Posted in Uncategorized இலங்கை செய்திகள்

சிங்கள போலீசாரை வெட்டிய மர்ம நபர்

சிங்கள போலீசாரை வெட்டிய மர்ம நபர்

இலங்கையில் சிங்கள காவல்துறை சிப்பாய்கள் இருவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக

வெட்டியுள்ளார் ,இவரது இந்த வெட்டு தாக்குதலில் சிக்கி படுக்கையமடைந்த இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

மேற்படி குற்ற செயலை புரிந்த அப்பர் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    தம்பியை வெட்டி கொன்ற அண்ணா

    தம்பியை வெட்டி கொன்ற அண்ணா

    குடும்பத் தகராறு காரணமாக தனது உடன்பிறந்த தம்பியை, மூத்த சகோதரர் ஒருவர், கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் மாத்தளை- களுதாவளை பிரதேசத்தில் நேற்று (12) இரவு பதிவாகியுள்ளது.

    இவ்வாறு உயிரிழந்தவர் களுதாவளை- திக்கிரியவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஸ்டீவன் ராஜ் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    அத்துடன் இக்கொலையுடன் தொடர்புடைய மூத்த சகோதரனும் மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

    உயிரிழந்த இளைஞனுக்கு இம்மாதம் 21ஆம் திகதி திருமணம் நடைபெறவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

      Posted in Uncategorized

      பெண் வெட்டிப் படுகொலை

      பெண் வெட்டிப் படுகொலை

      பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய சீன் தோட்டத்தில் தனிப்பட்ட குரோதம் காரணமாக. பெண்ணொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

      இச்சம்பவத்தில் 2 பிள்ளைகளின் தாயான 42 வயதுடைய பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளாரென பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

      இக்கொலைச் சம்பவம் தொடர்பில், கொலையுண்ட பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 25

      வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென தெரிவித்துள்ள பொலிஸார், கொலையுண்ட பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில் புரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

      வேட்டியொன்றில் முகத்தைக் கட்டி, சரமாரியாக கத்தியால் வெட்டி இக்கெலையை

      செய்துள்ளதாகவும், சடலம் பிரேத பரிசொதனைக்காக நுவெரெலியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

        Posted in இலங்கை செய்திகள்

        ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்

        ஒருவர் வெட்டிக்கொலை – விசாரணையில் பொலிஸ்

        மத்துக பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் இருவருக்கு

        இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

        77 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        சம்பவத்தையடுத்து, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மத்துகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

        Posted in உலக செய்திகள்

        ஜேர்மனியில் மக்களை கத்தியால் வெட்டிய மர்ம நபர்

        ஜெர்மனி நாட்டில் உள்ள ஓபர்க‌ஷன் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்க தொடங்கினார்.

        இதில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் பலரை அவர் கத்தியால் குத்துவதற்கு முயன்றார். அவரை சிலர் தாக்கினார்கள்.

        இதனால் மேலும் அவரால் தாக்குதல் நடத்த முடியவில்லை.

        இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

        காயம் அடைந்த 5 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்கள். அதில் ஒருவருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

        கத்தியால் குத்திய வாலிபருக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது. அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வாலிபர் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை.

        குடும்ப பிரச்சனையில் மன உளைச்சல் ஏற்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக

        முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் பற்றிய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

        Posted in இலங்கை செய்திகள்

        வாலிபன் துடி துடிக்க வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்

        வாலிபன் துடி துடிக்க வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்

        இலங்கை ஏறாவூர் செங்கலடி பகுதியில் இருப்பத்தி ஐந்து வயதுடைய

        வாலிபர் ஒருவர் துடி துடிக்க வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்,இருவருக்கு

        இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி இந்த கத்தி வெட்டு தாக்குதல் படு கொலையில் முடிந்துள்ளது


        சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியாகியுள்ளார்
        கொலையாளி கைது செய்யப்பட்து விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்

        Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

        மனைவியை அடித்து வெட்டி கொன்ற கணவன் தற்கொலை -தவிக்கும் பிள்ளைகள்

        மனைவியை அடித்து வெட்டி கொன்ற கணவன் தற்கொலை -தவிக்கும் பிள்ளைகள்

        இலங்கை கல்பிட்டி பகுதியில் கணவன் மனைவிக்குள் இடம்பெற்ற குடும்ப சண்டை காரணமாக மனைவியை அடித்து கணவன் வெட்டி கொன்றுள்ளார்

        இவர்களுக்கு 17 வயதுடைய மகன் மேலும் அதன் கீழாக இருவர் உள்ளனர்

        மனைவியை கொன்ற கணவன் தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார் ,

        மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பிள்ளைகள் பெற்றவர்களை இழந்து கண்ணீரில் தவிக்கின்றனர்

        கோபம் செய்த பாவம் , ஒரு குடும்பம் சீரழிந்து போனது ,விட்டு கொடுப்பும்

        சகிப்பு தன்மை இழந்து போவதால் இந்த விடயங்கள் ஏற்படுகின்றன என்பதே யதார்த்தமாக உள்ளது

        மனைவியை அடித்து
        மனைவியை அடித்து