Tag: சாரதி
குளியாப்பிட்டிய விபத்து சாரதிக்கு விளக்கமறியல்
குளியாப்பிட்டிய விபத்து சாரதிக்கு விளக்கமறியல்
குளியாப்பிட்டிய விபத்து சாரதிக்கு விளக்கமறியல் குளியாப்பிட்டிய, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேர்
உயிரிழந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (27) காலை விலபொல சந்தியில் உள்ள பல்லேவெல பாலத்தில் டிப்பர் வாகனமும் பாடசாலை
வேனும் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு
வேனும் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் மேலும் 13 பாடசாலை மாணவிகள் காயமடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக குளியாப்பிட்டி பொலிஸார் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்து இன்று குளியாப்பிட்டி நீதவான் ரந்திக லக்மல் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரான டிப்பர் வாகனத்தின் சாரதியை செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
தூக்கமின்றி வாகனம் ஓட்டிய சாரதி
அத்துடன் குறித்த சாரதி 24 மணி நேரத்திற்கும் மேலாக தூக்கமின்றி வாகனம் ஓட்டியதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
அதன்படி, எதிர்காலத்தில் குறித்த டிப்பர் வண்டியின் உரிமையாளருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஒழுக்கமான சாரதிகளை ஊக்கப்படுத்துமாறு சபாநாயகர் கோரிக்கை
ஒழுக்கமான சாரதிகளை ஊக்கப்படுத்துமாறு சபாநாயகர் கோரிக்கை
ஒழுக்கமான சாரதிகளை ஊக்கப்படுத்துமாறு சபாநாயகர் கோரிக்கை பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய அண்மையில் (22)
சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இதன்போது சபாநாயகர் பொலிஸமா அதிபருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அரசியலமைப்புப் பேரவையின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமைய, முழுமையான வெளிப்படைத் தன்மையுடனும் இந்த நியமனம் இடம்பெற்றிருப்பதாக சபாநாயகர் இங்கு குறிப்பிட்டார்.
பொலிஸ்மா அதிபர்
இதன்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர் (சட்டத்தரணி) பிரியந்த வீரசூரிய, எந்தவொரு அரசியல் செல்வாக்கும் இன்றி பொலிஸ்மா அதிபராக
நியமிக்கப்பட்டமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், அது தனது உத்தியோகபூர்வ கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு
கலந்துரையாடப்பட்டதுடன், வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
மிகவும் ஒழுக்கமான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என சபாநாயகர் முன்பு
விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக பொலிஸ்மா அதிபர் இங்கு தெரிவித்தார்.
சாரதிகளின் பயணம் தொடங்கும் இடத்திலிருந்து அவர்கள் முடிக்கும் இடம் வரை
இத்திட்டத்தின்படி, சாரதிகளின் பயணம் தொடங்கும் இடத்திலிருந்து அவர்கள் முடிக்கும் இடம் வரை அவர்களின் வாகனம் செலுத்தும் முறைகள் குறித்த
தொடர்ச்சியான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஒழுக்கமான முறையில் வாகனங்களைச் செலுத்திய சாரதிகள் அந்த இடத்திலேயே பாராட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு சாரதிகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் மூலம் ஒழுக்கம் நிறைந்த சாரதிகளை உருவாக்கி, வீதி விபத்துக்களைக் குறைத்து உயிர் இழப்புக்களைத்
தடுக்க முடியும் என்றும், இத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் இங்கு நினைவுகூர்ந்தார்.
சாரதிகளுக்கு இலங்கை அதிரடி நடவடிக்கை எடுத்ததா
சாரதிகளுக்கு இலங்கை அதிரடி நடவடிக்கை எடுத்ததா
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்து பிரதி பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திகா ஹபுகோட, இந்த செய்தி முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற தவறான செய்தி விளம்பரங்களை உருவாக்குபவர்கள் பதிவிடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தவறானது என்று இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வ பக்கத்திலும் ஒரு குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என மக்கள் மத்தியில் விசனம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தினந்தோறும் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் பெரும்பாலனவை மதுபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளால் ஏற்படுவதாக அறிக்கைகள் தெரிவித்த போதிலும் அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதா?
மது போதையில் வாகனம் ஓட்டுவது என்பது ஒரு பொறுப்பற்ற செயலாகும். இது ஓட்டுனரின் விழிப்புணர்வைக் குறைத்து, பாதையைப் புரியாமல் தவறாக திருப்புவதற்கும், வேகக் கட்டுப்பாட்டை இழப்பதற்கும் வழிவகுக்கும்.
இதன் காரணமாக ஆபத்தான சாலை விபத்துகள், உயிரிழப்புகள், சிக்கல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட செயல்கள் மற்ற உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரு சமூக குற்றமாகவும் கருதப்படுகின்றன.
இதற்கான தீர்வாக, ஓட்டுநர்கள் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். அவசியமாயின், மாற்று ஓட்டுநரை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வு முக்கியம் என்பதால், அரசு மற்றும் சமூக அமைப்புகள் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்து, இளைஞர்கள் மத்தியில் பாதுகாப்பான ஓட்டுமுறை பற்றிய அறிவை ஏற்படுத்த வேண்டும்.
இதுதான் சாலைகளில் உயிரைக் காக்கும் சிறந்த வழி.
ஆனாலும் அபராதம் விதிக்கப்படும் என்ற செய்தியைக் கூட அரசு எதிர்த்துள்ளமை யோசிக்கவே வைக்கின்றது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது
பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது
பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை
தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பிலேயே பிள்ளையானின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் பேரூந்து சாரதியை தாக்கிய பறக்கும் தட்டு
அமெரிக்காவில் பேரூந்து சாரதியை தாக்கிய பறக்கும் தட்டு
அமெரிக்காவில் பேரூந்து சாரதியை தாக்கிய பறக்கும் தட்டு ,பேருந்து ஓட்டும் போது பறக்கும் உலோகத்தில் அடிபட்ட பிறகு பேசுகிறார் பேருந்து ஓட்டுநர்.ஸ்டீவர்ட் ஓ’லியரி, உலோகத் துண்டை நினைவூட்டலாக வைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
ஒரு பேருந்து ஓட்டுநர் பணியில் இருக்கும் போது பறக்கும் உலோகத் துண்டினால் அடிபட்டு வெளியே பேசுகிறார்.
வாஷிங்டன் மாநில பேருந்து ஓட்டுநரான Stewart O’Leary, கடந்த வெள்ளிக்கிழமை இன்டர்ஸ்டேட் 405 இல் மணிக்கு 60 மைல் வேகத்தில் பள்ளிப்
பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த போது உலோகத் துண்டால் தாக்கப்பட்டார். அவர் அந்த நேரத்தில் ஒரு உயர்நிலைப் பள்ளி பெண்கள் கூடைப்பந்து அணியை ஒரு விளையாட்டுக்கு ஓட்டிக்கொண்டிருந்தார்.
“அது நான்தான், அவர்கள் அல்ல, எனது பயணிகள் யாரும் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று ஓ’லியரி சியாட்டில் ஏபிசி இணை நிறுவனமான கோமோவிடம் கூறினார்.
பேருந்து ஓட்டுநர் ஸ்டீவர்ட் ஓ’லியரி வாகனம் ஓட்டும் போது பறக்கும் உலோகத் துண்டினால் தாக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளார்.
கோமோ
“நான் சிறுமிகளைப் பாதுகாப்பாக வைத்தேன். ஒரு பேருந்து ஓட்டுநரின் வேலை என்னவென்றால் — மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வது — நான் அதைச் செய்தேன்,” என்று அவர் கூறினார்.
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம்
சாரதி தூங்கியதால் பேருந்து விபத்து 12 பேர் காயம் கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக எங்கள் செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (11) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து
3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து
3000 இற்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்து ,இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,000 இற்கும் மேற்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணைகளுக்கு அமைவாக, குறித்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு
உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு
உலக முடிவிலிருந்து வீசப்பட்ட சாரதியின் சடலம் மீட்பு ,அடித்துக் கொன்று சிறிய உலக முடிவிலிருந்து பள்ளத்திற்கு வீசப்பட்ட ஹாலி எல ரொசெட்வத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியின்
சடலம் 16 நாட்களுக்கு பின்னர் புதன்கிழமை (16) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மடுல்சீம பொலிஸார் தெரிவித்தனர்.
வெல்லவாய குடா ஓயா இராணுவ முகாமின் கமாண்டோ அதிகாரிகள் குழுவொன்று கயிறுகளின் உதவியுடன் புதன்கிழமை (16) பிற்பகல் மடுல்சீம சிறிய உலக முடிவின் பள்ளத்தில் இறங்கி மேற்கொண்ட சோதனையின் போது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்தை உரப் பையில் கட்டி கயிறு, மூலம் பெரும் முயற்சியுடன் மேலே எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் வைத்தியரை கடத்த முற்பட்ட சாரதி
பெண் வைத்தியரை கடத்த முற்பட்ட சாரதி
பெண் வைத்தியரை கடத்த முற்பட்ட சாரதி ,கடத்திச் சென்றதாக பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் குதித்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா – மன்னார் வீதியில் நேற்று (26.08) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர். குறித்த உணவை
வழங்கிவிட்டு நோயாளா் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியில் மறித்து ஏறியுள்ளார்.
குறித்த ஆயுர்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி
ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்ட நிலையில் நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.
இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களும் நோயாளர் காவு வண்டியும் நெளுக்குளம் பொலிசிற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் பொலிசிற்கு சென்று
நோயாளர் காவு வண்டியை விடிவித்துள்ளதுடன் குறித்த முறைப்பாட்டை மீள பெறச் செய்வதற்கான முயற்சிகளும் இடம்பெற்று வருவதாக தெரிய வருகிறது.
இது தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.
இதேவேளை, குறித்த சாரதி தனது வீட்டிற்கு செல்ல வாகனத்தை திருப்பிய போதே குறித்த சகோதர மொழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

போதையில் ரயிலை செலுத்திய சாரதி
போதையில் ரயிலை செலுத்திய சாரதி
போதையில் ரயிலை செலுத்திய சாரதி மக்களால் துரத்தி பிடிப்பு ,கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலை போதையில் செலுத்தி கொண்டிருந்த சாரதி கைது .
ஒன்றை செலுத்திக் கொண்டிருந்த சாரதி அளவுக்கு அதிகமாக மதுபானத்தை அருந்திவிட்டு அமைதியற்ற முறையில் நடந்து கொண்டதை அடுத்து பெரும் பதட்டம் ஏற்பட்டது .
குறித்த சாரதி கண்டிக்கு அருகில் சொல்கம் என்ற இடத்தில் ரயிலை நிறுத்திவிட்டு ரயிலிருந்த தப்பி ஓடிய நிலையில் ,அவரை மக்கள் துரத்தி பிடித்து ரயில்வே துறைகள் அதிகாரிகள் ஒப்படைத்தனர் .
தொடரூந்தை விட்டு தப்பி ஓடிய சாரதி
அந்த ரயிலை உதவி சாரதி மூலம் , ரயில் தற்போது உரிய ரயில்வே நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதிக மது போதை காரணமாக ரயிலை செலுத்தி சென்ற இந்த சாரதி மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு இவர் பணியில் இருந்து நீக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு வாய்ந்த நிலையில் வண்டிகளை செலுத்தி செல்ல வேண்டிய இவ்வாறான சாரதிகள் அத்துமறி இவ்வாறு ரயிலை செலுத்தி செல்வது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பாதுகாப்பான ரயில்வே கடமைகளை கடந்து செல்ல வேண்டிய இந்த ரயிலில் இவ்வாறு ரயில்வே சாரதிகள் மதுவை அருந்திவிட்டு செலுத்து செல்வதால் ,
அந்த ரயில்வே கடவைகளில் பயணிக்கும் மக்களும் இரயில் பயணிக்கும் மக்களும் பலியாக வேண்டிய இக்கட்டான சூழல் ஏற்படுவதாக மக்கள் கூட்டம் சுமத்தி இருக்கின்றனர் .
ஆபத்தாக மாறிய தொடரூந்து பயணம்
கைது செய்யப்பட்ட ரயில் சாரதி , தற்பொழுது தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார் .
ரயிலில் பயணித்த மக்கள் அலறி அடித்து சம்பவங்கள் ,தற்பொழுது வெளியாகி உள்ளது .
தொடரூந்து சாரதி தப்பியோடும் காட்சிகள் தற்போது அதனை படம் பிடித்த சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருவதான தகவல்களும் வெளியாகி வருகின்றன.
இலங்கை எதை நோக்கி எங்கு செல்கிறது என்பது தொடர்பான ,விடயங்கள் இதன் ஊடாகவும் காணமுடிகின்றது .
பேருந்து விபத்துக்கள் மதுவை அருந்திவிட்டு ,தப்பி ஓடுதல் என்பன ,இலங்கை கட்டுக்கடங்காத தலை தெறித்து ஓடுவதையே இந்த சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு
சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு
கொழும்பு கண்டி பிரதான வீதியில் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு நிரலுக்கு (ஒரு வழி போக்குவரத்து)வரையறுக்கப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த பிரிவு வீதி காபட் இடப்பட்டு சீர்செய்யப்படவுள்ளதால் இன்று (24) தொடக்கம் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி வரையில் வாகன போக்குவரத்தை ஒரு நிரலுக்கு வரையறுக்கப்பட்டிருப்பதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இந்த வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதினால் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான பாதை
ஊடாக பயணிப்பதற்கு எதிர்பார்க்கும் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் முடிந்த வரையில் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.
சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு
இதேபோன்று கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள் ,மாவனல்லை ரம்புக்கணை வீதியின் ஊடாக குருநாகல் வரையில் பயணித்து அதிவேக நெடுஞ்சாலை அல்லது பொதுவான வீதியூடாக மீரிகம ஊடாக பஸ்யால சந்தியில் பிரவேசித்து அல்லது கேகாலைக்கு வந்த பின்னர்
பொல்காவல, அலவ்வ, மீரிகம ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து கொழும்பை நோக்கி பயணிக்க முடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேபோன்று கொழும்பில் இருந்து கண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் பஸ்யால சந்தியில் மீரிகம ஊடாக அதிவேக நெடுஞ்சாலை அல்லது பொதுவான வீதி ஊடாக குருநாகலை அண்மித்த பின்னர்
கண்டியை நோக்கி பயணிக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






























