Tag: வைரஸ்
கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு
கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு
கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், சிகா வைரசும் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல் முறையாக கேரளாவில் சிகா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு
குமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி ஒருவர் காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் முழுவதும் சிவப்பு புள்ளிகள் ஏற்பட்டு அங்குள்ள தனியார்
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கடந்த மாதம் 28-ந்தேதி அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 7-ந்தேதி குழந்தையும் பிறந்தது.
தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கேரளாவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதை மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று தெரிவித்தார்.
கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், சிகா வைரசும் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றின் மூலம் பரவும் புதிய வைரஸ் கண்டு பிடிப்பு
காற்றின் மூலம் பரவும் புதிய வைரஸ் கண்டு பிடிப்பு
பரவி வரும் கொரனோ நோயின் குடும்பத்தை சேர்ந்த புதிய வைரஸ் ஒன்று வியட்நாமில் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவை ,இந்தியா பிரித்தானியாவில் பரவி வரும் நோயினுடையது என தெரிவிக்க பட்டுள்ளது
காற்றில் கலந்து உயிரினங்களுக்கு வேகமாக பரவி வருவதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது
முகக் கவசம் இன்றி மக்கள் நடமாட முடியாத சூழலை இந்த நோய்களின் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது கவலை தருகிறது
நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள்
நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள்
தமிழகத்தில் சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருவதால், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று
தமிழக நோய் தொற்று மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.
மக்கள் தொடர்ந்து பொது இடங்களில் கூடினால் கொரோாவை கட்டுப்படுத்துவது கடினம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
நாளுக்கு நாள் அதிகரித்து, தினமும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தோரின்
எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் முக்கியமாக கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில்
கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அனைத்து மாவட்டத்திற்கும் சேர்த்து சென்னையில் மட்டும்
நாளொன்றுக்கு 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதற்கமைய சென்னை தற்போது அதிகபட்சமாக 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில்
நோய் அதிகம் பரவுவதற்கான காரணம் என்னவென்று நோய் தொற்று பிரிவு மூத்த மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன்
கூறியதாவது: சென்னையில் முதலில், நோய் தொற்று தொடங்கியதே விமான நிலையங்களில்தான். ஏன் என்றால்
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்கள் வழியாகத்தான்
வந்தார்கள். எனவே சென்னை போன்ற பெருநகரங்களில் பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும். இரண்டாவதுஇ மக்கள் தொகை, ஒரு
சதுர கிலோமீட்டருக்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை பொறுத்தே பரவல் இருக்கிறது. இது கிராமப்புறத்தில் குறைவு. அதனால் அங்கே பரவல் குறைவாக இருக்கும்.
இப்போது 4 நாட்கள் முழு ஊரடங்கு என்றதும், மக்கள் சனிக்கிழமை எல்லாம் ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாக கூடினார்கள். அதனால்,
முழு ஊரடங்கு அறிவித்ததற்கான பலனே இல்லாமல் போனதுபோல் ஆகிவிட்டது. இந்த வியாதி ஒரு நபருக்கு வந்தால் , 2 வாரத்திற்கு
பிறகுதான் தெரியும். இந்த வாரம் சனிக்கிழமை கூடியவர்களில் யார் யாருக்கு பரவியது என்று இரண்டு வாரங்களுக்கு பிறகுதான்
தெரியும். இப்போது உறுதி செய்யப்பட்டவர்கள், அறிவிக்கப்படுபவர்கள் எல்லாம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு
பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள்தான். எனவே இந்த கூட்டத்தில் குவிந்தவர்கள் எல்லோரின் நிலை என்னவென்று அடுத்த
வாரம்தான் தெரிய வரும். நகர்ப்புறத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். கிராமப்புறத்தை கட்டுப்படுத்திடலாம்.
இந்த வைரஸ் சளி துளிகளால் வேகமாக பரவ கூடியது.சளிதுளியால் பரவும் வைரஸ்கள் மிக வேகமாக பரவும். மேலும் இந்த வைரஸ் நாம் இதுவரை சந்திக்காத ஒன்று. இதுக்கு மருந்தும் கிடையாதுஇ
தடுப்பூசியும் கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது. சமூக விலகல் மட்டுமே ஒரே தீர்வு. காய்ச்சல், இருமல் இருப்பவர்களை சோதனை செய்கிறோம். ஆனால், எந்த அறிகுறியும் இல்லாமல்
இந்த வைரஸ் வந்து செல்கிறது. ஆனால் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவினாலும், அவர்கள் முதியோர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோராக இருந்தால் பாதிப்பு ஒன்றாகத்தான் இருக்கும்.
தற்போது சென்னையில் கொரோனா பரவுவதற்கு நம்முடைய வாழ்க்கை வழிமுறையை முதலில் மாற்றியாக வேண்டும். ஊரடங்கு சரி, இருந்தாலும் அதை நீண்ட நாட்கள் நீட்டிக்க முடியாது.
எனவே, பழைய காலத்தில் கூறியபடி, கை கால்களை கழுவ வேண்டும். நெருக்கமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் தள்ளியே நிற்க வேண்டும். சில நல்ல விஷயங்களை
கற்றுக்கொள்ள வேண்டும். இருமல்இ சளி இருந்தால் வீட்டில் இருக்க வேண்டும். புது இடங்களுக்கு செல்லக்கூடாது. முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் நல்ல பழக்கங்கள்இ
நல்ல பழக்கங்களை இனி நாம் கற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் பொது இடங்களில் கூடுவதை
தவிர்க்க வேண்டும். முக்கியமாக முதியோர்இ உடல்நிலை பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டும். மருந்து ஏதும் இல்லாத
நிலையில் சமூக விலகலே தீர்வாகும் என்று தமிழக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
கொரனோ வைரஸ் தாக்குதல் AIR FRANCE-KLMக்கு 200 மில்லியன் இழப்பு
சீனாவை கொரனோ வைரஸ் தாக்கியதை அடுத்து நெதர்லாந்து நாட்டின் KLM விமான நிறுவனம் மற்றும்
பிரான்ஸ் நாட்டின் AIR FRANCE ஆகிய விமான நிறுவனங்கள் தமது விமான பறப்புக்களை தடை செய்துள்ளன .
இந்த தடை எதிர் வரும் சித்திரை மாதம் வரை தொடரலாம் எனவும் ,அப்படி தொடர்ந்தால் தமக்கு 200 மில்லியன்
யூரோக்கள் நஷ்ட்டம் ஏற்படும் என அந்த நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது
இதன் அடிப்படையில், பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான இயக்க முடிவுகளில்
150 மில்லியன் முதல் 200 மில்லியன் யூரோக்கள் வரை இழக்க நேரிடும் என்று குழு எதிர்பார்க்கிறது.

கொரனோ வைரஸ் தாக்குதல் ஒரே நாளில் 115 பேர் பலி
கொரனோ வைரஸ் தாக்குதல் ஒரே நாளில் 115 பேர் பலி
சீனாவை தாயகமே கொண்டு பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி ஒரே நாளில் 115 பேர்
சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர் .
மேலும் ஒரே நாளில் 400 க்கு மேற்பட்டவர்கள்
இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .
அதனை தொடர்ந்து சுமார் 75,000.பேர் பாதிக்க பட்டு
சிகிச்சை பெற்று வருகின்றனர் .
இந்த நோயினை கட்டு படுத்த முடியாது
சீனா தடுமாறி வருகிறது
இந்த நோய் தாக்கத்தின் இறப்பு பல மில்லியன்
கணக்காக உள்ளதாக பிறிதொரு செய்தி வெளியிட்டுள்ளது .
எனினும் அதனை சீனா ஏற்க மருத்துவருகிறது
இந்த நோயானது சீனாவுக்குள் வெளியில் சுமார்
முப்பது நாடுகளில் பரவி உள்ளமை சுட்டி காட்ட தக்கது

கொரனோ வைரஸ் தாக்குதலில் 40 பேர் பலி -900 பேர் பாதிப்பு
கொரனோ வைரஸ் தாக்குதலில் 40 பேர் பலி -900 பேர் பாதிப்பு
சீனாவில் ஏற்பட்டுள்ள மர்ம அவைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 29 பேர் சீனாவில் பலி யாகியுள்ளனர் ,இந்த நோய்
தாக்கத்தினால் உலக நாடுகள் தழுவிய நிலையில் நாப்பது
பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 900 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த நோய் தாக்கம் உடைய 14 பேர் பிரிட்டன் வான் நிலையம் ஊடாக நாட்டுக்கு நுழைந்தவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது .
இந்த நோயானது பாம்ப்பில் இருந்து பரவியதாக தெரிவிக்க
படுகிறது ,சீனா நாட்டவர்கள் நாய் ,மற்றும் பாம்பு இறைச்சி
அதிகம் விரும்பி உண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

மர்ம வைரஸ் தாக்குதல் 17 பேர் பலி -500 பேர் பாதிப்பு
மர்ம வைரஸ் தாக்குதல் 17 பேர் பலி -500 பேர் பாதிப்பு
சீனாவில் தொடர்ந்துபரவி வரும் புதிய வகையான வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர்
.மேலும் இந்த நோய் தாக்கத்தின் காரணமாக சுமார் 500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தற்பொழுது மக்களை வெளியில் செல்ல வேண்டாம் எனவும்
,விமானங்கள் ல் ,கப்பல்கள்,ரயில்கள் ,பேரூந்து சேவைகள் அணைத்தும் தடை செய்ய பட்டுள்ளன .
இதனால் சுமார் 11 மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
போக்குவரத்துக்கள் முடங்கிய நிலையில் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
இந்த நோய் சீனா தாண்டி அமெரிக்கா வரை சுமார் 11 நாடுகளுக்கு பரவியுள்ளதாம் .
இதனை அடுத்து குறித்த நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் விமான நிலையங்களில் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

மர்ம வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி
மரம் வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி
தற்போது சீனாவில் புதியவகை மர்ம வைரஸ் ஒன்று பரவி வருகிறது,இந்த நோய் தாக்கத்தில் சிக்கி பல டசின் பேர் பலியாகியுள்ளனர் .
தற்போது இந்த வைரஸ் கொரோனா என அடையாளம் காணப்பட்டுள்ளது ,சீன ,காங்கொங் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகம் பரவி வருகிறது .
இந்த நோயை தடுக்கும் முயற்சிகளில் விஞானிகள் ஈடுபட்டு இந்த நோயை முதல் கட்டமாக கண்டு பிடித்துள்ளனர் .
எனினும் மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
இந்த நோய் மிக வேகமாக பரவி வருவதாகவும் ,மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது










