல் தவறு செய்வதால் புதின் தனிமைப்படுத்தப்படுகிறார்.

              அமெரிக்கா மேற்கொண் டுள்ள நடவடிக்கைகள் காரணமாக ரஷியா நிச்சயம் பலவீனம் அடையும்.

              அமெரிக்காவும், அதன் கூட்டு நாடுகளும் ரஷியா மீது சக்தி வாய்ந்த பொருளாதார தடைகளை விதித்து வருகின் றன. ரஷியாவின் பண பரிமாற்றத்தை சர்வதேச அளவில் நாங்கள் முடக்கி உள்ளோம். ரஷியாவின் வங்கி நடவடிக்கைகள் விரை வில் முடங்கும்.

              வாழ்நாள் முழுக்க நாம் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறோம். சர்வாதிகார செயல்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை.

              இவ்வாறு அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசினார்.

              அவரது பேச்சுக்கு அமெரிக்கா பாராளுமன்ற இருசபை உறுப்பினர்களும் எழுந்து நின்று கரகோ‌ஷம் செய்து வாழ்த்து தெரிவித்தனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கை விமானப்படையின் 71 ஆவது நிறைவாண்டு

              .இலங்கை விமானப்படையின் 71 ஆவது நிறைவாண்டு

              இலங்கை விமானப்படை அதன் 71 ஆவது நிறைவாண்டை இன்று கொண்டாடுகின்றது.

              இலங்கை விமானப்படை இன்று அதன் 71 ஆவது நிறைவாண்டைக் கொண்டாடுகின்றது. இலங்கை றோயல் விமானப்படையாக 1951ஆம் ஆண்டு மார்ச் இரண்டாம் திகதி ஆரம்பித்த இந்தப் படையின் முதலாவது விமானப் படைத் தளபதி

              குறூப் கப்டன் ஜீ.சி.பிளே-ஓன் ஆவார். முதலாவது இலங்கை விமானப் படைத் தளபதியாக வைஸ் மார்ஷல் ஜீ.ஆர்.அமரசேகர 1962ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

              1972ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி இலங்கை விமானப்படையாக பெயர் மாற்றப்பட்டது. இரண்டு வகையான பத்து விமானங்களுடனும் ஆயிரத்து 200 படை

              வீரர்களுடனும் விமானப்படை ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 18 விமானப் படைத் தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய திறன்விருத்தி மற்றும் ஜனாதிபதி உறுதிகள் பலவற்றையும் விமானப்படை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

              இதேவேளை, இரத்மலானையில் உள்ள கொழும்பு சர்வதேச விமான நிலையம் அதன் 84 ஆவது நிறைவாண்டைக் கொண்டாடுகின்றது. நாட்டின் சிவில் விமான சேவை

              நடவடிக்கை 1930 ஆண்டுகளில் ஆரம்பமானது. அப்போதைய ஆளுனரான சேர் அன்றூ கெல்டொக்கொட் தலைமையில் 1938ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி இரத்மலானை விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினம் கொழும்புக்கும்

              மும்பைக்கும் இடையிலான விமான அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. 84 ஆவது நிறைவாண்டை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஒரு வைபவம் கடந்த

              திங்கட்கிழமை இடம்பெற்றது. விமான நிலைய மற்றும் விமான சேவைகளுக்கான இலங்கை நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜென்தல் ஜீ.ஏ.சந்திரசிறி இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்

              Posted in இலங்கை செய்திகள்

              நெல் அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு

              நெல் அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு

              பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

              ஹெக்டயருக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். கடந்த பெரும்போகத்தில் 11 இலட்சம்

              விவசாயிகளினால் மேமற்கொள்ளப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் அறுவடை குறைந்துள்ளது.

              இவர்களுக்கு இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

              உயர்ந்த பட்சம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிற்கு இந்த இழப்பீட்டை வழங்கத்

              திட்டமிடப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தரவு அளவிலான விவசாயிகளுக்கும் இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது

                Posted in Uncategorized

                மனைவியை குத்திக் கொன்ற கணவன்

                மனைவியை குத்திக் கொன்ற கணவன்

                தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

                நேற்று (28) மாலை மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

                உயிரிழந்தவர் ருவல்வெல பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

                34 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  பிரச்சினைகள் இல்லாத நாட்டையே கையளித்தேன்- மைத்திரி

                  பிரச்சினைகள் இல்லாத நாட்டையே கையளித்தேன்- மைத்திரி

                  நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளின்றி பொது மேடையில்

                  கலந்துரையாட வேண்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலம் நிறைவடைந்த போது பிரச்சினை இல்லாத நாட்டை கையளித்ததாக தெரிவித்தார்.

                  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

                  தனது ஆட்சிக்காலத்தில் மக்கள் உணவு உண்ணவும், விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடவும் முடிந்தது என்று தெரிவித்த அவர், சில பிரச்சினைகள் இருந்தபோதிலும் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றார்.

                  அரசாங்கத்தை குறை கூறுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது எனவும் நாட்டை முன்னேற்றுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

                  அரசாங்கத்தில் உள்ளவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு வெளியே உள்ளவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவதற்கு இந்தத் தருணமே பொருத்தமானது என சுட்டிக்காட்டினார்.

                  54 வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் தான் விமர்சனங்களை எதிர்கொள்ளும் பழக்கமுடையவர் எனவும் குறிப்பிட்டார்.

                    Posted in Uncategorized

                    உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவ சிப்பாய்கள் சிறை பிடிப்பு – வீடியோ

                    உக்கிரேன் இராணுவத்தால் ரசியா இராணுவசிப்பாய்கள் சிறை பிடிப்பு – வீடியோ

                    உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் இராணுவ தாக்குதலில் சில பலநூறு இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்

                    ரசியா படைகளிற்கு எதிராக மக்களும் போராடிய வண்ணம் உள்ளனர் ,இவ்வாறான

                    நிலையில் ரஷியா படைகள் பயணித்த வாகனங்கள் சேதமடைந்த நிலையில் அதில்

                    உள்ள சிப்பாய்களை மக்கள் பிடித்து இராணுவத்திடம் ஒப்படைத்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

                    இதில் அழுத்தி காணொளி பார்க்க

                      Posted in Uncategorized

                      தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்

                      தந்தையை அடித்து கொன்று குப்பையில் வீசிய மகன்

                      இலங்கை குருவிட்ட பகுதியில் குப்பை பகுதியில் இறந்த நிலையி கண்டெடுக்க பட்ட

                      தந்தையின் சடலம் தொடர்பில் இடம்பெற்று வந்த விசாரணையில் ,குறித்த நபரை

                      தாக்கி கொன்று குப்பையில் வீசிய குற்ற சாட்டில் அவரது மகன் கைது செய்ய பட்டுள்ளார்

                      தனது கணவரின் மரணத்தில் சநதேகம் உள்ளதாக மனைவி தெரிவித்த நிலையில்

                      போலீசார் மேற்கொண்ட விசாரணையின் பொழுதே இந்த விடயம் ஆரம்பிக்க பட்டுள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        எரிபொருள் தட்டு பட்டால் பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

                        எரிபொருள் தட்டு பட்டால் பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

                        இலங்கையில் ஆளும் கோட்டா அரசினால் நாட்டு மக்கள் மீது வரி சுமைகள் மற்றும்

                        ,விலைவாசிகள் அதிகரிக்க பட்டதினால் அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும்

                        பேக்கரிக்கு உற்பத்திகள் பாதிக்க பட்டுள்ளது

                        இதுபோலவே போக்குவரத்து சேவையும் பாதிக்க படும் நிலை ஏற்பட்டுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          சாந்தபுரம் கிராமம் யாருக்கு சொந்தம் – வெடித்தது சர்ச்சை

                          கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற

                          தகவல்களால் சாந்தபுரம் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

                          சுமார் 32 வருடங்ஙகளாக கிளிநொச்சி நிர்வாக சேவை பரப்பிற்கு உட்பட்டு நிர்வாகம் கல்வி சுகாதாரம் போக்குவரத்து சமூக சேவைகள் அனைத்தும் கிளிநொச்சி

                          நிர்வாகங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. எனினும் புதிய எல்லை மறுசீரமைப்பின் போது குறித்த கிராமம் முல்லைத்தீவு எல்லைக்குள் கொண்டு

                          செல்லப்படும் என்று சில அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மக்கள் மிகுந்த பதற்றம் அடைந்து காணப்பட்டனர். குறித்த குழப்பங்களை

                          இனங்கண்டு தீர்வு காண வழிகாட்டும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை மக்கள் அழைத்து கலந்துரையாடினர்.

                          இதன் போது குறித்த அனைத்து விடயங்களையும் தெளிவுபடுத்தி எல்லை மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு அரச அதிபர் ஊடாக அனுப்பி வைப்பதற்கும் பாராளுமன்றத்திற்கு இவ்விடயத்தை கொண்டு செல்வதற்கும் ஆராயப்பட்டது.

                          இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன்

                          பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் ஜீவராசா கட்சியின் அமைப்பாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          நாளை முதல் 5 மணிநேரம் மின்வெட்டு – மக்கள் அவதி

                          நாளை முதல் 5 மணிநேரம் மின்வெட்டு – மக்கள் அவதி

                          இலங்கையில் நாளை முதல் ஐந்து மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும் என்று

                          இலங்கை மின்சார வாரியம் அறிவித்துள்ளது

                          இதனால் மக்கள் பெரிதும் கொதிப்பில் உறைந்துள்ளனர்

                          இலங்கையின் பல பாகங்கள் இருளில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            எரிபொருள் தட்டுப்பாடு – பேரூந்து பயணங்கள் முடக்க படும் அபாயம்

                            எரிபொருள் தட்டுப்பாடு – பேரூந்து பயணங்கள் முடக்க படும் அபாயம்

                            இலங்கையில் எரிபொருள் தட்டு பட்டது ஏற்பட்டுள்ள நிலையில் இன்று டீசல்

                            கிடைக்காவிடின் நாளை முதல் பயணிகள் பேரூந்துகள் போக்குவரத்து தடை படும் என தெரிவிக்க பட்டுள்ளது

                            ஆளும் அரசின் ஆட்சி காலத்தில் இலங்கை வரலாறுயுகாணாத பெரும் சீழிவை

                            சந்தித்து வருகிறது ,இதனால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கை உதைபந்தாட்ட வீரர் – மர்ம மரணம்

                              இலங்கை உதைபந்தாட்ட வீரர் – மர்ம மரணம்

                              இலங்கையோ உதைபந்தாட்ட வீரரான டக்சன் புஸ்லாஸ் அவரது வீட்டில் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்

                              இவரது மர்ம மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                              இதுவரை இவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை