Posted in சினிமா

மரணத்தில் இருந்து தப்பினேன் – பேசுகையில் கண்கலங்கிய ராணா

மரணத்தில் இருந்து தப்பினேன் – பேசுகையில் கண்கலங்கிய ராணா

சமந்தா தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

ரத்த அழுத்தம்…. இதயத்தில் பிரச்சனை – உடல்நல பாதிப்பு பற்றி பேசுகையில் கண்கலங்கிய ராணா
ராணா டகுபதி


ராணா டகுபதி 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி,

பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ்

என்ற பெண் தொழில் அதிபரை காதலித்து வந்த ராணா கடந்த ஆகஸ்ட் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சமந்தா தொகுத்து வழங்கும் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணா, தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினைகள் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “வாழ்க்கை

மிக வேகமாகப் சென்று கொண்டிருந்த போது திடீரென ஒரு சிக்கல் வந்தது. பிறந்ததிலிருந்தே எனக்கு சில உடல் உபாதைகள் இருந்தன.

ராணா டகுபதி

ரத்த அழுத்தம், இதயத்தைச் சுற்றி கால்சியம் சேர்ந்திருந்தது. சிறுநீரகங்கள் செயல் இழந்தது. இதனால் ரத்தக் கசிவு, பக்கவாதம்

வருவதற்கான 70 சதவீதம் வாய்ப்புகள் இருந்தன. இறப்பதற்கும் 30 சதவீத வாய்ப்புகள் இருந்தன” எனக்கூறி கண்கலங்கினார் ராணா.

Posted in சினிமா

அந்த நடிகர் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி

பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை பிரியாமணி, பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் என்று கூறியிருக்கிறார்.

பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் – பிரியாமணி
பிரியாமணி
பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம்

கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியாமணி. அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படம் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா

ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் ஆகிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்து

பிரபலமானார். அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம், ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.

பிரியாமணி 2005 ஆம் ஆண்டில் ‘நவ வசந்தம்’ என்ற படத்தில் தருண் என்ற நடிகருடன் நடித்தார். அப்போது பிரியாமணிக்கும்

தருணுக்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் பரவியது. தருண் தமிழில் புன்னகை தேசம், உனக்கு 20 எனக்கு 18 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தருண் பிரியாமணி

இதுகுறித்து பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், “ஒரு நாள், தருண் அம்மா ரோஜா ரமணி வந்து என்னிடம் சிறிது நேரம் பேசினார்.

நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீ விரும்பினால், என் மகன் தருணை திருமணம் செய்து கொள்ள

வேண்டும். அவர் அப்படி கேட்டது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் பின்னர் தருண் அவரது

அம்மாவிடம் எங்கள் இருவருக்கும் இடையே நட்பு தான் காதல் அல்ல என்று கூறி புரிய வைத்தார். என்றார்.

பிரியாமணி 2017 ஆம் ஆண்டில் முஸ்தாஃப் ராஜ் என்பவரைத் திருமணம் செய்தார். தற்போது ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ‘நாரப்பா’வில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Posted in சினிமா

பண மழையில் நனையும் பிரியா ஆனந்த்..

பண மழையில் நனையும் பிரியா ஆனந்த்..

வாமனன் படம் மூலம் தமிழில் அறிமுகமான பிரியா ஆனந்த் பண மழையில் நனையும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பண மழையில் நனையும் பிரியா ஆனந்த்… வைரலாகும்
வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்

நடிகை பிரியா ஆனந்த். தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார் பிரியா ஆனந்த்.

தமிழில் கடந்த ஆண்டு பிரியா ஆனந்த் நடித்திருந்த ஆதித்ய வர்மா, எல்கேஜி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

திரைப்படங்கள் மட்டுமல்லாது தற்போது இந்தியில் வெப் சீரிஸ் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார் பிரியா ஆனந்த்.

ப்ரியா ஆனந்த்

‘சிம்பிள் மர்டர்’ என்ற டைட்டிலில் பிளாக் காமெடி வெப் சீரிஸாக உருவாகியுள்ள இத்தொடரின் போட்டோக்களை தனது

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியா ஆனந்த். அதில் இரண்டாயிரம்

ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டிருக்கும் பிரியா ஆனந்தின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

Posted in சினிமா

ரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை

ரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை

நடிகர் சிம்புவுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகைக்கு, குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபருடன் ரகசிய திருமணம் நடைபெற்றுள்ளது.

ரகசிய திருமணம் செய்து கொண்ட சிம்பு பட நடிகை
சனா கான் திருமண புகைப்படம்
சிம்பு நடித்த ‘சிலம்பாட்டம்’ படத்தில் நடித்திருப்பவர் நடிகை

சனாகான். இவர் ‘தம்பிக்கு இந்த ஊரு’, ‘பயணம்’, ‘ஆயிரம் விளக்கு’, ‘தலைவன்’, ‘அயோக்யா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும்

நடித்திருக்கிறார். நடிகை சனாகானும், மெல்வின் லூயிஸ் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதன் பிறகு சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்த

சனாகான், பொது சேவையில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார். திரை

உலகை சேர்ந்தவர்கள் யாரும் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

கணவருடன் சனா கான்

இந்தநிலையில் சனாகான்- தொழில் அதிபர் முப்தி அனாஸ் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளனர். சூரத் நகரில் வைத்து

இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.

ஆனால் தனக்கு நடைபெற்ற திருமணம் பற்றி சனாகான் இதுவரை எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரகசிய திருமணம்
ரகசிய திருமணம்
Posted in சினிமா

ரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல்

ரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல்

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்த நிலையில் அவரின் பிஆர்ஓ அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினி உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? – பி.ஆர்.ஓ
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக

வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அதில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.

இந்நிலையில், இதுகுறித்து அவரது பிஆர்ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார். ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும்

தகவல் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள அவர், ரஜினி நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். யாரோ விஷமிகள் இவ்வாறு வதந்தியை கிளப்பி விட்டிருப்பதாக ரியாஸ் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ள அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.

எஞ்சியுள்ள படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

Posted in சினிமா

ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா.

ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா.

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட பிரபுதேவா, ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ரகசியமாக 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபுதேவா… பொண்ணு யார் தெரியுமா?
பிரபுதேவா


சினிமாவில் நடன இயக்குனராக இருந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்த பிரபுதேவா தமிழில் விஜய், ஜெயம் ரவி, விஷால், இந்தியில் சல்மான்கான், அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன்

போன்றோர் நடித்த படங்களை இயக்கி இயக்குனராகவும் முத்திரை பதித்தார். பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் ஏற்பட்டு தோல்வியில் முடிந்தது.

நயன்தாராவை திருமணம் செய்ய முதல் மனைவியையே விவாகரத்து செய்த நிலையிலும் திருமணம் நடக்கவில்லை. காதல்

முறிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. தற்போது நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார். தற்போது பிரபுதேவாவுக்கு 47 வயது ஆகிறது.

பிரபுதேவா

குடும்பத்தினர் பிரபுதேவாவிடம் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி வந்ததாகவும், இதனால் அவர்

உறவுக்கார பெண்ணை பிரபுதேவா 2-வது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில், பிரபுதேவாவுக்கு திருமணம் முடிந்து விட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மணப்பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார் எனவும்

கூறப்படுகிறது. சமீபத்தில் பிரபுதேவா பிசியோதெரபி சிகிச்சை எடுத்தபோது அந்த பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டு, பெற்றோர்

சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரபுதேவா இதனை உறுதிப்படுத்தவில்லை.

Posted in சினிமா

தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… ஐகோர்ட்டு புதிய உத்தரவு

தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… ஐகோர்ட்டு புதிய உத்தரவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷனுக்கு சனம் ஷெட்டி வழக்கில் ஐகோர்ட்டு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

தர்ஷன் – சனம் ஷெட்டி வழக்கு… ஐகோர்ட்டு புதிய உத்தரவு
சனம் ஷெட்டி – தர்ஷன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகர்

தர்ஷன். தர்ஷனுக்கு எதிராக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சனம் ஷெட்டி, அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில்,

தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி, பல லட்சம் ரூபாய் தர்ஷன் மோசடி செய்தார். பின்னர் திருமணம் செய்ய மறுத்ததோடு, சமூக வலைத்தளங்களில்

தன்னையும், தன் குடும்பத்தையும் தரக்குறைவாக விமர்சனம் செய்து, இழிவுபடுத்தியதாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தர்ஷன் சென்னை ஐகோர்ட்டில்

மனுதாக்கல் செய்தார். அதில், தன்னை துன்புறுத்தும் நோக்குடன் சனம் ஷெட்டி பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே, தனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தர்ஷனுக்கு முன்ஜாமீன் வழங்கினார். ஒரு வாரத்துக்கு அனைத்து மகளிர் காவல்

நிலையத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அதன்பின்னர், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை

வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

Posted in சினிமா

சினேகன் கார் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு

சினேகன் கார் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு

பிரபல பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்தவருமான சினேகன் ஏற்படுத்திய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

சினேகன் கார் மோதிய விபத்து – இளைஞர் உயிரிழப்பு
சினேகன்
தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்

கொண்டு மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் கமல் கட்சி ஆரம்பித்தவுடன் அவரது

கட்சியில் இணைந்த சினேகன், முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் சவேரியாபுரம் மற்றும் திருமயத்துக்கு இடையே சினேகன் சென்ற கார், மோட்டார்

சைக்கிளில் வந்த அருண் பாண்டி என்ற இளைஞர் மேல் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அருண் பாண்டி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அருண் பாண்டி சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்திருக்கிறார். கார் ஓட்டிச் சென்ற சினேகன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல்

மற்றும் விபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் திருமயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில்

தற்போது இளைஞர் அருண் பாண்டியன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Posted in சினிமா

காதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா

காதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, காதல் திருமணம் தான் செய்வேன் என கூறியுள்ளார்.

காதல் திருமணம் தான் செய்வேன் – திரிஷா திட்டவட்டம்
திரிஷா


நடிகை திரிஷாவுக்கு தற்போது 37 வயது ஆகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி முறிந்துவிட்டது.

பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவும், திரிஷாவும் பட விழாக்களில் ஜோடியாக பங்கேற்றதை வைத்து இருவரையும் இணைத்து

கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் ராணாவும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

திரிஷா

இந்நிலையில், திருமணம் பற்றி திரிஷா சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான்

இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்பவரையே திருமணம் செய்து கொள்வேன். அது காதல்

திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை, ‘சிங்கிள்’ ஆக இருப்பது பற்றி

கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால், இப்படியே இருந்து விடுவேன். அதுபற்றியும் கவலைப்பட மாட்டேன்.

Posted in சினிமா

குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படம்

குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படம்
குடும்பத்தினருடன் ரஜினி


நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, கட்சி தொடங்கும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ரஜினி விரைவில் கட்சி அறிவிப்பை

வெளியிட்டு, 2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்

அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை வந்து ரஜினியின் அரசியல் திட்டத்தை மாற்றிவிட்டது. ரஜினி தன் உடல்நலனை கருத்தில் கொண்டு வீட்டிலேயே இருக்கிறார்.

ரஜினியின் பிறந்தநாள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் அவரை

சந்திப்பதற்காக ரசிகர்கள் ரஜினியின் வீட்டிற்கு வருவது வழக்கம். ரஜினியும் வெளியில் வந்து ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.

அவ்வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மாஸ்க் அணிந்தபடி,

கேட்டிற்கு பின்னால் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினி.

ரஜினி

பின்னர் குடும்பத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடி இருக்கிறார் ரஜினி. இந்த புகைப்படங்களை சௌந்தர்யா

ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Posted in சினிமா

சாதனை படைக்கும் ‘ரவுடி பேபி’ பாடல்…. 100 கோடியை தொட்டது

சாதனை படைக்கும் ‘ரவுடி பேபி’ பாடல்…. 100 கோடியை தொட்டது

தனுஷ் நடிப்பில் வெளியான ‘மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூபில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த

படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரவுடி பேபி பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை

கிளப்பியது. இந்த பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார்.

இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான

சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த

பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று சாதனை படைத்தது. இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

சாய் பல்லவி, தனுஷ்

அந்த வகையில், இந்த பாடல் தற்போது யூடியூபில் 1 பில்லியன், அதாவது 100 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளதால் சாதனையைப்

படைத்துள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் ஒரு சினிமா பாடல் 1 பில்லியன் சாதனையைப் படைப்பது இதுவே முதன் முறை.

இதற்கு முன்பு ஓரிரு இந்திப் பாடல்கள் மட்டுமே 1 பில்லியன் சாதனையைப்

படைத்துள்ளது. இந்திய அளவில் அதிக முறை பார்க்கப்பட்ட பாடல் என்ற வரிசையில் ‘ரவுடி பேபி’ 5-வது இடத்தில் உள்ளது.

முதலிடத்தில் ‘ஹனுமான் சாலிசா’ (1.3 பில்லியன்) என்ற பக்திப் பாடல் உள்ளது. இரண்டாம் இடத்தில் பஞ்சாபி சினிமா பாடலான

‘லாங் லாச்சி’ டைட்டில் பாடல் (1.2 பில்லியன்) உள்ளது. இந்தப் பாடல்களையும் விரைவில் பின்னுக்குத் தள்ளி ‘ரவுடி பேபி’ முதலிடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in சினிமா

காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்

காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்

தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், தேனிலவில் செய்த காரியத்தால் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள்.

தேனிலவில் காஜல் செய்த காரியத்தால் கடுப்பான ரசிகர்கள்
காஜல் அகர்வால்


காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. மும்பையில் நடந்த

திருமணத்தில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

கொரோனா வைரஸ் பிரச்சனையால் அனைவரையும் அழைக்க முடியவில்லை என்றார் காஜல். திருமணமான மறுநாள் தன் கணவருடன் புது வீட்டில் குடியேறினார். அதன் பிறகு கணவருடன் தேனிலவுக்கு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார் காஜல்.


மாலத்தீவுகளில் காஜலின் போட்டோகிராஃபராகிவிட்டார் கவுதம் கிட்ச்லு. காஜலை அழகாக புகைப்படம் எடுக்கிறார் என்று ரசிகர்கள்

பாராட்டியுள்ளனர். எப்பொழுது பார்த்தாலும் வேலை, ஒர்க்அவுட், யோகா என்று பிசியாக இருந்த காஜல் அகர்வாலால் மாலத்தீவுகளில் சும்மா இருக்க முடியவில்லை.

காஜல் அகர்வால்

இதையடுத்து யோகா செய்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார் காஜல். அந்த

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தேனிலவில் போய் யோகா, ஒர்க்அவுட்டுனு அநியாயம் பண்றீங்களே. கணவருடன் நேரம்

செலவிடுங்கள். அந்த மனிதர் பாவம், போட்டோ எடுத்தே அலுத்துப் போய்விடுவார் போன்று. மும்பை வந்த பிறகு யோகா செய்யலாம். தற்போது கவுதமுக்கு நேரம் ஒதுக்குங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்

Posted in சினிமா

பக்குவமா சொல்லும்போதே கேட்டுக்கோங்க செல்லம்…. மாஸ்டர் படத்தின் டீசர் அப்டேட்

பக்குவமா சொல்லும்போதே கேட்டுக்கோங்க செல்லம்…. மாஸ்டர் படத்தின் டீசர் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும்

நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்

நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.

கடந்த சில மாதங்களாக இப்படம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து தீபாவளிக்காவது டீசர், டிரெய்லர் என எதையாவது வெளியிடும்படி சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று மாலை முக்கிய அப்டேட் வெளியிட உள்ளதாக மாஸ்டர் படக்குழு

டுவிட் செய்துள்ளது. அதன்படி, மாஸ்டர் படத்தின் டீசரை தீபாவளி தினமான நவம்பர் 14ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Posted in சினிமா

மரண பயத்தை காட்டீருச்சு – கொரோனா குறித்து தமன்னா

மரண பயத்தை காட்டீருச்சு – கொரோனா குறித்து தமன்னா

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது மரண பயம் வந்ததாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

மரண பயத்தை காட்டீருச்சு – கொரோனா குறித்து தமன்னா
தமன்னா
நடிகை தமன்னாவுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். மீண்டும் ஐதராபாத்தில்

தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி வருமாறு: எனக்கு கொரோனா தொற்று உறுதியானதும் மிகவும் பயந்து

போனேன். சிகிச்சை எடுக்கும்போது, செத்து போய்விடுவேன் என்ற எண்ணம்தான் வந்தது. கொரோனா பயம் நிறைய இருந்தது.

நிச்சயம் பிழைக்க மாட்டேன் என்றே தோன்றியது. மருத்துவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். அந்த கஷ்டமான

நேரத்தில் எனது பெற்றோர்கள்தான் தைரியம் கொடுத்தனர். அந்த நேரத்தில் வாழ்க்கை எவ்வளவு விலை மதிக்க முடியாதது. உயிரோடு

இருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தோன்றியது.

தமன்னா

கபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடித்து வருகிறேன். உடம்பை வலிமையாக வைத்துக்கொள்ள

வேண்டிய நேரத்தில் கொரோனா வந்து விட்டதே என்று வருத்தமாக இருந்தது. இப்போது தேறி வருகிறேன். கொரோனா வந்தவர்கள்

பாதிபேருக்கு பயத்தில்தான் உயிர் போய்விடுகிறது என்று நினைக்கிறேன்.

அந்த பீதி இல்லாமல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். தைரியம்தான் மனிதனுக்கு பாதிபலம். கொரோனா பாதித்து

ஆஸ்பத்திரியில் இருந்தால் அவர்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருந்து தைரியம் கொடுத்தால் பிழைத்து கொள்வார்கள். இவ்வாறு தமன்னா கூறினார்.

Posted in சினிமா

புதிய சம்பள பட்டியல் – முதலிடத்தில் நயன்தாரா…. எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

புதிய சம்பள பட்டியல் – முதலிடத்தில் நயன்தாரா…. எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகி உள்ளதாகவும், அதில் நயன்தாரா முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிய சம்பள பட்டியல் – முதலிடத்தில் நயன்தாரா…. எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?
நயன்தாரா


ஹீரோயின்களின் சம்பளம் படத்துக்கு படம் மாறுபடுகிறது. படம் ஹிட் ஆனால் அவர்களாக கூட்டுவதும் பிளாப் ஆனால் தயாரிப்பாளர்களே குறைத்து விடுவதும் வழக்கம். கொரோனா

லாக்டவுனுக்கு பின் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில், ஹீரோயின்களின் புதிய சம்பள பட்டியல் தயாரிப்பாளர்கள் தரப்பில் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த பட்டியலில் நடிகை நயன்தாரா ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். நயன்தாரா நடித்த படங்கள்

தொடர்ச்சியாக வெற்றி பெறுவதால் அவரது சம்பளம் ஏறி உள்ளது. நயன்தாராவுக்கு அடுத்த இடத்தில் காஜல் அகர்வால் உள்ளார். அவர் ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார்.

திரிஷா, அஞ்சலி, காஜல், நிவேதா பெத்துராஜ், தமன்னா

நடிகைகள் திரிஷா, தமன்னா, எமி ஜாக்சன் ஆகிய மூவரும் ரூ.1.50 கோடியும், சுருதிஹாசன் 1 கோடி ரூபாயும், கீர்த்தி சுரேஷ் 80 லட்சம்

ரூபாயும், அஞ்சலி 70 லட்சம் ரூபாயும், ரெஜினா 60 லட்சம் ரூபாயும், ஸ்ரேயா 50 லட்சம் ரூபாயும் சம்பளமாக பெறுகிறார்கள்.

ஸ்ரீதிவ்யா, நிவேதா பெத்துராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர் ரூ.40 லட்சத்தை சம்பளமாக நிர்ணயித்து உள்ளனர்.

நிவேதா தாமஸ், மஞ்சிமா மோகன் ஆகியோர் 35 லட்சம் ரூபாயும், பிரணிதா, பாவனா ஆகியோர் 30 லட்சம் ரூபாயும், அனுபமா

பரமேஸ்வரன் 25 லட்சம் ரூபாயும், ஸ்ரத்தா ஸ்ரீநாத் 10 லட்சம் ரூபாய் வீதமும் சம்பளத்தை நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Posted in சினிமா

சிம்புவின் மாற்றத்தை கண்டு திகைத்து போன நடிகர்

சிம்புவின் மாற்றத்தை கண்டு திகைத்து போன நடிகர்

மாநாடு படத்தில் பிசியாக நடித்து வரும் சிம்புவின் மாற்றத்தை கண்டு திகைத்து போனதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளார்.

சிம்புவின் மாற்றத்தை கண்டு திகைத்து போன நடிகர்
சிம்பு
சிம்பு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மாநாடு. ஊரடங்கிற்கு முன்னர் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில்

பிரம்மாண்ட செட் அமைத்து மாநாடு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நடந்தது. ஊரடங்கிற்குப் பின்னர் இந்தப்

படவேலைகள் அப்படியே நின்றது. இதனால் சுசீந்திரன் இயக்கத்தில் 30 நாட்களில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார் சிம்பு.

தற்போது மீண்டும் மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொள்ள பாண்டிச்சேரி கிளம்பியிருக்கிறார் சிம்பு. நடிகர் படவா கோபி

தற்போது மாநாடு படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே வெங்கட் பிரபுவின் சென்னை 28 படங்களில் நடித்திருக்கிறார்.

படக்குழுவினர்

இது குறித்து பதிவிட்ட படவா கோபி “குழுவிற்கு நன்றி.. எங்கள் தம்பி சிலம்பரசனின் மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து

திகைத்துப் போனேன். மிகவும் உத்வேகமாக உள்ளது. அவர் தொடர்ந்து பலருக்கு ஊக்கமளிக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Posted in சினிமா

பெற்றோருடன் சாமி தரிசனம் செய்த அஜித்… வைரலாகும் புகைப்படம்

பெற்றோருடன் சாமி தரிசனம் செய்த அஜித்… வைரலாகும் புகைப்படம்

முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தனது பெற்றோருடன் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.

பெற்றோருடன் சாமி தரிசனம் செய்த அஜித்… வைரலாகும் புகைப்படம்
அஜித்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது

. எச்.வினோத் இயக்கி வரும் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித் தனது பெற்றோர்களுடன் கோவிலிலிருந்து வெளியே வருவது போன்ற ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வழக்கம் போல அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

அஜித்

இந்த படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. வலிமை படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் அஜித் தனது

பெற்றோர்களான சுப்ரமணியம் மற்றும் மோகினி இருவருடனும் இருப்பதை போன்ற இந்த படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

பெற்றோருடன் சாமி தரிசனம்
பெற்றோருடன் சாமி தரிசனம்
Posted in சினிமா

அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் – அனுஷ்கா

அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் – அனுஷ்கா

தமிழ் தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் அனுஷ்கா, அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் என்று கூறியிருக்கிறார்.

அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் – அனுஷ்கா
அனுஷ்கா


நடிகை அனுஷ்காவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. திருமண வயதை தாண்டியும் இன்னும் திருமணத்துக்கு அவர்

தயாராகவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அனுஷ்கா அளித்த பதில் வருமாறு:

“திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. குழந்தைகளை கொஞ்சவும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் திருமண விஷயத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. எவ்வளவு தாமதம் ஏற்பட்டாலும்

பரவாயில்லை. அதிக நேரம் எடுத்துக்கொண்டு எனக்கு பிடித்தவரை சந்திப்பது வரை காத்திருப்பேன். பிடித்தவராகவும் மனதை

கவர்பவராகவும் இருந்தால் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன்.

அனுஷ்கா

பார்த்தவுடன் இவரைத்தான் மணக்க வேண்டும் என்ற எண்ணமும் வர வேண்டும். அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் செய்து கொள்வேன். அதுவரை திருமணம் செய்துகொள்ள

மாட்டேன். பெற்றோர் எனக்கு 20 வயது நிரம்பியதில் இருந்தே திருமணம் செய்துகொள் என்று நெருக்கடி கொடுத்துக் கொண்டே

இருந்தனர். ஆனால் இப்போது அதுபோல் நிர்ப்பந்திப்பதை நிறுத்தி விட்டனர். எனக்கும் சினிமாவில் நடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை குறையவில்லை.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

Posted in சினிமா

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய தாய் ஷோபா… கட்சி பொறுப்பில் இருந்து விலகினார்

விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய தாய் ஷோபா… கட்சி பொறுப்பில் இருந்து விலகினார்

எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியிலிருந்தும் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி அளித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும்,


அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்தார்.

இதையறிந்த நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் தொடங்கியுள்ள

கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும்

இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.

எஸ் ஏ சந்திரசேகர் ஷோபா

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் ஷோபா அளித்த பேட்டியில், அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து

பெற்றார் எஸ்.ஏ.சி. கட்சி தொடங்குவதற்காக 2 வது முறை கையெழுத்து கேட்டபோது நான் போடவில்லை. அரசியல் பற்றிப் பேச வேண்டாம் என எஸ்.ஏ.சி. இடம் விஜய் கூறியிருந்தார்.

ஆனால் அவர் கேட்கவில்லை. விஜய் தனது அப்பாவுடன் பேசி பல ஆண்டுகள் ஆகிறது. எனது கணவர் தொடங்கிய கட்சியில் இருந்தும் பொருளாளர் போஸ்டில் இருந்தும் நான் விலகிட்டேன் என்றார்.

Posted in சினிமா

நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளருமான சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை போனில் பேசிய மர்ம நபர், “கொட்டிவாக்கத்தில் உள்ள நடிகரும்,

சமத்துவ மக்கள் கட்சி பொதுச்செயலாளருமான சரத்குமார் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இது தொடர்பாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியலிங்கம்

தலைமையிலான போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சரத்குமார் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சுமார் 2 மணிநேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இது குறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முதல்-அமைச்சர்

எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, நடிகர்கள் விஜய், தனுஷ், சூர்யா ஆகியோர் வீட்டுக்கு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நபர்தான் சரத்குமார்

வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.