Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையால் நான்கு பேர் கைது

காவல்துறையால் நான்கு பேர் கைது

இலங்கையில் ,ஒஸ்ரலியா இலங்கைக்கு இடையில் இடம்பெற்று வரும் கிரிக்கட் போட்டியின் பொழுது சர்வதேச விளையாட்டு மைதானத்தில் விளையாட்டை பார்வையிட வந்த பேராதனை பல் கலைக் கழகத்தை சேர்ந்த நான்கு மாணவிகள் கைது செய்ய பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்ய பட்டவர்கள் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

காவல்துறையினர் பணிகளுக்கு இடையூறு
விளைவித்தனர் என்ற குற்ற சாட்டிலையே இவர்கள் கைது செய்ய பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற 7 தமிழர்கள்

    இலங்கையில் இருந்து தமிழகம் சென்ற 7 தமிழர்கள்

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல்வழியாக ஏழு தமிழர்கள் தமிழகம் சென்றடைந்துள்ளனர்

    உயிரை பணயம் வைத்து உயிராபத்து நிறைந்த கடல் வழியை கடந்து தமிழகம் சென்றடைந்துள்ளனர்

    இலங்கையில் இருந்து இவ்விதம் தொடராக தமிழர்கள் தமிழகம்சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி, இன்று முதல் மூடப்படும்

      மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி, இன்று முதல் மூடப்படும்

      நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி இன்று (17) நல்லிரவு 12 மணி முதல் மூடப்படும் என்று இலங்கை மின்சார பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

      ஏற்கனவே திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு நடவக்கைகளுக்காக , இந்த மின் உற்பத்தி நிலையத்தை 75 நாட்களுக்கு மூட வேண்டிய நிலை ஏற்படும் என்று

      மின்சார பொறியியல் சங்கத்தின் பொதுச் செயலாளர் எரங்க குடாஹேவா தெரிவித்துள்ளார்.

      நுரைச்சோலையின் ‘யூனிட் 2’ பகுதியே இவ்வாறு மூடப்பட உள்ளதாக அவர் கூறினார்.

      ‘சுமார் இரண்டு வருடங்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்த போதிலும், கொவிட் நிலைமை காரணமாக சீன நிறுவனத்தால் இலங்கைக்குத் திரும்ப முடியவில்லை. எனவே இரண்டு வருடங்கள் முன்னெடுத்துச் சென்றோம் கட்டாயமாக

      பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் செப்டம்பர் வரை மட்டுமே எம்மிடம் நிலக்கரி உள்ளது. யுனிட் எண் 2 மற்றும் யுனிட் எண் 3 ஐ 75 நாட்களில் நிறுத்தும் திட்டமும் உள்ளது. அதன் பிறகு சுமார் 45%, நிலக்கரி மின்

      நிலையத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வோம். இது சுமார் 30% குறைவடையும். குறைவடைகின்ற 15% ஐ குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை ,நீர் மற்றும் எரிபொருளில்

      இருந்து எங்களால் உற்பத்தி செய்ய முடியும்.’ எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மின் துண்டிப்பில் மாற்றம் ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

      தற்போது 3 மணி 20 நிமிடம் மின் துண்டிப்பை முன்னெடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்

      துண்டிப்பில் மாற்றம் ஏற்படாது. திங்கட்கிழமை முதல் மின் துண்டிப்பு நேரம் இதைவிட அதிகரிக்கும். தற்போது எரிபொருள் மற்றும் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு

      ஏற்பட்டுள்ளது. அதை எப்படிப் பெறுகிறோம் என்பதில் எந்த நம்பகத்தன்மையும் இல்லை. இருப்பினும், நாங்கள் தற்போது எங்களால் முடிந்தவரை முயற்சித்து

      வருகிறோம். எனினும் இலங்கை மின்சார சபை தற்போது 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு மேற்கொண்டு வருகின்றது.

      இந்த மின் துண்டிப்பு நான்கு பிரதான வலயங்களின் கீழ் மேற்கொள்ளப்படும்
      என்றும் மின்சார பொறியியல் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

        இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

        இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்
        எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

        இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனடிப்படையிலான கப்பலே இது என எதிர் பார்க்க படுகிறது ,
        இதுவே இறுதி இந்தியா உதவி கப்பல் என தெரிவிக்க படுகிறது .

        இந்தியா உதவியில் பல கப்பல்களில் எண்ணெயை உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கப்பட்டு வந்தது ,


        தமிழர்களை கொலை புரிந்த அரசுடன்இந்தியா மோடி அரசு கூடி குழவி வருகின்றமை குறிப்பிட தக்கது .

          Posted in இலங்கை செய்திகள்

          இந்திய மீனவர்கள் 2 977 விடுதலை

          இந்திய மீனவர்கள் 2 977 விடுதலை

          இலங்கை கடல் பரப்பிற்குல் அத்து மீறி நுழைந்து மீன்படியில் ஈடுபட்டனர் என இந்திய மீனவர்கள் 2 977 விடுதலை செய்ய பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

          இந்திய மீனவர்கள் சிறை பிடிப்பு தொடர் நிகழ்வுகள் அரசியாலாக்கி வரும் இலங்கை அரசுக்கு ,தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதர நெருக்கடியை அடுத்து விடுதலை செய்து வருகிறது


          மேலும் தொடர் கைது இடம் பெற்றால் இலங்கைக்கு பெரும் ஆபத்தான ஒன்றாக மாதம் பெற்று விடும் என்ற நிலையில் இலங்கை தற்போது கைதுகளை தவிர்க்க வேண்டிய நிலைக்கு ஏற்பட்டுள்ளது.

          இந்த விடுதலை தமிழகத்தில் மோடி கட்சி அதிகாரத்திற்கு ஏறிட இவை சாதமாக விளங்கும் என மோடி கமெடி அரசு எதிர் பார்க்கிறது.

          ஆனால் இது தமிழகத்தில் சாத்தியமான ஒன்றாக மாற்றம் பெறுமா என்பது பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .

            Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

            மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை

            மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை
            நாம் தமிழர், இந்திய செய்திகள்

            தமிழக மீனவர்கள் தமது கடல், எல்லைக்குள் நுழைந்தனர் என்ற குற்ற சாட்டில் மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் வதை புரிந்துள்ள சம்பவம் நாம் தமிழர் கட்சி வாயிலாக அம்பலமாகியுள்ளது .

            திருமணம முடித்த இளம் வாலிபர் ஒருவரை நிர்வாணமாக்கி அடித்து எரித்து சுட்டு கொன்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.

            இவ்வாறு சிங்கள இராணுவத்தால் மீனவர்களை நிர்வணமாக்கி சிங்கள இராணுவம் புரிந்த வதை தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

            தமிழக மீனவர்களை வன்மத்துடன் சிங்கள இராணுவம் நடத்தும் இந்த கொடுமைகளுக்கு மோடி அரசும்
            உடைந்தை என நாம் தமிழர் கட்சி இடித்துரைத்துள்ளது.

            இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

              Posted in இலங்கை செய்திகள்

              கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற வைத்தியர்

              கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற வைத்தியர்

              இலங்கை வைத்தியாசலை ஒன்றில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர் திருமணமாகாத கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற நீதிமன்ற வழக்கில் வைத்தியர் குற்றவாளி என கருத்தை பட்டு 15 வருட சிறை தணடனை வழங்க பட்டுள்ளது

              கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து யன்னல் வழியாக கொன்று வைத்தியர் வீசினார் குற்ற சாட்டுக்கள் பிரதானமாக வைக்க பட்டுள்ளது

              இவ்வாறு படுகொலை செய்ய பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்க பட்டுள்ளது

              நீண்டகாலமாக இடம்பெற்று வந்த கருகலைக்க வந்த பெண்ணை கற்பழித்து கொன்ற வைத்தியர்
              கொலை விசாரணை தற்போதுஇ முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிட தக்கது .

                செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                Posted in இலங்கை செய்திகள்

                எரிபொருள் வாங்க காத்திருந்தவர் மரணம்

                எரிபொருள் வாங்க காத்திருந்தவர் மரணம்

                இலங்கை செய்திகள்

                இலங்கை பாணந்துறை பகுதியில் எரிபொருள் வாங்க காத்திருந்தவர் மரணம் ,இவரது மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தெரியவரவில்லை

                ஆட்டோ சாரதியாக விளங்கும் இவர் பாணந்துறை எரிபொருள் நிலையம் அருகே நிரையில் காத்திருந்த வேளையே இந்த மரணம் இடம்பெற்றுள்ளது

                இலங்கையில் எரிபொருள் வாங்கிட நீண்ட நேரம் காத்திருந்த பலர் இவ்விதம்
                திடிரென அவ்விடத்தில் மாரணமாகியுள்ள சம்பவங்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா

                விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா

                குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு பெரும்போகத்திற்காக 365,000 மூட்டைகள் இலவசமாக யூரியா வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) இணங்கியுள்ளது.

                விவசாய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தேவையான இலவசமாக யூரியா உதவிகளை வழங்கும் வகையில் எதிர்வரும் காலங்களில் பல விசேட திட்டங்களை

                நடைமுறைப்படுத்துவதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம்

                தெரிவித்துள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

                உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (WFO) இலங்கை முகவர்களுடனான

                கலந்துரையாடலின்போது 2022/23 பெரும்போக நெல் விளைச்சலுக்காக இலவசமாக யூரியா குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு 365,000 யூரியா உறைகளை இலவசமாக

                வழங்க இணங்கியுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஒரு உறை வீதம் நாடளாவிய ரீதியில்

                உள்ள குறைந்த வருமானம் பெறும் 365,000 விவசாய குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

                மேலும், அடுத்த மாதம் பருவத்திற்குள் 14,000 குறைந்த வருமானம் பெறும் பெண் குடும்பங்களுக்கு விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக யூரியா தலா ரூ.18,000 வீதம்

                பயறு பயிர்ச்செய்கைக்கு நிதியுதவி வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஒப்புக்கொண்டுள்ளது.

                உணவு நெருக்கடியை அடுத்து, நாட்டு மக்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுப் பயிர்களை பயிரிடுவதற்கான முயற்சிகளில் ஒன்றாக பயறு பயிர்ச்செய்கையை ஊக்குவிக்க இலவசமாக யூரியா வழங்க வேண்டும் என்று இவ் அமைப்பு (WFO) இலங்கை தொடர்பான தனது

                அறிக்கையில் கூறியுள்ளது. இந்த உதவித்தொகை நிறுவனத்திற்கு திருப்பிச் செலுத்தப்பட மாட்டாது, மேலும் பெண்களை தலைமையாகக் கொண்ட குறைந்த

                வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் இத் திட்டம் செயல்படுத்தப்படும்.

                இதேவேளை, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள திரிபோஷ உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான பயறு, சோளம், சோயா போன்ற பயிர்ச் செய்கைகளை எதிர்வரும் பருவத்தில் நாட்டிலே


                பயிரிடுவதற்கு முன்னுரிமை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

                அரசின் இலவச யூரியா அறிவிப்பு இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதன் மூலம் வீழ்ந்து போன பொருளாதாரம் மீள கட்டி எழுப்ப முடியுமா என்பதே கேள்வியாகவும் .

                  Posted in இலங்கை செய்திகள்

                  பீரிஸ் மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு விளக்கம்

                  பீரிஸ் மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு விளக்கம்

                  மனித உரிமைகள் பேரவையின் 50வது கூட்டத் தொடரின் பக்க அம்சமாக, மனித உரிமைகள் பேரவையின் தலைவர் மற்றும் அணிசேரா இயக்கத்தின் (ஜெனீவா

                  அத்தியாயம்) ஒருங்கிணைப்பாளரை சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், 2022 ஜூன் 14ஆந் திகதி ஜெனீவாவில் பிரேசிலுடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டார்.

                  மனித உரிமைகள் பேரவையின் தலைவரும் அர்ஜென்டினாவின் நிரந்தரப் பிரதிநிதியுமான திரு. ஃபெடரிகோ வில்லேகாஸ் உடனான சந்திப்பின் போது,

                  இலங்கையின் தற்போதைய சமூகப் பொருளாதார நிலைமை மற்றும் சர்வதேச சமூகத்தின் பச்சாதாபம் மற்றும் புரிதலின் அவசியம் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விளக்கினார். நாடு ஏராளமாகப் பெற்று வரும் மகத்தான பிரதிபலிப்பு

                  மற்றும் உதவிக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். தற்போதைய சமூகப் பொருளாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கான அவசியத்தை வலியுறுத்திய அதே வேளையில்,

                  கடமைகளை சமாளித்து முன்னேறுவதற்கான அரசியல் விருப்பத்தையும் உறுதியையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

                  இந்த வகையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 21வது திருத்தம், சுயாதீன

                  பீரிஸ் மனித உரிமைகள் விளக்கம்

                  ஆணைக்குழுக்களை வலுப்படுத்துதல், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் சிவில் சமூகத்துடன் ஈடுபாடு உட்பட அளவிடக்கூடிய மற்றும்

                  சரிபார்க்கக்கூடிய முன்னேற்றத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எடுத்துரைத்தார். நிலையான அபிவிருத்தி இலக்குகளில் இலங்கையின் கணிசமான

                  முன்னேற்றம் குறித்தும் அவர் விளக்கிய அவர், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி அறிக்கை 2021 இலங்கையை 87வது இடத்திலும், ஒட்டுமொத்த

                  தரவரிசையில் 68.1 நிலையிலும் வைத்துள்ளமை, பிராந்திய சராசரியை விட அதிகமாவதுடன், 165 நாடுகளில் 7 நிலைகளால் அதிகரித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.

                  விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ் இலங்கை

                  விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழ் இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட சேர்

                  ஜெஃப்ரி நைஸ் கியூ.சி, சேர் டெஸ்மண்ட் டி சில்வா கியூ.சி, ரொட்னி டிக்சன் கியூ.சி மற்றும் பேராசிரியர் டேவிட் எம் கிரேன் உள்ளிட்ட சர்வதேச சட்ட வல்லுநர்களின்

                  கருத்துக்கள் அடங்கிய ஆவணத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மனித உரிமைகள் பேரவையின் தலைவரிடம் கையளித்தார்.

                  அணிசேரா இயக்கத்தின் (ஜெனீவா அத்தியாயம்) ஒருங்கிணைப்பாளருடனான சந்திப்பின் போது, அணிசேரா இயக்கத்துடனான இலங்கையின் நீண்டகால மற்றும் வலுவான உறவுகளை குறிப்பிட்ட அசர்பைஜானின் நிரந்தரப் பிரதிநிதி திரு. கலிப்

                  இஸ்ரபிலோவ், தற்போது அணிசேரா இயக்கத்தின் பொருத்தத்தை வலியுறுத்தினார். சமகால சவால்களை எதிர்கொள்வதற்காக வேறு எந்த நேரத்தையும் விட இன்று ஒற்றுமை மற்றும் அணிசேரா ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர்

                  வலியுறுத்தினார். அணிசேரா இயக்கத்திற்கு அதிகமான புத்துயிர் அளிக்குமாறு கோரிய அவர், அணிசேரா இயக்கத்தின் முன்முயற்சிகளுக்கு இலங்கையின் தொடர்ச்சியான மற்றும் செயலூக்கமான ஆதரவை உறுதியளித்தார்.

                  அணிசேரா இயக்கத்தின் பீரிஸ் மனித உரிமைகள் பேரவை

                  அணிசேரா இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் (ஜெனீவா அத்தியாயம்) தூதுவர் இஸ்ரஃபிலோவ், தடுப்பூசிகளுக்கான சமமான அணுகல், தொற்றுநோய்களின் போது நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகள், தொற்றுநோய்க்குப் பிந்தைய மீட்பு

                  பீரிஸ் மனித உரிமைகள் பேரவையின் தலைவருக்கு விளக்கம்

                  முயற்சிகள், பாதுகாப்புத் துறையிலான நடவடிக்கைகள், நாடாளுமன்றங்களுக்கு இடையேயான நாடாளுமன்ற உரையாடல் மற்றும் அபிவிருத்திக்கான உரிமை உட்பட மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாடலை வளர்த்தல் உள்ளிட்ட சமகால

                  சவால்களை எதிர்கொள்வதற்கான கடந்த சில ஆண்டுகளாக அணிசேரா இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கினார். எதிர்கால முன்முயற்சிகளை சுட்டிக் காட்டிய

                  அவர், அசர்பைஜானின் அர்ப்பணிப்பு மற்றும் உறுப்பு நாடுகளின் தீவிர ஆதரவுடன் அணிசேரா இயக்கத்தின் சுயவிவரத்தை உயர்த்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளை மீண்டும் வலியுறுத்தினார்.

                  பிரேசிலின் நிரந்தரப் பிரதிநிதி திரு. டோவர் டா சில்வா நூன்ஸ் உடனான சந்திப்பின் போது, இலத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகளுடன் மிகவும் தீவிரமாக

                  ஈடுபடுவதற்கான இலங்கையின் ஆர்வத்தை வலியுறுத்திய வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள்

                  குறித்து விரிவாக விளக்கினார். தூதுவர் டா சில்வா நூன்ஸ் இந்த விடயங்களில் தீவிர அக்கறை காட்டியதுடன், இது தொடர்பாக தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளின் வளமான


                  மற்றும் மாறுபட்ட அனுபவத்தை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் அமைச்சருடன் பகிர்ந்து கொண்டார்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்-பிரதமர் அறிவுறுத்தல்

                    பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்-பிரதமர் அறிவுறுத்தல்

                    இவ்வருடத்தின் எஞ்சியுள்ள காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெறக்கூடியதாக இருக்கும் என

                    எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

                    சுற்றுலாத் துறைசார் முக்கியஸ்தர்களுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடத்திய கலந்துரையாடலின் போதே அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.

                    பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துறையாடல் நேற்று இடம்பெற்றது.இதன் போது பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

                    எதிர்வரும் 6 மாதங்களில் ஆகக்கூடுதலான இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

                    பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்-பிரதமர் அறிவுறுத்தல்

                    சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்பதற்கான திட்டங்களை அமுல்படுத்துவது அவசியமாகும். இந்தக் காலப்பகுதியில் கலாசார நிகழ்வுகளை ஒழுங்கு செய்வதன்

                    மூலம் உயர்ந்த பயன்களை அடைந்து கொள்ள முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

                    இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி இராஜதந்திர அடிப்படையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

                    எதிர்வரும் காலப்பகுதியில் 8 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதன் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை


                    ஈட்டுவதற்கான வாய்ப்புக் கிடைக்குமென்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் இதன் போது தெரிவித்தார்கள்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு

                      தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு

                      • தமுகூ தலைவர் மனோ கணேசன்

                      பாராளுமன்ற தேர்தல்முறையை விகிதாரசார முறையில் இருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தணவின் ஒருதலைபட்ச இறுதி அறிக்கைக்கு,

                      தெரிவுக்குழுவின் பெரும்பாலான அங்கத்தவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். தெரிவுக்குழுவில் ஏற்படாத உடன்பாடுகளையும், உண்மைக்கு புறம்பான

                      தகவல்களையும் உள்ளடக்கி இந்த இறுதி அறிக்கையை தெரிவுக்குழு தலைவர் சமர்பித்துள்ளார். இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமானால் அங்கும் அதை நாம் எதிர்ப்போம்.

                      இந்த போலி அறிக்கையை ஏற்க முடியாது என தெரிவுக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின்

                      பிரதிநிதிகள் அறிவித்தனர். கலப்பு முறையை ஆதரிக்க முடியாது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈபிடீபி) தமக்கு தெரிவித்துள்ளதாக குழு உறுப்பினர் ரவுப் ஹக்கீம்

                      தெரிவுக்குழுவில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கலப்பு முறைக்கு இணங்காது என நான் நம்புகிறேன். இந்நிலையில் மிக பெரும்பாலான கட்சிகளின்

                      நிலைபபாடுகளுக்கு விரோதமாக இந்த இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

                      தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழு தலைவர் தினேஷின் அறிக்கைக்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு

                      தேர்தல் முறை சீர்திருத்தங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தண நேற்று

                      தனது இறுதி அறிக்கையை குழுவில் சமர்பித்தார். இதையடுத்து பெரும்பாலான தெரிவுக்குழு உறுப்பினர்கள் இந்த இறுதி அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்தனர். இதுபற்றி மனோ கணேசன் எம்பி மேலும் கூறியதாவது,

                      இந்த குழுவில் இடம் பெறாத அதேவேளை இடம் பெற்றும் நேற்றைய கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத கட்சி பிரதிநிதிகளின் ஆதரவையும் திரட்டி சுருக்கமான மாற்று

                      நிலைப்பாட்டை எழுத்து மூலமாக தெரிவுக்குழுவுக்கும், பாராளுமன்றத்துக்கும் அறிவிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாற்று நிலைப்பாட்டு அறிக்கையை நண்பர்

                      சுமந்திரன் எம்பி தயாரிப்பார். அதை அடிப்படையாக கொண்டு ஏனைய கட்சிகளின்

                      ஆதரவையும் பெற்று, தெரிவுக்குழுவுக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் முறைமை தொடர்பான எமது நிலைப்பாடுகளை நாம் தெரிவிப்போம்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் பாணின் விலை 1500 ரூபாய்

                        இலங்கையில் பாணின் விலை 1500 ரூபாய்

                        இலங்கையில் ஒரு இறத்தல் பாணின் விலை 1500 ரூபாவாக அதிகரிக்கும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்தார்.

                        இவரது இந்த எச்சரிக்கை பாணின் விலை அபாயம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


                        ,உணவு பொருட்களுக்கு ஏற்பட்ட தட்டு பாடு காரணமாகவும் ,வரி வீதம் அதிகரிப்பினால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.

                        இதனால் இலங்கையில் பாணின் விலை 1500 ரூபாவாக க அதிகரிக்கும் நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார் .

                        இவரது இந்த கூற்று நியம் பெறும் எனின் இலங்கை வாழ் மக்கள் நிலை என்ன என்பதை மக்களே உன்சேந்து கொள்ள வேண்டும் .

                        இலங்கையில் மக்கள் அதிகம் அன்றாடம் உண்ணும் பாணின் விலை இவ்விதம் அதிகரித்து வைத்த பெருமையை ஆளும் கோத்தபாய ராஜபக்சேவை சாரும் என்பதே வரலாற்று பதிவாக போகிறது .

                          Posted in இலங்கை செய்திகள்

                          யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் விபத்தில் சிக்கி ஒருவர் மரணம்

                          யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் விபத்தில் சிக்கி ஒருவர் மரணம்

                          இலங்கை செய்திகள் .எதிரி செய்திகள் .

                          கடந்த தினம் மதியம் யாழ்ப்பாணம் கொடிகமத்தில் விபத்தில் சிக்கி ஒருவர் மரணம் .மிதிவண்டியில் பயணித்தவரை கார் மோதி தள்ளியததில் அவர் சம்பவ இடத்தில் பலியானார்

                          பலியானவரை அடையாளம் காண மக்கள் உதவுமாறு வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது. ,குறித்த விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                          இலங்கையில் நாள் தோறும் விபத்துக்களில் சிக்கி எட்டு பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர்
                          என்பது குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            தனியார் பேரூந்து சேவைகள் நாளை முதல் முடக்கம்

                            தனியார் பேரூந்து சேவைகள் நாளை முதல் முடக்கம்

                            இ;லங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருங்கடி காரணமாக எரிபொருள் தட்டு நிலவுகிறது


                            டீசல் வழங்கா விட்டால் நாளை முதல் தனியார் பேரூந்து சேவைகள் இயங்கப்படாது முடக்கம்பெறும் என தனியார் பேரூந்து சேவைகள் சங்கம் அறிவித்துள்ளது

                            இன்று இருபது வீதமான பேரூந்துகள் சேவைகளில் ஈடுபட்டுள்ளன ,அவை நாளை முதல் நிறுத்த படும் என்பது இவர்கள் எச்சரிக்கையாக உள்ளது

                            பேரூந்து சேவை இயங்க விட்டால் நாடு முற்று முழுதாக முடக்க நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது .

                            இவ்வாறு முடக்க பட்டால் மக்கள் கொதித்தெழுந்து அரசுக்கு எதிராக தொடர்
                            போராட்டங்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

                              Posted in இலங்கை செய்திகள்

                              இலங்கைக்கு அமெரிக்கா உதவும் ஜோ பைடன்

                              இலங்கைக்கு அமெரிக்கா உதவும் ஜோ பைடன்

                              இலங்கை செய்திகள் .எதிரி செய்திகள் .

                              இலங்கைக்கு அமெரிக்கா உதவவும் என
                              இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

                              எவ்வாறான உதவிகள் எந்த கால பகுதியில் வழங்க படும் என்பதை அமெரிக்கா தெளிவான கொள்கை விளக்கத்துடன் வழங்கும் என இலங்கை பிரதமர் எதிர் பார்ப்பதுடான்
                              அமெரிக்காவின் இந்த உதவும் திட்டத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

                                Posted in இலங்கை செய்திகள்

                                போதையற்ற சமூகத்தை உருவாக்க மக்களே வருக

                                இலங்கை செய்திகள் .எதிரி செய்திகள்.

                                எமது பிரதேசங்களில் போதையற்ற சமூகத்தை உருவாக்க மக்களே எழுவதன் மூலமே என சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாறக் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டார்.

                                போதைவஸ்த்து பாவனை மற்றும் விற்பனைகள் மக்கள் மத்தியில் மிக வேகமாக அதிகரித்து வருவது தொடர்பில் புல்மோட்டை ஜம்மியத்துல் உலமா சபையினர்

                                குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.முபாறக்கிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இன்று (15) விஷேட கலந்துரையாடல் சபையின் உப அலுவலக புல்மோட்டை காரியாலயத்தில் இடம்பெற்றது.

                                இந்த விஷேட கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர்கள், புல்மோட்டை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர், செயலாளர், புல்மோட்டை பள்ளிவாசல்

                                நிர்வாகத்தினர், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, புல்மோட்டை பிரதேச திருமண பதிவாளர், இணக்கசபைத் தலைவர், அனைத்து பள்ளிவாசல்கள்

                                தலைவர், உலமாக்கள், மார்க்க அறிஞர்கள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

                                அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எமது நாட்டில் போதைவஸ்த்துப் பாவனை மிக வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் கொலை, கொள்ளை, சிறுவர்

                                துஸ்பிரயோகம், பாலியல் சார்ந்த பிரச்சினை, குடும்பங்களுக்குள் பிரச்சினை போன்ற பல்வேறுபட்ட பல பிரச்சினைகள் மேலோங்கிக் காணப்படுகின்றது.

                                குறிப்பாக, எமது இளம் சந்ததியினர் இதற்கு அடிமையானவர்களாக காணப்படுகின்றனர். இதிலிருந்து அவர்களைப் மீட்டெடுக்காவிட்டால் எதிர்கலத்தில் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிவரும். அவர்களை மீட்டெடுப்பது எம் அனைவர் மீதும் பொறுப்பும், கடமையுமாகும் என்றும் தவிசாளர் குறிப்பிட்டார்.

                                போதையற்ற சமூகத்தை உருவாக்க மக்களே வருக
                                போதையற்ற சமூகத்தை உருவாக்க மக்களே வருக

                                போதைவஸ்த்து விற்பனை செய்பவர்களை கைது செய்யவும், அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி உரிய தண்டனைகளை பெற்றுக்கொடுக்கவும் பொதுமக்கள்

                                பொஸிஸாருக்கு வழங்கும் ஒத்துழைப்புக்கள் மிக முக்கியமானதாக இருக்கின்றது. அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே போதையற்ற சமூகத்தை உருவாக்க முடியும் போதைபஸ்த்து பாவனையிலிருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாக்கலாம்.

                                அதற்காக, எமது பிரதேசங்களில் உள்ள சகல தரப்பினரும் போதையற்ற சமூகத்தை உருவாக்க மக்களே வருக இதற்கெதிராக
                                செயற்பட முன்வருவதன் மூலமே எமது இளம் சந்ததியினரின் எதிர்கால
                                வாழ்க்கையை ஒரு முன்னெற்றப் பாதைக்கு இட்டுச்செல்ல முடியும் என்றார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கைக்கு சீன 500 மில்லியன் பெறுமதியான அரிசி உதவி

                                  இலங்கைக்கு சீன 500 மில்லியன் பெறுமதியான அரிசி உதவி

                                  இலங்கை செய்திகள் சீனா அரிசி கப்பல்

                                  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சீனா அரசனது 500 மில்லியன் பெறுமதியான அரிசி உதவி யை இலங்கைக்கு வழங்குகிறது

                                  இந்த அரிசியை ஏற்றிய கப்பல் இருபத்தி ஐந்து முதல் முப்பதாம் திகதிக்குள் இலங்கையை வந்தடைந்து விடும் என இலங்கைக்கான சீன தூதாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

                                  சீன அரசின் இந்த அரிசி உதவி திடத்தினால் இலங்கையில் நிலவும் உணவு தட்டுப்பாடு சற்று நீங்கும் என்பதாக கருத படுகிறது .

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    வத்தளையில் ஒருவர் சுட்டு கொலை

                                    வத்தளையில் ஒருவர் சுட்டு கொலை

                                    இலங்கை வத்தளை பகுதியில் நபர் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .
                                    மோட்டார் சைக்கிளில் வருகை தந்த ஆயுத தாரி குறிவைக்க பட்ட நபர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்

                                    பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்

                                    இலங்கையில் தற்போது அதிக துப்பாக்கி சூட்டு கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது
                                    இந்தத்துப்பாக்கி சூட்டு கொலைக்கான காரணம் தெரியவரவில்லை

                                    கொலை செய்ய பட்ட நபர் சடலம் மீட்க பட்டு ராகம வைத்தியசாலையில் மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

                                    ஆயுத தாரியை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம்

                                      ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம்

                                      இலங்கை- ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம் தேடி அலையும் போலீஸ் இராணுவம் ,இதுவரை அவரை மீட்க முடியவில்லை.

                                      கணவன் மகனுடன் காட்டுக்கு ஏலம் பறிக்க சென்ற பொழுது பெண் காணாமல் போயுள்ளார் .பெண்ணை தேடிய கணவன் மகன் அவரை காணாது வீடு திரும்பியுள்ளனர்.

                                      வீடு வந்த இவர்கள்; காவல்துறையில் முறைப்பாடு வழங்கிய நிலையில் போலீசார் இராணுவம் தேடி வருகின்றனர் .எனினும் இதுவரை அவர் சிக்கவில்லை.

                                      இந்த பெண் காட்டுக்குசென்று காணாமல் போயுள்ள விடய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                      இந்த பெண்ணுக்கு காட்டுக்குள் நடந்தது என்ன என்பது தொடர்பில் இதுவரை ஏதும் தெரியவில்லை.