குடிவரவு - குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை
Posted in இலங்கை செய்திகள்

குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை

குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 05 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5000 ரூபாவும்,

வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை

குறித்த செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 5

நபர்களை பொலிஸார் கைது செய்ததுடன், அவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No posts found.