Tag: கோழி
கோழிக்கு பெயின்ட் அடிச்சு கிளியென விற்பனை
கோழிக்கு பெயின்ட் அடிச்சு கிளியென விற்பனை
கோழிக்கு பெயின்ட் அடிச்சு கிளியென விற்பனை ,கலப்படங்களை பற்றி கேள்விபட்டு இருக்கின்றோம். எனினும், கோழிக்கு பெயின்ட் அடிச்சி, அதனை கிளியெனக் கூறி, 6500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம்
பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பிலான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
கோழி கூண்டிற்கு அருகில் 200 கோடி ரூபாய்
கோழி கூண்டிற்கு அருகில் 200 கோடி ரூபாய்
கோழி கூண்டிற்கு அருகில் 200 கோடி ரூபாய் ,செவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் முற்றத்தில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்று (31) கண்டுபிடிக்கப்பட்ட 54 கிலோ ஹெரோயின் 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியானது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த போதைப்பொருள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆர்மி சூட்டிக்கு சொந்தமானது என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தம்மிக்க சமன் குமார என்ற நபர் கடந்த 30ஆம் திகதி பொரலஸ்கமுவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டபோதும், 7 கிலோ ஹெரோயின் மற்றும் 1 கிலோ ஐஸ் போதைப்பொருளை பொலிசார் கைப்பற்றினர்.
குறித்த போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி 20 கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, செவனகல பிரதேசத்தில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
200 கோடி ரூபா பெறுமதியான 54 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் தொகை, செவனகல, கிரிவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்தில் உள்ள கோழிக்கூடு ஒன்றிற்கு அருகில் மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்களில் புதைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அந்த வீட்டில் வசிக்கும் கணவன், மனைவி இருவரையும் பொலிசார் கைது செய்த நிலையில், குறித்த போதைப்பொருளை பொரலஸ்கமுவில் கைதான நபர் புதைத்து வைத்தது அவர்களின் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டில் உள்ள பெண் அந்த நபரின் சகோதரி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்
கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள்
கோழி கிடைத்தால் புரியாணி போடுங்கள் இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கை தவறி போகும் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றே தீருவோம்.
ஒன்றேகால் இலட்சம் தமிழர் வாழும், எழுபத்தி ஐயாயிரம் தமிழ் வாக்காளர் வாழும் இரத்தினபுரியில் எம்பி பதவியை பெறுவது எமது உரிமை.
தலைவர் மனோ கணேசன்
அது ஒரு சலுகை அல்ல. ஆகவே அடுத்த முறை எங்கள் வேட்பாளர் சந்திர குமார் இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பியாக வெற்றி பெற்று வருவார்
என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்..
இப்படி எமது கடும் உழைப்பினால் தமிழ் பிரதிநிதித்துவங்களை நமது இனம் பெறுகின்ற சூழல் கூடி வரும் போது,
நாய், நரி, பூனை, யானை, காகம், குருவி, கோழி சின்னங்களை தூக்கி கொண்டு வந்து தமிழ் வாக்குகளை சிதறடிக்க
இப்போதே சிலர் திட்டம் போடுகிறார்கள். துரோகிகளான இவர்கள் தலைகளில் இடிதான் விழ வேண்டும். நாய், நரி, பூனை, காகம், குருவி வந்தால் விரட்டி விடுங்கள். கோழி கிடைத்தால் பிடித்து புரியாணி போடுங்கள் என்றார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட கட்டமைப்பு மாநாடு, மாவட்ட
இரத்தினபுரி நகரசபை
அமைப்பாளர் சந்திரகுமார் ஏற்பாட்டில், இரத்தினபுரி நகரசபை மண்டபத்தில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நடை பெற்றது இதில் தலைமை உரை ஆற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது,
எனது எம்பிக்கள் அவ்வந்த மாவட்டங்களில் வாழும் மண்ணின் மைந்தர்களாக இருக்க்க வேண்டும். தமிழ் மொழியுடன் சிங்களமும் பேச வேண்டும்.
எமது துன்பம், துயரம், கஷ்டம், கண்ணீர் ஆகியவற்றை சிங்கள மொழியில் நாட்டுக்கு கேட்கும் விதமாக அவர்கள் உரக்க கூற வேண்டும்.
நான் அதைதானே செய்கிறேன்? அப்படிதான் எங்கள் எம்பிக்கள் இருக்க வேண்டும் என்பது என் கொள்கை. அதைதான் வேலுகுமார் செய்கிறார்.
எங்கள் மாவட்ட அமைப்பாளர்கள் இரத்தினபுரி சந்திர குமார், கேகாலை பரணிதரன், கம்பஹா சசி குமார், கொழும்பு பாலசுரேஷ், களுத்துறை அன்டன் ஜெயசீலன் ஆகியோர் செய்வார்கள்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியா
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் நுவரெலியாவில், வடக்கில், கிழக்கில் பிரச்சினை இல்லை. ஆனால், நாம் சிறுபான்மையாக வாழும் கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் நிலைமை சவால் மிக்கது.
இம்மாவட்டங்களில் எமது கடும் முயற்சியால் தமிழ் பிரதிநிதித்துவங்களை எமது இனம் பெறுகின்ற சூழல் கூடி வரும் போது, தமிழ் வாக்குகளை சிதறடிக்க இப்போதே சிலர் திட்டம் போடுகிறார்கள் என்றார்.
Featured
நாட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம்
நாட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம்
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.
கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை மையமாகக் கொண்டு 10,000 நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் “அஸ்வெசும வேலைத்திட்டத்திற்கு” சமுர்த்தி திட்டத்தை விடவும் மூன்று மடங்கு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூர்த்திக்காக 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அஸ்வெசும திட்டத்திற்காக 180 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பொருளாதார நெருக்கடியினால் பெருமளவில் கஷ்டங்களை எதிர்கொண்ட மக்களுக்கான நிவாரணமாகவே அதனை வழங்குகிறோம்.
மேலும், பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களை வலுவூட்டும் நோக்கில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் திறைசேரி என்பன இணைந்து மேலதிக நிதி ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளன.
அதன் கீழ், அனைத்து கிராம சேவகர் பிரிவுகளையும் உள்வாங்கி, கிராம சேவகர் பிரிவொன்றுக்கு 07 பேர் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, NAITA (National Apprentice and Industrial Training Authority) மற்றும் தொழிற்பயிற்சி
அதிகாரசபை (Vocational Training Authority) என்பன இணைந்து வேலைத்திட்டம் ஒன்றையும் செயற்படுத்தவுள்ளன. அங்கு பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்வோருக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதோடு, 2000 ஹெக்டயாரில் தேயிலை நடுகைச் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மீன்பிடித் தொழிலுக்கு விசேட கடன் நிவாரணம் வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி வங்கியுடன் இணைந்து உவர்-நன்னீர் மீனவக் குடும்பங்களை வலுவூட்டுவதற்கான சலுகைக் கடன்களை வழங்க
எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடல் அட்டை உற்பத்திக்காக 400 குடும்பங்களுக்கு சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளது. மீன்பிடி படகுகள் உள்ளிட்ட மீன்பிடித் தொழில்துறைக்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதே இத்திட்டதின் பிரதான நோக்கமாகும்.
மேலும், பனை, கித்துல், தென்னை போன்ற உற்பத்திகளுக்கு தரப்படுத்தப்பட்ட “கள்ளு அனுமதி” வழங்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது. செயற்கை உற்பத்திகளுக்கு மாறாக, இயற்கை மதுபான உற்பத்தியை மேற்கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை மையமாகக் கொண்டு 10,000 நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கிறோம். உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், சீனாவின் சோங்சிங் பிராந்தியத்தில் உள்ள 33 தொழில் பயிற்சி நிறுவனங்களுடன் பல ஒப்பந்தங்களில் கைசாத்திடவும் அமைச்சு
தீர்மானித்துள்ளது. அதனூடாக ஒரு இலட்சம் தொழில் முனைவோருக்கான பயிற்சிகள் வழங்கப்படவிருப்பதாகவும், இத்திட்டங்களின் மூலம் 03 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை வலுவூட்ட எதிர்பார்த்திருக்கிறோம்.” என்று இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முட்டை ,கோழி இறைச்சிக்கான விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
முட்டை ,கோழி இறைச்சிக்கான விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கான விலை அதற்கான செலவுகள் தொடர்பில் விரைவில் ஆய்வுகளை மேற்கொள்ள வர்த்தக , நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் தற்போது முட்டை மற்றும் கோழி இறைச்சி அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை ஒன்றின் தற்போதைய விலை 50 ரூபாவுக்கும் மேற்பட்ட வகையில்விற்பனை செய்யப்படுவதுடன் ,ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி
1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவற்றுக்கான விலை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் எனவும். கோழி இறைச்சிக்கான
நிர்ணய விலை தொடர்பாக பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்
இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்
குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
சிவப்பு இறைச்சியில்(Red Meat ) புரதம் அதிகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆகையால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் சிவப்பு இறைச்சி உண்பதை
தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதனால் சிவப்பு இறைச்சியை உண்ண கூடாது தெரியுமா? அதை பற்றி இப்போது காணபோம்.
அடுத்த தடவை நீங்கள் இரவு நேர உணவை சமைப்பதாக இருந்தால் அதில் சிவப்பு இறைச்சியை தவிர்த்து நல்லது.
அதற்கு பதிலாக சுத்தமான சால்மன் மீன் அல்லது தோல் அற்ற சிக்கனை சமைக்கலாம். ஏனெனில் ஹார்வர்ட் பல்கலைகழகம் தற்பொழுது நடத்திய ஆய்வில்
சிவப்பு இறைச்சியின் காரணமாக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளது.
- மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைக்க, தினசரி சிவப்பு இறைச்சி உணவாக எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக கோழி, மீன் மற்றும் தானியம், விதைகளை
- போன்ற குறைத்த புரதத்தை உடைய உணவுகளை சேர்த்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
- இறைச்சியை அதிகளவு சாப்பிட்டால் இந்த நோய் வரலாம்
- 2014 ஆம் ஆண்டு பி.எம்.ஜே எனும் பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வில், ஆய்விற்காக அவர்கள், 20 ஆண்டுகளுக்கு 89,000 பெண்களை பின் தொடர்ந்தனர். அவர்கள் பதப்படுத்தப்படுத்தப்பட்ட உணவுகளான சிவப்பு இறைச்சி அதாவது,
- மாட்டிறைச்சி, பன்றி மற்றும் ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன், மற்றும் பருப்பு வகைகளான பீன்ஸ், பயறு, பட்டாணி மற்றும் விதைகள் போன்றவற்றை தினமும் எவ்வளவு உணவை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை ஆராய்ந்தது.
- பெண்களிடம் இதைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில் சிவப்பு இறைச்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 22 சதவீதம் அதிகமாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
- கூடுதலாக ஒரு நாளைக்கு 2 முறை எடுத்துக்கொள்ளும் சிவப்பு இறைச்சியும் புற்றுநோய்க்கான ஆபத்தை மேலும் 13 சதவீதம் அதிகப்படுத்துகிறது.
- ஆனால் சிவப்பு இறைச்சிக்குமாறாக ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்றி கோழி போன்ற கறியை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தை 17 சதவீதம் குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது .
சிவப்பு இறைச்சிக்கும் மார்பக புற்றுநோய்க்கும் தெளிவான அளவில் தொடர்புகள் இல்லை என்றாலும் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு சிலர் யுகிக்கின்றனர்.
அதாவது அதிக வெப்பநிலையில் சிவப்பு இறைச்சியை தயாரிக்கும்போது, புற்றுநோயை உண்டாக்கும் துணை விஷயங்கள் வெளியிடுவதாக கூறப்படுகிறது.
அடுத்த கோட்பாடு என்னவென்றால் பெண்களின் ஹார்மோன் அளவு அதிகரிக்க காரணமான இந்த கால்நடைகளின் வளர்ச்சிக்கு அதிக ஹார்மோன்கள் தேவையின்
காரணமாக அவற்றை உண்பதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வர காரணமாக உள்ளது.
மேலும் சிவப்பு இறைச்சியை பதப்படுத்துவதன் மூலம் அதில் உள்ள நைட்ரேட்டுகள் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்துடன் தொடர்புடையவை.
தீயில் எரிந்து கருகிய 3000 கோழிகள்
தீயில் எரிந்து கருகிய 3000 கோழிகள்
இலங்கை கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு வளர்க்க பட்ட மூவாயிரம் கோழிகள் தீயில் எரிந்து கருகின
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் -60,000 கோழிகள் அழிப்பு
வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல் -60,000 கோழிகள் அழிப்பு
உலக நாடுகளை பேராபத்தில் துரத்தி வரும் கொரனோ வைரஸ் மக்களை
துரத்திய வண்ணம் இருக்க தற்பொழுது ,ஈராக்கில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது ,
இதனால் இதுவரை சுமார் அறுபதாயிரம் கோழிகள் படு கொலை செய்யப் பட்டுள்ளன
இந்த நோயானது ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்பட கூடும் என்ற அச்சம் நிலவுகிறது
அவ்விதம் ஏற்பட்டால் ,கொலண்டில் இருந்தே அதிகமான கோழிகள் லண்டனுக்குள் இறக்குமதி செய்ய படுகின்றன
அவ்விதம் நோக்கின் லண்டனில் உள்ள தமிழர் கோழிக் கடைகள் மூடு விழா
காணும் நிலை மீளவும் ஏற்பட கூடிய பேராபத்து நிலவ கூடும் என்ற ஐயம் எழுந்துள்ளது






















