Tag: அடித்துக்கொலை
11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை
11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை
11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை ,மூன்று முதல் பதினைந்து வயது வரையான பதினொரு பிள்ளைகளின் தந்தை (41 வயது) மனைவியின் சகோதரனால் அடித்துக் கொல்லப்பட்டதாக றக்வான பொலிஸார் தெரிவித்தனர்.
றக்வான ரங்வலதென்ன தோட்டத்தில் வசித்து வந்த செல்லப்பன் பாலகிருஷ்ணன் என்ற தோட்ட தொழிலாளியே கடந்த 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு இரண்டு மனைவிகளும், ஒரு மனைவிக்கு ஏழு பிள்ளைகளும், மற்றைய மனைவிக்கு நான்கு பிள்ளைகளும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் குடிபோதையில் தகராறு செய்த போது, இறந்தவர் மனைவியின் சகோதரர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கானவர் சுமார் ஒன்றரை மணிநேரம் இரத்தம் கசிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் உள்ளூர்வாசிகள் பலர் காயமடைந்த நபரை றக்வான மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து கஹவத்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4ஆம் திகதியன்று அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

யாழில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணை அடித்து புதைத்த கடன் காரர்கள்
யாழில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணை அடித்து புதைத்த கடன் காரர்கள்
யாழ்ப்பாணம் மணியன்தோட்டம் 11ஆம் குறுக்கு தெருவில் பெண் ஒருவரிடம்
கடனை பெற்றுக்கொண்ட நபர்கள்
அதனை மீள செலுத்திட குறித்த பெண்ணின் வீட்டுக்குசென்றுள்ளனர்
,அப்போது அங்கு எழுந்த வாய் தகராறை அடுத்து குறித்த பெண் அடித்து
கொலை செய்ய பட்டு அவரது வீட்டின் பின்புறத்த்தில் புதைக்க பட்டுளளார்
குறித்த பெண்ணை காணவில்லை என போலீசாரிடம் மேற்கொள்ள பட்ட
முறைப்பாட்டை அடுத்து , இந்த கொலை குற்றத்தில் தொடர்புடைய கணவன் ,மனைவி உட்பட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
விசரணையின் முடிவில் மேலதிக விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது
மிருசுவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு
மிருசுவில் பகுதியில் அடிகாயங்களுடன் ஆண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் மிருசுவில் ஆசை பிள்ளை ஏற்றம் அருகே ஆண் ஒருவரது சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
அநாதரவாக சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது ,தடவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
இந்த படுகொலைகளுக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை








