Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மாடுகளை வௌியே கொண்டு செல்ல தடை
மாடுகளை வௌியே கொண்டு செல்ல தடை
வடமேற்கு மாகாணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மாடுகளை கொண்டு செல்வதை முற்றாக தடை செய்ய வடமேற்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்தில் மாடுகளுக்கு வேகமாக பரவி வரும் வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மாடுகளின் தோலுடன் தொடர்புடைய வைரஸ் நோயான Lumpy Skin diseases தற்போது வடமேற்கு மாகாணத்தில் உள்ள 46 கால்நடை அதிகாரி பிரிவுகளில் 34 க்கும் பரவியுள்ளது.
நிலைமையை கருத்திற் கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஏ.எஸ்.பெரேரா தெரிவித்துள்ளார்.
மாடுகளை வௌியே கொண்டு செல்ல தடை
இந்நோய் 2019 ஆம் ஆண்டு இந்தியா ஊடாக யாழ்ப்பாணத்துக்கும் பின்னர் வடமத்திய மாகாணத்தின் ஊடாக வடமேற்கு மாகாணத்துக்கும் இடம்பெயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், மாடுகளுக்கு இந்நோய் தொற்று
ஏற்பட்டதன் பின்னர் பால் உற்பத்தி குறைவடையும் எனவும் இதனூடாகவடமேற்கு மாகாணத்தில் பால் உற்பத்திக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்தார்.
இந்நோய் தொற்று காரணமாக மாடுகளின் இறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும், இந்நோயை உரிய முறையில் நிர்வகித்து மாடுகளுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்கினால் மூன்று வாரங்களுக்குள் மாடுகளை குணப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை மாட்டிறைச்சி உண்பதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்படும் என பெரேரா தெரிவித்தார்.
புத்தர் சிலை உடைப்பு
புத்தர் சிலை உடைப்பு
இமதுவ – அகுலுகஹா கல்குவாரிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள புத்தர் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியிலுள்ள மக்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, புத்தர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கண்ணாடியை உடைத்து புத்தர் சிலையை உடைத்தவர்கள் பற்றிய தகவல் இதுவரை பொலிஸாருக்கு கிடைக்கவில்லை
ராஜாங்கனை சத்தா ரதன தேரர் திடீர் கைது
ராஜாங்கனை சத்தா ரதன தேரர் திடீர் கைது
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் அனுராதபுரம் பகுதியில் வைத்து இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம்
சாதாரணதர பரீட்சை இன்று ஆரம்பம்
இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 472,553 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இந்த வருடம் 10 கைதிகளும் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சாதாரணதர பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் “சிசு சரிய” பேருந்து சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை 3 ஆம் குறுக்கு தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இன்றைய தினம் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
இன அழிப்பின் நீண்ட கால தந்திரம்
இன அழிப்பின் நீண்ட கால தந்திரம்
மகாவலி அதிகார சபையின் செயற்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன ரீதியாக இல்லாமல் செய்வதற்குமான இன அழிப்பின் நீண்ட கால தந்திரமான
செயற்பாடு என்றும் இதை முழுமையாக கண்டிப்பதாகவும் முழுமையாக எதிர்ப்பதாகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து ஞாயிற்றுக்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மகாவலி அதிகார சபையால் முல்லைத்தீவு, வவுனியா, மாவட்டங்களில் 1988 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் 14 கிராம அலுவலர் பிரிவுகள்
அபகரிக்கப்பட்டு யுத்தத்தில் மக்கள் இடம் பெயர்ந்த போது முழுமையாக அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவி வெலி ஓயா என்ற ஒரு புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
வடக்கு, கிழக்கை பிரிக்கின்ற நோக்கத்துக்காக இந்த மகாவலி அதிகார சபை புதிய ஒரு பிரதேச செயலகத்தை உருவாக்கி பிற்பாடு கொக்கிளாய் முதல்
செம்மலை வரை இருக்கின்ற 6 கிராம சேவகர் பிரிவுகளை அபகரிக்க முயற்சி எடுத்த போது எங்களுடைய தொடர் அழுத்தம் காரணமாக தற்காலிகமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இன அழிப்பின் நீண்ட கால தந்திரம்
மகாவலி என்பது தமிழர் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களையும் சிங்கள இனப்பரம்பலையும் செய்வதற்காக அரசாங்கத்தால் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு செயல்பாடு.
அந்த வகையில் தற்பொழுது மகாவலி “J” வலயம் என்ற ஒன்றை புதிதாக உருவாக்குவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கும் 7 கிராம அலுவலர் பிரிவுகளும், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில் இருக்கின்ற 15 கிராம அலுவலர்கள் பிரிவுகளும்
,மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் 15 கிராம அலுவலர் பிரிவுகளும் உள்ளடங்களாக மொத்தம் 37 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கி மகாவலி அதிகார சபை புதிய வர்த்தமானி அறிவித்தல் செய்வதற்காக பிரதேச செயலகங்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
இவ்விடயத்தை எதிர்த்து நான் பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை முன் வைத்திருக்கிறேன். அதற்கு நீர்ப்பாசன அமைச்சர் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது பதில் அளிப்பதாக கூறியிருக்கிறார்.
இன அழிப்பின் நீண்ட கால தந்திரம்
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் இந்த திட்டம் என்பது தமிழர்களுடைய இன பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை இங்கு
கொண்டுவருவதற்கும் தமிழர்களை இனரீதியாக இல்லாமல் செய்வதற்கு இன அழிப்பின் ஒரு நீண்ட கால தந்திரமான செயல்பாடுதான் இந்த மகாவலி அதிகார சபையின் செயல்பாடு.
இதை முழுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம். முழுமையாக எதிர்க்கின்றோம். இதை நடைமுறைப்படுத்த விடாமல் செய்வதற்கு பல முயற்சி செய்துள்ளேன். பாராளுமன்றத்தில் பிரேரணையை முன் வைத்துள்ளேன். அதையும் மீறி ஜனாதிபதியை சந்திப்பதற்காக நான் அனுமதி கேட்டிருக்கின்றேன். அவரிடம் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்துவேன்” என்றார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரையின் மேலேறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி ஞாயிற்றுக்கிழமை (28) மதியம் சிறைச்சாலை அதிகாரிகளினால் கீழே இறக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறு இறக்கப்பட்ட கைதி சிறைச்சாலையின் வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை கூரை மீதேறி உண்ணாவிரதமிருந்த கைதி
குற்றசெயல்களில் ஈடுபட்ட கைதாகி குருவிட்ட சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார். அதன்பின்னர், யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு அவர், மாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி சனிக்கிழமை (17) மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் இன்று (28) மதியம் கீழே இறக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் மாத்தறையைச் சேர்ந்த புஷ்பகுமார (வயது 41) என்பவரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு கீழே இறக்கப்பட்டார். அத்துடன் அவருடைய போராட்டமும் முடிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீட்டுக் கிணற்றில் விழுந்து சிறுமி மரணம்
வீட்டுக் கிணற்றில் விழுந்து சிறுமி மரணம்
பாதுகாப்பற்ற நிலையில் இருந்த வீட்டுக் கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த சசிகரன் கிங்சிகா (வயது- 06) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்விப்பயிலும் மேற்படி மாணவி வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் சனிக்கிழமை(27) மாலை விழுந்துள்ளார்.
சிறுமியை காணாத நிலை தேடிய போது கிணற்றில் சிறுமி விழுந்தமை தெரிய வந்துள்ளது.
சிறுமி உடனடியாக மீட்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார்.
நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
ஹெம்மாவத்தகம பனிய நீர் திட்டத்திற்கு சொந்தமான அரநாயக்கவில் உள்ள அசுபினியெல்ல நீர் திட்டத்தின் நீர் குழாய்களுக்கு தீ வைத்த பாடசாலை மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த தீ விபத்து தொடர்பில் 4 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டதாகவும், அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நீர்க்குழாய்களுக்கு தீயிட்ட 6 மாணவர்கள் கைது
பாடசாலை முடிந்தவுடன் நீர்த்தேக்க குழாய்கள் அமைந்துள்ள பிரதேசத்திற்கு குறித்த மாணவர்கள் புகைபிடிக்கச் சென்றுள்ளனர். புகைபிடிக்க பயன்படுத்திய தீக்குச்சியிலிருந்து தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஆறு சிறுவர்களில் ஐவர் நாளைய தினம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்ற வேண்டியவர்களாவர்.
மின்னல் தாக்கத்தில் இருவர் பலி
மின்னல் தாக்கத்தில் இருவர் பலி
மின்னல் தாக்கத்தினால் இருவர் பலியாகியுள்ளனர். அதிலொருவர் 1990 அம்புலன்ஸ் சாரதியாவார்.
மொனராகலை, கொணகங்கார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரத்தரங்கன்ன பிரதேசத்தில் வயல்வெளியில் வேலைச்செய்துக்கொண்டிருந்த இருவரே பலியாகியுள்ளனர்.
அம்புலன்ஸ் சாரதி (வயது 32), திருமணம் முடிக்காத இளைஞன் (வயது 31) ஆகியோரே கடந்த 27ஆம் திகதியன்று பலியாகியுள்ளனர்.
மின்னல் தாக்கத்தில் இருவர் பலி
வயல்வெளியில் வேலைச் செய்துக்கொண்டிருந்த போது கடுமையான மழை பெய்தமையால், அங்குள்ள வாடியில் இருவரும் அமர்ந்திருந்துள்ளனர். அதில் ஒருவரின் அலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் போதே கடுமையான மின்னல் வெட்டியுள்ளது. அதன் பின்னரே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அவ்விருவரும் இருந்த வாடி தீப்பற்றி எறிவதை கண்ட, சாரதியின் தாய், கூக்குரல் எழுப்பியுள்ளார். அதன்பின்னர், கிராமவாசிகள் இணைந்து வாடிக்குச் சென்றுள்ளனர். எனினும், அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. சுமணசிறி குணதிலக்க
இலங்கை வந்த விமானத்தில் ஒருவர் உயிரிழப்பு
இலங்கை வந்த விமானத்தில் ஒருவர் உயிரிழப்பு
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில், குறித்த விமானத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ணிலிருந்து நேற்று இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல் -605 என்ற விமானத்திலேயே மரணம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரத்னலிங்கம் ராமலிங்கம் என்ற 75 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்
நடாஷா எதிரிசூரிய கைது
நடாஷா எதிரிசூரிய கைது
பௌத்தமதம், பௌத்த பாடசாலைகள் மற்றும் அதில் பயிலும் மாணவ, மாணவிகளை அவமதிக்கும் வகையில் “மொடாஹிமானய” எனும் தலைப்பில் வீடியோவை பதிவேற்றினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே நடாஷா எதிரிசூரிய, கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கபூரை நோக்கி பயணிப்பதற்காக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தபோதே, குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டார். அதன்பின்னர், கணினி குற்றவியல் விசாரணைப் பிரிவு அதிகாரிகளிடம் இவர் ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை கையளிக்கப்பட்டார்.
நடாஷா எதிரிசூரிய கைது
கல்கிஸை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 31 வயதான இந்தப் பெண், மலேசியா கோலாலம்பூரை நோக்கி சனிக்கிழமை (28) அதிகாலை 12.05க்கு புறப்படவிருந்த மலேசியா விமானச் சேவைக்குச் சொந்தமான எம்.எச்.178 என்ற விமானத்திலேயே பயணஞ்செய்யவிருந்தார்.
அந்தப் பெண்ணுடன் பயணம் ஹேன்நாயக முதியன்சலாகே பெத்தும் பண்டார எகொடவத்த என்பவரும் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்.
எனினும், நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டதன் பின்னர், தன்னுடைய பயணத்தை அவர், கைவிட்டுள்ளார் என்றும், விமான நிலையத்தில் இருந்து அந்நபர் திரும்பிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விருவரும் மலேசியா கோலாலம்பூருக்குச் சென்று அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில் சிங்கபூருக்குச் செல்லவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுத்தம் செய்துகொண்டு இருந்தவரை மோதிய வாகனம்
சுத்தம் செய்துகொண்டு இருந்தவரை மோதிய வாகனம்
அச்சுவேலி – வல்லை, பருத்தித்துறை பிரதான வீதியில், வீட்டுக்கு முன்னால் சுத்தம் செய்து கொண்டு இருந்தவர் மீது வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயங்களுக்குள்ளாகினார்.
இதில் சீனியர் சந்திரகாந்தன் என்ற 56 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது.
வாகனத்தை செலுத்தியவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் எனவும், இவர் வட்டுக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்
பாலியல் சேஷ்டை விட்டவர் கைது
பாலியல் சேஷ்டை விட்டவர் கைது
அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.
சனிக்கிழமை (27) மாலை பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பிகொண்டிருந்த மாணவியிடமே குறித்த நபர், பாலியல் சேஷ்டை புரிய முயன்றுள்ளார்..
தாக்குதலுக்குள்ளான மாணவி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவியின் பெற்றோரால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பாலியல் சேஷ்டை விட்டவர் கைது
இதேவேளை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு வீதிகளில் தொந்தரவு செய்பவர்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் பெண் மாணவிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதோடு, சில மாணவிகள் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து பொலிஸாரை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
மணமகள் மீது அசிட் வீச்சு
மணமகள் மீது அசிட் வீச்சு
திருமண வைபவத்துக்கு தயாராகி கொண்டிருந்த மணமகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த அந்தப் பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
மத சடங்குகளுடன் காலி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பெண்ணின் முன்னாள் காதலனே அசிட் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்றும் அவரை தேடி வலைவிரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்
பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்
பதுரலிய, ஹெடிகல்ல காலனி,பொல்துன்ன பிரதேசத்தில் பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை காட்டுக்குள் இழுத்துச் சென்று போட்டதாக கூறப்படும் 24 வயதான பேரனை கைது செய்துள்ளதாக பதுரலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் லீலாவதி விக்ரமசிங்க என்ற பெண்மணியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண்மணி, சந்தேக நபர் வசித்து வந்த வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் தனது தாயாருக்கு தொந்தரவு கொடுப்பதாக கூறி இந்த கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன்
பாட்டியின் சிகிச்சைகளுக்காக தாயின் பணம் செலவிடப்படுவதால், ஆத்திரமடைந்து, சந்தேக நபர் இந்த கொலையை செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு மதுபானம் அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ள சந்தேக நபர், தனது பாட்டியின் கழுத்தை கத்தியால் அறுத்து விட்டு, உடலை அருகில் உள்ள காட்டிற்குள் இழுத்துச் சென்று போட்டுள்ளார்.
சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் குறித்து பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் 23 பேர் சுட்டுக் கொலை அதிர்ச்சி தகவல்
இலங்கையில் 23 பேர் சுட்டுக் கொலை அதிர்ச்சி தகவல்
2023ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 23 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என இலங்கை பொலிஸாரின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த வருடத்தில் இதுவரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில், “2019 ஆம் ஆண்டில் 273 கொலைகள் பதிவாகியுள்ளன, 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 523 ஆக உயர்ந்துள்ளது. எனினும் 2023 இல் 146 நாட்களுக்குள் 239 கொலைகள் பதிவாகியுள்ளன. இது தினசரி 1.6% அதிகரிப்பாகும். இந்த நிலைமை இலங்கைக்கு ஏற்புடையதல்ல.” என்று குற்றப் பிரிவு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
சமூகத்திலும் குற்றவாளிகள் மத்தியிலும் ஆயுதங்கள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடுப்பதற்கு வெற்றிகரமான வலுவான புலனாய்வு வலையமைப்பை இலங்கை பொலிஸார் விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
பல இளைஞர்களை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது
பல இளைஞர்களை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது
இளைஞர்களை ஏமாற்றி பணம் மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் தொழிற்சாலை ஒன்றில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பதுளை பிரதேச இளைஞர்களிடம் பணம் பெற்ற பதுளை, தெமோதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக 4 முறைப்பாடுகள் பணியகத்திற்கு கிடைத்துள்ளன.
பல இளைஞர்களை ஏமாற்றிய இரண்டு பெண்கள் கைது
அதன்படி, பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்த குற்றச்சாட்டின் பேரில், பதுளை, தெமோதர பகுதியில் வைத்து விசாரணை அதிகாரிகள் இந்த இரு பெண்களையும் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் இருவரும் பதுளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாளை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களைத் தவிர, இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதேவேளை, தென்கொரியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 51 பேரிடம் பண மோசடி செய்து இரண்டரை மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த தென்கொரிய நபர் ஒருவர் கொட்டாவ பகுதியில் வைத்து இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட குறித்த நபர் அலங்கார மீன் ஏற்றுமதி தொடர்பான தொழில் தொடங்க இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உரிய சட்ட அனுமதி கிடைக்காததையடுத்து, தென்கொரியாவில் இளைஞர்களை வேலைக்கு அனுப்புவதாக கூறி பணத்தை ஏமாற்றியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய தென்கொரிய பிரஜை நாளை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு
அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு
அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (26) மாலை 6.30 மணியளவில் அவிசாவளை தல்துவ சந்தியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகமூடி அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது
மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது
மாணவர்களை தாக்கிய ஆசிரியர் கைது
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் உள்ள பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த ஆசிரியர் தெல்லிப்பழை பொலிஸாரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்








































