Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கோட்டா வீட்டுக்கு பறந்த த மகிந்தா – அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்
கோட்டா வீட்டுக்கு பறந்த த மகிந்தா – அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்
இலங்கையில் ஆளும் ராஜபக்சயா குடும்பத்தின் ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதி இரங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்
கோட்டாவின் வீடு அருகே மக்கள் வாகனங்களை எரியூட்டிய நிலையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது
நாடெங்கும் தற்போது பெரும் போர் பற்றி வெடித்துள்ளது ,இதனால் ஆளும் ஆட்சியார்கள் பெரும் பீதியில்
உறைந்துள்ளனர்
கோட்டா வீட்டுக்கு மகிந்த குடும்ப சகிதம் விரைந்து மந்திராலோசனை நடத்தி வருகிறார்
நாடெங்கும் போராட்டம் – பீதியில் கோட்டா குடும்பம்
நாட்டின் பல இடங்களிலும் பல்வேறானா போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால், சில இடங்களில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
1) பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தச்சர்கள் ஆர்ப்பாட்டம். செய்கின்றனர். மொரட்டுவை நகர சபையை சுற்றிவளைத்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான
நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மொரட்டுவ குருசா சந்தியிலிருந்து காலி வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
2) புத்தளம்- சிலாபம் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால், அவ்வீதியின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
3) குடும்பநல சுகாதார ஊழியர்கள், மருதானை டீன்ஸ் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பு நகர சபை மற்றும்
அதனை அண்மித்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது
நுவரெலியா பஸ் நிலையத்திற்கு முன்பாக மக்கள் போராட்டம்
டீசல் தட்டுப்பாடு மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு
அதிகரித்து வருவதை கண்டித்து நுவரெலியாவில் பெருந்திரளான மக்கள் இன்று (01) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நுவரெலியா பஸ் நிலையத்திற்கு முன்பாக பெருமளவான மக்கள் திரண்டதால் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் சேவைகள் பல மணித்தியாலங்கள் தடைப்பட்டன.
பின்னர் நுவரெலியாவில் இருந்து கிரகரி லேக் பார்க் அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள்
பேரணியாக சென்று நுவரெலியா – பதுளை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் அப்பாவி மக்கள் 45 பேர் கைது
வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் அப்பாவி மக்கள் 45 பேர் கைது
கடந்த இரவு மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு அங்கு வன்முறையில் ஈடுபட்டனர்
என்ற குற்ற சாட்டில் 45 சிங்களவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் போலீசார் தொடர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்
கோட்டா வீடு அருகே மக்கள் ,இராணுவம்,போலீசார் மோதல் – 37 பேர் காயம்
கோட்டா வீடு அருகே மக்கள் ,இராணுவம்,போலீசார் மோதல் – 37 பேர் காயம்
இலங்கை ஆளும் ஜனாதிபதி கோத்தபாயவின் வீடு அருகே மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்
கோபத்தில் கூடிய மக்கள் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட இராணுவத்தினரை கடுமையாக தாக்கினர்
இதில் இருபது இராணுவத்தினர் உள்ளிட்ட 37 பேர் படுகாயமடைந்த நிலையில்
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
கோட்டா வீடு முன் பேரூந்துக்கு தீ வைத்தவர் இவர்தானாம்
மிரிஹானையில் ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு (31) முன்னெடுக்கப்பட்ட போராட்டம் உக்கிரமடைந்தபோது, படைகளை ஏற்றிக்கொண்டு பஸ்ஸொன்று வந்தது.
போராட்டத்தின் உச்சத்தில், அந்த பஸ் தீப்பற்றி எரிந்தது. அதன்பின்னர், சில வாகனங்களும் சேதமாக்கப்பட்டன.
போராட்டகாரர்களில் ஒருவரே பஸ்ஸூக்கு தீ வைத்தார் என்றும் கூறப்பட்டது. எனினும், போராட்டத்தை குழப்பி திசைதிருப்பவே பஸ்ஸூக்கு தீ வைக்கப்பட்டது என்றும்
சூழ்ச்சிகாரர்களே இவ்வாறு செய்தனர் என்றும் சொல்லப்படுகின்றது.
எனினும், பஸ்ஸின் பின் டயருக்கு தீ மூட்டும் ஒருவர் தொடர்பில் புகைப்படம் வெளியாகியுள்ளது..
ஒரு டொலர் 275 ரூபாவாக அதிகரிப்பு
ஒரு டொலர் 275 ரூபாவாக அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் எழுந்த
பணவீக்கத்தை அடுத்து ஒரு அமெரிக்கா டொலரின் பெறுமதி 275 ரூபாவக வீழ்ச்சியடைந்துள்ளது
மேலும் இந்த பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர் பார்க்க படுகிறது
ஆளும் ஆட்சி மாற்ற பட்டால் மட்டுமே நாட்டினை இந்த பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடு வரமுடியும் என எதிர் பார்க்க படுகிறது
கொழும்பு நகரில் ஊரடங்கு – போலீசார் இராணுவம் குவிப்பு
கொழும்பு நகரில் ஊரடங்கு – போலீசார் இராணுவம் குவிப்பு
ஆளும் கோட்டா அரசுக்கு எதிராக நாடெங்கும் தொடர் போராட்டங்கள் வெடித்து வருகிறது
இதனால் கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
தற்போது Colombo North, South, Colombo Central and Nugegoda பகுதிகளில் இந்த ஊரடங்கு அமூல் அப்டுத்த பட்டுள்ளது
பிரதமர் அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க உத்தரவு
பிரதமர் அலுவலக ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்க உத்தரவு
இலங்கை பிரதமர் மகிந்தவின் அலுவல்களை கவனிக்கும் ஊழியர்கள்
யாவரும் வீட்டில் இருந்த படி வேலை பார்க்கும் படி மகிந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்
எரிபொருளை மீத படுத்தும் நோக்குடன் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
நாடு போற போக்கை பாரு கந்தசாமி
பசில் மகள் கணவன் – இந்திய றோ உளவாளி
பசில் மகள் கணவன் – இந்திய றோ உளவாளி
இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர்
விமல் வீரவன்ச, லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றி எரியும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் என்ன நடக்குமென வினவினார்கள். இதற்கு சிரித்தப்படியே அதிகமாக சிந்திக்க
வேண்டாமென பசில் கூறினார். அதாவது அதிகமாக நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பசிலை இங்கிருக்கவிடமாட்டார்கள் என்பதாலேயே பசில் அவ்வாறு கூறினார் என்றார்.
பசிலின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம் நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பசில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது எனவும் தெரிவித்தார்.
இதேவேளை பசில் ராஜபக்ஷவின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில்
திருமணம் முடித்துள்ள பசிலின் மகளின் மாமனார் றோ உளவு அமைப்பின் பிரதானியின் மகன் எனவும் தெரிவித்தார்.
இலங்கைக் கேட்கும்போதெல்லாம் கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய
தேவைகள் இந்தியாவக்கு இருக்காதா? லிற்றோ நிறுவனத்தை
இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
பிளேட்டினால் கைகளை வெட்டும் மாணவர்கள்
பிளேட்டினால் கைகளை வெட்டும் மாணவர்கள்
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள்
பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளார்கள் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர்.
பின்னர் குருதியை கடதாசி மூலம் துடைத்துவிட்டு, கிருமிதொற்று நீக்கி (sanitizer) காயத்தின் மேல் வீசிறிக்கொண்டதாக நேரில் பார்த்த சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை குறித்த மாணவர்கள் சாதரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவரை ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகள் ஒருவித உளவியல் பிரச்சினையாக கூட இருக்கலாம் என தெரிவிக்கும் வைத்தியர்கள், மாணவர்களுடன்
உரையாடி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மனைவியை குத்தி கொன்ற கணவன் – சோகத்தில் கிராமம்
மனைவியை குத்தி கொன்ற கணவன் – சோகத்தில் கிராமம்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (30) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சவுக்கடி முருகன் கோவில் வீதியை அண்டி வசிக்கும் 38 வயதுடைய பெரியான் சிவரஞ்சனா என்பவரே மார்புப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கத்தியால் குத்தப்பட்டு, இரத்தம் வழிந்தோடிய நிலையில் அவர் வீட்டு வாசலில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
உறவினர்களால் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணின் கணவன் சிவரஞ்சன் தயாளகுமார் (வயது 40) தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சிவரஞ்சான அவரது கணவனால் ஏற்கெனவேயும் பலமுறை தாக்கப்பட்டுள்ளார் எனவும் கொலை செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சிவரஞ்சனாவுக்கு தலையில் ஏற்பட்ட காயத்துக்கு 13 தையல் கட்டுக்கள் இடப்பட்டு, குணமடைந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனா 16 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றே தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் பராமரித்து வந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி – நாடு மூடப்படும் அபாயம்
சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை
முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆகையால் சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம்
யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன
ஆலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
ஆலயத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தினுள் இன்று (31) அதிகாலை 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த கிறிஸ்தவ தேவாலயத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ
இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சடலம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நபரின் சடலத்திற்கு அருகே பயணப்பொதியொன்றும் காணப்படுவதுடன் குறித்த நபர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சீனா ஒப்பந்தம் தட்டி பறிப்பு: இலங்கைக்கு 3 தீவுகளில் மின்உற்பத்தி நிலையம் கட்டி கொடுக்கிறது இந்தியா
சீனா ஒப்பந்தம் தட்டி பறிப்பு: இலங்கைக்கு 3 தீவுகளில் மின்உற்பத்தி நிலையம் கட்டி கொடுக்கிறது இந்தியா
யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த மின் திட்டப் பணிகளை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கி அதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
சீனா ஒப்பந்தம் தட்டி பறிப்பு: இலங்கைக்கு 3 தீவுகளில் மின்உற்பத்தி நிலையம் கட்டி கொடுக்கிறது இந்தியா
BIMSTEC-ல் கலந்து கொண்ட ஜெய்சங்கர் (PTI PHOTO)
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்று உள்ளார். இதில் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தியாவிடம் செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் முன்னிலையில் கையெழுத்தானது.
யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு, அனலைத் தீவு ஆகிய தீவுப்பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவை சேர்ந்த சினோசோர்- எடெக்வின் நிறுவனத்துக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்து இருந்தது.
தமிழகத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள இலங்கை தீவுகளில் சீன நிறுவனம் மின் உற்பத்தி பணியை தொடங்க அனுமதி அளிப்பது தமிழகத்தை ஒட்டிய பாக். வளைகுடா பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கும் என மத்திய அரசு அப்போதே தனது அதிருப்தியை இலங்கை அரசிடம் தெரிவித்தது.
இந்த நிலையில் மின் உற்பத்தி திட்டப் பணிகளை கடனுக்கு பதிலாக மானிய அடிப்படையில் நிறைவேற்றி தருவதாக இந்தியா இலங்கையிடம் தெரிவித்தது.
இதையடுத்து மின் திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்தது. இதற்கு அதிருப்தி தெரிவித்த இலங் கைக்கான சீன தூதர், இலங்கையின் இந்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டை பாதிக்கும் என்றார்.
இதற்கிடையே கடல்சார் மீட்பு கூட்டு மையம் அமைக்க இந்தியா இலங்கை அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட வாய்ப்பு உருவாகி இருப்பதால் வடக்கு பகுதியில் பாயின்ட் பெட்ரோ, பெசாலை, குருநகரில் மீன்பிடி துறைமுகம் அமைக்க இந்தியா உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் திட்டமிடப்பட்டிருந்த மின் திட்டப் பணிகளை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கி அதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
முன்பு சீன நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு அருகே உள்ள இலங்கை யாழ்ப்பாணத்தில் சீனா கால் பதிக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் இந்தியா நடவடிக்கை எடுத்து சீனாவிடம் மின் திட்டங்களை
தட்டி பறித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழில் வாலிபன் கைகள் கட்ட பட நிலையில் மீட்பு
யாழில் வாலிபன் கைகள் கட்ட பட நிலையில் மீட்பு
புத்தூர் மேற்கு, நவக்கிரியில் கடத்தப்பட்ட இளைஞன் இரண்டு நாள்களின் பின்னர் கைகள் கட்டடப்பட்ட நிலையில் நேற்று (30) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நவக்கிரி சனசமூக நிலையத்தடியில் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புத்தூர் மேற்கு, நவக்கிரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞனை கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டு வளாகத்தில் இருந்து எவரோ பாய்ந்து வெளியே செல்வதை அவதானித்த இளைஞன் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார் என்றும், வெளியே சென்ற இளைஞனை வீட்டின் முன்புறம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் துரத்திச் சென்றனர் என்றும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
அதன்பின்னர் இளைஞன் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது அவரது கைபேசி வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அதேநேரம், கடந்த 12ஆம் திகதி இளைஞரின் வீட்டுக்கு வந்து இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் வெட்டுக்காயத்துக்கு உள்ளான இளைஞரின் தந்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இரண்டு நாள்களின் பின்னர் இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலையில் நேற்று மாலை நவக்கிரி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் மீட்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனிடம் சிகிச்சையின் பின்னர் வாக்குமூலம் பெறப்படும் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்
ஹட்டனில் பெரும் பதற்றம் – அரச பேரூந்துகள் மறிப்பு
ஹட்டனில் பெரும் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. வானங்கள்
அனைத்தும், பஸ் தரப்பிடத்துக்கு முன்பாக இருக்கும் அரசமர சந்தியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
பஸ் தரிப்பிடத்தில் இருந்து கொழும்பு மற்றும் வெளியிடங்களுக்கு புறப்பட்ட இ.போ.ச பஸ்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன.
தங்களுக்கு டீசல் கொடுக்காமல், இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ்களுக்கு மட்டுமே எப்படி, டீசல் கொடுக்கமுடியும்
என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் கேட்கின்றனர்.
ரணில் திடீர் ஆலோசனை – கோட்டாவுக்கு ஆப்பு வைப்பாரா
ரணில் திடீர் ஆலோசனை – கோட்டாவுக்கு ஆப்பு வைப்பாரா
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா சிறிகொத்தாவில் திடீரென கூடி கட்சி முக்கியஸ்தர்களிடம் பேசி வருகிறார்
இந்த சந்திப்பில் நாட்டு நிலைமை மற்றும் தமது செயல்பாடுகள் தொடர்பில் பேச பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது
இந்த கோழிகளை சாப்பிட வேண்டாம் என எச்சரிக்கை
கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புடன், மாத்தளை மாவட்டத்தில் கோழி
பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலைக்கும் விற்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, மாத்தளை மாவட்டத்தில் குறைந்த விலைகளில் கோழி இறைச்சி விற்பனை
செய்யப்பட்டால், அவற்றை கொள்வனவு செய்ய வேண்டாம் என,கோழி இறைச்சி விற்பனையாளர்கள் நுகர்வோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பண்ணைகளில் வேலை செய்யும் பணியாளர்களைப் பயன்படுத்தி சில இடைத்தரகர்கள் இவ்வாறான செயல்களை செய்வதாகவும் குறிப்பாக பண்டிகைக்
காலங்களில் இவ்வாறு உயிரிழக்கும் கோழிகளை வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பாமல், நுகர்வோரின் வீடுகளுக்கே நேரடியாக
அனுப்பும் செயற்பாடும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
10 மணிநேரம் மின்வெட்டு
10 மணிநேரம் மின்வெட்டு
இன்று இலங்கையின் பல் வேறு பகுதிகளில் பத்து மணிநேரம் மின்சார
தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது
நாடு பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன
இதனால் தொழில் துறை உள்ளிட்ட வர்த்தக செயற்பாடுகள் பாதிக்க பட நிலையில் உள்ளமை குறிப்பிட தக்கது








