சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது
Posted in இலங்கை செய்திகள்

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது

நிலவும் சீரற்ற வானிலையால் சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

மழை யுடன் கூடிய வானிலையுடன் மரக்கறி பயிர்கள் அழிவடைந்துள்ளமையினால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலை தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் உயரலாம் என மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் அஜித் களுதரகே தெரிவித்தார்.

இதேவேளை, இந்நாட்களில் மீன் விலையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாததனால் மீன்களின் விலை உயர்வடைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வர்த்தக மன்றத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி தெரிவித்தார்.

வீழ்ந்து போன இலங்கையின் பொருளாதாரம் மீள தற்போது முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவிக்க பட்ட நிலையில் ,தற்போது மீளவும் அதி உச்சம் பெற்று வரும் விலை வாசிகள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .

சந்திகளில் காய்கறிகள் விலைவாசி மீளவும் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் மீளவும் கொதி நிலை ஏற்படுத்தியுள்ளது .

விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்
Posted in இலங்கை செய்திகள்

விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்

விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்

சாப்பாட்டு விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர் ,நீர்கொழும்பு பீச்சில் தவகரன் ,சங்கவி யூட்டுபருக்கு நடந்த சங்கடமான செயல் .

நமது அன்பு நண்பர்கள் thavakaran view youtuber நீர் கொழும்பில் மிக பிரபலமான பீச்சுக்கு காணொளி பாதிவாக்க சென்றிறுந்தனர்

அப்பொழுது அங்கே பல கடைகள் காணப்பட்டன .இந்த கடைகளில் அழகிய பொருட்கள் காணப்பட்டுள்ளன .அப்பொழுது அந்த பொருள்களின் விலையை அந்த thavakaran view youtuber கேட்டுள்ளார் .

thavakaran view யூடுப்பரை கெட்ட வார்த்தையால் பேசிய கடைக்காரர்

அதற்கு அந்த உணவாக கடைக்காரரோ விலையினை கேட்காதே விரும்பினால் வாங்கி போ என,தரம் கெட்ட நிலையில் thavakaran view ,சங்கவி ஆகிய வடிக்கையாளாருக்கு பேசுகிறார் .

எமது கடைக்கு தேடி வருபவர்களிடம் எப்படி பேச வேண்டும் என தெரியாத விழிப்புணர்வு அற்ற நிலையில், இலங்கையில் வர்த்தக நிலையங்கள் ,உணவகங்கள் இயங்குகின்றன என்பதற்கு இவை சான்றாக உள்ளது .

அருவருப்பான சம்பவங்கள்

இரண்டு மாதத்தில் இலங்கையில் இவ்வாறான அருவருப்பான சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன .

இதனை பாராளுமன்ற உறுப்பினர்கள் ,மாநகரசபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து செயல்பட்டதாக தெரியவரவில்லை .

இலங்கையை தேடி வரும் உல்லாச பயணிகள் ,மற்றும் உள்ளூர் மக்களிடம் இவ்வாறு தரம் தாழ்ந்த நிலையில் செயல் படும் ,இவ்வாறான கடை காரர்கள் கைது செய்யப்படல் வேண்டும் .

அத்துடன் இவர்களுக்கு உயர் வார்தாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த பட்டு அதில் .எவ்விதம் வாடிகையாளர்களுடன் உரையாட வேண்டும் என்ற விடயத்தை கற்று கொடுக்க வேண்டும், என்பதே நமது வேண்டுதல் .

thavakaran view போன்ற யூடுப்பர்கள் உங்கள் காடைகளை காணொளி பிடித்து வெளியிட்டால், அதனை பார்க்கும் மக்கள் உங்கள் கடை தேடி வருவார்கள் .

எனவே இதனை உங்களுக்கான விளம்பரமாக பார்க்க வேண்டும் .அதனை விடுத்தது இவ்வாறு நாகரிகமற்ற முறையில் செயல்படுவது கண்டிக்க தக்கது .

வீடியோ

எரிபொருள் விலைகளைக் குறைத்தது
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு

எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு

எரிபொருள் விலைகளைக் குறைத்த அரசு ,இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத்

திருத்தத்துடன் இணைந்து, சினோபெக் எனர்ஜி லங்கா இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய சில்லறை விலை ரூ. 365 ஆகும். 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய சில்லறை விலை ரூ. 420 ஆகவுள்ளது.

ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் ரூ. 27 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய விலை ரூ. 333 ஆகும். இதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய சில்லறை விலை ரூ. 377 ஆகவுள்ளது.

தேர்தல் நிகழ்த்த படவுள்ளதை அடுத்து தற்போது ,ஆளும் அரசு பொருட்களின் விலைகள் முதல் யாவும் குறைப்பு செய்து வருகிறது குறிப்பிட தக்கது .

செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் விலையை 55 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

எரிபொருள் விலையை 55 ரூபாவால் குறைக்க நடவடிக்கை

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருளின் விலை சூத்திரம் தொடர்பில் உரியவர்களை அழைத்து கேட்டறிந்துகொண்டதன் பின்னர் விலையை மேலும் குறைக்கத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

2024 மார்ச் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் மின்சார கட்டணத்தை 21.9% இனால் குறைக்க முடிந்தது. 30 அலகுகளுக்கு குறைவான மின் பாவனையாளர்களின் மின் அலகு ஒன்றுக்கான விலை 33% இனால் குறைக்கப்பட்டுள்ளது. 31 – 60 அலகுகளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு அலகு ஒன்றுக்கு 28% இனால் கட்டணம் குறைந்துள்ளது. 60 – 90 அலகுளுக்கு இடையிலான பாவனையாளர்களுக்கு 30% கடடண குறைப்புச் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 – 180 இடையிலான பாவனையாளர்களுக்கு 24% இனால் கட்டண குறைப்புச் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், 180 அலகுகளுக்கு மேலான வீட்டு பாவனையாளர்களுக்கு 18% கட்டண குறைப்பும் வழிபாட்டுத் தலங்களுக்கு 33% கட்டண குறைப்பும் ஹோட்டல் மற்றும் தொழில்துறை துறைகளுக்கு 18% கட்டண குறைப்பும் அரச துறைக்கு 23% கட்டண குறைப்பும் தனியார் துறைக்கு 22% கட்டண குறைப்பும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அதற்கு நிகராக உணவு விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குரியாக உள்ளது. பொது சேவைகளில் ஈடுபடுவோரால் மக்களுக்கு பெருமளவான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் . அதனை மின்சார சபையோ அல்லது அமைச்சுக்களோ செய்ய முடியாது என்பதே எனது நிலைப்பாடாகும்.

மேலும், அண்மைக் காலமாக கிடைத்த பெரும் மழைவீழ்ச்சியின் காரணமாக, மின் உற்பத்தி செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை குறைந்துள்ளது. அதன் பலனாக 2022 ஆம் ஆண்டின் 270 பில்லியன் ரூபா இழப்பீட்டையும் அதனால் சரிசெய்ய முடிந்தது. இருப்பினும் இருள் யுகத்தில் கிடந்த நாடு பொருளாதார முன்னேற்றம் கண்டு வருவதன் பலனாகவே மின்சார கட்டணத்தை குறைக்க முடிந்துள்ளது.

அதனால் மின்சார உற்பத்திச் செலவு பெருமளவில் குறைவடைந்துள்ளதோடு, அதேபோலு மூன்றிலக்க பெறுமதியாக காணப்பட்ட வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளமையும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.

மேலும், இந்திய கடனின் கீழ் பெறப்பட்ட 100 மில்லியன் டொலர்களில் முதல் பகுதியைக் கொண்டு, பாடசாலைகள், பாதுகாப்பு முகாம்கள், பல்கலைக்கழகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் மின்சாரம் பெறுவதற்கு சூரிய சக்தி படலங்களை வழங்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மின் கட்டணத்தை மேலும் குறைக்க, தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் அல்லது தற்போது அதிக விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதை விடுத்து குறைந்த செலவிலான மாற்று முயற்சிகளுக்கு செல்ல வேண்டும்.

2025 ஆம் ஆண்டில் சியாம்பலாண்டுவ மின் உற்பத்தித் திட்டத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் நூறு மெகாவோட் மின்சாரத்தை 25 – 26 ரூபாய்க்கு பெற்றுகொள்ள முடியும். இதேபோன்ற பல பாரிய மின் உற்பத்தி திட்டங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதற்காக ஏராளமான முதலீட்டாளர்கள் எம்மோடு இணைந்துகொண்டுள்ளனர்.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புதிய முதலீட்டாளர்களுக்காக 10 காற்றாலை மற்றும் சூரிய ஒளி திட்டங்கள் திறக்கப்பட்டுள்ளன. மன்னார் பகுதியை மையமாக கொண்டு 50 மெகாவாட் காற்றாலைக்கான விலைமனு அடுத்த வாரம் கோரப்படும்.

மேலும் உரியவர்களுடன் கலந்துரையாடி எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலையினையும் மேலும் குறைக்க எதிர்பார்க்கிறோம். “இது ஒரு குழுவாகப் பார்த்து செய்யப்படும் காரியம் அல்ல. விலைச் சூத்திரத்தில் செலவுகளைக் காட்டுவதற்காக மட்டுமே இது செய்யப்படுகிறது. VAT சேர்க்காவிட்டால் ஒரு லீற்றர் எரிபொருளை 50 – 55 ரூபாய் வரை குறைக்கலாம்.”

அத்துடன், மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி, புதிய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மாற்றங்களை உரிய தரப்பினரும், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினரும் சுட்டிக்காட்டியிருந்தனர். இது தொடர்பான 46 திருத்தங்களுடன் கூடிய சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அமைச்சரவை அங்கீகாரத்துடன் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பிக்க முடியும்” என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிற்றுண்டிகளின் விலை குறைகின்றது
Posted in இலங்கை செய்திகள்

சிற்றுண்டிகளின் விலை குறைகின்றது

சிற்றுண்டிகளின் விலை குறைகின்றது

மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன.

அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

சினோபெக் நிறுவனமும் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 368 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றரின் புதிய விலை 456 ரூபாவாகவும் விலையை அதிகரித்துள்ளது.

ஒரு லீற்றர் ஆட்டோ டீசல் 360 ரூபாவாகவும், ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 468 ரூபாவாகவும் விலையை அதிகரித்துள்ளது.

லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன

லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன லெபனான் நகரில் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலால் வீடுகள் சேதமடைந்தன ,சனிக்கிழமை அதிகாலையில் அல்-மன்சூரி நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் …
செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது

செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது ,செம்மணி கூட்டுப் …
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா, பொலிஸ் பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரலாகப் பதவி உயர்வு …
துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்

துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டதை அடுத்து, கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை அறிமுகப்படுத்துவதாக தாய்லாந்து பிரதமர் உறுதியளித்துள்ளார். பாங்காக்கின் புறநகர்ப் பகுதியில் …
லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது

லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது லங்கா சதோசா இன்று முதல் …
ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா

ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா ஹோர்முஸ் ஜலசந்தி குறித்து விரைவில் ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது; பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சன்னி …
லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை
Posted in இலங்கை செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலையை அதிகரிக்க லாஃப்ஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் புதிய விலை 4,740 ரூபாவாகும்.

அத்துடன், 05 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 305 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,900 ரூபாவாகும்

வீடியோ

வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு

வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு

வரலாற்றில் முதன்முறையாக மரக்கறிகளின் விலை அதிகளவிற்கு அதிகரித்த போதிலும் விவசாயிகளுக்கு எவ்வித இலாபமும் கிடைக்கவில்லை என நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும்

முன்னாள் தலைவருமான அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார நிலையத்தின் தற்போதைய புரவலர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு விவசாய சமூகம் மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாட்டை இன்று (01) காலை நுவரெலியா பொருளாதார நிலையத்தில் வைத்து அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவித்த நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர்,

பொருளாதார மையத்தில் இன்றைய மொத்த விற்பனை விலை கேரட் கிலோ 750 ரூபாய், பீட்ரூட் கிலோ 360-380 ரூபாய், முட்டைகோஸ் கிலோ 500 ரூபாய், வெண்டைக்காய் கிலோ 250-270 ரூபாய், பீன்ஸ் கிலோ 600-650 ரூபாய், 600. -ஒரு கிலோ தக்காளி, மற்றும் பச்சை மிளகாய் 700 ரூபாய்.கிலோ 1,600-1,800 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது.

வரலாறு காணாத வகையில் மரக்கறிகளின் விலை உயர்வு

வரலாற்றில் இல்லாத அளவுக்கு தற்போதைய காய்கறி விலை உயர்ந்துள்ளது என்று குறிப்பிடலாம்.

காய்கறிகளின் விலை உயர்ந்தாலும், கடந்த காலம் முழுவதும் பெய்த கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன.

கடந்த ஆண்டுகளில் இந்த பருவத்தில் 100 கிலோ காய்கறிகளை சேமித்த விவசாயிகள், இந்த ஆண்டு பத்து கிலோ காய்கறிகளை மட்டுமே சேமித்துள்ளனர்.

100 கிலோ காய்கறிகளை 100 ரூபாய்க்கு விற்றபோது 10,000 ரூபாய் கிடைத்தது. இம்முறை 300 க்கு 10 கிலோவுக்கு 3,000 ரூபா கிடைத்துள்ளது.

விலை உயர்ந்துள்ளதால், காய்கறி சாகுபடிக்கு கிடைத்ததை விட, மூன்று மடங்கு அதிகமாக செலவு செய்ததால், லாபம் இல்லை.

2023ஆம் ஆண்டைப் போல அல்லாமல், 2024ஆம் ஆண்டை முறையான திட்டத்தின்படி செயல்படுத்த வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

இதற்கு, 2025 ஆம் ஆண்டை விவசாயிகளுக்கு நல்ல ஆண்டாக மாற்ற, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த அரசின் ஆதரவை பெற வேண்டும், என்றார்.

நுவரெலியா மத்திய சந்தையில் மலையக மரக்கறிகளின் சில்லறை விற்பனை தொடர்பில் நாம் மேற்கொண்ட விசாரணையின் போது, ​​பொருளாதார நிலையத்தின் மொத்த விலையை விட 50% அதிக விலைக்கு சில்லறை மரக்கறிகள் விற்பனை செய்யப்படுவதாக அறிந்தோம்.

கடந்த ஆண்டுகளில் புத்தாண்டைக் கொண்டாட நுகர்வோர்கள் கிலோ கணக்கில் காய்கறிகளை எடுத்துச் சென்றதுடன், தற்போது காய்கறிகளின் சில்லறை விலை உயர்வால் 250 கிராமாக குறைந்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வீடியோ

ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளன.

இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்தியமைத்துள்ளது.

அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றில் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

ஐஓசி சினோபெக் எரிபொருட்களின் விலைகளும் உயர்வு

இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 366 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 426 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விரை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 464 ரூபாவாகும்.

இதேவேளை, 329 ரூபாயக காணப்பட்ட ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 29 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 358 ரூபாவாகும்.

434 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் ​குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 236 ரூபாவாகும்.

வீடியோ

சீன எரிபொருள் குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருட்களின் விலைகுறைக்கப் பட்டுள்ளது

எரிபொருட்களின் விலைகுறைக்கப் பட்டுள்ளது

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலைகுறைக்கப் பட்டுள்ளது

ஒடோ டீசல் 27 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 329 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் 02 ரூபாவால் குறைவடைந்துள்ளதுடன், அதன் புதிய விலை 247 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முட்டைக்கு தீர்வு
Posted in இலங்கை செய்திகள்

முட்டை விலையில் அதிகரிப்பு

முட்டை விலையில் அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தில் முட்டை விலையில் அதிகரிப்பு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், கோழி இறைச்சியின் விலையை அதிகரிக்க வர்த்தகர்கள் முயற்சித்தால் அதற்கு கட்டுப்பாட்டு விலையை விதிக்கவுள்ளதாக தெரிவித்தார்

வீடியோ

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது, சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உணவுப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

சீனியின் விலை அதிகரிப்பு காரணமாக பிளேன் டீ விலை 5 ரூபாவினாலும் பால் தேனீர் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அரிசி, மரக்கறிகள், கோழி இறைச்சி மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக சாப்பாட்டு பொதி ஒன்றின் விலை 20 ரூபாவினாலும், கொத்து மற்றும் ஃப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிபெட்கோ எரிபொருள் விலை இன்று (01) நள்ளிரவு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாவாகும்.

லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீடியோ

மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

விலைகள் மேலதிக நடவடிக்கை வேண்டும்

விலைகள் மேலதிக நடவடிக்கை வேண்டும்

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களின் விலை தொடர்பில் உரிய தரப்பினர்கள் அறிவுறுத்தல்களை செவி சாய்க்காவிட்டால் மேலதிக நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியும் இதுவரை எழுத்து மூலமான உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் ஒரு கப் பால் தேனீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவது தொடர்பில் அரசாங்க அதிபரை செவ்வாய்க்கிழமை (22) தொடர்பு கொண்டு வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விலைகள் மேலதிக நடவடிக்கை வேண்டும்

அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிற்றுண்டி உரிமையாளர்கள் வர்த்தக சங்கத்தினர் உணவகத்தினர் மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்கள் சார்ந்தவர்களுடனான உயர் மட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் உணவு பண்டங்களின் மாறுபட்ட விலைகள் தொடர்பில் பேசப்பட்ட நிலையில் உணவக உரிமையாளர்கள் தமக்குள்ளே ஒரு சங்கமாக இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி விலைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு அறியத் தருமாறு கூறினேன். அதற்கான கால எல்லையும் முடிவடைந்த நிலையில் பதில் தரவில்லை.

நல்லூர் சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரை சம்பவம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிடுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்” என்றார்.

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் விலை குறைப்பு

கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் விலை குறைப்பு

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை 10% குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி 700 ரூபாவாக இருந்த கொத்து ரொட்டியின் விலை 70 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1000 ரூபாயாக காணப்பட்ட கொத்து ரொட்டியின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி

மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி

தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (30) மரக்கறி வகைகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளது.

கோவா ஒரு கிலோவின் மொத்த விலை ரூபாய். 25 முதல் 35 வரை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஞ்சி ஒரு கிலோ மொத்த விலை ரூபாய் 300 முதல் 350 வரை குறைவடைந்துள்ளதுடன்,
லீக்ஸ் மற்றும் கெரட் ஆகியவற்றின் மொத்த விலை ரூபாய் 90 முதல் 150 வரை குறைந்துள்ளது

No posts found.
அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள்

குறித்தும் கண்டறிய விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் நுகர்வோர் சேவை அதிகாரிகள், பிரதேச மட்டதில் வியாபாரிகளுக்கு அறிவித்தல் வழங்கி, பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாகவும், பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது

தொடர்பாகவும் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஷான்த கிரிஎல்ல குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் முதல் இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி,
சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No posts found.
காஸ் சிலிண்டர்
Posted in இலங்கை செய்திகள்

சமையல் எரிவாயு விலை குறைப்பு

சமையல் எரிவாயு விலை குறைப்பு

சமையல் எரிவாயு விலை, நாளை (08) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.


புதிய விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் ஒப்புதலுக்காக திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மாலை புதிய விலை குறித்து அறிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

விலை திருத்தத்தின் போது எரிவாயு சிலிண்டர்களின் விலையில் குறைவு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை, திறைசேரி மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி, புதிய விலை திருத்தம் செய்யப்படுகிறது.

சமையல் எரிவாயு விலை குறைப்பு

அந்த சூத்திரத்தின் அடிப்படையிலேயே நாளை நள்ளிரவு முதல் நடைமுறைக்கும் வரும் வகையில் விலை திருத்தத்தை மேற்கொள்வோம் என்று முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “லிட்ரோ நிறுவனத்தை நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனினும், தற்போது லிட்ரோ நியாயமான இலாபத்தை ஈட்டுகிறது.

“கடந்த 22 நாட்களில் 2.87 மில்லியன் 12.5 கிலோகிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை லிட்ரோ லங்கா வழங்க முடிந்தது” என்றார்.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிப்பு

    இலங்கையில் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிப்பு

    இலங்கை ,கொழும்பு ; இலங்கையில் இன்று முதல் ரயில்வே கட்டணங்கள் விலை அதிகரிக்க பட்டுள்ளது .இந்த திடீ ரயில் விலை அதிகரிப்பால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்.

    இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சி பீடம் ஏறிய நிலையில் அதிகரிக்க பட்டுள்ள ரயில்வே விலை கட்டணங்கள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாள் தோறும் இலங்கையில் விலைவாசி அதிகரித்து செல்கிறது .ஆனால் மக்களோ தமது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    மக்கள் வாழ்வியலை மீட்டு இயல்பு நிலைக்கு எடுத்து செல்லும் நடைமுறை திட்டம் ஏதும் இலங்கை ஆளும் அரசுகளிடம் காணப்படவில்லை என்கிறது மக்கள் மன்றம் .

    தமது அரசியல் அதிகார போதையில் மிதக்கும் ரணில் விக்கிரமசிங்க மக்கள் வாழ்வியலை மேம்படுத்த ஏதும் செய்திடாது விலை உயர்வை அதிகரித்து செல்கிறது என்கிறது மக்கள் கருத்தாக உள்ளது .

      Posted in இலங்கை செய்திகள்

      பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு

      பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு

      பாடசாலை பைகள் விலை தற்போது அதிகரிக்க பட்டுள்ளது


      நடடில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக
      பாடசாலை பைகள் விளையும் தற்போது அதிகரிக்க பட்டுள்ளது

      பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,


      பாடசாலை செல்லு மாணவர்கள் பைகள் மூலம் தமது பாடசாலை உபகரணங்களை எடுத்து செல்கின்றனர்

      இந்த பாடசாலை பைகள் விலை அதிகரிப்பு மாணவர்கள் பாடசாலைக்கு செல்லும்
      விகிதத்தை குறைவடைய செய்யலாம் என அஞ்ச படுகிறது