Posted in இலங்கை செய்திகள்

காரை நகர் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்து வழங்கிய – குட்டை நாய்

காரை நகர் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்து வழங்கிய – குட்டை நாய்

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபை மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்து சுற்றி கொடுக்கும் பையின் மேல் குட்டை நாய் ஒன்று படுத்துறங்கிய சம்பவம் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,

இதில் இருந்து இந்த மருத்துவமனையின் சுகாதார வண்டவாளம் தண்டவாளத்தில் செல்கிறது ,குதிரை ஓடி மருத்துவர் ஆனால் இப்படித்தான் நடக்கும் .

வடக்கு சுகாதார அமைச்சர் கோட்டார் அடித்து குப்புற கிடக்கிறார் , காரைநகர் போன்று ,வரணி மருத்துவமனையில் வைத்தியரும் இது போன்ற சர்ச்சையில் , கெடுபிடிகளில் ஈடுபட்டுள்ளார் ,

அங்கும் பணியாளர்கள் இடமாற்றம் செய்வதுடன் பணி புரியும் பெண்களுடன் முறுகல் நிலையில் உள்ளதுடன் ,இவர்களின் அசமந்த போக்கின் காரணமாக ஒரு கர்ப்பிணியும் ,மூதாட்டி ஒருவரும் மரணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

நபர் ஒருவர் காரை நகர் வைத்தியசாலையின் அசிங்கத்தை படம் பிடித்து வெளியிட்ட நிலையில் வடக்கு சுகாதார அமைச்சர் கோவணத்தை கழற்றி தலையில் முக்காடு போட்டு செல்வதாக நெட்டிசன்கள் குசும்பு பதிவுகளை புரிந்து வருகின்றனர் .

கோத்தபாயவின் ஆட்சியில் நடக்கும் இந்த சீர்கேடுகளை தட்டி கேட்பது யார் ..?

காரைநகர் புலம் பெயர் வாசிகள் இதனை தட்டி கேட்டு குறித்த மருத்துவமனை வைத்தியர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை மாற்றுவார்களா ..?

சுத்தம் சுகம் தரும் என்பார்கள் ,அசுத்தம் அசிங்கத்தை தருகிறது எனவே அந்த அசிங்கமான மருத்துவரை உடனடியாக மாற்றி சுத்தம் சுகாதரத்தை நிலை நாட்டி மக்களை காப்பாற்றுங்கள் கரை தீவு படித்த அறிவார்ந்த சமூகமே .

ஆள் சேர்க்கும் வடக்கு மாகாண ஆளுநர் இதனை கவனத்தில் எடுப்பாரா ..? அல்லது வரப்போகும் புதிய ஆளுநர் தான் புரட்சி நடவடிக்கை மேற்கொள்வாரா ..?

Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் – கோட்டா முறுகல் உச்சம் – கடத்த பட்டபெண் குடும்பத்தை தமது நாடு அழைக்கும் சுவிஸ்

சுவிஸ் – கோட்டா முறுகல் உச்சம் – கடத்த பட்ட பெண் குடும்பத்தை தமது நாடு அழைக்கும் சுவிஸ்

இலங்கை சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள பெண் ஒருவரை வெள்ளை வானில் கடத்தி சென்று ,பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி ,மிரட்டி அனுப்பியது கோட்டாவின் வெள்ளை வான் கும்பல்,

அவர்களின் இந்த செயல் கோட்டபாய அரசுக்கு பெரும் அவமானத்தை தோற்றுவித்துள்ளது ,மேலும் இலங்கையில் ,மனித உரிமைகள் மீற படுவதாக அந்த நாடு சுட்டி காட்டியுள்ளது ,

குறித்த பெண் சுவிசுக்கு செல்ல இலங்கை தடை விதித்துள்ள நிலையில் தமது நாட்டிற்கு குறித்த பெண் குடும்பம் செல்ல இலங்கை அனுமதி வழங்க வேண்டும் என சுவிஸ் கோரிக்கை விடுத்துள்ளது ,

சுவிஸ் மற்றும் இலங்கை வெளியுறவு கொள்கைகள் இந்த நடவடிக்கையால் பாதிக்க படலாம் என அஞ்ச படுகிறது ,விரைவில் இலங்கை செல்ல சுவிஸ் மக்களுக்கு அந்த அரசு அபாய எச்சரிக்கை விடுக்கலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

65 முஸ்லீம் தீவிரவாதிகள் இலங்கையில் கைது – கோட்டா வேட்டை ஆரம்பம்

65 முஸ்லீம் தீவிரவாதிகள் இலங்கையில் கைது – கோட்டா வேட்டை ஆரம்பம்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்ட அமைப்பு என தடை செய்ய பட்டது ,

குறித்த National Thowdeed Jamath (NTJ) அமைப்பினைரை சேர்ந்தசுமார் 65 முஸ்லீம் இலங்கை தீவிரவாதிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

நமது ஆட்சியில் குறித்த குண்டு வெடிப்பு தொடர்பில் விசாரணைகள் நடத்தி சம்பந்த பட்டவர்கள் கைது செய்ய படுவார்கள் என கோட்டா முழங்கினார் ,அதன் செயல்முறை விளைவுகளே இந்த கைதுகளாக மாறி நிற்கின்றன

Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

இலங்கை இருநாடக பிரியவேண்டும் – பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பு

இலங்கை இருநாடக பிரியவேண்டும் – பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பு

இலங்கையில் இரண்டு இராஜியங்களை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய இராஜியத்தின் கொன்சவேட்டிவ் கட்சி முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் மணிசா குணசேகர தெரிவித்துள்ளார்.

கொன்சவேடிவ் கட்சிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தீர்மானம் இலங்கையின் நல்லிணக்கத்திற்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்தும் என அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள பிரித்தானிய பொதுத் தேர்தலுக்காக ஆளும் கன்சவேட்டிவ் கட்சி கடந்த 25 ஆம் திகதி 64 பக்கங்களை கொண்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்தது.

´´உலகம் முழுவதும் நல்லிணக்கம், நிலையான தன்மை மற்றும் நியாயத்தை நிலைநாட்ட தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் அதேவேளை சைப்பிரஸ், இலங்கை மற்றும் மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் நிலவிய தற்போதைய அல்லது முன்னர் இருந்த முரண்பாடான நிலைமையை தீர்க்க இரண்டு இராஜியங்களை அமைக்க எமது ஒத்துழைப்பு பெறப்பட்டது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இங்கிலாந்துக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் கொன்சவேடிவ் கட்சியின் இணைத் தலைவர் ஜேம்ஸ் கிளெவர்லியிடம் கடந்த 27 ஆம் திகதி வினவியதாக தெரிவித்தார்.

அதற்கமைய இலங்கைக்கு இரு இராஜியங்கள் அனாவசியனமானது எனவும் ஆகவே முன்வைக்கப்பட்டுள்ள கொள்கை பிரகடனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இங்கிலாந்துக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மனிசா குணசேகர கொன்சர்வேடிவ் கட்சிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான ஒரு தீர்வை இதற்கு முன்னர் ஐக்கிய இராஜியத்தின் எந்தவொரு கட்சியும் தமது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டதில்லை எனவும் அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய குடும்பத்தை கொலை செய்ய முயன்றவர் – கைதாம் ..!

கோட்டபாய குடும்பத்தை கொலை செய்ய முயன்றவர் – கைதாம் ..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க பொலிஸாரால் இந்த சந்தேக நபர் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் மத்திய வாங்கி ஆளுநரை கைது செய்யும் நகர்வில் – கோட்டா அரசு தீவிரம்

முன்னாள் மத்திய வாங்கி ஆளுநரை கைது செய்யும் நகர்வில் – கோட்டா அரசு தீவிரம்

முன்னாள் மதியவங்கி ஆளுநர் – ஆர்யூன் மகேந்திரனை சிங்க பூரில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தி வரும் நிலையில்,இலங்கைஆளும் அரசு தீவிரம்காட்டி வருகிறது ,இவர் சிக்கினால் ரணில் சிக்குவார் என்ற நிலையில் இவர்மீது தொடுக்க பட்ட குற்ற சாட்டுக்கள் தொடர்பாக நீதி விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஒன்றாக பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு – ரயில்வே சேவைகள் பாதிப்பு – மக்கள் அவதி

மண்சரிவு – ரயில்வே சேவைகள் பாதிப்பு – மக்கள் அவதி

இலங்கை – தியத்தலாவ மற்றும் பண்டாரவளை பகுதி ரயில்வே போக்குவரத்து வழித்தடத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் குறித்த போக்குவரத்து பலமாக பாதிக்க பட்டுள்ளது ,தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,அவை நிவர்த்தி அடைந்ததும் சேவைகள் ஆரம்பிக்க படும் என ரயில்வே அமைச்சு அறிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

மலேசியா வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தார்

மலேசியா வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தார்

மலேசியாவுக்கான வெளியுறவு அமைச்சர் தனது சிறப்பு குழுவுடன் இலங்கை வந்தடைந்துள்ளார் ,இவரது பயணத்தின் நோக்கம் இரு நாடுகளுக்கு இடையில் அபிவிருத்தி ,வர்த்தகம் ,பாதுகாப்பபு ,,, தொடர்பில் கலந்துரையாடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள படும் என தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோவுக்குள் இறந்த நிலையில் வாலிபன் சடலமாக மீட்பு

ஆட்டோவுக்குள் இறந்த நிலையில் வாலிபன் சடலமாக மீட்பு

இலங்கை – அனுராதபுரம் – புதிய கண்டி வீதி பகுதியில் ஆட்டோ ஒன்றுக்குள் 24 வயது மதிக்க தக்க வாலிபன் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,இவரது மரணத்திற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை ,போலீசார் தீவிரவிசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் . இது ஒரு படுகொலையாக இருக்கலாம் என அஞ்ச படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

ராஜித மீது விசாரணை ஆரம்பம் – ஆரம்பிக்கும் அரசியல் பழிவாங்கல்

ராஜித மீது விசாரணை ஆரம்பம் – ஆரம்பிக்கும் அரசியல் பழிவாங்கல்

இலங்கையில் இரத்த காட்டேறி கோட்டாபய அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் தற்போது தமக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,அதில் ராஜித மீது லஞ்ச ஊழல் குற்றசாட்டு தொடர்பான விசாரணை ஆரம்பிக்க பட்டுள்ளது ,இதனை அடுத்து ஏனைய அரசியல் முக்கியஸ்தர்கள் பீதியில் உறைந்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் வெள்ளம் – மீட்பு பணியில் இராணுவம்

மட்டக்களப்பில் வெள்ளம் – மீட்பு பணியில் இராணுவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்ட்டவர்களுக்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்டச் செயலாளர் எம். உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆறு பிரதேச செயலகங்களில் ஆயிரத்து 50 குடும்பங்களை சேர்ந்த மூவாயிரத்து 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

32 கிராம சேவகர் பிரிவுகளில் 1297 குடும்பங்களில் இருந்து 4612 பேர் பாதிக்கப்பட்டு 5 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்

Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் தூதரக சம்பவம் – பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகிறது HRCSL

சுவிஸ் தூதரக சம்பவம் – பக்கச்சார்பற்ற விசாரணையை கோருகிறது HRCSL

இலங்கைக்கான சுவிட்ஸலாந்து தூதரக அதிகாரி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்னவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் பொது மக்களிடையே நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமாயின் முறையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

பாகிஸ்தானுக்கு வருமாறு மகிந்தாவுக்கு – இம்ரான் கான் அழைப்பு

பாகிஸ்தானுக்கு வருமாறு மகிந்தாவுக்கு – இம்ரான் கான் அழைப்பு #

பாகிஸ்தானிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் விடுத்த அழைப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாட் மஹ்மூத் குரைஸி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (02) சந்தித்த போது இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.

நேற்று மாலை அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

Posted in இலங்கை செய்திகள்

ஹிருணிகா வழக்கு ஒத்திவைப்பு

ஹிருணிகா வழக்கு ஒத்திவைப்பு

தெமட்டகொடையில் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் வருடம் மே மாதம் 04 ஆம் திகதி மீண்டும் விசாணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டது.

குறித்த வழக்கு இன்று (15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கினை எதிர்வரும் வருடம் மே மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்தி வைத்த நீதிபதி அன்றைய தினம் வழக்கின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் நீதிமன்றில் விடயங்களை முன்வைக்குமாறு இரு தரப்பின் சட்டத்தரணிகளுக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

மலையக மக்கள் தேர்தல்களில் எடுக்கும் முடிவுகளுக்கு செயல்படுவோம் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்

மலையக மக்கள் தேர்தல்களில் எடுக்கும் முடிவுகளுக்கு செயல்படுவோம் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்று எங்களிடம் வைத்த கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப செயல்பட்டோம் அந்த தீர்மானம் 100 வீதம் வெற்றி பெற்றிருக்கிறது அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மலையக மக்கள் என்ன தீர்மானத்தை எடுக்கின்றார்களோ அதற்கு சார்பாக நாங்கள் செயல்படுவோம் இதுவே மலையக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தீர்மானமாக இருக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்பேதைய பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான தெளிவுபடுத்தும் கூட்டம் அட்டன் மலையக மக்கள் முன்னணி காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில அரசியல் வாதிகள் மலையக மக்களை கல்வியறிவு இல்லாதவர்கள் என்று கருதுகின்றார்கள் நான் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன் மலையக மக்கள் சிந்தித்து செயல்படக் கூடியவர்கள் எந்த ஒரு தீர்மானத்தையும் சரியாக எடுக்கக் கூடியவர்கள் வாக்களிப்பதில் தங்களுடைய சின்னத்தை மிகவும் அழகாக தெரிவுசெய்து வாக்களிப்பதில் மலையக மக்கள் அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கின்றார்கள் இன்று மலையகத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது எனவே எங்கள் மக்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர்கள் தன் மானத்தைக் காக்க அளிக்கின்ற ஒரு சமூகம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

எந்தவொரு வெற்றியும் மக்களின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது மகாத்மா காந்தி தன்னுடைய போராட்டத்தின்போது மக்கள் எடுத்த தீர்மானத்தின் பின்னால் அவர் சென்ற காரணத்தினால் தான் அந்த போராட்டம் வெற்றி பெற்றது நாங்களும் மக்கள் எடுக்கின்ற தீர்மானத்திற்கு பின்னால் சென்று அந்த தீர்மானத்தை வெற்றி பெறச் செய்வதுதான் எங்களுடைய பொறுப்பாகும் ஒரு நாளும் நாங்கள் அல்லது தலைவர்கள் மக்களை பின்னால் வருமாறு அழைக்காமல் மக்கள் எடுக்கின்ற நல்ல தீர்மானங்களுக்கு பின்னால் தலைவர்கள் சென்றால் நிச்சயமாக அந்த தீர்மானம் வெற்றி அடையும் அதனை கடந்த காலத்தில் நாங்கள் மிகவும் தெளிவாக எங்களுடைய தேர்தல்களில் பார்த்திருக்கின்றோம்.

மலையக மக்கள் தங்களுடைய சலுகைகளுக்காக அல்லது ஒரு சில அற்ப விடயங்களுக்காக ஒரு பொழுதும் தங்களுடைய வாக்குகளை வழங்க மாட்டார்கள் அவர்கள் தாங்கள் நினைக்கின்ற அல்லது தீர்மானிக்கின்ற தலைவனுக்கு வாக்களிப்பதில் அவர்கள் என்றும் பின் நிற்க மாட்டார்கள்.

மலையக மக்களுக்கு நன்றாகவே தெரியும் யார் அவர்களுக்காக அவர்களை முன்னேற்றுவதற்காக அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என்று பொதுவாக இன்று மலையகத்தில் பலர் ஓரங்கட்டப்பட்டு இருக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் கடந்த காலங்களில் அவர்கள் அரசியலில் இருந்த பொழுது இந்த மக்களின் நன்மைக்காக அல்லது இந்த மக்களின் முன்னேற்றத்திற்காக எதனையும் செய்யவில்லை என்பதை எங்களுடைய மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

எல்லோரும் கூறுவது போல மலையக மக்களுடைய பிரச்சினை தனியே சம்பள பிரச்சனைக்கு மாத்திரம் வரையறுத்து விட கூடாது அது தவிர இன்னும் எத்தனையோ தேவைகளும் அபிவிருத்திகளும் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்றது அந்த அனைத்து விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.

ஒரு சமூகத்தின் விடிவு என்பது முழுமையாக கல்வியிலே தங்கியிருக்கின்றது என்பதை நான் மிகவும் தெளிவாக உணர்ந்து இருக்கின்றேன் ஏனென்றால் நானும் தோட்டத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கிருந்து அரசியலுக்கு வந்து இன்று ஒரு அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றேன் என்றால் அதற்கு காரணம் எங்களுடைய மக்கள் என்பதை நான் என்றும் மறந்துவிட மாட்டேன்.

எனவே இந்த மக்கள் என்னை தெரிவு செய்திருக்கின்றார்கள் நான் கடைசி வரை இந்த மக்களுக்காக என்னை அர்ப்பணித்து சேவை செய்வதே எனது தலையாய கடமையாக கொண்டு இருக்கின்றேன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எங்களுடைய மக்களுக்காக நான் எந்த ஒரு விட்டுக்கொடுப்பு பையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றேன் நாங்கள் அரசியலில் வந்து பணம் சம்பாதித்தவர்கள் அல்ல மாறாக மக்களுடைய சேவையை முழுமையாக கருத்தில் கொண்டு செயற்படுகின்ற ஒரு அரசியல்வாதி என்பதை நான் மிகவும் ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன்.

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் மலையக மக்கள் அவர்களுக்கு யார் என்ன செய்து இருக்கின்றார்கள் என்பதை நன்றாக ஆராய்ந்து அவர்களுக்கு வாக்களித்து அவர்களை தெரிவு செய்ய வேண்டும் இன்று பல்வேறு இடங்களிலும் இந்த கலந்துரையாடல் நடைபெறுகின்றது எனவே மக்களுக்கு சேவை செய்யாத எவராக இருந்தாலும் அவர் ஓரம் கட்டப்படும் வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு கூட எனவே எதிர்வரும் தேர்தல் எங்களுடைய சமூகத்தை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கின்ற ஒரு தேர்தல் அந்த வகையில் நாங்கள் எங்களுடைய அடையாளத்தை அல்லது எங்களுடைய குரலை பாராளுமன்றத்தில் ஒழிக்க வேண்டுமாக இருந்தால் மலையகத்தின் சார்பாக அதிகமான அங்கத்தினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும் அது எந்த கட்சி என்பதை விட எங்களுடைய சமூகத்தின் குரலாக அது பாராளுமன்றத்தில்ஒழிக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும் அதனை நிச்சயமாக இந்த மக்கள் சரியாக செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்க தயாராகும் சிங்கள பகுதிகள்

வெள்ளத்தில் மிதக்க தயாராகும் சிங்கள பகுதிகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கன மலையை அடுத்து குளங்கள் நிரம்பிவருகின்றன ,மேலும் இந்த மழைவீழ்ச்சி நீடித்தால் குளங்கள் திறக்க படும் அபாயம் எழுந்துள்ளது ,இவ்வாறு திறக்க பட்டால் பல நூறு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை பட்டுளள்து ,இவற்றில் தென் இலங்கை பகுதிகளே அதிகம் பாதிக்க படும் என கருத படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதியை எதிர்த்து வைகோ கண்டனம்

இலங்கைக்கு இந்தியா வழங்கிய நிதியை எதிர்த்து வைகோ கண்டனம்

இந்தியா சென்ற இரத்த காட்டேரி கோட்டபாயவிடம் இந்தியா பல கோடி ரூபா பணத்தை கடனடிப்படையில் வழங்கியது ,மேற்படி நிதியுதவி வழங்கலை எதிர்த்து வைகோ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும் மகன் ஒருவர் காணமல் போயுள்ளளார் ,இவ்வாறு காணாமல் போனவரை தேடி கண்டுபிடிக்கும் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 10 மாவட்டங்களில் மண்சரிவு -2261 பேர் பாதிப்பு

இலங்கையில் 10 மாவட்டங்களில் மண்சரிவு -2261 பேர் பாதிப்பு

இலங்கையில் நிலவு வரும்சீரற்ற கால நிலையை அடுத்து பத்து மாவட்டநாளில் மண்சரிவு அபாயம் எழுந்துள்ளது ,.இதில் ரத்தினபுர ,கேகாலை ,பதுளை ஆகிய பகுதியில் இடம்பெற்ற மண்சரிவிலேயே இந்த மக்கள் பாதிக்க பட்டு இடம்பெயரந்துள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

13 வது சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி ஜனாதிபதியிடம் கூறியதை வரவேற்கின்றோம் நடந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தை கண்டிக்கின்றோம்

13 வது சட்டத்தை அமுல்படுத்துமாறு
பிரதமர் மோடி ஜனாதிபதியிடம் கூறியதை வரவேற்கின்றோம்
நடந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தை கண்டிக்கின்றோம்

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பொழுது 13 வது சட்டத்தை அமுல்படுத்துமாறு பிரதமர் மோடி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களிடம் கூறியதை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோல் இந்த விஜயத்தின் பொழுது இந்தியாவில் இவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்களை நடாத்தியமையை கண்டிக்கின்றோம் என்று கூறுகின்றார் முன்னால் அமைச்சரும் தற்போதய பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பாளர்களுக்கான சந்திப்பு ஒன்று நுவரெலியா நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (30.11.2019) இந் நிகழ்வில் முன்னால் மாகாகன சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பிரோச சபைகளின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதன் போது இங்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

தொடந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்

இந்த நாட்டில் இன்னும் இன பிரச்சனைக்கு உரிய தீர்வு எட்டபடாத நிலையில் இருக்கின்றது. நாடும் உரிய அபிவிருத்தியை நோக்கி செல்ல வேண்டுமானால் இந்த நாட்டில் நீண்டகாலமாக காணப்படும் இன பிரச்சனைக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும். எமது நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தற்போது இந்தியா சென்று நாடு திரும்பி உள்ளார். இவரின் விஜயத்தின் பொமுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கையில் 13 வது சட்டத்தை அழுல்படுத்தி இனபிரச்சனைக்கு தீர்வுகான வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஜனாதிபதி அவர்கள் இதனை நடைமுறைப்படுத்த நடிவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதற்கான அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இலங்கையில் இனங்களுக்கு இடையிலேயான முரண்பாடுகளுக்கும் ஒற்றமை இன்மை காரணமாகவே 30 வருட கொடூர யுத்தம் நடைபெற்றது. இதனால் பல பின்னடைவுகளை நாடு சந்தித்தது. அதனால் தற்போது நாடு அபிவிருத்தியில் பின்னடைவை நோக்கி உள்ள நிலையில் புதிய ஜனாதிபதி அவர்கள் தெரிவு செய்யபட்டு உள்ளார். இவர் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வினை பெற்று கொடுக்க வேண்டும். இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமான ஒன்றாகும். அதுவே தற்போது நடைபெற்று வருகின்றது.

இலங்கையில் யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு தற்போது அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வட கிழக்கு மலையக மக்கள் நிம்தியாகவே வாழ்ந்து வருகின்றனர். பெருபான்மை இன மக்களின் கெடுபிடிகள் இல்லை. அவர்களும் நாட்டின் நிலமையை புரிந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இலங்கையின் ஜனாதிபதி இந்தியா சென்றிருந்த வேலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டங்களை நடாத்தினர். இந்த செயற்பாடு இங்குள்ள பெருபான்மை சிங்கள மக்களை ஆத்திரம் அடைய செய்யும் செயற்பாடாகும். இவர்கள் கொந்தளித்தால் மீண்டும் வட கிழக்கு மலையக மக்கள் நிம்தியாகவே வாழ முடியாது. அங்கு ஆர்பாட்டங்ளை செய்து விட்டு நீங்கள் வீட்டுக்கு போய் நிம்தியாக இருந்து விடுவீர்கள்; இங்கு அடி வாங்குவது நாங்களே. அதனால் இந்தியாவில் வாழும் எங்களது தொப்புள் கொடி உறவுகளே உங்களின் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பு அளிக்கின்றோம். உங்களது செயற்பாடுகள் அனைத்தும் எங்களது நிம்மதியான வாழ்க்கைக்காக இருக்க வேண்டும். நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமானால் உங்களது அழுத்தங்கள் இங்குள்ள மக்களின் அபிவிருத்திகள் மற்றும் 13 வது சட்டம் அழுல்படுத்துதல் தொடர்பாக இருக்க வேண்டும். 13 வது சட்டம் என்பது இலங்கையில் உள்ள இன பிரச்சனைக்கான தீர்வு சட்டமாகும். அதனை அழுல்படுத்தினாலே தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். இதனையே இந்திய பிரதமர் மோடி அவர்கள் நடைமுறைப்படுத்துமாறு கோரியுள்ளார் என்று அவர் மேலும் கூறினார்.