Posted in கொரனோ வைரஸ் பிரான்ஸ் செய்திகள்

கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி

கொரனோவின் தாக்குதலில் பிரான்சில் 642 பேர் பலி

பிரான்சில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 642 பேர்

பலியாகியுள்ளனர் ,இதுவரை அங்கு இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை 19,323 ஆக உயந்துள்ளது

தொடர்ந்து இந்த நோயினால் பாதிக்க பட்ட நிலையில் 151,793 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்


அது தவிர 5,893 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் செயற்கை சுவசமுறைக்கு உள்ளான நிலையில் உயிர் பெற்றுள்ளனர்

இந்த சுவாச கவசம் கழற்றி விட்டால் அதுவே அவர்களின் இறுதி மூச்சு நிற்கும் தருணங்கள் ஆகும் .


நாள் தோறும் அதிகரித்து செல்லும் மரணங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரனோவின் தாக்குதலில்
கொரனோவின் தாக்குதலில்
Posted in கொரனோ வைரஸ் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் 4,491 பேர் ஒரே நாளில் பலி -சடலங்கள் வைக்க இடமின்றி அவதி

அமெரிக்காவில் 35,000 பேர் பலி சடலங்கள் வைக்க இடமின்றி அவதி

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை முப்பத்தி ஐந்தாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 667,000 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

இவ்வாறு இறந்தவர்களது சடலங்களை வைப்பதற்கு இடமின்றி பெரும் நெருக்கடியில் அரசு சிக்கி தவித்து வருகிறது

ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர்

சடலங்களை பிணங்கள் கட்டும் பைகளில் கட்டி கொண்டேனருக்குள் போட்டு ஏற்றி சென்று அப்படியே புதைக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது

எங்கும் மனித உடல்கள் ,நிரம்பி வழிகிறது ,மருத்துவ மனைகளில் தாதிமார் ,மருத்துவர்களினால் யார் யாருக்கு சிகிச்சை வழங்குவது என்ற நெருக்கடியில் உள்ளனர்

மேலும் ஐந்து ஆயிரம் பேர் எதிர்வரும் நாட்களில் பலியாகி கூடும் என எதிர் பார்க்க படுகிறது

தற்பொழுது பதின் மூவாயிரம் பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,

மருந்துகள் இன்றி தவிக்கும் அமெரிக்கா சீனாவை தமது நாட்டை சுத்தம் செய்து விட்டு செல்லும் படி மிக கோபத்துடன் டிரம்ப் பேசி இருந்தார்

20 லட்சம் மக்கள் பலியாக கூடுமென எச்சரிக்கை விடுக்க பட்டிருந்தது ,அது நடந்து விடுமோ என்ற அச்சம் இப்பொழுது மக்கள் மத்தியில் உலவுகிறது

ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் வரும் நாட்களில் பலியாக கூடிய அபாயம் உள்ளது என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது

அமெரிக்காவில் கொரனோவால் 37 ஆயிரம் பேர் பலி-710,272 பேர் பாதிப்பு click here

அமெரிக்காவில்
அமெரிக்காவில்

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்

இலங்கையில் ஜேர்மன் நாட்டு பெண் மரணம்

இலங்கையில் வெளிநாட்டு கப்பலில் வருகை தந்த ஜெர்மன் நாட்டு பெண்

ஒருவர் தற்பொழுது பலியாகியுள்ளார் என இலங்கை அறிவித்துள்ளது

வைரஸ் நோயினால் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்திய

பொழுதும் இவர் மரணமாகியுள்ளார் என இலங்கை தெரிவித்துள்ளது

இலங்கையில் இதுவரை 214 பேர் பாதிக்க பட்டும் ஏழுபேர்

மரணமடைந்துள்ளது குறிப்பிட தக்கது

இலங்கையில் ஜேர்மன்
இலங்கையில் ஜேர்மன்
Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!

உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!

நெஞ்சுக்குள் நெருக்கமாய் நின்றவரே
நெடுநாளாய் நெஞ்சுக்குரம் தந்தவரே ..
உன் ரேகை பார்த்து உளம் நொந்தேன் …
உன் வலியின் உயிர் அறிந்தேன் …

நேற்றைக்கும் இன்றைக்கும் நீ இருப்பாய்
நினைவிலே என்றும் நீ உதிப்பாய் …
பொண்ணுக்கும் பொருளுக்கும் ஆசையிலான்
பொழிவிலா உடலை ஏன் பறித்தான் …

கண்ணுக்குள் உலா வரும் உன் உடலை
கை தொழுதான் ஏன் பறித்தான் …?
என் செய்தி கேட்டு நீ வீழ்ந்தாய் …?
ஏன் இத்தனை வேகத்தில் நீ மறைந்தாய் ..?

உன்னிடம் கற்றதை சொல்லிடவா …?
உள்ளத்தில் வைத்ததை கொட்டிடவா ..?
மடியாத நம்பிக்கை நான் முகர்ந்தேன்
மணம் வீசும் காதலை யான் உணர்ந்தேன் …

கூணாத உழைப்பை நான் சுவைத்தேன்
குன்றாத வீரத்தை யான் படித்தேன் …
மன்றாட்டம் இல்லா பேச்சை கண்டேன்
மரியாதை பொழிகின்ற அகவை கண்டேன் …

விரைவாக பிடித்த மொழியை கண்டேன்
வீழாது எழுகின்ற வேகம் கண்டேன் …
முடியாது என்ற சொல்லை மறந்தேன் – உன்
முயற்சிகள் கண்டே யான் வியந்தேன் …

அகவையில் நீ வயதானாய்
அகத்திலே நீ உயர்வானாய் …
பிடித்ததை பேசும் பண்பானாய் – நூல்
பிடித்ததில் படைக்கும் படைப்பானாய் …

கண்டவை உன்னில் நூறெனலாம் – யான்
கற்றது தூசென சொல்லிடலாம் …
சொற்ப நேரத்தில் கண்ணுற்றதை
சொல்லிட நாள் ஒன்று போதாது …

ஒரு நாள் உன்னாலே நான் துடித்தேன்
ஒயாத உன் நினைவால் நான் துவண்டேன்..
உன்னரு ஓர் நாள் உட்கார்ந்து
உறவாடிய நாளது பொற்காலம் …..

பிள்ளைக்கு பிள்ளையார் பெயர் வைத்தவா
பிரியமாய் அவனை உளம் கொண்டவா ..
உன்னாலே தவிக்கிறோம் நீ காணாய்
உயிர்த்தே ஒருமுறை நீ வாராய் ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/07/2019
குறிப்பு –

ஐங்கரன் தந்தையார் துயர் அறிந்து ….
அவர் பாதம் இதனை நான் விரித்தேன் …
நெஞ்சுக்குள் நிற்கின்ற நினைவொன்றின்
நியமான தடத்தில் நான் படைத்தேன் …!

உயிர்த்தே ஒருமுறை
உயிர்த்தே ஒருமுறை