Posted in இலங்கை செய்திகள்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 596ஆக அதிகரித்துள்ளது.;.

இன்றைய தினத்தில் (2020.04.28) இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி

உறுதி செய்யப்பட்ட புதிதாக 8 நோயளர்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார

      சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க

      கொரோனா தொற்று பரவுவதைதடுக்கும் கொவிட் 19 தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.

      இந்த நோயாளர்களில் 5 பேர் கடற்படை அங்கத்தவர்கள் ஆவதுடன் மூவர் புனானி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்

      தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களாவர். இவர்களுள் 134 பேர் குணமடைந்து

      வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்.

      கொரோனா நோயாளர்களின்
      கொரோனா நோயாளர்களின்
      Posted in மருத்துவம்

      முதுகு, தோள் பட்டை வலியை குறைக்க இதை பண்ணுங்க

      முதுகு, தோள் பட்டை வலியை குறைக்க இதை பண்ணுங்க

      இந்த ஆசனத்தை செய்வதால் முதுகில் ஏற்படும் இறுக்கம் வலியை குறையும். ஞாபகச் சக்தி நன்கு தூண்டப்படுகிறது. தோள்பட்டை வலி குறைகிறது.

      முதுகு, தோள் பட்டை வலியை குறைக்கும் ஆகர்ண தனுராசனம்
      ஆகர்ண தனுராசனம்
      வில்லிலிருந்து அம்பை இழுப்பது போன்ற நிலை.

      செய்முறை :

      விரிப்பில் கால்களை முன்புறம் நீட்டியவாறு அமர்ந்து கொள்ளவும். இடது

      கையால் வலது காலின் கட்டை விரலை பிடித்து இழுத்து மார்புக்கு அருகில்

      அணைத்துக் கொள்ள வேண்டும். பின் வலது கையால் இடது காலின் கட்டை விரலை பிடிக்க வேண்டும்.

      வலது காலின் விரல்களை இடதுபக்க செவிக்கருகில் கொண்டு வர முயற்சி

      செய்ய வேண்டும். கண் பார்வையை ஒரே இடத்தில் வைக்க வேண்டும்.

      சிறிது நேர ஆழ்ந்த சுவாசத்திற்கு பின் மெதுவாக வலது காலை விலக்கி

      சாதாரண நிலைக்கு வர வேண்டும். பின் கால்களை மாற்றி செய்ய வேண்டும்.

      ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் 25 முதல் 30 வினாடிகள் செய்யலாம்.

      முதுகெலும்பு சிப்பி விலகல் இடுப்பு கூடு பிரச்சனை உள்ளவர்கள் தகுந்த யோக நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது உத்தமம்.

      பயன்கள் :

      நெஞ்சுப்பகுதி நன்கு விரிந்து நுரையீரல் நன்கு வேலை செய்து சுவாச மண்டல பிரச்சனைகள் சரியாகிறது. புஜங்கள் பலமாகிறது.

      முதுகில் ஏற்படும் இறுக்கம் குறைகிறது. ஞாபகச் சக்தி நன்கு தூண்டப்படுகிறது. தோள்பட்டை வலி குறைகிறது.

      முதுகு தோள் பட்டை
      முதுகு தோள் பட்டை
        Posted in மருத்துவம்

        முதுமையில் தொற்றும் நோய்கள்

        முதுமையில் தொற்றும் நோய்கள்

        முதியோர் வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,

        பக்கவாதம், இதய கோளாறு, மன அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

        முதியவர்கள் பெரும்பாலும் பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகின்றனர்.

          உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர்.

          வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதய

          கோளாறு, மன அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

          இதுபோன்ற பிரச்சினைகளால் கடந்த 5 ஆண்டுகளாக முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர்.

          அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு

          மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.

          முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்துவிடுகிறது. அவர்களுக்கு 4, 5 நோய்கள் ஒன்றாக வருகின்றன. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையை கவனிப்பது போன்றது. அதே

          மாதிரி தான் சிகிச்சை அளிப்பதும். முதியவர்களுக்கு நோயின் தன்மையை பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

          சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெறும் பயிற்சி பட்டறையில் முதியோர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும், அடிக்கடி கீழே விழும்

            முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் பல்வேறு ஆய்வுகள் செய்யப்படுகின்றன. முதியோர் மருத்துவ மாநாட்டில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், இங்கிலாந்து, அமெரிக்கா

            , ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.

            வெளிநாடுகளில் முதியோருக்கு அளிக்கப்படும் நவீன சிகிச்சை முறைகள், அதை இந்தியாவில் செயல்படுத்துவதற்கான

            நடைமுறைகள் பற்றி தற்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

            முதுமையில் தொற்றும் நோய்கள்
            முதுமையில் தொற்றும் நோய்கள்
                Posted in மருத்துவம்

                இருமலை போக்க இதை சாப்பிடுங்க

                இருமலை போக்க இதை சாப்பிடுங்க

                இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த அதிமதுரம் தேங்காய் பாலை குடித்தால் நிவாரணம் பெறலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

                இருமலை போக்கும் அதிமதுரம் தேங்காய் பால்
                அதிமதுரம் தேங்காய் பால்
                தேவையான பொருட்கள்:

                அதிமதுரம் – 5 துண்டுகள்

                தேங்காய்ப் பால் – 1 டம்ளர்
                சுக்கு பொடி – 1 டீஸ்பூன்


                தூளாக்கிய வெல்லம் – தேவைக்கு
                ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்

                அதிமதுரம் தேங்காய் பால்

                செய்முறை:

                அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

                பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

                வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

                நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.

                மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

                இதனை ஆறவைத்து பருகலாம்.

                இருமலை போக்க இதை சாப்பிடுங்க
                இருமலை போக்க இதை சாப்பிடுங்க
                Posted in உலக செய்திகள்

                மர்ம வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி

                மரம் வைரஸ் நோயில் சிக்கி பலநூறு பேர் பலி

                தற்போது சீனாவில் புதியவகை மர்ம வைரஸ் ஒன்று பரவி வருகிறது,இந்த நோய் தாக்கத்தில் சிக்கி பல டசின் பேர் பலியாகியுள்ளனர் .

                தற்போது இந்த வைரஸ் கொரோனா என அடையாளம் காணப்பட்டுள்ளது ,சீன ,காங்கொங் போன்ற நாடுகளில் இந்த நோய் அதிகம் பரவி வருகிறது .

                இந்த நோயை தடுக்கும் முயற்சிகளில் விஞானிகள் ஈடுபட்டு இந்த நோயை முதல் கட்டமாக கண்டு பிடித்துள்ளனர் .

                எனினும் மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                இந்த நோய் மிக வேகமாக பரவி வருவதாகவும் ,மூச்சு திணறல் ஏற்பட்டு மக்கள் இறந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                மர்ம வைரஸ் நோயில்