வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வந்து விடு

வந்து விடு

ஒத்தவரி நீயுரைத்தால்
ஓடினான் வருவேனே
பத்தடி தூரத்திலே
பார்த்துதான் நிற்பேனே

எட்டுமாத கருபோல
எடினான் சுமந்தேனே
ஆழ மனதில்
அடி பதியம் வைத்தேனே

கட்டுடைத்து பாயுதடி
காதல் வெள்ளம்
சொத்து வேணாண்டி
சொந்தமா வாவேண்டி

அப்பன் காசு வேணாண்டி
அவர் வேர்வை வேணாண்டி
முதுகெலும்பு உள்ளவனே
முதுகிலுனை சுமப்பேனே

பாத்திரங்கள் வாங்கிவிட
பாதுகாசு போதுமடி
சொத்தெழுதி தரவேண்டாம்
சொந்தமா வாவேண்டி

நீயும் நானுமே
நிலவொளியில் காய்வோமே
காலம் முழுதும்
காதலித்தே வாழ்வோமே ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 10-06-2024

வந்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வந்து விடு

வந்து விடு

நித்தம் உனக்கு முத்தமிட்டு
நீண்டுறங்க ஆசை
நீ எனக்கு உரித்தானால்
நித்தமிட ஆசை

பத்து திங்கள் ஆக்கி வைத்து
பார்த்துவிட ஆசை
பார் காணும் இரவெல்லாம்
பகலாக்க ஆசை

நெஞ்சுக்குள்ள நீ துடிக்க
நித்தம் என்ன செய்வேன்
காத்திருப்பு போது மடி
கண் மணியே வாடி

போர்வைக்குள்ள நீ இருந்தா – உலக
போரெல்லாம் தோற்குமடி
வேர்வைக்குள்ள நீ குளிக்க
வேண்டுதலும் தீருமடி ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 12-11-2023