Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மன்னார் மாவட்டத்தில் 1960 கொவிட் தொற்றாளர்கள்
மன்னார் மாவட்டத்தில் 1960 கொவிட் தொற்றாளர்கள்
மன்னார் மாவட்டத்தில் இதுவரை மொத்தமாக 1960 தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் சனிக்கிழமை (11) மேலும் புதிதாக 95 கொரோனா தொற்றாளர்கள்
அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மாவட்டத்தில் 276 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ரி.வினோதன் குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்ளுள் 22பேர் உயிரிழந்துள்ளனர்.
வௌிநாட்டு கப்பல் சுற்றிவளைப்பு
வௌிநாட்டு கப்பல் சுற்றிவளைப்பு
ஹெரோயின் போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்த வௌிநாட்டு கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு குறித்த கப்பல் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தெற்கு கடலில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்போது கப்பலில் இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கப்பல் மற்றும் ஹெரோயின் தொகை இலங்கை கடற்பரப்புக்கு கடற்படையால் கொண்டு வரப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும்-சுமந்திரன்
விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும்-சுமந்திரன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார் .
இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் இன்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன், கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றோம் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது அது அனைவரும் அறிந்த விடயமாகும்
ஆனால், தற்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும் விசாரிக்க கோரி சம்பந்தனால் ஆவணம் ஒன்று அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.. அது முற்றிலும் ஒரு பொய்யான விடயம்.
இந்த விடயத்தில் ஊடகங்களும் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும் அதாவது ஒரு விடயத்தை செய்தியாக பிரசுரிக்கும் போது அதனை ஆராய்ந்த பின் செய்தியாக பிரசுரிக்க
வேண்டும் அத்தோடு தற்பொழுது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது தமிழரசுக்கட்சி தனியாகச் செயற்படப்போகின்றது கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுகிறது என அவ்வாறான ஒரு சம்பவமும் இடம் பெறாது.
இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து எந்த காலத்திலும் செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை என்றார்.
அதே போல எந்தளவுக்கு இணைந்து செயல்பட முடியுமோ அந்தளவுக்கு இணைந்து செயற்படுகின்றோம் அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய
கட்சிகள் எம்முடன் நல்ல உறவாக உள்ளார்கள். அவர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே இணைந்து செயற்படுகின்றோம் என கூறுகின்றார்கள்
நாங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒற்றுமையாக செயற்படுகின்றோம் எனினும் , கூட்டாகச் செயற்படும் போது பல பிரச்சனைகள், முரண்பாடுகள் ஏற்படும். ஆனால், தமிழ்
மக்களுக்காக பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரிந்தோ அல்லது தனித்தோ செயற்படவில்லை என்றார்.
4 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண்னொருவர் மீட்பு
4 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண்னொருவர் மீட்பு
நுவரெலியா டின்சின் தோட்டத்தின் வனப்பகுதிக்குள் தனது தயாருடன் ஞாயிற்றுக்கிழமை (05) விறகு சேகரிக்கச் சென்ற வேளையில் காணாமல் போயிருந்த ஜே.பாலன் காத்முனா தரணி என்னும் (25) வயது யுவதியை தேடும் பணிகளை இரண்டு அதிகாரிகள் மற்றும் 22 இராணுவ
சிப்பாய்களை அடங்கிய 3 வது இலங்கை இராணுவ சிங்கப்படையணியினரால் பொலிஸார் மற்றும் தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து ஆரம்பித்திருந்த நிலையில் குறித்த யுதவியை
நேற்று முன்தினம் (9) மாலை 6.30 மணியளவில் மீட்டு உடனடியாக நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் மோசமான வானிலை நிலவிய போதிலும் தேடுதல் பணிகளை முன்னெடுத்த குழுவினர் வனத்திற்குள் முற்றாக வரண்டு கிடக்கும் பகுதியொன்றுக்குள் இருந்து
குறித்த யுவதியை மீட்டுள்ளனர். 535 கே, பம்பரகல, அளுத்கொலனிய, சாந்திபுர என்னும் முகவரியில் வசிக்கும் குறித்த யுவதி தனது தாயுடன் விறகு சேகரிக்க அந்தப் பகுதிக்குச்
சென்றிருந்த நிலையில் அவர் வீட்டிற்கு வந்து சேரவில்லை என்பதால் அவரது தாயார் மகள் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கான உதவிகளை நாடடியிருந்தார்.
தகவல் கிடைத்தவுடன் சில மணிநேரங்களுக்குள் மேற்படி ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடந்த நான்கு தினங்களாக தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த தேடுதல்
குழுவினருக்கு தோட்ட தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு தற்பொழுது நுவரெலியா பொலிஸாரால் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 11 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 112 வது
பரிகேட் தளபதியின் வழிகாட்டலுக்கமைய 3 வது இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரியின் தலைமையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
உடுப்பிட்டி கிராமத்தில் பதற்றம் – இராணுவம் குவிப்பு
உடுப்பிட்டி கிராமத்தில் பதற்றம் – இராணுவம் குவிப்பு
உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதனால் அந்தக் கிராமத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாள்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது.
இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரின் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.
அதனால் அந்தக் கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்: உலக நாடுகளில் இலங்கை முன்னணியில்
தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம்: உலக நாடுகளில் இலங்கை முன்னணியில்
கொவிட் 19 வைரசு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை முன்னணியில் இருப்பதாக மூத்த சரவ்தேச ஆய்வாளர் விஜித்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது
பொதுமக்களின் கடமையாகும். கட்சி பேதமின்றி இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தாலி செல்லும் மகிந்தா – போராட்டம் நடத்த தமிழர்கள் முடிவு
இத்தாலி செல்லும் மகிந்தா – போராட்டம் நடத்த தமிழர்கள் முடிவு
பிரதமர் ; மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் ஆகியோர் இத்தாலிக்கு விஜயம் செய்யவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரின் இந்த வியத்தை குறிப்பிட்டார்.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுகமகே ,அரசாங்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்துகொண்ட இந்த மகாநாட்டில் ,இலங்கையில்
இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பாக புனித பரிசுத்த பாப்பரசரிடம் ,பிரதமரும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரும் தெளிவுபடுத்த இருப்பதாக கூறப்படுவதாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்
,இருதரப்பினருக்கிகடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதற்காகவே இந்த விஜயம் இடம்பெறுகிறது இந்த விஜயத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்
தாக்குதல்கள் தொடர்பான தேவையான விடங்கள் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து பரிசுத்த பாப்பரசரிடம் அவசியம் தெளிவுபடுத்துவார்கள் என்று தெரிவித்தார்.
பறக்கும் படை வேட்டை – 375 பேர் கைது
பறக்கும் படை வேட்டை – 375 பேர் கைது
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியோர் தொடர்பிலான விபரங்களுடன் பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளது.
அதில்,
தனிமைப்படுது்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ், இதுவரையிலும் 67,342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மணிநேரத்தில்
செப்டெம்பர் 7 ஆம் திகதி காலை 6 மணிமுதல் செப்டெம்பர் 8 ஆம் திகதி காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ்.
கைதானவர்களின் எண்ணிக்கை -675
கைப்பற்றப்பட்ட வாகனங்கள்- 42
சோதனைச் சாவடிகளில்
மேல் மாகாணத்தில் இருந்து வேறு மாகாணங்களுக்குள் நுழையும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிபோது சோதனை செய்யப்பட்ட விவரம்
வாகனங்கள் -812
நபர்கள்- 1,206
இலங்கையில் புயல் – மீனவர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் புயல் – மீனவர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை ,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கானஇ நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2021 செப்டம்பர்08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது
கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
கொரனோ விதிகளை மீறிய 665 பேர் கைது
கொரனோ விதிகளை மீறிய 665 பேர் கைது
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 665 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவௌியை பேணாமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது 69 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 66,668 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் நாடு பூராகவும் முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது..
2 இலட்சம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசி
2 இலட்சம் பேருக்கு இரண்டாவது தடுப்பூசி
நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் 88,441 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 200,961 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 887,724 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை 159,088 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் 43,075 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
அதேபோல், இதுவரை 376,383 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில், 216,308 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 772,396 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் மொடர்னா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 705,610 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்து பிரான்சுக்கான விமான சேவைகள் மீள ஆரம்பம்
இலங்கையில் இருந்து பிரான்சுக்கான விமான சேவைகள் மீள ஆரம்பம்
இலங்கையில் இருந்து மீள் பிரான்சுக்கான இலங்கை எயார் லங்கா விமான சேவைகள் மீள
ஆரம்பிக்க பட உள்ளதாக விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது
கட்டம் கட்டமாக முழுமையான பயண சேவைகள் இடம்பெறும் என அதில் தெரிவிக்க பட்டுள்ளது
கடல்வழியாக இலங்கை நுழைய முயன்ற பெண் கைது
கடல்வழியாக இலங்கை நுழைய முயன்ற பெண் கைது
தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற, 19 வயது ஒருவர், இன்று (06) காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி (வயது19) என்ற யுவதியே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவது, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இலங்கையில் இருந்து தப்பி, தமிழகத்தை சென்றடைந்து, அங்கு உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தார்.
அங்கு நபரொருவருடன் ஏற்பட்ட காதலால், 2018ஆம் ஆண்டு விமானம் மூலம், சென்னைக்கு வந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
விசா முடிந்த பின்னர், இலங்கைக்கு திரும்பி செல்லாமல், சென்னை – வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், அவர் சட்டவிரோதமாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், முல்லைத்தீவு – முள்ளியவளை கிராமத்தில் வசித்து வரும் குறித்த பெண்ணின் தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால், இலங்கைக்கு திரும்பி செல்வதற்காக இன்று (6) அதிகாலை, தனுஷ்கோடியில் இருந்து நாட்டு படகு மூலம் சட்டவிரோதமாக முல்லைத்தீவுக்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது, தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டு பகுதியில் வைத்து, இந்திய கடலோர காவல்படையினரின் ரோந்து படகு வந்ததை அறிந்த படகோட்டி, குறித்த பெண்ணை, முதல் மணல் திட்டு பகுதியில், இறங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், இராமேஸ்வரம் – மெரைன் பொலிஸார், படகில் சென்று குறித்த பெண்ணை கைது செய்து, தனுஷ்கோடி அழைத்து வந்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இராமேஸ்வரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில், அவரை ஒப்படைத்தனர்.
அத்துடன், அவரிடம் இருந்து கடவுச்சீட்டு, இலங்கை குடியுரிமை ஆவணங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தனுஷ்கோடியில் இருந்து சட்டவிரோதமாக நாட்டு படகில், அப்பெண்ணை அழைத்துச் சென்ற முகவரை தேடப்பட்டு வருகின்றார்.
விசாரணைகளின் பின்னர், அவரை இராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரிஷாட் பதியூதீன் நீதிமன்றில்
ரிஷாட் பதியூதீன் நீதிமன்றில்
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (06) ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டில் தீ காயத்திற்கு உள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
சிறுமி உயிரிழந்தமை தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின்
மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கமர்த்திய தரகர் ஆகிய நால்வரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மற்றுமொரு வழக்கில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுத்து
வைக்கப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்த வழக்கில் ஐந்தாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
கொரனோ நிலவரம் பாராளுமன்றில் விவாதம்
கொரனோ நிலவரம் பாராளுமன்றில் விவாதம்
ஓகஸ்ட் 30ஆம் திகதி முதல் நாடு பூராவும் அமுல்படுத்தப்பட்டுள்ள
அவசரகால நிலைமை குறித்து, பாராளுமன்றத்தில் இன்று (06)
விவாதிக்கப்படவுள்ளது.
அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்வதற்காக அவசர கால
நிலைமை நாடளாவிய
ரீதியில் அச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
என்பதுடன் அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இன்றையதினம் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டிருந்த
வாய்மூல விடைக்கான
வினாக்களுக்கு பிரிதொரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது
என பாராளுமன்ற தொடர்பாடல் அலுவலகம் அறிவித்துள்ளது.
கொரனோவுக்கு விதானையார் ஐவர் மரணம்
கொரனோவுக்கு விதானையார் ஐவர் மரணம்
கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 5 கிராம உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர் என
இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.
அத்துடன், 500க்கு மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலுக்கு மத்தியில், பாரிய அர்ப்பணிப்புடன் கடமையாற்றும் சுமார 14,000க்கும்
அதிகமான கிராம உத்தியோகத்தர்கள் எவ்வித மேலதிக கொடுப்பனவுகள் இன்றி கடமையாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊரடங்கு 13 வரை நீடிப்பு – தினறும் கோட்டா அரசு
ஊரடங்கு 13 வரை நீடிப்பு – தினறும் கோட்டா அரசு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது
ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
இந்த சட்டமானது எதிர்வரும் 13 ஆம் திகதிவரை நீடிக்க பட்டுள்ளது என ஆளும் அரசு தெரிவித்துள்ளது
இலங்கையில் 11,700 பொலிஸாருக்கு கொரனோ
இலங்கையில் 11,700 பொலிஸாருக்கு கொரனோ
கொரோனா ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நாட்டின் உள்ளக பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வீரசேகர கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் கூட போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகள் தலைதூக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
போர்வைக்குள் வந்தது `மூடி மறைப்பு- சஜித் பிரேமதாஸ
போர்வைக்குள் வந்தது `மூடி மறைப்பு- சஜித் பிரேமதாஸ
அத்தியாவசிய பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தும் போர்வையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருக்கும் அவசரகால சட்டம், அரசாங்கத்தின் தவறு மற்றும் இயலாமையை மூடி
மறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட தன்னிச்சையான செயற்பாடாகும் எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, அதனை வன்மையாகக் கண்டிப்பதாக அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
2003ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நுகர்வோர் சட்டத்தின் ஊடாக பல செயற்பாடுகளை செய்ய
முடியும் என்றாலும் அவசர அவசரமாக அரசாங்கம் அவசரகால சட்டத்தைக் கொண்டு வருவதன்
மூலம், இன்னும் ஆபத்தான செயற்பாடு ஒன்றுக்கு அரசாங்கம் இழுத்துச் செல்வதாகவே அமைகிறது என்றார்.
நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு மாற்றி, மனித உரிமைகளுக்கு கூட சவால் விடுவதே இதன்மூலம் அரசாங்கத்தின் நோக்கமாக அமைகிறது என்றார். அரசாங்கம் அவசரகால சட்டத்தைக் கொண்டு
வந்த உடனேயே, இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து விடாது என தெரிவித்த அவர், கொரோனா ஒழிப்புக்காக அவசரகால சட்டத்தின் உதவியும் கிடைக்காது என்றார்.
நாட்டின் அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தவோ அல்லது வெளிநாட்டு இருப்பை போதியளவு வைத்திருக்கவோ முடியாத நிலையில், மக்களை துன்பத்தில் ஆழ்த்துவதற்கே அவசரகாலச் சட்டம் அரசாங்கத்தால் தேவைப்படுகின்றது என்றார்.
ஜனநாயகத்தை தலைகீழாகப் புரட்டி, சர்வாதிகாரத்துக்கு வித்திடும் இந்த அவசரகால சட்டம் தொடர்பான வர்த்தமானியை உடனடியாக மீளப் பெறவேண்டுமென, ஜனாதிபதியிடம்
கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்த அவர், நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க நுகர்வோர் சட்டத்தை செயற்படுத்தவேண்டும். அத்தியாவசியப் பொருள்களை பதுக்குபவர்களுக்கு எதிராக அதனூடாக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்
கொரனோ விதிமுறைகளை மீறிய 577 பேர் கைது
கொரனோ விதிமுறைகளை மீறிய 577 பேர் கைது
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 577 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 63,908 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று மேல்மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் பகுதிகளில் வானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அங்கு அமைக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில், 994 வாகனங்களில் பயணித்த 1,796 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






