Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மாணவர்கள் புத்தக பை சோதனை – கடுப்பில் பெற்றவர்கள்
மாணவர்கள் புத்தக பை சோதனை – கடுப்பில் பெற்றவர்கள்
இலங்கையில் மாணவர்கள் புத்தக பைகள் சோதனை செய்திடும் நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது .
இந்த நடவடிக்கையின் பின் புலத்தில் போதைவஸ்து கடத்தல்காரர்கள் உள்ளது அம்பலமாகியுள்ளது .
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ,மாணவர் ஒருவரது புத்தக பைக்குள் போதைவஸ்து கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,இந்த சோதனைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இவை மாணவர்கள் உளவு உரனில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் ,பெற்றவர்கள் கடுப்பில் உறைந்துள்ளனர் .
யாழில் சிக்கிய பெரிய முதலை
யாழ்ப்பாணம் சாவக்கேச்சேரி சிவன் கோயில் அருகில் எட்டு அடி நீளமான முதலை ஒன்று சிக்கியுள்ளது .
குறித்த முதலையை கண்ணுற்ற மக்கள் ,வன வளதுறைக்கு தெரியப்படுத்திய நிலையில் ,முதலை பிடித்து பட்டு செல்ல பட்டுள்ளது .
கொழுத்து பருத்து திரிந்த இந்த முதலையின் இரைக்கு ,பல விலங்குகள் பலியாகி இருக்க கூடுமென அஞ்ச படுகிறது .
இந்தியா இலங்கை இராணுவ தளபதி சந்திப்பு
இந்தியா இலங்கை இராணுவ தளபதி சந்திப்பு
இந்தியா கடல்படை தளபதி Navy Admiral R Hari Kumar மற்றும் இலங்கை இராணுவ தளபதி General Shavendra Silva ஆகியோர் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் .
இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் ,ஒத்துழைப்பு ,பயிற்சிகள் ,உதவிகள் தொடர்பில் கலந்துரையாட பட்டுள்ளது .
இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில் ,இந்தியா இராணுவ கடற்படை தளபதி ,இலங்கை இராணுவ தளபதியை சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .
இதில் பேசப்பட்ட இரகசிய விடயங்கள் பகிரங்க படுத்தப்படவிலை .
காலநிலைமாற்றத்தினால் சர்ம நோய்கள்
காலநிலைமாற்றத்தினால் சர்ம நோய்கள்
காலநிலைமாற்றத்தினால் சர்ம நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுநிலவிவரும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக, சர்மம் வறட்சி, ஒவ்வாமை, கீழ்வாதம், தோல்அழற்சி, முகப்பரு, சர்ம புற்றுநோய் உள்ளிட்ட குறுகிய கால, நீண்ட கால நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதா
சர்ம மருத்துவக் கல்லூரியின் தலைவர் வைத்தியர் ஸ்ரீயானி தெரிவித்துள்ளார்.
இதேவேள,இவ்வாறான காலநிலையில் தமது கால்நடைகளை பாதுகாப்பது தொடர்பில் முறையான பயிற்சிகளைவழங்குவது அவசியமாகும். காலநிலை மாற்றங்களினால் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களைவெற்றி கொள்வதற்கான வேலைத்திட்டத்தை உடனடியாக முன்னெடுக்குமாறு விவசாய அமைச்சின் செயலாளருக்கு
அமைச்சர் மகிந்த அமரவீர ஆலோசனைவழங்கியுள்ளார்.
எதிர்வரும் சுதந்திர தின விழாவிற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு
எதிர்வரும் சுதந்திர தின விழாவிற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு
எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (13) பிற்பகல் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பொது இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் ஜனாதிபதி இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
HE with sampanthanசர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வருமாறு:-
இந்நாட்டில் நிலவும் பிரச்சினையை தீர்க்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அதற்கு இனப்பிரச்சினை என்பதா அல்லது வேறு ஏதாவது பெயரைச் சொல்வதா என்பது முக்கியமல்ல. எமக்கு தேவைப்படுவது இப்பிரச்சினைகளுக்கான தீர்வேயாகும்.
இதற்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று கூடுவதற்கு பாராளுமன்றத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. அதற்காகவே கட்சித் தலைவர் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
All Party Meeting Photos 01 1நாட்டின் தேசிய பிரச்சினை தொடர்பில் வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கலந்துரையாடியுள்ளனர். இப்பிரச்சினையை இரண்டு பகுதிகளின் கீழ் கலந்துரையாடலாம்.
முதலாவதாக, காணாமல் போனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறை மற்றும் அவர்கள் தொடர்பில் செய்யப்படும் விசாரணை. பயங்கரவாதத் தடைச் சட்டம், அதே போன்று காணி தொடர்பில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ளன. இரண்டாவதாக, அதிகாரப் பகிர்வு தொடர்பான சட்டப் பணிகளைச் செய்வதற்குத் தேவையான ஏற்பாடு.
All Party Meeting Photos 03 1இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சரும் நீதி அமைச்சரும் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துகின்றனர். அதற்கமைய, காணாமல் போனோர் தொடர்பிலும் அரசியல் கைதிகள் தொடர்பிலும் அறிக்கையொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளோம். அதன் பின்னர் எம்மால் அதிகாரப்பகிர்வு குறித்து பேச முடியும்.
உயர் நீதிமன்ற நீதிபதி நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் அச்சிடப்படும். அந்த அறிக்கையில் பல முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் கையளிக்கப்பட்ட அறிக்கைகளின் பரிந்துரைகளையும் நாம் இதன்போது பரிசீலிப்போம்.
All Party Meeting Photos 05 2வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி……
ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல்களும் இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களும் பிரதான இரண்டு விடயங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அங்கு நாம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, உதுலாகம ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கைகள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்படி, அனைத்து அறிக்கைகளிலும் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு தீர்வுகளை வழங்கக் கூடியதாக இருந்தும் வெளிநாட்டுப் பொறிமுறைகளின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியாமல் போனதையே அவை சுட்டிக்காட்டியுள்ளன. இதற்கமைய, உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் தீர்வுகளை வழங்குவதாக நாம் வாக்குறுதியளித்திருந்தபோதும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
All Party Meeting Photos 02 1
ஜனாதிபதி கூறியதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களே, நவாஸ் ஆணைக்குழுவை நியமித்தார். இதற்கு முன்னைய இருந்த ஆணைக்குழுக்களின் ஆலோசனைகளை உள்வாங்கி இதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு தேவையான வேலைத்திட்டத்தை தயாரிப்பதே அந்த ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டது. அதற்கமைய இப்பொறிமுறையை கொண்டு வருவதற்கு எமக்கு பொறுப்பு உள்ளது.
பாதுகாப்பு தரப்பினரும் கூட இப்பொறிமுறையைக் கொண்டு வருவதில் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு சில படைப்பிரிவுகள் பல்வேறு வகையில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர். சில படைப்பிரிவுகளுக்கு ஐ.நா நடவடிக்கைகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். சந்தேகத்திற்கிடமான முறையில் ஏதேனும் நிகழ்ந்திருப்பின் அது தொடர்பில்,சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.
எவ்வாறானாலும் அதுபோன்றதொரு ஒழுங்குமுறையை இதுவரை எங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போயுள்ளது. உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் இவற்றுக்கு தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக இதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். தென்னாபிரிக்காவுடனும் இது தொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாம் முன்வைப்போம். இந்தக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக முன்னாள் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பல நல்ல முன்மொழிவுகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ
இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான செயல்முறை ஒழுங்கு நீதியமைச்சிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போதும், காணாமல் போனோர் அலுவலகம் நீதி அமைச்சின் கீழேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள அனைத்து கோப்புகளையும் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். காணாமல் போனவர்களுக்கான இழப்பீடாக ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. சொத்து இழப்பீடு குறித்தும் தற்போது நாம் பரிசீலித்து வருகிறோம்.
வடக்கில் யுத்தம் காரணமாக பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை இழந்த சுமார் 11,000 பேர் வடக்கில் இருந்தனர். அவற்றை நாம் மீண்டும் பெற்றுக் கொடுத்தோம். நீதியமைச்சின் கீழ் வட மாகாணத்தில் பல இணக்கப்பாட்டு மத்தியஸ்த நிகழ்வுகளை நாம் முன்னெடுத்தோம்.
இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தற்போதும் செயற்பட்டு வருகிறது. இவ்விடயத்தில் எமக்கு தென்னாபிரிக்க அரசாங்கம் ஆதரவளித்து வருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்….
வடக்கில் காணி தொடர்பில் பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆலோசகர், காணி அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஆகியோர் அப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து இது தொடர்பான தீர்வுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.
தற்போது, இங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும்போது கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். அதனால்தான் அனைத்து கட்சிகளதும் கருத்துக்களை அறிய இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பில் நாம் ஒரு தீர்வுக்கு வர வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் …….
தமிழ் மக்கள் தரப்பில் இருந்து இப்பிரச்சினையை பார்த்தால், போது அதில் எமக்கு மூன்று கட்டங்கள் உள்ளன. அவை காணி, காணாமல் போனவர்கள் மற்றும் அம்மாகாணங்களில் அதிகளவில் படையினர் குவிப்பு. பல்வேறு திணைக்களங்களுக்காக காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு பிரச்சினை உள்ளது. அது தொடர்பில் ஆராய வேண்டும். எமது மக்களுக்காக நாம் முதலிலும் உடனடியாகவும் செய்ய வேண்டிய விடயம் அதுவேயாகும்.
இரண்டாவதாக, எங்களுக்கு சில சில உரிமைகளை வழங்கும் சட்ட விதிகள் உள்ளன. மாகாணசபையின் தேவை எம்மைப் பொறுத்தவரை மிகவும் அதிகம் ஆகும். இது மிக விரைவாக செய்யப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும். இதுவரையில் ஏராளமான காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்தும் சட்டத்துக்கு மாறாக நடந்தவை. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. எனவே, காணி உரிமைப் பிரச்சினை ஆராயப்பட வேண்டும்.
எனவே முதல் கேள்வி நிலத்தின் நிலைமை பற்றியது. இரண்டாவது தற்போதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய உரிமைகள் பற்றியது. மூன்றாவது அரசியலமைப்பைப் பற்றியது. ஆனால் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி என ஜனாதிபதி வழங்கிய காலப்பகுதிக்குள் இச்செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு மேற்படி அனைத்து விடயங்கள் தொடர்பில் ஒரே நேரத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இவை செய்ய முடியாத விடயமல்ல. எங்களிடம் ஏற்கனவே இது தொடர்பிலான ஆவணங்கள், போதுமானளவான ஆணைக்குழு அறிக்கைகள் மற்றும் பல்வேறு சட்டமூலங்கள் உள்ளன.
எனவே, இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு உரிமைகளை வழங்க முடியும் என்பதை நாம் பார்க்க வேண்டுமானால், நாம் செய்ய வேண்டியது எல்லாம் உட்கார்ந்து இறுதி முடிவை எடுப்பதாக மட்டுமே இருக்க முடியும்.
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களாகிய எமக்கு 3,000 வருடங்களுக்கும் மேலான வரலாறு உண்டு என்பதை இறுதியாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். எங்களுக்கு எங்களுக்கென்றே கூறும்படியான காணி இருக்கிறது போன்றே எமக்கென ஒரு மொழி மற்றும் கலாச்சாரமும் உள்ளது. அதற்கான உரிமையை இந்த நாட்டில் எமக்கு வழங்கப்பட வேண்டும். எமக்கு மரியாதை, சமத்துவம் மற்றும் எதிர்காலத்தில் ஒரே நாடாக ஒன்றாகச் செல்லக்கூடிய வகையிலான அரசியலமைப்பு ஒன்று இருக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன்
ஜனாதிபதி அவர்களே, உங்களது அழைப்பின் பிரகாரம் நாங்கள் பாராளுமன்றத்தில் ஐந்து கட்சிகளுடன் இது பற்றி கலந்துரையாடி மூன்று பகுதிகளை அடையாளம் கண்டோம். காணிப் பிரச்சினையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் கைதிகள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில் நீதி வழங்கும் பொறிமுறைக்கான தேவை அவசியமாகும். இது குறித்து கலந்துரையாடுவதற்கு இரு அமைச்சர்களையும் அழைத்தமைக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக, அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களை எவ்வித திருத்தமும் இன்றி அமுல்படுத்த வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளது. அதனுடன், புதிய அரசியலமைப்பு அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியது போன்று 13+ தொடர்பில் கவனம் செலுத்த முடியும்.
கடந்த பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்த போது 2019 ஜனவரிக்குள் அரசியலமைப்பு வரைபை முன்வைக்கும் நிலைக்கு நாம் முன்னேறினோம். ஆனால் இறுதி முடிவை நாம் எவ்வாறு பெறுவது? ஜனாதிபதியே நிர்ணயித்த கால வரையறைக்குள் இவை அனைத்தும் நடக்கும் என்று நான் எதிர்பார்கிறேன். எமக்கு தெளிவாக அரசியலமைப்பை நிறைவேற்ற முடியாவிட்டாலும் இது தொடர்பில் என்ன செய்ய முடியும் என்பது குறித்த உடன்பாட்டுக்கு வரலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க…
இங்கு நிறைவேற்றுஅதிகாரம் என்ற வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு பணிகள் இருக்கின்றன நான் நினைக்கிறேன். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் நிறைவுக்கு வந்து 12 வருடங்கள் நிறைவடைந்திருந்தாலும் இதுவரை சந்தேக நபர்கள் மற்றும் அரசியல் கைதிகள் இருக்கின்றனர்.
எண்ணிக்கை எவ்வளவு என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் ஏதோவொரு தீர்வு வழங்கப்பட வேண்டும். நாம் அதனை ஏற்றுக்கொள்கின்றோம். காணாமல்போனோர் தொடர்பான விசாரணை, பாதுகாப்பு பிரிவினர் கையகப்படுத்தியுள்ளதாகக்கூறப்படும் காணிகள் என்பன தொடர்பில் நிறைவேற்று அதிகாரம் என்ற வகையில் தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். அது தொடர்பில் எவ்வித விவாதங்களும் இல்லை.
ஆனால் சூழல் பாதுகாப்பு பிரதேசங்கள் மற்றும் தொல்பொருள் பிரதேசங்கள் இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு கட்டுப்பட்டாக வேண்டும். அடுத்த்தாக, சட்டம் இயற்றுதல் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதற்கமைய இப்போது இருக்கும் வகையிலேனும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அல்லது பாராளுமன்றத்தில் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் மாகாண சபை சட்டத்தை மறுசீரமைத்து ஏனைய விடயங்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறானதொரு வேலைதிட்டத்தை நாம் 2015 இலும் நடைமுறைப்படுத்த முயற்சித்தோம். அது தொடர்பில் இணக்கப்பாடொன்றுக்கு வரும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்துவதா அல்லது இல்லையா என நாம் தீர்மானிக்க வேண்டும். என்னுடைய கருத்து என்னவென்றால் மாகாண சபைத் தேர்தலுக்குள்ள தடைகள் நீக்கப்படல் வேண்டும் அல்லது மீண்டும் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் சென்றால் மேலும் காலதாமதம் ஏற்படும்.
அப்போது தேர்தலொன்றை எப்போதும் நடத்த மடியாத நிலை தோன்றலாம். இதனை முன்னெடுத்தால் அரச துறையில் உள்ள ஒரு சில மறுசீரமைப்புகளை செய்ய முடியுமென உங்களுக்கு நான் ஆலோசனை கூறுகின்றேன்.அனைத்து கட்சி தலைவர்களிடமும் கலந்துரையாடி அந்த மூலோபாய வேலைதிட்டத்தை முன்னெடுக்க முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர….
எல்லாம் கலந்து விட்டாலும் பெரிய பிரச்சனையாகிவிடும். தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க ஏற்பாடுகளைச் செய்து, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு மூலம் மேலதிக பணிகளை மேற்கொள்வது முக்கியம் ஆகும். அப்போதுதான் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க முடியும்.
பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க…..
இன்று ஒருதலைப்பட்சமான வேலைத்திட்டம் நடந்துகொண்டிருக்கிறது என்றே நம்ப தோன்றுகிறது. சர்வகட்சி மாநாட்டின் ஊடாக நீங்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பதை நாம் காண்கிறோம். ஆனால் இது 75 வருடங்களாக தொடரும் பிரச்சினை. இதை 75 நாட்களில் தீர்க்க முடியுமென நான் நினைக்கவில்லை. இன்று ஒன்பது மாகாண சபைகள் ஒன்பது பேரின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே மாகாண சபை முறைமையை சீர்செய்ய முயற்சிக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம்….
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னதாக, குறைந்தபட்சம் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.
அதன் பிறகு, அனைத்துக் கட்சி மாநாடு மற்றும், தேவைப்பட்டால், சிவில் அமைப்புகளும் பங்கேற்று அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு செல்ல்லாம். விக்டர் ஐவன் போன்ற சிவில் சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே எம்மை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட வேண்டும். அந்த மாகாணங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கான பிரதான பிரச்சினை அவர்களின் காணிகள் வேறு சிலரால் கையகப்படுத்தப்பட்டமையாகும். இராணுவம் மட்டுமன்றி ஏனைய அரச நிறுவனங்களும் காணிகளை கையகப்படுத்தியுள்ளன. குறிப்பாக வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களம் இவ்வாறு காணிகளை கையகப்படுத்தியுள்ளது. இது முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல, சிங்கள சமூகத்திற்கும் ஒரு பிரச்சினை ஆகும்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரத்தில், சில மத ஸ்தலங்களின் சொத்துக்களை அரசாங்கம் கையகப்படுத்த முயற்சித்தது. சில இடங்களில் பொலிஸார் தங்கியுள்ளனர். இவ்விடயத்தில் மக்களுக்குப் பிரச்சினை உள்ளது. எனவே இது சஹரான் அல்லது அவரது குழுவினருக்கு சொந்தமான சொத்துக்கள் அல்ல, அவை ஏனைய மத ஸ்தானங்களுக்கு சொந்தமானவை.
பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா…..
இப்போது நல்லிணக்கம் என்ற வார்த்தை தேசிய நல்லிணக்கமாக இருக்க வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு அரசியலுக்கு வந்தேன். இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு தமிழ் சமூகத்திற்கு போதிய வாய்ப்புகள் கிடைத்தன. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அதைப் பயன்படுத்தவில்லை. அதை அவர்கள் தவறாக பயன்படுத்தினார்கள். அதைப் பற்றி பேச எனக்கு உரிமை இருக்கிறது. கடந்த 35 வருடங்களாக, 13வது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருந்து ஆரம்பித்தல் என்றும் அரசியல் தீர்விலிருந்து ஆரம்பியுங்கள் என்றே நாம் கூறிவந்தோம்.
முதலில் அனைத்து சமூகங்களுடனும் நல்லிணக்கத்தை ஆரம்பிக்கிறோம். பிறகு மேலும் செல்லலாம். எனது பாராளுமன்ற சகாக்களான சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடேக்கலநாதன் ஆகியோர் ஆரம்பம் முதலே அதற்காக உழைத்தனர். அவர்களுடன் கலந்துரையாடியுள்ளோம். 13வது திருத்தத்துடன் இந்த செயற்பாடுகளை ஆரம்பிக்கவும் அவர்கள் இணக்கம் தெரிவித்தனர். நாங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதில்லை. ஏனெனில் புதிய அரசியலமைப்புக்குச் செல்வதற்கு பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மையும் மக்கள் வாக்கெடுப்பும் தேவை.
இந்த நேரத்தில் இந்த நாட்டுக்கு அது சாத்தியமற்றது. முதலில் 13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதன் மூலம் ஆரம்பிப்போம். அதன் மூலம் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும்.
ஜனாதிபதி அவர்களே, இந்த சர்வகட்சி மாநாட்டை ஏற்பாடு செய்தமைக்காக நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்….
எந்த மத ஸ்தலமும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால் எங்களுக்குத் தெரிவிக்கவும். தற்போது சில முஸ்லிம் அமைப்புகளை ஆய்வு செய்து வருகிறோம். சில அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்….
போரினால் எங்கள் வீடுகள் காட்டுக்குள் சென்றுவிட்டன. ஆனால் தற்போது எங்களுடைய காணிகள் வனவிலங்கு திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி அவர்களே, முப்பது வருடங்களாக யுத்தம் இடம்பெற்ற போது அந்தப் பிரதேசங்களில் மக்கள் இருக்கவில்லை. அதனால் அந்த பகுதிகள் காடுகளாக மாறிவிட்டன. எனவே, எங்களுடைய அந்த காணிகளை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்…..
காணி அமைச்சும் வனஜீவராசிகள் அமைச்சும் இணைந்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு முயற்சித்து வருகின்றன. ஆனால் இலங்கையில் முப்பத்திரண்டு வீதம் காடுகள் இருக்க வேண்டும். அதற்கு வெளியே உள்ள பகுதிகளைக் தேடிக் கண்டுபிடித்து வழங்க நடவடிக்கை முடியும். 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் சந்தர்ப்பத்தில் நாம் ஒரே தேசமாக முன்னேற வேண்டும்.
மீண்டும் ஒரு போர் ஏற்படுமா என்ற சந்தேகம் நாட்டின் பெரும்பான்மையினருக்கு உள்ளது. தமிழ் எம்.பி.க்கள் போரை கைவிட்டுள்ளதாக கூறுகின்றனர். அதனால்தான் இப்பிரச்சனையை ஒரே மேடையில் இருந்து பேசித் தீர்க்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க…..
இந்த சிக்கலை தீர்க்க, முதலில் நேர்மையாக இருக்க வேண்டும். சட்டக்கல்லூரி மாணவர்களின் தாய்மொழியில் சட்டம் படிக்கும் உரிமை பறிக்கப்படுவது சிறந்த உதாரணம். இந்த சூழ்நிலையில் தீர்வு காண முடியுமா?
பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்….
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். மாகாண சபைகளின் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவது அவசியம் என்பதே எமது நிலைப்பாடாகும். முதலில் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் நல்லிணக்கத்தை ஆரம்பிப்போம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்……
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் பிரச்சினைக்கு முன்னர் இங்கு பேசப்பட்ட பிரச்சினைகளைத் தீர்த்து வைப்போமா? இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண பாராளுமன்றம் ஒப்புக்கொண்டது. அப்படியானால், அதன் பின்னர் ஏனைய பிரச்சினைகளைப் பற்றி பார்ப்போம்.
இதேபோன்றே, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளோம் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
எல்லோரும் அதனை ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏற்கவில்லை என்றால் பிரச்சினை உள்ளது. சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் எமது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
அவர்கள் கொடுத்த திட்டத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து உங்களுக்கு அறிவிக்க எதிர்பார்க்கின்றோம். மேலும், நமது வங்கி கட்டமைப்பின் நிலைக் குறித்து பாராளுமன்றத்தில் தெரிவிக்க உள்ளோம். கடன் மறுசீரமைப்பும் இவ்வாறு தான். அனைத்து விடயங்கள் குறித்தும் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க நாம் எதிர்பார்கின்றோம்.
அதேநேரம் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் போது அனைத்துக் கட்சி மாநாட்டின் மூலம் மக்களுக்கு தீர்வுகளை வழங்க முடியுமா என்பதை பாராளுமன்றத்திற்கு தெரிவிப்பது அவசியம். இதுபற்றி கலந்துரையாடவே அனைத்து கட்சி மாநாடு நடத்தப்படுகிறது.
பொருளாதாரமும் மிக முக்கியமானது. பொருளாதாரம் தொடர்பான விடயங்களுக்காக இதேபோன்ற மாநாட்டை நடத்தலாம். அதே சமயம் அத்தகைய தேசியக் கொள்கையை உருவாக்குவோம். பாட்டலி எம்.பி கூறியது போன்று நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.
அதிகாரப் பகிர்வு மற்றும் 13 ஆவது திருத்தம் குறித்து நாம் கலந்துரையாடுவோம். அடுத்த அமர்வை ஜனவரியில் நடத்த ஏற்பாடு செய்வோம். அங்கு சர்வகட்சி தீர்வுக்கு வருவதா? இல்லையா? என்ற உடன்பாட்டுக்கு வருவோம். அடுத்த பெப்ரவரியில் பொருளாதார விடயங்களைப் பற்றி பேசலாம். இதை நாடும் தெரிந்து கொள்ள வேண்டும். வருகை தந்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச……
இந்த கலந்துரையாடல் இன்று மிகவும் முக்கியமானது. இந்த கலந்துரையாடலுக்கு காலக்கெடு கிடைத்ததில் மகிழ்ச்சி. இத்தகைய இலக்குகளைக் கொண்ட திட்டங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன. ஒரு நாடு ஒற்றுமையாக இருக்க, ஒற்றுமை இருக்க வேண்டும். மக்கள் சமூகத்தின் ஒற்றுமையின் மூலமே நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற முடியும். நம் நாட்டின் சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்கள் சமமாக வாழ்கின்றனர். எனவே, அரசியல் அமைப்பில் சாதி, மதத்தை பயன்படுத்தக் கூடாது. அந்த விஷ விதையை அகற்ற வேண்டும். இனம், மதம் என்று அரசியலில் ஈடுபடுபவர்களை ஒழிக்க வேண்டும். அத்தகைய சமூகம் புனரமைக்கப்பட வேண்டிய காலகட்டமே இது. அதன் மூலம் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும். இனவாதத்தை சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இனவாத கருத்துக்களில் இருந்து நாம் விலகி இருக்க வேண்டும். இல்லையெனில் வேறு நாட்டை உருவாக்க முடியாது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகங்கத்துக்கும் நாம் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறோம் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இந்த பிரச்சினைகளை நமது உள்நாட்டுப் பொறிமுறையில் தீர்க்க முடியும். இந்த திட்டத்தை தொடங்குவதுடன், அதனை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. எனவே ஜனாதிபதி ஆரம்பித்து வைத்த சர்வகட்சி மாநாட்டை வெற்றிகரமாகத் தொடர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
தேசிய நல்லிணக்கம் மூலம் இனப்பிரச்சினக்கு தீர்வு காண்பது தொடர்பில் சர்வகட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக ஆளும் கட்சி,
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு தமது பாராட்டுகளை தெரிவித்தனர்.
செவிப்புலன் வலுவுற்றோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
செவிப்புலன் வலுவுற்றோருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் அங்கத்தவர்களின்
குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை (14) குறித்த நிறுவனத்தின் மட்டிக்களி கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரன் (திலீப்) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக சித்த ஆயுள்வேத மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் மா.நிரஞ்சன் கலந்து கொண்டு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிறுவாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, செவிப்புலன் வலுவுற்றோர் புனர்வாழ்வு நிறுவன அங்கத்தவர்களின் 50 குடும்பங்களுக்கு தலா 5000.00 ரூபா
பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் ரணில்
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் ரணில்
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், கடன் சுமையற்ற மற்றும் கடனை மீளச் செலுத்தக்கூடிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவேன் என்றும் தெரிவித்தார்.
இலங்கை-ஜப்பான் உறவுகளின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு டொயோட்டா லங்கா நிறுவனத்தினால் கடவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விநியோக நிலையத்தை நேற்று (14) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தத்தின் பின்னரான பொருளாதார வேலைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படாமையால் இன்று நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடத்திற்குள் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடியதும் நாட்டுக்கு முதலீட்டு வாய்ப்புகளை கொண்டு வரக்கூடியதுமான நிறுவனக் கட்டமைப்பு ஒன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இலங்கை முதலீட்டு சபையின் முதலீட்டு ஊக்குவிப்புப் பிரிவை, ஏற்றுமதி மேம்பாட்டு சபையுடன் இணைத்து பொருளாதார கூட்டுத்தாபனமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்….
“இன்று வியட்நாமின் பொருளாதாரம் போர்மியுலா வன் பந்தயக் கார் போல் உள்ளது. நமது பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டி போல் உள்ளது. அப்படி இருப்பின் நாம் எப்படி சிங்கப்பூர் ஓட்டப் பந்தயத்திற்கு செல்வது? மற்ற நாடுகளுக்கு போர்மியுலா வன் பந்தயக் கார்கள் உள்ளன. நாங்கள் முச்சக்கர வண்டியில் சென்று போட்டியிடலாமா? மக்கள் தினமும் பயணம் செய்வதற்கே இது நல்லது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இது நன்றாக இருக்கிறது என்று மீண்டும் சொல்கிறேன். ஆனால் பந்தயத்திற்கு அது சரியாகப் போவதில்லை. நாம் எப்படி வெல்வது? அவ்வாறென்றால் நாம் ஒரு பந்தய காரைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு நல்ல இயந்திரம் இருக்க வேண்டும். அதாவது நல்ல பொருளாதாரம். அதுதான் இப்போது நாம் கட்டியெழுப்பும் பொருளாதாரம்.
இந்த நாட்டில் திறந்த பொருளாதாரத்தை உருவாக்கி அந்த இயந்திரத்தை உருவாக்குகிறோம். போட்டித்தன்மை கொண்ட ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்கி உலகத்துடன் போட்டியிடும் வகையில் இந்தப் பந்தய கார் தயாரிக்கப்படுகின்றது. அதை வெல்லும் திறமை உங்கள் அனைவருக்கும் இருப்பதாக நான் நம்புகிறேன்.
முதலில் நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரம், சூழல் நேயப் பொருளாதாரம், அத்துடன் சமூக நீதியான பொருளாதாரம் மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதி பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. பழைய முறைகளில் பழகியவர்கள் இதை எதிர்க்கலாம். ஆனால் நாம் புதிய பாதையில் செல்ல வேண்டும். நீங்கள் பந்தயக் காரில் செல்ல விரும்புகிறீர்களா? மிதிவண்டியில் செல்ல விரும்புகிறீர்களா? என்று என்னிடம் சொல்லுங்கள். ஏனென்றால் எதிர்காலம் உங்கள் அனைவருக்கும் சொந்தமானது.
பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து டொயோட்டா மோட்டார் உதிரிப் பாகங்கள் விநியோக நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.
இலங்கை-ஜப்பான் உறவுகளின் 70 ஆண்டு நிறைவைக் கொண்டாடியதுடன் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. டொயோட்டா லங்கா நிறுவனத்தின் ஊழியர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, டொயோட்டா லங்கா நிறுவனத்தின் தலைவர் சவியோ யோட்சுகுரா
மற்றும் டொயோட்டா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கடத்தப்பட்ட இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
கடத்தப்பட்ட இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
கண்டி வைத்தியசாலைக்கு அருகாமையில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
ஹந்தானை பகுதியிலுள்ள பாழடைந்த இடமொன்றில் வைத்து இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திறமையான குத்துச்சண்டை வீரர் என்ற விருதை பெற்ற இந்த இளைஞனை, கண்டி- வைத்தியசாலை லேனில் உள்ள அவரது வீட்டில் இருந்து, சிலரால் ஓட்டோவொன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக
விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு
இலங்கை இராணுவத்தால் 335 மில்லியன் ரூபா போதைவஸ்து மீட்பு
இலங்கை இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவலை அடுத்து ,நடத்த பட சுற்றிவளைப்பில் 12 கிலோ எடையுள்ள கொரோயின் போதைவஸ்து மீட்க பட்டுள்ளது .
ஆட்டோ ஒன்றின் மூலமாக மேற்கொள்ள படவிருந்த கடத்தல் ,இவ்விதம் முறியடிக்க பட்டுள்ளது .
சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பில் ,இந்த பெரும் கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
கைதான இருவரும் தீவிரவிசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .
தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ,அனைத்து காட்சிகளையும் ஒன்றிணையுமாறு ,ரணில் விக்கிரமசிங்கா அழைப்பு விடுத்துள்ளார் .
இவர்களது பிரச்சனைகளை தீர்த்தால் மட்டுக்மே நாட்டை கட்டி எழுப்ப முடியும் என ரணில் தெரிவித்துள்ளார் .
தேர்தலை மையமாக வைத்து ரணில் விக்கிரமசிங்கா இவ்விதமான குண்டை போடுவதாக எதிர் பார்க்க படுகிறது .
தீர்வுக்கு முன்னர் விதிக்க பட்டுள்ள பயங்கரவாத சட்டங்கள் நீக்க படவில்லை .இராணுவம் பொது இடங்களில் இருந்து
அகற்ற படவில்லை, இவ்வாறான நிலையில் ,இவரது அழைப்பு ஏமாற்று வேலை ஒன்று என்றே நோக்கலாம்.
பாடசாலை புத்தகங்கள் உபகரணங்களை கூடுதலான விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பாடசாலை புத்தகங்கள் உபகரணங்களை கூடுதலான விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
பாடசாலை அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை குறிப்பிட்ட விலையிலும் பார்க்க கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைவாக பாடசாலை அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை முற்றுகையிடுவதற்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசேடமாக பாடசாலை அப்பியாச புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலைகளில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாடசாலை புத்தகங்கள் உபகரணங்களை கூடுதலான விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இந்த கோரிக்கையை கவனத்தில் கொள்ளாது பாடசாலை அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட உபகரணங்களை கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அந்தந்த பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும் என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பாடசாலை அப்பியாச புத்தகங்களில் குறிப்பிட்ட விலையிலும் பார்க்க விற்பனை செய்த சில வர்த்தகர்கள் தற்போது பதுளை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரி கூறினார்.
விசேடமாக பாடசாலை அப்பியாச புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை அதிக
விலைக்கு விற்பனை செய்வதாக பெற்றோர்கள் பலர் முறைப்பாடு செய்திருப்பதாகவும்
அவற்றை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.
சீமெந்தின் விலை இன்று இரவு முதல் 225 ரூபாவால் குறைக்க படுகிறது
சீமெந்தின் விலை இன்று இரவு முதல் 225 ரூபாவால் குறைக்க படுகிறது
இலங்கையில் இன்று இரவு முதல் 50 கிலோ சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாயில் இருந்து விலை குறைக்க படுகிறது .
இந்த விலைகுறைப்பினால் மக்கள் பெரிதும் குஷியில் உறைந்துள்ளனர் .
கட்டுமான பணிகள் வேகப்படுத்தவும் ,மக்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் முகமாக இந்த விலை குறைப்பு பயன் தரக்கூடும் என கணிக்க பெறுகிறது .
கொள்ளுப்பிட்டி சம்பவம் தொடர்பில் பொலிஸார் தேடும் பெண்
கொள்ளுப்பிட்டி சம்பவம் தொடர்பில் பொலிஸார் தேடும் பெண்
கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற கார் விபத்தின் பின்னர் காரில் பயணித்த பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பெண் சந்தேகநபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
குறித்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கொழும்பு தெற்கு உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு 0718 59 15 78 அல்லது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
0718 59 15 79 க்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
வீதி விபத்துகளில் இருவர் உயிரிழப்பு
வீதி விபத்துகளில் இருவர் உயிரிழப்பு
இரு பிரதேசங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் நேற்று (13) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சியம்பலாண்டுவ – மொனராகலை வீதியில் சியம்பலாண்டுவ பிரதேச சபைக்கு முன்பாக இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மொனராகலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சியம்பலாண்டுவ, ஹெலமுல்ல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் வைத்தியசாலை சுற்றுவட்டத்திலிருந்து சர்வோதயா நோக்கிச் சென்ற கார் அதே திசையில் சென்ற மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் சென்ற மற்றொரு காரின் பின்புறம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம், பாலடிக்குளம் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்
5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள்
5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள்
இந்த ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (14) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 18ஆம் திகதி நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை முடியும் வரை பரீட்சார்த்திகளுக்கான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் என சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்துவது அல்லது தன்னகத்தே வைத்திருப்பது முற்றாகத்
தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரிசி இறக்குமதி செய்திட தடை
அரிசி இறக்குமதி செய்திட தடை
இலங்கைக்கு கப்பல்கள் மூலம் அரசி இறக்குமதி செய்திட தடை விதிக்க பட்டுள்ளது .
பாஸ்மதி அரிசி மட்டும் இறக்குமதி செய்திட அனுமதி வழங்க பட்டுள்ளது .
இந்த கட்டுப்பாடுகள் வியாபரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் பாராளுமன்றத்தில் அதிருப்தி
முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் பாராளுமன்றத்தில் அதிருப்தி
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன மீது பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு பாராளுமன்றத்தில் இன்று (13) கவலை மற்றும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தாக்கப்பட்டமை பாரிய விடயமாகும். கல்வித்துறை பாரிய நெருக்கடியை நோக்கி செல்கிறது. வரலாற்றில் இவ்வாறான சம்பவம் இடம் பெற்றதில்லை. சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் விசேட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் பல்கலைகழங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவரை ஒருவர் நம்ப முடியாத தன்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒருபோதும் பேராசிரியர் ஒருவர் அழுத்தத்திற்கோ அல்லது தாக்குதலுக்கோ உள்ளாகவில்லை.
அத்துல சேனாரத்ன என்பவர் இந்த நாட்டின் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு புவியியல் நிபுணர். இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் நாட்டில் நிபுணர்கள் நிச்சயம் நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். இவர் அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர். இது குறித்து நாட்டில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் மாணவர்கள் மத்தியில் மோதல்கள் இருந்தது. தற்போது மாணவர்கள் விரிவுரையாளர்கள் மத்தியில் அது மோதலாக மாறி வருகிறது. நாட்டில் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் நாட்டில் இவ்வாறான மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன:
பேராதெனிய பல்கலைகழகத்தின் உபவேந்தர் அவரது புதல்வர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, வீட்டை சேதப்படுத்தியமை தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பக்க சார்பற்ற விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவித்தார்.
வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சம்பவம் இது அல்ல. வன்முறை காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டென்லி விஜயசுந்தர கொல்லப்பட்டார்.
நாட்டின் பல்கலைக்கழகங்களில் சுதந்திரம் இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் அச்சம் பீதியின்றி செயற்பட முடியாது என்றால் அது கேள்வி குறியாகும். நாட்டில் பொது சட்டமுறை பல்கலைக்கழகங்களிலும் சட்டமாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு அரசியல் கட்சி, நிறம், பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளில் போதை பொருள் பரவுவதை தடுப்பதற்காக விசேட ஜனாதிபதி செயலணி நியமிப்பதற்காக பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல
இந்த சம்பவத்தை ஐக்கிய மக்கள் சக்தி கண்டிக்கின்றது. சம்பவத்தை அனுமதிப்பதில்லை. தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு அமைதி சூழ்நிலை இருக்க வேண்டும். பேராதனை பல்கலைக்கழகம் ஒக்ஸ்போட் கேம்பிரிட்ஜ் முறைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் இதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த
பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது இவ்வாறு ஒன்றிணைந்திருந்தால்
இந்த பிரச்சினையை தடுத்திருக்க முடியும். எனது வீட்டை தாக்கினர். எனக்கு தற்போது வீடு இல்லை.
பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா
இவ்வாறான சம்பவங்களை நாம் தினமும் காண்கின்றோம். இருப்பினும் இது உச்சக்கட்டமாகும். பல்கலைக்கழகங்கள் வரி மூலம் நடத்தப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களும் இந்த வரி மூலமே கல்வி கற்கின்றனர். இன்று உலகில் அனைத்து பல்கலைக்கழங்களிலும் இவ்வாறான கேலிக்குரிய வன்முறைகள் இல்லை. இம்முறை இதனை பெரும் சிந்தனையுடன் அறிந்துக்கொண்டு செயல்பட வேண்டும். பாரிய வன்முறைக்கு இடமளிக்கக் கூடிய நிலைமையாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் சமான் பிரிய ஹேரத்
நாம் செய்வது என்னவெனில் சம்பவம் குறித்து கவலை தெரிவிப்பது மட்டுமே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீயிடப்பட்டன.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் எமது விகாரையின் பிக்குவை கண்ணத்தில் அறைந்துள்ளார். இன்று நாடு இவ்வாறான நிலைமைக்கு உள்ளாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் டி.பி ஹேரத்
இது மனித உரிமை மீறலாகும். புத்தி கூர்மை மிக்கவர்களை உருவாக்கும் இடத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
இவ்வாறான சம்பவங்களுக்கு கவலை தெரிவித்து நிறுத்த முடியாது. நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமை உண்டு. இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் மூலம் பொதுவான நிலை தெரிகின்றது. இந்த சீரழிக்கும் சம்பவத்தை சமூகத்தில் இருந்து நீக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த images 2விசாரணை பெறுபேறுகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு உரிமை உண்டு பாராளுமன்ற உறுப்பினரின் உயிர் இழக்கப்பட்டது. சொத்துக்கள் இழக்கப்பட்டன. இதேபோன்று இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள்.
இது குறித்து விரிவான பிரச்சாரத்தை வழங்குங்கள். சில விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாது நீங்கள் தலையிட்டு செயல்படுத்துங்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச
இந்த சம்பவம் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னரே ஏற்பட்டது. இதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் முற்போக்கு இடதுசாரி முன்னணி கட்சியும் பொறுப்பு கூறவேண்டும். பேராசிரியருக்கு எதிராக செயல்பட்ட மாணவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க
நாம் அனைவரும் இந்த சம்பவத்தை கண்டிக்கின்றோம். சம்பவம் தொடர்பில் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு நான் கோருகின்றேன்.
இவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சில அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றனர். 2 விதமான பேச்சு தேவையில்லை. சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
வீடுகளை சேதப்படுத்துவதற்கு தூண்டியவர்கள் மத்தியில் பேராசிரியர்கள் இருந்தனர். சில பேராசிரியர்கள் சில பேராசிரியர்களின் வீடுகளில் தீ வைக்க சென்றனர். இன்று அப்பாவி பல்கலைக்கழகமாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல அஞ்சுகின்றனர்.
பல நிறுவனங்களை அரச பல்கலைக்கழக மாணவர்களை சேர்த்துக் கொள்ள அஞ்சுகின்றனர். இதனாலே தனியார் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக்கொள்கின்றனர்.
இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நானும் கூறுகின்றேன்.மாணவர்களுக்கு ஜஸ் போதைப் பொருளை கொடுத்து அவர்களின் மனநிலையை மாற்றியுள்ளனர். சிலபேராசிரியர்கள் அடியுங்கள் உதையுங்கள் கொல்லுங்கள் என்று பேசுகின்றனர்.
கெளரவ சபாநாயகர் அவர்களே. இதற்கான சட்டம் நடைமுறையில் உள்ளது இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் கட்சிகள் இளைஞர்களைக் கைது செய்வது ஜனநாயக விரோதம் என்று கூறுவார்கள். மே 9 இச்சம்பவம் குறித்து கூறும்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் டாக்டர் பேராசிரியர்களின் நடத்தை பற்றி நான் முன்பு பேசினேன்.
அந்த பேச்சு முடிந்ததும் ஃபேஸ்புக்கில் கண்டனத்திற்குள்ளானேன். நான் மனசாட்சியுள்ள ஒரு பேச்சாளன். வீடுகளுக்கு தீ வைக்க குழந்தைகளை தூண்ட அரசியல் பின்னணி கொண்ட ஒரு குறிப்பிட்ட குழு இருந்தது. எல்லோரும் இல்லை. ஒரு குறிப்பிட்ட குழு சில காலமாக குடும்ப வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட ஏற்பாடு செய்துள்ளது. இல்லை என்று சொல்ல முடியாது.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க:
இந்த சம்பவத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி, முற்போக்கு சோசலிச முன்னணி பொறுப்பு கூற வேண்டும். இவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
வரலாற்றிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனர்.
சதோச வில் 5 பொருட்கள் விலை குறைப்பு
சதோச வில் 5 பொருட்கள் விலை குறைப்பு
சதோச’ 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைவாக புதிய விலைகள் இன்று (14) முதல் அமுலுக்கு வருவதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது.
விலை குறைப்புக்கு அமைவாக ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.
கோதுமை மா ஒரு கிலோ 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது புதிய விலை 250 ரூபாவாகும்.
ஒரு கிலோ பூண்டு அல்லது உள்ளி 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது அதன் புதிய விலை 190 ரூபாவாகும்
உள்ளூர் டின் மீன் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 490 ரூபா.
விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய சாரதி கைது
விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய சாரதி கைது
இலங்கை கொள்ளுப்பட்டி பகுதியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய சாரதி கைது செய்யப்பட்டுளளார் .
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளார் .,
விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடியாமை ,கொலை முயற்சி போன்ற குற்ற சாட்டுக்கள் இவர் மீது வைக்க பட்டுள்ளது .
குறிப்பிட தக்கது.
வெளிநாட்டில் இருந்து பொதி மோசடிகள் அம்பலம் -முறையிட விசேட இலக்கங்கள்
வெளிநாட்டில் இருந்து பொதி மோசடிகள் அம்பலம் -முறையிட விசேட இலக்கங்கள்
இலங்கையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து பொதி வந்துள்ளது பெற்று கொள்ளுங்கள் என கோரி தொலைபேசி உரையாடல்கள் நடத்த படுகிறது .
வெளிநாட்டில் தமக்கு எவரும் இல்லாதவர்கள் இடத்தில் இருந்து பொதி வந்துள்ளதை நம்பி ,தமது ஆளடையாளத்தை வழங்கி விடுகின்றனர் .
அவ்வளவு தான் அவர்கள் இவர்கள் விபரங்களை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர் .
இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்துள்ள நிலையியல் ,காவல்துறையில் ,இது தொடர்பாக முறையிட புதிய தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளனர் .






















































