Tag: கதறல்
மாணவி கடத்தல் பெற்றோர் கதறல்
மாணவி கடத்தல் பெற்றோர் கதறல்
மாணவி கடத்தல் பெற்றோர் கதறல் ,பாடசாலை முடிந்து வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மாணவிகளில் ஒருவர் கடத்தப்பட்டுள்ள செய்தி தற்பொழுது பதிவாகியுள்ளது.
பாடசாலை முடிவடைந்து வீதியால் பயணித்துக் கொண்டிருந்த இரு மாணவர்களில் ஒரு மாணவியை அந்த வழியால் பயணித்த கருப்பு வான் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.
எனினும் ஒரு மாணவி வாகனத்தின் எதிர் திசையில் தப்பி ஓடியதால் அவர் தப்பிவிட்டார் எனவும் மேலும் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தை கண்ணுற்ற சிலர் அதனை தடுக்க முற்பட்ட பொழுது அந்த காப்பாற்று நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து தற்பொழுது அந்த மாணவியைக் கடத்திச் சென்ற வாரம் கண்டுபிடிக்க நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பொழுது வீட்டுக்கு முன்பாக இருந்த கமராவில் அந்த கடத்தல் பதிவாகியுள்ளதாகவும் அதனை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
- மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்

- இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பருவ கால அட்டவணையை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது

- நந்த மாலினி மறைவையொட்டி இலங்கை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்

- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு

- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு

- மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது

- ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி

எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது – ஷங்கர் பதிலடி
எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது – ஷங்கர் பதிலடி
அந்நியன் படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீமேக் செய்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதையடுத்து, ஷங்கர் தன்னிடம் அனுமதி பெறாமல் ரீமேக்
செய்வதாக அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இந்நிலையில், இதற்கு விளக்கமளித்து இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: அந்நியன் 2005-ம் ஆண்டு வெளியானது. அந்தப் படம் சம்பந்தப்பட்ட
அனைவருக்குமே, அதன் கதையும், திரைக்கதையும் என்னுடையது என்று தெரியும். கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்கிற பெயருடன்தான் இந்தப் படமும் வெளியானது.
படத்தின் திரைக்கதையை எழுத நான் யாரையும் நியமிக்கவில்லை. ஆதலால், இதன் திரைக்கதையை நான் விரும்பும்படி பயன்படுத்திக் கொள்ள எனக்கு உரிமை உள்ளது. படைப்பை எழுதியவன் என்ற முறையில் எந்தச் சூழலிலும், எனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது.
ஷங்கர் வெளியிட்ட அறிக்கை
மறைந்த சுஜாதாவின் பெயரை இதில் சம்பந்தப்படுத்தியதை கண்டு ஆச்சரியமடைந்தேன். இந்தப் படத்துக்கு அவர் வசனங்கள் எழுத மட்டுமே நியமிக்கப்பட்டார். அதற்கான உரிய பெயரும்,
அவருக்கு கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இதில் ஈடுபடவில்லை.
திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கு உள்ளது. ஏன், அந்நியனுக்காக நீங்களோ, உங்கள் நிறுவனமோ எந்த
விதமான உரிமைகளையும் கோர முடியாது, ரீமேக் செய்யவும் முடியாது. ஏனெனில் அந்த உரிமை உங்களுக்கு எழுத்துபூர்வமாக தரப்படவில்லை. அப்படி எதுவும் இல்லாத நிலையில், படத்தின்
கதைக்கான உரிமை உங்களிடம் உள்ளது என்பதைச் சொல்ல உங்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை.
ஒரு தயாரிப்பாளராக, ‘அந்நியன்’ படத்தின் மூலம் நல்ல லாபம் அடைந்துள்ளீர்கள். தற்போது தேவையின்றி, உங்களுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சிகளின் மூலம்
ஆதாயம் தேடப் பார்க்கிறீர்கள். இந்த விளக்கத்துக்குப் பின்னராவது உங்களுக்கு ஒழுங்கான புரிதல் வரவேண்டும். இனி இது போன்ற அடிப்படையற்ற விஷயங்களை பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.









