Posted in சினிமா

விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்

விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய்யை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்… வைரலாகும் பதிவு
விஜய் – ஷாருக்கான்


பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ஷாருக்கான். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஷாருக்கான் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவார்.

அந்த வகையில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் இன்று ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தைக் குறிப்பிட்டு, இவரைப்பற்றி ஒரு வார்த்தையில் கூற முடியுமா என்று

ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு ‘வெரி கூல்’ என ஷாருக்கான் பதிலளித்திருக்கிறார். இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகிறார்கள்.

    Posted in சினிமா

    சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் – ரைசா

    தனிமையை வெறுக்கிறேன் – ஜோடி தேடும் ரைசா

    தமிழ் சினிமாவின் இளம் நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான ரைசா, சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

    சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் – ரைசா
    ரைசா
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார்.

    போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    ரைசா

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் சில பதிவுகளை செய்து வருவார். அந்த வகையில் தற்போது சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன்

    என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் நானும் சிங்கிள்… நீங்களும் சிங்கிள்… என்று பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

      Posted in சினிமா

      அமெரிக்காவில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்

      அமெரிக்காவில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்

      சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருக்கும் நடிகர் ரஜினியின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

      அமெரிக்காவில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்
      ரஜினி


      நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில்

      சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

      தற்போது மீண்டும் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் ரஜினி. இந்நிலையில் அமெரிக்காவில் மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி நடந்து வரும்

      புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

        Posted in சினிமா

        வில்லியாக மாறும் சிம்ரன்.


        வில்லியாக மாறும் சிம்ரன்.

        விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர்

        பி.எஸ்.மித்ரன். இவர் அடுத்ததாக கார்த்தியை வைத்து சர்தார் என்னும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

        இதில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்க

        ருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை சிம்ரன் இப்படத்தில் வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

          Posted in சினிமா

          நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்

          நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்

          பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

          நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்
          நயன்தாரா


          முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

          இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஒருவர் இதில் ஒரு படத்தை இயக்குவதாகவும் அதில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட நடிகர் ‘நான் ஈ’ சுதீப் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள்

          வெளியாகியிருக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

            Posted in சினிமா

            விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்…. நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்

            விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்…. நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்

            பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் பிரபாஸ். இவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. தற்போது ராதே ஷ்யாம், சலார், ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

            பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஆகிவிட்டதால் அவரின் மார்க்கெட்

            பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் நடிகர் பிரபாஸை தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளன.

            பிரபாஸ்

            கடந்த ஓராண்டில் நடிகர் பிரபாஸுக்கு காலணிகள், மின்னணு பொருட்கள், சோப்பு என ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.

            இவற்றில் நடித்திருந்தால் அவருக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் கிடைத்திருக்குமாம். ஆனால் அவர் அவற்றில் நடிக்க மறுத்துவிட்டாராம்.

            தனக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்துள்ளதால் குறிப்பிட்ட விளம்பரங்களில் தான் நடிக்க வேண்டும் என அவர் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது

            Posted in சினிமா

            மாளவிகா மோகனனை மால்மோ என அழைக்கும் பிரபல நடிகர்

            மாளவிகா மோகனனை மால்மோ என அழைக்கும் பிரபல நடிகர்

            மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா, தன்னை பிரபல நடிகர் ஒருவர் செல்ல பெயர் வைத்து அழைத்து வருவதாக கூறி இருக்கிறார்.

            மாளவிகா மோகனனை மால்மோ என்று செல்லமாக அழைக்கும் பிரபல நடிகர்
            மாளவிகா மோகனன்


            விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் நேற்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

            அப்போது, நடிகர் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று தான் அழைப்பார் என்று அவர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார். மேலும் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று அழைத்தாலும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்கள் தன்னை ’மாலு’ என்றே அழைப்பார்கள் என்றும் கூறினார்.

            தனுஷ்
            தனுஷ் – மாளவிகா மோகனன்

            மாளவிகா மோகனன் தற்போது தனுஷுடன் ’D43’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்துள்ளது.

            Posted in சினிமா

            சினிமா தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா – ஜோதிகா

            சினிமா தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா – ஜோதிகா

            சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

            கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா – ஜோதிகா
            சூர்யா ஜோதிகா


            இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத்

            தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.

            அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

            சூர்யா ஜோதிகா

            அந்த வகையில், தற்போது நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படத்தை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

            Posted in சினிமா

            விஜய்க்கு டான்ஸ் ஆடி வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்

            விஜய்க்கு டான்ஸ் ஆடி வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்

            தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய்க்கு டான்ஸ் ஆடி வாழ்த்துக் கூறி இருக்கிறார்.

            விஜய்க்கு டான்ஸ் ஆடி வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ்
            கீர்த்தி சுரேஷ் – விஜய்


            தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

            இந்நிலையில் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ உள்ளிட்ட படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

            விஜய் நடித்த ‘யூத்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடலுக்கு நடனமாடி தனது வாழ்த்தை விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

              Posted in சினிமா

              நான் வாங்கிக்கவே மாட்டேன் – வித்யா பாலன்

              நான் வாங்கிக்கவே மாட்டேன் – வித்யா பாலன்

              சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற வித்யாபாலன் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். வித்யாபாலன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

              ”ஆணாதிக்கம் எல்லா துறைகளிலும் இருக்கிறது. அது முதலில் குடும்பத்தில் இருந்துதான் வருகிறது. எங்கள் வீட்டிலும் அது இருந்தது. பெண்கள் உரிமையை பற்றி எல்லோரும்

              பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இல்லை. பெண்கள் சமையல் அறைக்கு உள்ளேதான் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் சமையல் செய்யத்தான் இருக்கிறார்கள் என்றும் சொல்வது சரியல்ல. அவர்களால் அதையும் மீறி சாதிக்க முடியும்.

              வித்யா பாலன்

              நிறைய பெண்கள் சாதித்து நிரூபித்து விட்டனர். எனக்கு சமைக்க தெரியாது. சிறிய வயதில் இருந்தே எனது அம்மா, ஒழுங்கா சமையலை கற்றுக்கொள் என்று சொல்வார்கள். நான் காதில்

              வாங்கிக்கவே மாட்டேன். அவசியமானால் நான் வேலைக்காரியை வைத்துக்கொள்வேன். இல்லையென்றால்

              சமையல் செய்ய தெரிந்தவரை திருமணம் செய்து கொள்வேன் என்பேன். எனக்கு பிடிக்காததை செய்ய சொல்லி என்னை வற்புறுத்தாதே என்று கறாராக சொல்லி விட்டேன்.’

              Posted in சினிமா

              ரேஷ்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்

              ரேஷ்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்

              நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமான ரேஷ்மா தனது மகன் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

              ரேஷ்மாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த மகன்
              ரேஷ்மா


              விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட்

              அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்திருந்தார். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

              இந்நிலையில் ரேஷ்மாவின் மகன் தந்தையர் தினத்தை முன்னிட்டு சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இசையமைத்து தனது தாய் ரேஷ்மாவிற்கு வாழ்த்து கூறுகிறார்.

              இதற்கு ரேஷ்மா, “அன்பு, பொறுமை, இரக்கம், பாராட்டு, உந்துதல், குழந்தைகளுக்காக நாம் செய்யும் எல்லாவற்றையும் குழந்தைகள் கவனிக்கிறார்கள். இப்படி ஒரு மகன் பெற்றதற்கு நான்

              பாக்கியசாலியாக உணர்கிறேன். நாம் நம் குழந்தைகளிடம் நண்பனாகவும் ஆசிரியராகவும் இருக்கவேணும். என்ன ஆனாலும், நான் உன் கூடவே இருப்பேன்” என பதிவிட்டுள்ளார்.

              Posted in சினிமா

              பாட்ஷா பட இயக்குனரின் அடுத்த அவதாரம்

              பாட்ஷா பட இயக்குனரின் அடுத்த அவதாரம்

              ரஜினி நடிப்பில் வெளியான பாட்ஷா படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.

              பாட்ஷா பட இயக்குனரின் அடுத்த அவதாரம்
              பாட்ஷா படத்தில் ரஜினி


              ரஜினி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பாட்ஷா. இப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இவர் சின்னத்திரை தொடர்களையும் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இவர் ‛இன் த நேம் ஆப் காட் என் தெலுங்கு வெப்சீரிசை தயாரித்துள்ளார். பிரியதர்ஷி, நந்தினி மற்றும் பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் முத்துகுமார் எழுதி இயக்கியுள்ளார்.

              சுரேஷ் கிருஷ்ணா
              பாட்ஷா பட இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா

              வெப்சீரிஸ் குறித்து அவர் கூறுகையில், ‛‛காலமாற்றத்தில் ஒரு புதிய காட்சி வடிவம் இந்த வெப்சீரிஸ். இத்தளத்தின் மீது இரண்டு ஆண்டுகளாகவே ஈர்ப்பு இருந்தது. நல்ல எதிர்காலம் உள்ள

              , சுதந்திரமான தளமிது. நினைத்ததை அப்படியே கொண்டு வரமுடிகிறது. இதை தயாரிக்க அல்லு அர்ஜுன் முக்கிய காரணம். அவருக்கு நன்றி. தெலுங்கில் வெளியாகியுள்ள இத்தொடர், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வரலாம்,” என்றார்

              Posted in சினிமா

              மீண்டும் இணையும் மோகன்லால் – மீனா

              மீண்டும் இணையும் மோகன்லால் – மீனா

              நடிகை மீனா ஏற்கனவே திரிஷ்யம் 1, 2 ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

              மீண்டும் இணையும் மோகன்லால் – மீனா
              மோகன்லால், மீனா


              மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராக

              அறிமுகமானார். மோகன்லால் நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கினார் பிரித்விராஜ். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்படத்தின் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

              இதனிடையே, மோகன்லால் – பிரித்விராஜ் கூட்டணி ‘ப்ரோ டாடி’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளது. பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படமாக இது

              அமைந்துள்ளது. குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரிக்கவுள்ளார்.

              இந்நிலையில், இப்படத்தில் நடிகை மீனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். நடிகை

              மீனா ஏற்கனவே திரிஷ்யம் 1, 2 ஆகிய படங்களில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                Posted in சினிமா

                சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய டாப்சி

                சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய டாப்சி

                பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் டாப்சி, நல்ல கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

                சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய டாப்சி
                டாப்சி
                இந்தி பட உலகில், நம்பர்-1 இடத்தில் இருந்த தீபிகா படுகோனேவை பின்னுக்கு தள்ளிவிட்டு, அந்த இடத்தை கங்கனா ரணாவத் பிடித்தார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்து

                வருகிறது. அவர்கள் இருவருக்கும் போட்டியாக, தற்போது நடிகை டாப்சியும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார். இவர் நடித்த 6 இந்தி படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், இந்தி பட உலகின் ராசியான கதாநாயகியாக டாப்சி உயர்ந்திருக்கிறார்.

                இதுவரை இரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த டாப்சி, இப்போது ரூ.8 கோடி கேட்கிறாராம். அவர் நல்ல கருத்துள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடித்து

                அடுத்து வெளிவர இருக்கும் இந்தி படம், ‘ரேஷ்மி ராக்கெட்.’ இது மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம். விளையாட்டு துறையில் பெண்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை பேசும் கதை, இது.

                டாப்சி

                இப்படத்தின் கதையை எழுதியிருப்பவர், தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர் நந்தா பெரியசாமி. ஆகார்ஷ் குரானா இப்படத்தை இயக்கி இருக்கிறார். ரேணி ஸ்குருவாலா

                தயாரித்துள்ளார். இந்த படம் டாப்சியின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது. இதைக் கேள்விப்பட்டு, ‘ரேஷ்மி ராக்கெட்’ படத்தின் தமிழ்,

                தெலுங்கு உரிமையை திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்.

                  Posted in சினிமா

                  விளையாடி அசத்திய யோகி பாபு


                  விளையாடி அசத்திய யோகி பாபு

                  காமெடி நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வரும் யோகிபாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பதிவு செய்திருக்கிறார்.

                  கிரிக்கெட் விளையாடி அசத்திய யோகி பாபு
                  யோகி பாபு


                  தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ளார்.

                  மேலும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

                  தற்போது நடிகர் யோகிபாபு அரண்மனை-3, கடைசி விவசாயி, டிக்கிலோனா உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் யோகிபாபு கிரிக்கெட்

                  விளையாடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

                    Posted in சினிமா

                    இவராஅந்த நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்

                    இவராஅந்த நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்

                    தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு என முன்னணி நகைச்சுவை நட்சத்திரங்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் நடிகை விசித்ரா.

                    தொடக்க காலத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், சில படங்களில்

                    கதாநாயகியாகவும் நடித்தார். அதன்பின் சின்னத்திரையில் நுழைந்த விசித்ரா, வாய்ப்பு குறைந்ததால் திருமணம் செய்து கொண்டு புனேவில் குடியேறினார்.

                    விசித்ரா

                    பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கும் விசித்ராவின் புகைப்படம்

                    ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் பலரும் நடிகை விசித்ரா ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போனதாக குறிப்பிட்டுள்ளனர்.

                      Posted in சினிமா

                      மீண்டும் இணையும் ‘ரவுடி பேபி’ கூட்டணி

                      மீண்டும் இணையும் ‘ரவுடி பேபி’ கூட்டணி

                      நடிகை சாய் பல்லவி ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                      மீண்டும் இணையும் ‘ரவுடி பேபி’ கூட்டணி?
                      சாய் பல்லவி, தனுஷ்


                      நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது

                      தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.

                      தனுஷ், சாய் பல்லவி

                      இந்நிலையில், நடிகர் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில்

                      தயாராக உள்ள இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் சேகர் கமுலா இயக்க உள்ளார். நடிகை சாய் பல்லவி ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தில்

                      இடம்பெறும் ரவுடி பேபி பாடலுக்கு இவர்கள் இருவரும் ஆடிய நடனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

                        Posted in சினிமா

                        விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்

                        விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்

                        திரைப்படங்களில் ஒன்றாக நடித்து சின்னத்திரையில் வெவ்வேறு சீரியல்களில் நடித்து வரும் ரஞ்சித், பிரியாராமன் இருவரும் திருமண நாளில் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

                        விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்
                        ரஞ்சித் – பிரியா ராமன்


                        நேசம் புதுசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும்

                        விவாகரத்து பெற்று பல வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது, இருவரும் நிறைய சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகின்றனர்.

                        பிரியா ராமன் – ரஞ்சித்

                        இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது திருமண நாளை முன்னிட்டு சமூக வலை தளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மாறி மாறி இருவரும் வாழ்த்துக்களை

                        கூறிக் கொண்டுள்ளனர். திருமண நாளில் ஒன்று சேர்ந்த இந்த ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

                        Posted in சினிமா

                        பாத்ரூமில் போட்டோ ஷூட் எடுத்த பிகில் நடிகை

                        பாத்ரூமில் போட்டோ ஷூட் எடுத்த பிகில் நடிகை

                        விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் அம்ரிதா ஐயர். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அமிர்தா ஐயரை ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவர் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

                        அந்த வகையில் சமீபத்தில் அவர் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் உட்கார்ந்தவாறு இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

                        அம்ரிதா ஐயர்

                        மேலும் போட்டோஷூட் எடுக்க இது தான் சரியான இடம் என்று நினைக்கிறேன் என்றும் அவர் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பல லைக்குகள் குவிந்துள்ளது.

                        Posted in சினிமா

                        தற்கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன்

                        தற்கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன்

                        தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவரும், பிக்பாஸ் போட்டியில் பங்கு பெற்றவருமான மீரா மிதுன் தற்கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

                        தற்கொலை மிரட்டல் விடுத்த மீரா மிதுன்
                        மீரா மிதுன்


                        தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.

                        இதுகுறித்து மீராமிதுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நான் ஒரு அமைப்புக்காக வேலை பார்த்து பிரபலப்படுத்தினேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த அமைப்பில் இருந்து விலகினேன். அதை நடத்தியவர் செய்த அநீதியால் அமைப்பில் இருந்து விலகினேன்.

                        அவர் எனது பெயரை கெடுத்து, போலி வழக்குகள் தொடர்ந்தார். அதிகாரத்தை வைத்து தொல்லைகள் கொடுத்தார். அதில் இருந்து மீண்டேன். ஆனாலும் தினமும் என்னை பின் தொடர்ந்து, தொல்லைகள் கொடுக்கிறார்.

                        மீரா மிதுன்

                        3 வருடங்களாக தொல்லையை அனுபவிக்கிறேன். இவரால் மன அமைதி போய் விட்டது. எனவே தற்கொலைதான் எனக்கு இருக்கும் ஒரே முடிவு. எனது தற்கொலைக்கு அவர்தான் முழு காரணம். சுஷாந்த் சிங் போன்று நான் இறந்த பிறகு அவரை தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்