Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!
முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!
சரத்வீரசேகர இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (16.06) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர அவர்கள் கடந்த காலங்களில் பல கருத்துக்களை கூறியுள்ளார். குறிப்பாக தமிழ் பிரதேசங்களில் நடைபெறுகின்ற அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார். மாகாணசபை முறையையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
முடிந்தால் செய்து காட்டுங்கள் என சரத் வீரசேகரக்கு சவால் விட்ட செல்வம் அடைக்கலநாதன்!
சரத் வீரசேகர அவர்கள் இராணுவத்தில் றொட்டி சுட்டுக் கொண்டா இருந்தார். ஏனெனில் எங்களது மக்களது பிரச்சனை என்பது காலம் காலமாக இருந்து வரும் பிரச்சனை. தங்களது பிரச்சனைகளைப் பேசுவதற்கே மக்கள் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள். தங்களுக்கான அநீதிகளை சுட்டுக் காட்டும் வழியிலும் தான் நாடாளுமன்றம் அனுப்புகிறார்கள். அந்தவகையில் தங்களது தேசத்து மக்களது பிரச்சனைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். இவர் யார்? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து சிறையில் அடைக்கச் சொல்வதற்கு இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? முடிந்தால் அதை செய்து பார்க்கட்டும். சும்மா இராணுவத்தில் இருந்து எதையெல்லாம் செய்து போட்டு வந்து கொக்கரிக்க கூடாது. எனவே அவருக்கு சவால் விடுகின்றேன். மக்கள் நலன் சார்ந்து பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்யுங்கள் பார்க்கலாம். அடுத்து என்ன நடக்கும் என பார்ப்பீர்கள் எனத் தெரிவித்தார்.
நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம்: செல்வம் எம்.பியும் பங்கேற்பு
நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம்: செல்வம் எம்.பியும் பங்கேற்பு
நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16.06) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு சில கிராம அலுவலர் பிரிவுகளை பிரிப்பதற்கும், சில பிரிவுகளை இணைப்பதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு வவுனியா பிரதேச செயலக பிரிவில் பட்டாணிச்சூர், வேப்பங்குளம், பண்டாரிக்குளம், கூமாங்குளம், உக்குளாங்குளம், மகாறம்பைக்குளம் என்பனவும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் மெனிக்பாம், ஆண்டியாபுளியங்குளம் என்பனவும் தனி கிராம அலுவர் பிரிவுகளாக பிரிப்பதற்கும், கலாபோகஸ்வேவ உள்ளிட்ட 4 சிங்கள குடியேற்ற கிராமங்களின் நிர்வாக நடவடிக்கையை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம்: செல்வம் எம்.பியும் பங்கேற்பு
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களில் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
துப்பாக்கி சூடு பெண் மரணம்
துப்பாக்கி சூடு பெண் மரணம்
இலங்கை மெதிரிகிரிய பகுதியில் நடத்த பாட்ட துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் மரணித்துள்ளார் .
வீதியால் பயணித்து கொண்டிருந்த பெண் மீது மறைந்திருந்த நபர் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ,அவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .
கொலையாளியை கைது செய்திடும் நடவடிக்கையில் போலீசார் ஈடு பட்டுள்ளனர் .
இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
இலஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
இலங்கை பாணந்துறை டிப்போ பகுதியில் லஞ்சம் வாங்கிய அதிகாரி ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .
போக்குவரத்து சபையின் களுத்துறை அலுவலகத்தில் வழங்க பட்ட முறைப்பாட்டை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .
இலங்கையில் ஊதி பெருத்துள்ள லஞ்சத்தினால் நாடு சூடு காடாக மாறிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
மோதிய பயணிகள் பேரூந்து 5 பேர் காயம்
மோதிய பயணிகள் பேரூந்து 5 பேர் காயம்
மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேரூந்து இரண்டு நேரெதிர் மோதியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .
.காயமாய்ந்த ஐந்து மாணவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்க படுகிறது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மாணவியின் நிர்வாண புகைப்படம் இராணுவ சிப்பாயின் அசிங்க செயல்
மாணவியின் நிர்வாண புகைப்படம் இராணுவ சிப்பாயின் அசிங்க செயல்
இலங்கையில் 17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை ,சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என அச்சுறுத்திய ,சிங்கள சிப்பாய்
ஒருவர் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
மாணவி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய ,
விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர் .
23 வயதாகும் மின்னேரிய இராணுவ முகாமில் கடமையாற்றும்,
இராணுவ சிப்பாயே இந்த அநாகரிக செயலில் ஈடுபட்டுள்ளார் .
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
கயேந்திரகுமார் அணியை சேர்ந்த மூவர் கைது
கயேந்திரகுமார் அணியை சேர்ந்த மூவர் கைது
தமிழ் தேசிய முன்னணியாக விளங்கும் ,கயேந்திர குமார் ,
அணியை சேர்ந்த மூவர் காவல்த்துறையால கைது செய்யப் பட்டுள்ளனர் .
யாழ்ப்பாணம் மருந்தாங்கேணி சம்பவம் தொடர்ப்பில் ,
இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னரே இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது .
இது அரசியல் பழிவாங்கும் வங்குரோத்து நிகழ்வு என குறித்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது
இலங்கையில் ரஸ்யா அணு உலை கொதிக்கும் அமெரிக்கா
இலங்கையில் ரஸ்யா அணு உலை கொதிக்கும் அமெரிக்கா
இலங்கையில் இரண்டு அணு உலைகளை இயக்கி அதன் ஊடாக ,300 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய அணுமின் நிலையத்தை நிர்மாணிக்க ரஷ்ய அணுசக்தி நிறுவனமான ரொசாட்டம் உடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக ரஷ்யாவிற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார் .
இந்தியப் பெருங்கடல் தீவு தேசம் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க தனக்கென சொந்த மின் உற்பத்தி நிலையத்தை வைத்திருக்க இலங்கை விரும்புத்தகாக அவர் தெரிவித்தார்
.விரைவில் இந்த கட்டுமானத்தை தொடங்குவதற்கான அனுமதியை அரசு துரிதப்படுத்தும்என நம்பிக்கை வெளியிட்டார் .
இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது ,இலங்கை வாலாதிக்க நாடுகளின் போட்டி காலமாக மாற்றம் பெற்றுள்ளது .
நடந்து சென்ற பெண்ணை இடித்து கொன்ற ஆசாமி
நடந்து சென்ற பெண்ணை இடித்து கொன்ற ஆசாமி
இலங்கை ஏறாவூர் பொலிஸ் பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரை
ஆசாமி ஒருவர் இடித்து கொன்றுள்ளார் .
சாலையை கடக்கும் பொழுது வேகமாக ஊந்துருளியில் பயணித்த ,
ஆசாமி ,அவரது கட்டு பாட்டை இழந்து ,
குடும்பம் பெண் மீது மோதியதில் ,பெண் சம்பவ இடத்தில பலியாகியுள்ளார் .
ஆசாமி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் தப்பியுள்ளார் .
அதிக மது போதையில் ,மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றதினால் ,
இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதக போலீசார் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் தறிகெட்டு செயல் படும் இவ்வாறான ,ஆசாமிகளினால் ,
அதிக விபத்துக்கள் ஏற்பட்டு ,மக்கள் பலியாகி வருகின்றமை,
அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
மன்னாரில் எரிந்த வாகனம் பல லட்சம் நாசம்
மன்னாரில் எரிந்த வாகனம் பல லட்சம் நாசம்
மன்னார் முருங்கன் பகுதியில் பொருட்களை காவிய படி பயணித்த ,
சிறிய லொறி ஒன்று தீ பற்றி எரிந்தது நாசமாகியுள்ளது .
வாகனத்தில் தீ பரவல் ஏற்படத்தை அடுத்து சாரதியும் ,ஓட்டுனரும் குதித்தனர் ,
அவர்கள் தப்பித்த பொழுதும்,வண்டி முற்றாக தீயில் எரிந்து அழிந்துள்ளது.
இந்த தீ பரவலுக்கான காரணம் தெரியவரவில்லை .,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு 6 வாலிபர்கள் கைது
டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு 6 வாலிபர்கள் கைது
பொசன் பௌர்ணமி தினத்தன்று டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு கலவையில் செயல்பட்ட 6 வாலிபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
.நடத்தப்பட்ட மதுபான ‘தன்சல’ காட்சியை சமூக ஊடகமான ‘டிக்டோக்’ தளத்தில் பதிவேற்றம் செய்து, மதுபானத்தை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஆறு இளைஞர்களை இலங்கை காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிஸ் மா அதிபர் (IGP) இது தொடர்பான விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளார்.
அதன்படி, 20 முதல் 25 வயதுக்குட்பட்ட 6 பேர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து வீடியோ தொடர்பாக நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
டிக் டாக்கில் மதுபான தயாரிப்பு 6 வாலிபர்கள் கைது
இவர்கள் கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் போது, இளைஞர்கள் தங்கள் உறவினர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட வெற்று வெளிநாட்டு மதுபான போத்தல்களில் தேநீரை ஊற்றியதாகவும், டிக்டோக்கில் வெளியிடுவதற்காக வீடியோ கிளிப்பை தயாரிப்பதற்காக இந்த செயலை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த ஆறு பேரையும் கைது செய்த புலனாய்வு அதிகாரிகள், கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
வீதியில் நடந்த துப்பாக்கி சூடு
இலங்கை லுனுகம்வெஹர பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர்,மீது வீதியோரம் மறைந்திருந்த மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடுநடத்தினர்
எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளின் பக்கவாட்டு கண்ணாடி ,சேதமடைந்துள்ளதாகவும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றனர் .
யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வீடொன்றின் கூரையை பிய்த்து ,
இறங்கிய திருடர்கள் அங்கிருந்த 22 பவுன் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் .
இரு பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவேளை ,வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள் சத்தம் இன்றி நகைகளை திருடி தப்பி சென்றுள்ளனர்
பாதிக்க பட்ட பெண்கள் காவல்துறையில் முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கடனை கேட்டவர் மீது தாக்குதல்
கடனை கேட்டவர் மீது தாக்குதல்
மட்டக்களப்பு தலைநகர் பகுதியில் தனது அண்ணனுக்கு 17 வருடத்துக்கு முன்னர் கடனாக கொடுத்த பணத்தை கேட்டு வீட்டுக்கு சென்ற போது அவர்
மீது அவரது சகோதர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது அண்ணன், அக்கா மற்றும் அக்காவின் கணவர் அவரது மகள் ஆகிய 4 பேரை இன்று (14) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மட்டு. கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் தனது காணியை கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் விற்று
அந்த பணத்தில் 6 1/2 லட்சம் ரூபாவை மூத்த சகோதரனுக்கு கடனாக வழங்கிய நிலையில் அவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்று விட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திரும்பி வந்துள்ளார்.
கடனை கேட்டவர் மீது தாக்குதல்
இந்த நிலையில் கொடுத்த கடணை கேட்டு சகோதரனின் வீட்டுக்கு சென்ற நிலையில் அவர் அங்கு இல்லாத நிலையில், அவர் தனது சகோதரியின் வீட்டில் இருப்பதாக அறிந்த அவர் சம்பவ தினமான நேற்று (13) மாலை 6 மணியளில்
சகோதரியின் வீட்டுக்கு சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட வாய் தர்க்கம் அதிகம் ஆனாதால் அவர் மீது அவரது சகோதரன், சகோதரி, சகோதரியின்
கணவர் அவர்களது மகள் சேர்ந்து தாக்குதல் நடாத்தியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தில் தாக்குதலை மேற்கொண்ட இரு பெண்கள், இரு ஆண்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளதாகவும் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்களை அச்சுறுத்திய அரசியல்வாதி கைது
பொது மக்களை அச்சுறுத்திய அரசியல்வாதி கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான P.D.அபேரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு பொது மக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் நாளைய தினம் (15) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை
குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 05 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5000 ரூபாவும்,
வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை
குறித்த செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 5
நபர்களை பொலிஸார் கைது செய்ததுடன், அவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இரத்தக் காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்பு
இரத்தக் காயங்களுடன் ஒருவரின் சடலம் மீட்பு
வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவுரலுமுல்ல, நந்துங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றினுள் இரத்தக் காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெலிவேரிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
யாழ். கடற்றொழிலாளர்கள் மோடிக்கு மகஜர்
யாழ். கடற்றொழிலாளர்கள் மோடிக்கு மகஜர்
வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழில் உள்ள இந்திய துணை தூதுவரை சந்தித்து நேற்று (13) காலை கலந்துரையாடினர்.
இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளதாக கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதி அ. அன்னராசா தெரிவித்தார்.
யாழ். கடற்றொழிலாளர்கள் மோடிக்கு மகஜர்
மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவில் மீனவர்களுடைய மீன்பிடி தடைக்காலம் நிறைவடைகிற நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை, வடமராட்சி கிழக்கு, தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பான நடவடிக்கைகள் வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றது. இதனால் கடற்றொழிலாளர்களும் மீன் சாப்பிடும் மக்களும் பாதிக்கப்படுவர்.
ரோலர் வருகிறது ஏற்றுமதி இடம்பெறுகிறது என்பதற்காக அரசாங்கம் சட்டவிரோதமான தொழிலை கனகச்சிதமாக அனுமதிக்கிறது.
கடற்றொழில் இருந்து வடக்கு கடற்றொழிலாளர்களை அந்நியப்படுத்தும் முயற்சி தற்போது இடம்பெற்று வருகின்றது. சீன கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சட்டவிரோதமான தொழில் மற்றும் சீன கடலட்டைப் பண்ணை விவகாரங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆறுக்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களும் மூன்று கடற்றொழிலாளர் சமாசங்களும் இணைந்து குறித்த மகஜரை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு வழங்கினர்.
தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு
தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு
வீரபுரம் பகுதியில் தமிழ்மக்களுக்கு வழங்கபடவேண்டிய 250 ஏக்கர் காணி, சிங்கள மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
வவுனியா ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று (13) நடைபெற்றது. இதன்போதே குறித்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், “1994ஆம் ஆண்டு செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வீரபுரம் மக்களுக்காக 400 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் வழங்குவதாக கூறி குடியமர்த்தப்பட்டார்கள். ஆனால், தற்போது வரை அந்த மக்களுக்கு காணிகள் வழங்கப்படவில்லை.
தமிழ் மக்களின் காணிகள் சிங்கள மக்களால் அபகரிப்பு
“ஆனால், ஒதுக்கப்பட்ட காணிகளில் 75 சதவீதமான காணிகள், வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தை சேர்ந்த பெரும்பாண்மையின சிங்கள மக்கள் அபகரித்திருக்கின்றார்கள்.
“இதேவேளை, எமது மதுராகநகரை சேர்ந்த பொதுமக்கள் தெற்கு சிங்கள பிரிவிற்குள் சென்று குடியேறுவதற்காக சிறு துண்டு காணியை கேட்டபோது, அதற்கு அந்தப் பகுதியில் உள்ள பௌத்த மதகுரு சம்மதித்தால் தான் இவர்கள் தமது பிரிவிற்குள் வரமுடியும் என்று மாவட்டச் செயலக மட்டத்தில் அன்று எனக்கு பதில் வழங்கப்பட்டது.
“ஆனால், தற்போது 250 ஏக்கருக்கும் மேற்ப்பட்ட காணிகளை தெற்கில் இருக்கும் மக்கள் அபகரித்திருக்கின்றார்கள். எனவே, வீரபுரம் மக்களுக்கு அந்த காணிகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.
பேருந்து கட்டணங்களை குறைக்க திட்டம்
பேருந்து கட்டணங்களை குறைக்க திட்டம்
ஜூலை 1 முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களையும் கிட்டத்தட்ட 20% குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
ஜூலை 1 ஆம் திகதி பஸ் கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 12 பிரிவுகள் தொடர்பான கணக்கீடுகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களும் குறைக்கப்படலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.








































