Tag: விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ்
விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளிவர காத்திருக்கும் கடைசி விவசாயி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’.
விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர்
முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படங்களில் கடைசி விவசாயி படமும் சேரும். இந்த படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகிவிட்டது.
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்களின் ரிலீஸ் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை
ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை
பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, சீனியர் கலைஞன் ஜனகராஜிற்காக ஒரு படத்தில் நடித்து கொடுத்து இருக்கிறார்.
ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை
விஜய் சேதுபதி – ஜனகராஜ்
ஜே.பி.ஜே.பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயசீலன் தயாரித்துள்ள படம் “ஒபாமா”. இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்நிஷா
நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா,
தயாரிப்பாளர் டி.சிவா, தளபதி தினேஷ், கோதண்டம், கயல் தேவராஜ், செம்புலி ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
இப்படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சமூகம் சார்ந்த கருத்துக்களை காதல், காமெடி கலந்து ஜனரஞ்சகமாக
உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க உறுதி அளித்து இருந்தார், ஆனால் அவர் ஷூட்டிங் நேரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால்
நான் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டேன் அதை பார்த்த நடிகர் ஜனகராஜ், என்னிடம் வந்து இரு குட்டி நான் ஒரு முயற்சி செய்கிறேன் என்றார். பின் அவர் 96 படத்தின் டைரக்டர் பிரேம்
அவர்களிடம் இந்த மாதிரியான படம் விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பாரா என்று கேட்க, அவரும் உங்களுக்காக கேட்டு பார்க்கறேன் என்றார். அதை கேட்டு அவரும் அண்ணனுக்காக நடித்து
கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். இதை அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை. அவரை கேட்டால் நடிப்பார் என்று எப்படி தோன்றியது என்று ஜனகராஜிடம் கேட்டேன்? அதற்கு
ஜனகராஜ் அவரோடு பழகிய போது தெரிந்தது என்றார். அது சீனியர் ஒருவருக்கான மரியாதை, தொழிலுக்கு காட்டும் நன்றி தான் அதற்கு காரணம் என்றார்.
ஜனகராஜ்
ஜனகராஜ் – பிரித்வி பாண்டியராஜ்
உடனே நான் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை நேரில் சந்தித்து டிஸ்கஷன் செய்தேன், பிறகு நடித்து கொடுத்தார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் ஆண்பாவம் படம் முதல் உதவி
இயக்குனராக பணியாற்றி வருகிறேன். பலரையும் கண்டு இருக்கிறேன். ஆனால் மக்கள் செல்வன் பட்டத்திற்கு ஏற்ற மனிதர் தான் விஜய் சேதுபதி’ என்றார்.
விஜய் சேதுபதிக்கு சம்மன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய் சேதுபதிக்கு சம்மன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு, நடிகர் மகா காந்தி என்பவர் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதிக்கு சம்மன் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய் சேதுபதி
சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மகாகாந்தி. நடிகரான இவர், சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,
நான், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்ல கடந்த நவம்பர் மாதம் 2-ந்தேதி இரவு பெங்களூரு விமான நிலையம் சென்றேன். அங்கு எதிர்பாராதவிதமாக நடிகர் விஜய்சேதுபதியை
சந்தித்தேன். திரைத்துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவிக்க சென்றேன்.
ஆனால் எனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த அவர், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், என்னையும், எனது சாதி பற்றியும் தவறாக பேசினார்.
விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய என் மீது அவருடைய மேலாளர் ஜான்சன் தாக்கியதுடன், காதில் அறைந்தார். இதில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக
டாக்டர்கள் தெரிவித்தனர். உண்மை இவ்வாறு இருக்க மறுநாள், தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள். திரைத்துறையில் உள்ள சக
நடிகரை பாராட்ட சென்ற என்னை தாக்கியதுடன், அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய
நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
விஜய் சேதுபதி
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி ஜனவரி 4ல் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.
விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் கைது
விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் கைது
நடிகர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபரை கைது செய்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள வாலிபர் கைது
விஜய் சேதுபதி – விமான நிலையத்தில் விஜய் சேதுபதியை வாலிபர் தாக்க முயன்ற காட்சி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானத்தில் சென்றார்.
விமான நிலையத்தில் அவரும், உதவியாளரும் சென்றபோது, வாலிபர் ஒருவர் திடீரென அவரை தாக்க முயன்றார். உடனே விஜய் சேதுபதியின் பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அந்த வாலிபரை பாய்ந்து சென்று பிடித்தனர்.
பின்னர் அவர்கள் விஜய் சேதுபதியை அங்கிருந்து மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
அவர் போலீசாரிடம் கூறும்போது, விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை கண்டதும் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பியதாகவும், தான் குடிபோதையில் இருந்ததால், அதற்கு உதவியாளர் மறுத்ததாகவும் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய்சேதுபதியின் உதவியாளரை தாக்க முயன்றதாகவும் கூறினார்.
மேலும் அந்த வாலிபர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.
இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். சிறிது நேரத்தில் அந்த வீடியோ வைரலானது. அதனை பார்த்தவர்கள் விஜய் சேதுபதியை வாலிபர் தாக்கியது ஏன்? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்றும் கேள்விகள் எழுப்பினர்.
இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வாலிபர் தாக்க முயன்ற வீடியோ உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
அதன்படி பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற வாலிபரை கண்டுபிடித்தனர். அவர் கேரளாவைச் சேர்ந்த ஜான்சன் என தெரியவந்தது. தற்போது பெங்களூருவில் வசித்து வரும் ஜான்சன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி
புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி, மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார்.
புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்திய விஜய் சேதுபதி
புனித் ராஜ்குமார் சமாதியில் விஜய் சேதுபதி
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்
மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள்,
திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.
இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன்பின் நடிகர்கள் பிரபு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி
செலுத்தினார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருக்கிறார். மேலும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து இருக்கிறார்.
விஜய்சேதுபதி மீது தாக்குதல் video
விஜய்சேதுபதி மீது தாக்குதல் video
முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மீது பெங்களூரு விமானநிலையத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பெங்களூரு விமான நிலையத்தில் விஜய்சேதுபதி மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் சூப்பர் டீலக்ஸ்
படத்திற்காக டெல்லி சென்று தேசிய விருது பெற்றார். அதன்பின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில் படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்றிருக்கிறார் விஜய் சேதுபதி. அங்கு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விஜய்
சேதுபதியை ஒருவர் தாக்க வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி
சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, இந்தியில் மும்பைகார், மெரி கிறிஸ்துமஸ், காந்தி டாக்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சல்மான் கான் நடிக்க மறுத்த படத்தில் ஒப்பந்தமான விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி, சல்மான் கான்
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘அந்தாதூன்’. 3 தேசிய விருதுகளை வென்ற இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருந்தார். இவர் இயக்கத்தில்
அடுத்ததாக உருவாகும் படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானை மனதில் வைத்து தான் இந்தப் படத்தின் கதையை இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் எழுதியிருந்தாராம். கதை சல்மான் கானுக்கு பிடித்திருந்தாலும், படத்தில்
கமர்ஷியல் அம்சங்கள் குறைவாக இருந்ததால் அவர் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தான் அந்த வாய்ப்பு நடிகர் விஜய் சேதுபதிக்கு சென்றதாம்.
இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி
இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக இந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை
விஜய் சேதுபதி
கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது இந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ்
மற்றும் டீகே இணைந்து இயக்குகின்றனர். இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரும் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று
வருகிறது. இந்த வெப் தொடரில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷி கண்ணா நடிக்கிறார்.
அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல தமிழ் நடிகை
ரெஜினா கசன்ட்ரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை ரெஜினா நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். நடிகர் விஜய் சேதுபதியும், ரெஜினாவும் ஏற்கனவே ‘முகிழ்’ என்கிற தமிழ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி
மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
மகளாக நடித்த நடிகையுடன் ஜோடி சேர மறுத்த விஜய் சேதுபதி?
விஜய் சேதுபதி
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கில் வில்லனாக அறிமுகமான படம் உப்பென்னா.
இப்படத்தில் நாயகி கீர்த்தி ஷெட்டிக்கு தந்தையாகவும், கொடூர வில்லனாகவும் மிரட்டி இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்தன.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் நடிக்க உள்ள புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்துள்ளது. இதை அறிந்த விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.
ஏனெனில் தனக்கு மகளாக நடித்த நடிகையுடன் ஜோடியாக நடிப்பதை அவர் விரும்பவில்லையாம். இதையடுத்து வேறு
நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். விஜய் சேதுபதியின் இந்த முடிவு திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே மாதத்தில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்
ஒரே மாதத்தில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
ஒரே மாதத்தில் ரிலீசாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்
விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடித்துள்ள துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளன.
இதில் துக்ளக் தர்பார், லாபம், கடைசி விவசாயி, அனபெல் சேதுபதி ஆகிய 4 படங்கள் ஒரே மாதத்தில் ரிலீசாக உள்ளன.
அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் செப் 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. மறுதினமே இப்படம் ஓடிடி-யிலும் வெளியாக உள்ளது.
போஸ்டர்கள்
இதுதவிர விஜய் சேதுபதி, டாப்சி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அனபெல் சேதுபதி’ திரைப்படம் வருகிற செப் 17-ந் தேதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ திரைப்படத்தையும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணம் ஆகிவிட்டதா… ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதி
திருமணம் ஆகிவிட்டதா… ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
திருமணம் ஆகிவிட்டதா… ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்த ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதி ஹாசன், Shruti Haasan
கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் மும்பையில் தற்போது வசித்து வருகிறார். நடிகையும், பாடகியான இவர், சமீபத்தில் தெலுங்கில் வெளியாகியிருந்த ‘கிராக்’ திரைப்படத்தில், நடிகர் ரவி
தேஜாவுடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து இருக்கிறார்.
ஸ்ருதி ஹாசன்
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் லைவ் ஒன்றில் இருந்த ஸ்ருதிஹாசன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர், ‘திருமணம் செய்து கொண்டீர்களா?’ என கேள்வி கேட்டுள்ளார். இதற்கு ஸ்ருதிஹாசன், ‘இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.
ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி
ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி, தனது ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி, தலையில் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் உள்ளன. இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இவ்வாறு பிசியான நடிகராக வலம் வந்தாலும், ரசிகர்கள் மீது தீராத அன்பு கொண்டவர் விஜய் சேதுபதி. அவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.
விஜய் சேதுபதி
இந்நிலையில் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு விஜய் சேதுபதியிடம் கேட்டுள்ளார். அவரின் கோரிக்கையை ஏற்று அந்த ஆண் குழந்தைக்கு
துருவன் என பெயர் சூட்டியுள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அந்த ரசிகரின் குழந்தையைக் கொஞ்சி, தலையில் முத்தமிடும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது
நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது
நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது
67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு
தனுஷ், விஜய் சேதுபதி
67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சூப்பர் டீலக்ஸ்
படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், விஸ்வாசம் படத்திற்காக டி இமானுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பார்த்திபன், தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்த செருப்பு படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த
ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
.100 கோடி வசூல் – சாதனை படைத்த விஜய் சேதுபதி படம்
.100 கோடி வசூல் – சாதனை படைத்த விஜய் சேதுபதி படம்
தெலுங்கில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதி படம்
விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி,
தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந் தேதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா.
அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பலர், இந்தப் படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினர்.
டுவிட்டர் பதிவு
இந்நிலையில், உப்பென்னா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், உலகளாவிய மொத்த வசூலில் ‘உப்பென்னா
’ திரைப்படம் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
மாமனிதன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சீனு ராமசாமி
மாமனிதன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சீனு ராமசாமி
சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி
ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்
சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆனாலும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது.
விஜய் சேதுபதி, காயத்ரி
இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மாமனிதன் தலைப்பு ஏற்கனவே
தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை முறைப்படி யுவன் சங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே
மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில் வெளியாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
50 கோடி -வசூல் வேட்டையில் விஜய் சேதுபதி படம்
50 கோடி -வசூல் வேட்டையில் விஜய் சேதுபதி படம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந்
தெலுங்கில் வெளியான படம்
தேதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா. அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்
புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
உப்பென்னா பட போஸ்டர்
இந்நிலையில், உப்பென்னா படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது. அதன்படி இப்படம் மூன்று நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்.
சீமானை கிண்டலிடிக்கும் விஜய் சேதுபதி படம் – சர்ச்சையில் சிக்கியது
சீமானை கிண்டலிடிக்கும் விஜய் சேதுபதி படம் – சர்ச்சையில் சிக்கியது
விஜய் சேதுபதி படம் சர்ச்சைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.
விஜய் சேதுபதி பட சர்ச்சை – சீமானிடம் பேசிய பார்த்திபன்
விஜய் சேதுபதி
தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்
‘துக்ளக் தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஜனவரி 11-ம் தேதி ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் நாம் தமிழர் கட்சியினரைக் கடும் கோபத்துக்கு
ஆளாக்கியது. அதில் ‘ராசிமான்’ என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார் எனத் தெரிகிறது.
ஒரு காட்சியில் அந்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத்தான் கிண்டல் செய்துள்ளார்கள் எனக் கருதி, படக்குழுவினருக்கு நாம்
தமிழர் கட்சியினர் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே, இந்தச்
சர்ச்சை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் பேசியுள்ளார் பார்த்திபன்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:
பார்த்திபன்
“நண்பர் சீமானிடம் நேரடியாக ‘துக்ளக் தர்பார்’ குறித்து விளக்கமளித்துவிட்டேன். அவரும் பெருந்தன்மையாகப் பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று
வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடம் தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல
. (புதிய பாதை நமது) இருப்பினும் இடையறாது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடையப் போராடும் ‘நாம் தமிழர்’ தோழர்களின்
முயற்சிகளைக் கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே, உள்நோக்கமின்றி
நடந்த பெயர் பிரச்சினையை இயக்குநரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்”.
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி படத்தின் தடை நீக்கம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய் சேதுபதி படத்தின் தடை நீக்கம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி அதிரடி உத்தரவிடப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி படத்தின் தடை நீக்கம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
விஜய் சேதுபதி
இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி,
நடிகை காயத்ரி நடித்த ‘மாமனிதன்’ திரைப்படம் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில்
உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளனர். விரைவில் இத்திரைப்படம்
திரைக்கு வர உள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் மாமனிதன் திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் தாங்கள்
வாங்கியதாகவும் எனவே விநியோக உரிமை தங்களுக்குத் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டிருந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார்.
விஜய் சேதுபதி
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர்
யுவன்சங்கர்ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும் அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எனவே படத்தை வெளியிட
விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார்
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார்
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் – இலங்கை ஆசாமியை கைது செய்ய போலீசார் தீவிரம்
விஜய் சேதுபதி
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் 800 என்ற
தலைப்பில் திரைப்படம் தயாரிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன்
வேடத்தில் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் முத்தையா முரளிதரன் விஜய்சேதுபதிக்கு விடுத்த வேண்டுகோளில் 800 என்ற திரைப்படத்தில் நடிக்க வேண்டாம்
என்று கூறி இருந்தார். அதை ஏற்று விஜய்சேதுபதி 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக்கொண்டார்.
இதற்கிடையில் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை
மிரட்டல் விடுத்து, நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆபாச கருத்துகளை பதிவிட்டிருந்தார்.
விஜய் சேதுபதி
இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 3
சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கலகத்தை தூண்டுதல், ஆபாச கருத்து பதிவிடுதல்
மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் போன்ற 3 சட்டப்பிரிவுகளில் வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளி இலங்கையைச் சேர்ந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய இலங்கை
செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்
விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை- பொலிசார் குவிப்பு
விளம்பரத்தில் நடித்ததற்கு எதிர்ப்பு….. விஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை
ஆன்லைன் வர்த்தகத்தில் மளிகை பொருட்கள் வாங்கும் ‘மண்டி’ என்ற செயலியை அறிமுகப்படுத்தும் விளம்பரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்திருந்தார். இந்த விளம்பர படம் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வந்தது. இதனால் உள்ளூர் சிறு வணிகர்கள் வியாபாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ‘மண்டி’ விளம்பர படத்தில் நடித்த நடிகர் விஜய்சேதுபதியை கண்டித்து வணிகர்களும் நாடார் அமைப்பினரும் இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன்படி இன்று வளசரவாக்கத்தை அடுத்த ஆழ்வார்திருநகரில் உள்ள விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட வணிகர்கள் குவிந்தனர்.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி தலைமையில் திரண்ட வியாபாரிகள் விஜய் சேதுபதியை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். சில்லரை வணிகத்தை சீரழிக்காதே ஆன்லைன் வர்த்தகத்தை வளர்க்காதே என்று முழக்கமிட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், பொதுச்செயலாளர் சுந்தரேசன், பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் பாடி விஜயகுமார், சமத்துவ மக்கள் கட்சி சீதாலட்சுமி, துரைப்பாக்கம் வைகோ மைக்கேல்ராஜ், காளிபாண்டியன், மண்டலத் தலைவர் அருணாசலமூர்த்தி, ஜெயராமன், செந்தில் முருகன், எம்.பி. ரமேஷ், கோயம்பேடு ஜி.டி.ராஜசேகர், சீனிபாண்டியன் உள்பட ஏராளமானோர் பங்கேற்று கோஷம் எழுப்பினார்கள்.
விஜய் சேதுபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்ட வணிகர் சங்கத்தினர்
அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். விஜய் சேதுபதியின் அலுவலகம் அருகே யாரும் வராமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
முற்றுகை போராட்டத்தின் போது கொளத்தூர் ரவி கூறியதாவது:- ஆன்லைன் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நடிகர் விஜய்சேதுபதி மண்டி விளம்பரத்தில் நடித்ததை வன்மையாக கண்டிக்கிறோம். விஜய்சேதுபதி இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது. அந்த விளம்பரத்தில் இருந்து விலகும்வரை தொடர்ந்து போராட்டம் தமிழகம் முழுவதும் நடை பெறும்.
மத்திய-மாநில அரசுகள் ஆன்லைன் வர்த்தகத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும். இதனால் சிறு, குறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 21 லட்சம் வணிக குடும்பங்கள், தொழிலாளர்கள் வாழ்வு பெரிதும் பாதிப்படையும்.
இவ்வாறு அவர் கூறினார்.











