Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
மத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம்
மத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம்
மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை… பயந்து போய் விட்டார் என்று பிரபல தயாரிப்பாளர் பட விழாவில் பேசி இருக்கிறார்.
மத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம் – பிரபல தயாரிப்பாளர் காட்டம்
விஜய்
ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. புதுமுக நடிகர்களின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் 2016ம்
ஆண்டு மேற்கொள்ளப்பட்ட உயர் மதிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தயாரிப்பாளர் கே.ராஜன் கலந்து கொண்டார்.
இதில் அவர் பேசும் போது, “மணல் கொள்ளை, ஆணவக் கொலையை எதிர்த்து படம் எடுத்தால் சென்சார் பிரச்சனை வருவது இயல்பானதுதான்.
ராஜன்
தயாரிப்பாளர் ராஜன்
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை
சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜயை என்ன என்ன செய்தார்களோ, அந்த படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே
செய்வதில்லை… விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீசுவரர். பணம் அதிகம் சேர்த்துள்ளவர்களுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமையை எதிர்க்கும் தன்மை போய்விடும். எங்களைப் போன்ற ஏழைகள்தான் எதிர்த்து நிற்போம் என்றார்
ருத்ர தாண்டவம்’ இருமடங்கு வரவேற்பை பெறும் – ராதா ரவி
ருத்ர தாண்டவம்’ இருமடங்கு வரவேற்பை பெறும் – ராதா ரவி
மோகன் ஜி இயக்கி உள்ள ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின்
நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் மோகன்ஜி, டத்தோ ராதாரவி, நடிகை தர்ஷா குப்தா, இசையமைப்பாளர் ஜுபின், கலை
இயக்குனர் ஆனந்த், விளம்பர வடிவமைப்பாளர் பிரவீன், நடிகர் ஜே.எஸ்.கே கோபி, படத்தொகுப்பாளர் தேவராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நடிகர் ‘டத்தோ’ ராதா ரவி பேசுகையில், “இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தேன். ஏனெனில் ‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் வி. கே. ராமசாமி,
நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். நாங்கள்‘ருத்ரதாண்டவம்’ என்ற பெயரில் படத்தை எடுக்க திட்டமிட்டு விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனைத் தொடர முடியவில்லை.
இந்நிலையில் நண்பர் ஜேஎஸ்கே கோபியின் உதவியுடன் இயக்குனர் மோகன் ஜி என்னை சந்தித்தார். நீங்கள் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் தெரிவித்தார்
அப்போது நான் ஒரு தொகையை சம்பளமாக கேட்டேன் அதைக் கேட்டு அதிர்ந்து சென்றவர்தான் அதன் பிறகு திரும்பி வரவே இல்லை. பிறகு அவர் ஒரு சம்பளத்தை நிர்ணயித்து சொன்னார். அதன் பின் நடித்தேன்.
இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை. எது நியாயமானதோ அதை இயக்குனர் பேசியிருக்கிறார். இந்தப் படம் சிறப்பான படம். அனைவருக்கும் பொதுவான படம்.
படம் 1ஆம் தேதி வெளியான பிறகு, இதுதான் டாக் ஆஃப் த டவுனாக இருக்கும். தனுஷ் நடித்ததால் கர்ணன் படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ருத்ர தாண்டவம் படம் ரிச்சர்ட்
நடித்ததால் இரண்டு மடங்கு வரவேற்பைப் பெறும். அவருக்கும் இப்படத்தின் மூலம் பெயரும் புகழும் கிடைக்கும்” என்றார்.
மெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்
மெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் ரோபோ சங்கர், பிரபல நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.
மெழுகு சிலை – பிரபல நடிகையை புகழ்ந்த ரோபோ சங்கர்
ரோபோ சங்கர்
ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், ரோபோ சங்கர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சிண்ட்ரெல்லா. இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் ரோபா சங்கர் பேசும் போது, சிண்ட்ரெல்லா திரைப்படம் சிறப்பாக இருக்கும். இப்படம் தியேட்டரில் வருவது மகிழ்ச்சி. இப்படத்தில் ராய் லட்சுமியுடன் ஒரு காட்சி இருக்கிறது.
அதில் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும். நான் பேசும் போது, எந்த நடிகையாக இருந்தாலும் அந்த வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
ஆனால், ராய் லட்சுமி அந்த வசனங்களை ரசித்தார். ஒரு மெழுகு சிலை போல் அழகாக இருக்கிறார் ராய் லட்சுமி. அவரை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது என்றார்.
அஜித்தின் அசத்தல் வசனங்கள்…. மிரள வைக்கும் பைக் சேஸிங்
அஜித்தின் அசத்தல் வசனங்கள்…. மிரள வைக்கும் பைக் சேஸிங்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளனர்.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்
இந்நிலையில், வலிமை படத்தின் முன்னோட்ட காட்சிகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டு உள்ளன. இந்த வீடியோவில் அஜித்தின் அசத்தல் வசனங்கள் மற்றும் மாஸான
பைக் ஸ்டண்ட் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த முன்னோட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி
இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, அடுத்ததாக இந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இந்தி வெப் தொடரில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல தமிழ் நடிகை
விஜய் சேதுபதி
கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தற்போது இந்தியில் தயாராகும் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ்
மற்றும் டீகே இணைந்து இயக்குகின்றனர். இந்த வெப் தொடரில் விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரும் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று
வருகிறது. இந்த வெப் தொடரில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்க நடிகை ராஷி கண்ணா நடிக்கிறார்.
அதேபோல் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல தமிழ் நடிகை
ரெஜினா கசன்ட்ரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை ரெஜினா நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். நடிகர் விஜய் சேதுபதியும், ரெஜினாவும் ஏற்கனவே ‘முகிழ்’ என்கிற தமிழ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலா பால்.
மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலா பால்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால், கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
கையில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலா பால்… வைரலாகும் வீடியோ
அமலாபால்
தமிழில் மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் அமலாபால்.
தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.
இந்நிலையில், தற்போது வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறார். அதில் கையில் மது பாட்டிலுடன் நடனம் ஆடுகிறார்
. அமலாபாலின் சகோதரருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்கான பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
ஷில்பா ஷெட்டி கணவரின் மாஸ்டர் பிளான் – ஆபாச வீடியோக்கள் பல கோடி ரூபாய்க்கு பேரம்.
ஷில்பா ஷெட்டி கணவரின் மாஸ்டர் பிளான் – ஆபாச வீடியோக்கள் பல கோடி ரூபாய்க்கு பேரம்.
ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் மாஸ்டர் பிளான் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.ஷில்பா ஷெட்டி – கணவர் ராஜ்
குந்த்ராஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலையில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை
போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரியும் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டு இருந்த குந்த்ராவுக்கு 2 மாதம் கழித்து நேற்று மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது.
ஆபாச வழக்கில் தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட சில நிமிடங்களில், நடிகை ஷில்பா ஷெட்டி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மோசமான புயலுக்குப் பிறகு அழகான விஷயங்கள் நடக்கலாம் என்பதை நிரூபிக்க வானவில் உள்ளன என கூறி இருந்தார்.
ஷில்பா ஷெட்டியின் கணவர்
தற்போது வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக குந்த்ராவின் செல்போன், லேப்டாப் மற்றும்
ஹார்ட் டிரைவ் ஆகியவற்றிலிருந்து சுமார் 119 ஆபாச படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த வீடியோக்களை ரூ.9 கோடிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ்
2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ்
நடிகை மேக்னா ராஜ், பிக் பாஸ் பிரபலத்தை இரண்டாவதாக திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2வது திருமணம் செய்கிறாரா மேக்னா ராஜ்?
குழந்தையுடன் மேக்னா ராஜ்
பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா தனது கர்ப்பிணி மனைவி மேக்னா ராஜ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை தவிக்க விட்டு கடந்த ஆண்டு ஜூன் 7-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிரஞ்சீவி சார்ஜா மறைவிற்குப் பிறகு, சில தினங்களில் மேக்னாவுக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா எனப் பெயரிடப்பட்டது. குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
மேக்னா ராஜ்
இந்நிலையில் மேக்னா இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், பிக்பாஸ் சீசன் 4 கன்னட டைட்டில் வின்னர் பிரதமை தனது வருங்கால கணவராக தேர்ந்தெடுத்ததாகவும் செய்திகள் பரவி வந்தது. ஆனால், பிக்பாஸ் போட்டியாளர் பிரதம் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்
உதயநிதி ஸ்டாலினை திடீரென்று சந்தித்த வடிவேலு
உதயநிதி ஸ்டாலினை திடீரென்று சந்தித்த வடிவேலு
உதயநிதி ஸ்டாலினை திடீரென்று சந்தித்த வடிவேலுனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சரான லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளிடம் மிக மோசமான அதிகாரத்
தொனியோடு, இனவாதத்தைக் கக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளமை, தமிழ் அரசியற் கைதிகளின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தை அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தியுள்ளது.
லொஹானின் இராஜினாமா வெறும் கண்துடைப்பு. ஆகையால் அவரிடமிருக்கும் சகல பதவிகளையும் அபகரித்து, அவரை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி மக்களை படுகொலை செய்த மையானது ஒரு இன அழிப்பின் அதியுச்ச செயற்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தனது இன்றைய பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் நடிகர் வடிவேலு, உதயநிதி ஸ்டாலினை திடீரென்று நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினை திடீரென்று சந்தித்த வடிவேலு
வடிவேலு – உதயநிதி ஸ்டாலின்
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
வடிவேலு
வடிவேலு நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின்
ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் வடிவேலு, நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை இன்று நட்பு ரீதியாக சந்தித்து பேசியிருக்கிறார். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பேரு வச்சாலும்’ பாடல் எப்படி உருவானது?… ரகசியம் சொன்ன இளையராஜா
பேரு வச்சாலும்’ பாடல் எப்படி உருவானது?… ரகசியம் சொன்ன இளையராஜா
சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கும் டிக்கிலோனா படத்தில் இடம் பெற்றிருக்கும் பேரு வச்சாலும் வைக்காம போனாலும் என்ற பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
‘பேரு வச்சாலும்’ பாடல் எப்படி உருவானது?… ரகசியம் சொன்ன இளையராஜா
இளையராஜா
கமல் நடிப்பில் 31 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன். இப்படத்தில் 4 வேடத்தில் கமல்ஹாசன் நடித்திருப்பார். இளையராஜா இசையில் வெளியான
பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக ‘பேரு வச்சாலும் வைக்காம போனாலும்…’ என்ற பாடல் மிகவும் பிரபலம்.
இந்த பாடலை சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் மீண்டும் பயன்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலில் நடனம் ஆடிய அனகா ரசிகர்களிடம்
மிகவும் பிரபலமாகி விட்டார். அப்பாடலில் அவர் நடனமாடியதை மட்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்த பாடல் எப்படி உருவானது என்பதற்கான சுவாரஸ்யமான விளக்கத்தை கொடுத்துள்ளார் இளையராஜா. இப்பாடலுக்கான மெட்டை வாலியுடம் கூறிய போது, இது
என்னயா மெட்டு, இதற்கு எப்படி பாடல் எழுதுவது எனக்கேட்டார். அதற்கு ‘துப்பார்க்கு துப்பாய’ குறள் மூலம் வள்ளுவர் ஏற்கனவே இப்பாடலை எழுதிவிட்டார் எனக்கூறினேன். அதன் பின்னரே இப்பாடல் உருவானது என இளையராஜா கூறியிருக்கிறார்.
இளையராஜா இந்த பாடல் குறித்து பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தலைநகரில் சந்திக்கும் தல – தளபதி
தலைநகரில் சந்திக்கும் தல – தளபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் இருவரும் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைநகரில் சந்திக்கும் தல – தளபதி
விஜய் – அஜித்
வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்போது டெல்லியில் நடைபெற இருக்கும் தேசிய அளவிலான
துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வருகிறார்.
ஓய்வு நேரத்தில் டெல்லியில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க சென்றிருக்கிறார் அஜித். இதன் புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலானது.
தற்போது பைக்கில் தனியாக உலகம் சுற்றி வந்திருக்கும் மாரல் யசர்லோவை டெல்லியில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் – அஜித்
இந்நிலையில், நடிகர் விஜய்யை அஜித் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய்யும் டெல்லிக்கு சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் விஜய்
நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அஜித், விஜய் ஒரே சமயத்தில் டெல்லியில் இருப்பதால் இருவரும் நேரில் சந்திக்க இருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது. இவர்கள் சந்தித்துக் கொள்ளும் புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நடிகை மீரா மிதுனின் ஜாமீனுக்காக காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக்குழு
நடிகை மீரா மிதுனின் ஜாமீனுக்காக காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக்குழு
செல்வ அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேய காணோம்’ படத்தில் நடிகை மீரா மிதுன் பேயாக நடித்து உள்ளாராம்.
நடிகை மீரா மிதுனின் ஜாமீனுக்காக காத்திருக்கும் ‘பேய காணோம்’ படக்குழு
மீரா மிதுன்
குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ஆர்.சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு ‘பேய காணோம்’ என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். இந்த படத்தில் மீரா மிதுன்
முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா
ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, செல்வகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செல்வ அன்பரசன் என்பவர் இயக்கி உள்ளார்.
வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம், நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். ஆனால் முதன் முதலாக இப்படத்தில் ஒரு பேயை தேடுகிறார்கள்
அவர்கள்
பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுவரை 90 சதவீதம் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். ஏனெனில், இப்படத்தின் நாயகி மீரா மிதுன் சிறையில்
உள்ளதால், படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம். அவருக்கு ஜாமீன் கிடைத்தவுடன் இதர
10 சதவீதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த கவுதம் மேனன்
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த கவுதம் மேனன்
அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தில் இணைந்த கவுதம் மேனன்
கவுதம் மேனன், சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டான்’. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி, இப்படத்தின் மூலம் இயக்குனராக
அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் சூரி, சிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கவுதம் மேனன், சிவகார்த்திகேயன்
இந்நிலையில், இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கி
முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கவுதம் மேனன் – சிவகார்த்திகேயன் இணைந்து நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை, தாய் உள்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு
தந்தை, தாய் உள்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு
தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா உள்பட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் 11 பேர் மீது நடிகர் விஜய் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தந்தை, தாய் உள்பட 11 பேர் மீது நடிகர் விஜய் வழக்கு
தாய் ஷோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் விஜய்
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த ஆண்டு மத்தியில் அவர்களை நேரில் சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார்.
இதன்பின்னர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய அவரது தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கட்சித் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு
நவம்பரில் இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில், கட்சியை பதிவு செய்த தகவல் தவறானது என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க
நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜய், கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச் செயலாளரான எஸ்.ஏ.சந்திரசேகர் (தந்தை), பொருளாளர் ஷோபா சேகர் (தாய்) உள்பட 11 பேர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஏப்ரல் 30-ந் தேதி தொடரப்பட்ட இந்த வழக்கு ஆகஸ்டு 23-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, வழக்கில் எதிர் மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர் எவரும் ஆஜர் ஆகாததால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து, அன்றைய தினம் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்
தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்
தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தாஜ்மஹாலுக்கு திடீர் விசிட் அடித்த அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்
தாஜ்மஹாலில் அஜித்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், சமீப காலமாக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46-
வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு, 6 பதக்கங்களை வென்று அசத்தினார் அஜித்.
மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார் அஜித். இந்தப் போட்டி விரைவில் டெல்லியில்
தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்கு மேற்கொண்டு வருகிறார்.
அஜித்
இந்நிலையில், பயிற்சியின் இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் நடிகர் அஜித், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள், அவருடன்
புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தாஜ்மஹாலில் அஜித்துடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன
உயிரை விட பரீட்சை பெரிதல்ல… சூர்யா
உயிரை விட பரீட்சை பெரிதல்ல… சூர்யா
நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவதை அறிந்த நடிகர் சூர்யா, அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீட் தேர்வு பயத்தால் தனுஷ் என்ற மாணவரும்,
கனிமொழி, சௌந்தர்யா ஆகிய மாணவிகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்கள் தற்கொலை செய்வது குறித்து நடிகர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘மாணவர்கள் அனைவரும் அச்சம் இல்லாமல், நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று ஒரு
அண்ணனாக வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஒரு பரீட்சை உங்க உயிரைவிட பெருசு இல்ல.. மனசு கஷ்டமா இருந்தா, உங்களுக்கு பிடித்தவங்க… நண்பர்கள், ஆசிரியர்கள் யார்கிட்டையாவது மனசை விட்டு பேசுங்க… பயம், விரக்தி எல்லாம் கொஞ்ச நேரத்துல மறைந்துவிடும்.
சூர்யா
தற்கொலை செய்வது, உங்களை பிடித்தவர்களுக்கு மற்றும் அப்பா, அம்மாவுக்கு வாழ்நாள் தண்டனை. நான் நிறைய தேர்வில் தோல்வி அடைந்து இருக்கிறேன். கேவலான மார்க் எடுத்து
இருக்கிறேன். மதிப்பெண், தேர்வை விட சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. நம்பிக்கை, தைரியம் இருந்தால் வாழ்க்கையில் எல்லாரும் பெருசா ஜெயிக்கலாம்’ என்று கூறியிருக்கிறார்.
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்
காத்துவாக்குல இரண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருக்கும் விக்னேஷ் சிவனுக்கு நடிகை நயன்தாரா சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.
விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா கொடுத்த சர்ப்ரைஸ்
விக்னேஷ் சிவன் – நயன்தாரா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர், அதன் பிறகு விஜய்
சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை தயாரித்து இருந்தார்.
தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் இன்று தனது
பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்துகளை ரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் தனது சமூக வலைத்தள
பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில் ‘பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாராவுக்கு நன்றி’ என்று பதிவு செய்து இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.
பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்
பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்
கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா காலமானார்
பிரான்சிஸ் கிருபா
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் கிருபா. பள்ளிப்படிப்பை மட்டுமே நிறைவுசெய்த இவர் கவிதைகளை எழுதி, வாசகர்களை தன் வசம் ஈர்த்தவர்.
மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகியவை இவரின் முக்கிய படைப்புகளாகப் பார்க்கப்படுகிறது.
இவர் எழுதிய கன்னி எனும் புதினம், 2007 ஆம் ஆண்டில் சிறந்த புதினம் என்ற விருதைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருதையும் இவர் பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை ஆகிய படங்களில் பாடல்களை எழுதியுள்ள இவர், காமராஜரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி இருந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா, நேற்று இரவு காலமானார். பிரான்சிஸ் கிருபாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல… கமல்
கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல… கமல்
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகி வரும் கமல்ஹாசன், கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல என்று கூறியிருக்கிறார்.
கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம் போல… கமல்
கமல்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. 5-
வது சீசன் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. தற்போது இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.
கமல்
‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கான புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. தற்போது புதிய புரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘இந்த வீட்டில் கிசுகிசு பேசுறது ரொம்ப கஷ்டம்
போல…’ என்று பேசும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா
சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா
பி.வாசு இயக்கத்தில் உருவாக உள்ள ‘சந்திரமுகி’ படத்தின் 2-ம் பாகத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
சந்திரமுகி 2-ம் பாகத்தில் அனுஷ்கா?
அனுஷ்கா
ரஜினியின் ‘சந்திரமுகி’ படம் 2005-ல் திரைக்கு வந்து பெரிய வெற்றி பெற்றது. இதில் பிரபு, நாசர், ஜோதிகா, நயன்தாரா, வடிவேல், மாளவிகா ஆகியோரும் நடித்து இருந்தனர். பி.வாசு இயக்கினார்.
மீண்டும் இவரது இயக்கத்திலேயே ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.
‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. நகைச்சுவை வேடத்தில் நடிக்க தன்னை படக்குழுவினர் அணுகி இருப்பதாக வடிவேலு அண்மையில் தெரிவித்திருந்தார்.
அனுஷ்கா
இந்நிலையில், ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்கா ஏற்கனவே ‘சந்திரமுகி’ போன்ற திகில்
கதையம்சம் உள்ள ‘அருந்ததி’, ‘பாகமதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆதலால் ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்க அவரை அழைத்து இருப்பதாக கூறப்படுகிறது






