Posted in Uncategorized

பிரேசிலில் நடந்த சோகம் – 94 பேர் மரணம் -பலரை காணவில்லை

பிரேசிலில் நடந்த சோகம் – 94 பேர் மரணம் -பலரை காணவில்லை

பிரேசில் நாட்டில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி 94 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் பல டசின் பேர் காணாமல் போயுள்ளனர்

இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

    Posted in Uncategorized இலங்கை செய்திகள்

    பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா

    பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று

    இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    கொரோனா அறிகுறிகளையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்

    அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்

    Posted in Uncategorized

    நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி

    நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி

    பிரேசிலில் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலியாகியுள்ளனர்.

    பிரேசிலில் கனமழை- வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 94 பேர் பலி
    நிலச்சரிவு ஏற்பட்டதை படத்தில் காணலாம்.


    பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டிஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் மிகப்பெரிய மழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் ஊர்களுக்குள்ள தண்ணீர் புகுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் மண்ணில் புதைந்தனர். மீட்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. முதல் கட்ட தகவலில் 54 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணியில் பல உடல்கள் மீட்கப்பட்டன. வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்ந்தது

    Posted in Uncategorized

    ஏரியில் விழுந்த போர் விமானம்

    ஏரியில் விழுந்த போர் விமானம்

    மியான்மரில் விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று மீட்புக் குழு பணியாளர் தெரிவித்தார்.

    ஏரியில் விழுந்த போர் விமானம்- பைலட் உயிரிழப்பு
    மீட்பு பணி

    மியான்மரின் சகாயிங் நகரின் அருகே போர் விமானம் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த பைலட் உயிரிழந்தார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    விபத்து நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். விபத்துக்குள்ளான விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும், விமானப்படையின் விருப்பத் தேர்வான நீல நிற பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

    மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான படைகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே தீவிரமாக சண்டை நடைபெறும் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

    Posted in Uncategorized

    முகாம்களுக்கு திரும்பும் ரசிய இராணுவம் – வீடியோ

    முகாம்களுக்கு திரும்பும் ரசிய இராணுவம் – வீடியோ

    உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்த நிலையில் தற்பொழுது

    ரசிய இராணுவம் தமது முகாம்களுக்கு திரும்பிய வண்ணம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது, டாங்கிகள்


    ,கவச வாகனங்கள் சகிதம் அவர்கள் செல்லும் அந்த காட்சி தற்போது வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

    இதில் அழுத்தி வீடியோ பார்க்க

      Posted in Uncategorized

      வெடித்து சிதறிய இராணுவ வண்டி – ஒருவர் மரணம் – 11 பேர் காயம்

      வெடித்து சிதறிய இராணுவ வண்டி – ஒருவர் மரணம் – 11 பேர் காயம்

      சிரியா டமக்காஸ் பகுதியில் இராணுவத்தினர் சென்ற வண்டி ஒன்றில் ஆயுதம் வெடித்து

      சிதறியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார் ,மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்

      இராணுவத்தினர் சென்ற வண்டி பலத்த சேதமடைந்துள்ளது

      குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

        Posted in Uncategorized

        சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா

        சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா


        73 வயதான சார்லஸ், 74 வயதாகும் கமிலா ஆகிய இருவருமே கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

        இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா
        இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுடன்

        இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லசுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

        ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் அவரை கொரோனா தொற்றிய நிலையில், தற்போது 2-வது முறையாக வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

        இந்த நிலையில் சார்லசின் மனைவியும், இளவரசியுமான கமிலாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

        கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த கமிலா, தினமும் கொரோனா பரிசோதனை செய்து வந்தார்.

        அந்த வகையில் நேற்றைய பரிசோதனையின்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

        73 வயதான சார்லஸ், 74 வயதாகும் கமிலா ஆகிய இருவருமே கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

          Posted in Uncategorized

          நடிகர் தீப் சித்து கார் விபத்தில் மரணம்

          நடிகர் தீப் சித்து கார் விபத்தில் மரணம்

          இந்த விபத்தில் காயமடைந்த பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

          நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதால் நடிகர் தீப் சித்து உயிரிழந்தார் – சோனிபட் காவல்துறை விளக்கம்
          பஞ்சாப் நடிகர் தீப் சித்து

          வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்ற விவசாய போராட்டங்களின் போது டெல்லி செங்கோட்டையில் சீக்கிய மதக் கொடியை சிலர் ஏற்றினர். இந்த

          போராட்டத்தை தூண்டியதாக பஞ்சாப் நடிகரும் சமூக ஆர்வலமான தீப் சித்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

          இந்நிலையில், அரியானா மாநிலம் சோனிபட் அருகே நேற்றிரவு நிகழ்ந்த சாலை விபத்தில் தீப் சித்து உயிரிழந்தார்.

          குண்ட்லி-மனேசர்-பல்வால் எக்ஸ்பிரஸ் சாலையில் பிப்லி சுங்க சாவடி அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது தீப் சித்து வந்த கார் வேகமாக மோதியது.இதில்

          படுகாயம் அடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

          இந்த விபத்து குறித்து சோனிபட் காவல்துறை எஸ்.பி.ராகுல் சர்மா, தெரிவிக்கையில்,

          சாலை விபத்தில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. தீப் சித்து என்ற அடையாளம் காணப்பட்ட நபர் சிகிச்சையின்

          போது இறந்தார், மேலும் ஒரு பெண் சிகிச்சை பெற்று வருகிறார், அவர் ஆபத்தான நிலையில் உள்ளார். விபத்து குறித்த விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

          சரண்ஜித் சிங் சன்னி, . தீப் சித்து

          இதனிடையே, தீப் சித்து உயிரிழப்புக்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இரங்கல் தெரிவித்துள்ளார்.

          பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான தீப்சித்துவின் துரதிர்ஷ்டவசமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது எண்ணங்களும்

          பிரார்த்தனைகளும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் உள்ளன. இவ்வாறு தமது ட்விட்டர் பதிபில் சரண்ஜித் சிங் சன்னி பதிவிட்டுள்ளார்.

            Posted in Uncategorized

            உக்கிரேன் எல்லையில் ஒருலட்சம் ரசியா இராணுவம் தயார் நிலையில்

            உக்கிரேன் எல்லையில் ஒருலட்சம் ரசியா இராணுவம் தயார் நிலையில்

            உக்கிரேன் எல்லையில் ரசியாவின் ஒரு லட்சம் துருப்பினர் தாக்குதலை நடத்த தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர்

            முக்கிய ஆயுத தளபாடங்களுடன் முக்கிய தாக்குதல் படை பிரிவுகள் குவிக்க பட்டுள்ளதால் அங்கு பெரும் பதட்டம் நிலை வருகிறது

            தமது நாட்டை ரசியவிடம் இருந்து பாதுகாக்க வயோதிபர்கள் முதல் உக்கிரேனில் அவசர இஇராணுவ பயிசிறை பெற்ற வண்ணம் உள்ளனர்

              Posted in Uncategorized உலக செய்திகள்

              பிரான்சில் பாரிய தீ – 7 பேர் மரணம்

              பிரான்சில் பாரிய தீ – 7 பேர் மரணம்

              பிரான்ஸ் Saint-Laurent-de-la-Salanque பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இடம்பெற்ற தி விபத்தில் சிக்க ஏழு பேர் பலியாகினர்

              மேலும் சிலர் தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

              மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in Uncategorized

                20 ஐ எஸ் கைது – தொடரும் வேட்டை

                20 ஐ எஸ் கைது – தொடரும் வேட்டை

                ஈராக்கில் ஐ எஸ் படையை சேர்ந்த இருபது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்


                இராணுவத்தின் நடத்திய விசேட தேடுதல் வேட்டையின் பொழுது இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது

                  Posted in Uncategorized

                  செக்ஸுக்கு மறுத்த பெண்ணின் மார்பகங்களை கிழித்த கொடூரன்

                  செக்ஸுக்கு மறுத்த பெண்ணின் மார்பகங்களை கிழித்த கொடூரன்

                  புனேவின் சிவப்பு விளக்கு பகுதியில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் பாலியல் தொழிலாளியை பிளேடால் கிழித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.


                  புனேவின் வாதார்வாடி பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா (40). இவர் கடந்த பிப்ரவரி 11-ம் திகதி புத்வார் பெத் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றுள்ளார்.


                  அங்கு பாலியல் தொழிலாளி பெண் (35) ஒருவரிடம் விபச்சாரத்திற்கான தொகை குறித்து ராஜப்பா பேரம் பேசியுள்ளார்.


                  தொடர்ந்து, இருவருக்கும் இடையே பேரம் வாக்குவாதமாகவும் மாறியுள்ளது.
                  ஒருகட்டத்தில் ராஜப்பாவின் பேரத்தை ஏற்காத அந்த பெண், அவருடன் செல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.


                  இதில் ஆத்திரமடைந்த ராஜப்பா, அந்த பாலியல் தொழிலாளி பெண்ணின் மார்பகத்தை தான் வைத்திருந்த சேவிங் பிளேடால் சரமாரியாக கிழித்துள்ளார்.


                  இதில், பலத்த காயமடைந்த அந்த பெண் வலியால் துடித்துள்ளார். தொடர்ந்து உடனடியாக அங்கிருந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


                  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், ராஜப்பாவை கைது செய்தனர். மேலும், அவர் மீது ஐபிசி 307, 506 பிரிவுகளின் கீழ் கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

                  தொடர்ந்து, அந்த பாலியல் தொழிலாளி பெண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.

                    Posted in Uncategorized

                    யாழில் டெங்கு நோயில் சிக்கி சிறுவன் மரணம்

                    யாழில் டெங்கு நோயில் சிக்கி சிறுவன் மரணம்

                    யாழ் . மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

                    கொடிகாமம் மத்தி, கொடிகாமத்தைச் சேர்ந்த வ.அஜய் (வயது 11) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

                    இவர் கடந்த வாரம் காச்சல் பீடிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.

                    குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.

                    இம் மாணவன் 2021 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில், பரீட்சை முடிவுக்காக காந்திருந்த மிக திறமை வாய்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

                      Posted in Uncategorized

                      இலங்கையில் மின்வெட்டு அமூல் – மக்கள் அவதி

                      இலங்கையில் மின்வெட்டு அமூல் – மக்கள் அவதி

                      இன்று (15) முதல் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                      நீர் தேக்கங்களில் நீர் குறைவடைந்துள்ளமை மற்றும் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

                      மின்சாரம் துண்டிக்கப்படும் முறை மற்றும் அட்டவணை இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

                        Posted in Uncategorized

                        திணறும் அமெரிக்கா இராணுவம் – துரத்தி தாக்கும் போராளிகள்

                        திணறும் அமெரிக்கா இராணுவம் – துரத்தி தாக்கும் போராளிகள்

                        ஈராக் நாட்டை ஆக்கிரமித்து அடாத்தாக நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகளை

                        இலக்கு வைத்து தொடராக இடைவிடாத தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றன

                        அவ்விதம் இன்று Saladin பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா படைகளின்

                        தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                        இதன் பொழுது கவச வண்டிகள் சில சேதமடைந்துள்ளன எனினும் முழுமையான தமது

                        இழப்புக்களை அமெரிக்கா படைகள்தெரிவிக்கவில்லை

                          Posted in Uncategorized

                          கப்பல்கள்,விமானங்கள் மூலம் தாக்கும் புதிய ஏவுகணைகளை வெளியிட்ட ஈரான்

                          கப்பல்கள்,விமானங்கள் மூலம் தாக்கும் புதிய ஏவுகணைகளை வெளியிட்ட ஈரான்

                          ஈரான் பாதுகாப்பபு அமைச்சு புதிதாக மேம்படுத்த பட்ட ஏவுகணையினை வெளியிட்டுள்ளது

                          இந்த ஏவுகணையானது ,விமானம்,கப்பல்,உளவு விமானங்கள் ,மற்றும் உலங்கு வானூர்தி மூலம் செலுத்தும் புதிய வடிவமைப்புடன் தயாரிக்க பட்டுள்ளது

                          இவை நெடுந்தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட வகையில் வடிவமைக்க பட்டுள்ளது

                          கடந்த தினம் புதிய இரண்டு போர் விமானங்களை அறிமுக படுத்திய ஈரான் தற்போது

                          ஏவுகணையை வெளியிட்டு வைத்துள்ளது எதிரி நாடுகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

                            Posted in Uncategorized

                            வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இல்லை

                            வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இல்லை

                            ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப் மூலம் பிற கோள்களை ஆராய்ச்சி செய்தனர்.

                            வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இல்லை- விஞ்ஞானிகள் தகவல்
                            வேற்று கிரகவாசி


                            விண்வெளியில் பிற கோள்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் பரவுகிறது. ஏலியன்கள் தொடர்பான ஹாலிவுட்

                            படங்களும் வெளிவந்துள்ளன. இதனால், மக்களின் மனதில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவே கருதப்பட்டு வந்தன.

                            இந்நிலையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதில், மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர்.

                            இதன் முடிவில், ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதரமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

                            இதுகுறித்து ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறப்பட்டுள்ளதாவது:-

                            விண்வெளியில், வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நட்சத்திரங்கள், பிற கோள்களில் இருந்து எந்த அதிர்வுகளும் கண்டறியப்படவில்லை.

                            இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

                              Posted in Uncategorized

                              உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு

                              உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு

                              நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும். அதிக தொலைவில் இருந்தால் மிக குளிராக இருக்கும்.

                              உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு

                              உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

                              இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

                              லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

                              “ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத் திரத்தை உயிர்கள் வாழும் சூழ்நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவது கண்டு பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

                              இந்த கோள் நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ கூடிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அங்கு உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு மிகவும் குளிராகவோ அல்லது அதிக வெப்பமாகவோ இருக்காது.

                              பூமியில் இருந்து 117 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் இந்த கோளுக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இருக்கும் தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 60 மடங்கு குறைவாகும்.

                              உயிர்கள் வாழக்கூடிய மண்டலம் என்பது ஒரு நட்சத்திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இந்த பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ

                              நீர் இருக்க வாய்ப்புள்ள சூழ்நிலையை கொண்டிருக்கும். எனவே உயிர்கள் வாழ இது உதவும்.

                              நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும். அதிக தொலைவில் இருந்தால் மிக குளிராக இருக்கும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டு

                              உள்ள கோள் இருக்கும் மண்டலம் உயிர்கள் வாழ மிக சரியாக இருக்கும் பகுதியில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

                              இது குறித்து பேராசிரியர் ஜேபரிகி கூறும்போது, “இந்த கணிப்பு வானியலாளர்களுக்கு முற்றிலும் புதியது” என்றார்.

                                Posted in Uncategorized

                                பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

                                பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?

                                பலராலும் அதிகம் பார்க்கப்படும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

                                பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார்?
                                பிக்பாஸ் அல்டிமேட்

                                ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாளர்களை அறிவித்து வந்தனர். அதன்படி சினேகன், ஜூலி, சுஜா வருணியும், ஷாரிக், தாடி பாலாஜி, அபிராமி, வனிதா, அனிதா,

                                பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தியும், நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

                                பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர்

                                வெளியேற்றப்படுவது வழக்கமாக பின்பற்றப்படுகிறது. இதே நடைமுறையை தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பின்பற்றப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த

                                வாரம் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் சுஜா

                                வருணி குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

                                  Posted in Uncategorized

                                  பெரும் புயல் வெள்ளம் – 120 பேர் மரணம்

                                  பெரும் புயல் வெள்ளம் – 120 பேர் மரணம்

                                  Madagascar நாட்டை உலுக்கிய புயல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 120 பேர்

                                  பலியாகியுள்ளனர் ,மேலும் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்

                                  பலநூறு வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ள ,பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள்

                                  தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                  இதுவறை 30 க்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக சுயாதீன தகவல்கள்

                                  தெரிவித்துள்ளன ,இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது