இருமலை போக்க இதை சாப்பிடுங்க

Spread the love

இருமலை போக்க இதை சாப்பிடுங்க

இருமல், சளி தொல்லையால் அவதிப்படுவர்கள் இந்த அதிமதுரம் தேங்காய் பாலை குடித்தால் நிவாரணம் பெறலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இருமலை போக்கும் அதிமதுரம் தேங்காய் பால்
அதிமதுரம் தேங்காய் பால்
தேவையான பொருட்கள்:

அதிமதுரம் – 5 துண்டுகள்

தேங்காய்ப் பால் – 1 டம்ளர்
சுக்கு பொடி – 1 டீஸ்பூன்


தூளாக்கிய வெல்லம் – தேவைக்கு
ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்

அதிமதுரம் தேங்காய் பால்

செய்முறை:

அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.

மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

இதனை ஆறவைத்து பருகலாம்.

இருமலை போக்க இதை சாப்பிடுங்க
இருமலை போக்க இதை சாப்பிடுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *