Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது
மாவீரர்களின் இலட்சியக் கனவோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு தொடங்கியது
தாயகம், தேசியம், அரசியல் இறையாண்மை என ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் ஜனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரவை அமர்வு சுவிஸ்லாந்து நாட்டில் கூடியது.
நொவெம்பர் 29,30, டிசெம்பர் 1ம் திகிதி வரை இடம்பெறுகின்ற மூன்று நாள் அமர்வில், அமெரிக்கா, கனடா, ஓஸ்றேலியா, பிரான்சு,ஜேர்மனி, பிரித்தானியா உட்பட தமிழ்நாட்டில் இருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைப் பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர். சமவேளை பிரித்தானியாவில் இருந்தும் காணொளிவழியே உறுப்பினர்கள் பங்கெடுக்கின்றனர்.
தமிழீழத்தை வென்றடைவதற்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை
இந்திய பெருங்கடல் இந்தோ-பசுபிக் புவிசார் அரசியலும் தமிழர்களுக்கான வாய்ப்புக்களும்…
தமிழீழத் தேசக் கட்டுமானம்
தமிழர் தலைவதி தமிழர் கையில் – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் ஆகிய தொனிப்பொருட்களை மையப்படுத்தி இந்த அமர்வு இடம்பெறுகின்றது.
தொடக்கநிகழ்வில் சுதந்திரத்துக்கான போராடி வரும் கத்தலோனியாவில் இருந்து அவர்கள் சிறப்பு அதிதியாக Jurdi Vilamova கலந்து கொண்டிருந்தார். சுவிசில் சமூக-அரசியல் செயற்பாட்டுத்தளத்தில் ஈடுபடுகின்ற பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர்.
இதேவேளை அமைச்சுக்களின் செயற்பாட்டு அறிக்கை, கருத்தாடல், தீர்மானங்கள் என உட்பட பலவிடயங்கள் இவ்மூன்று நாள் அமர்வுகளில் உரையாடப்பட இருக்கின்றன.
மலையக மாணவர்களின் தொழில் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான செயற்திட்ட கலந்துரையாடல்
மலையக மாணவர்களின் தொழில் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான செயற்திட்ட கலந்துரையாடல்
மலையக மாணவர்களின் தொழில் கல்வி அபிவிருத்தி சம்பந்தமான செயற்திட்ட கலந்துரையாடல் முன்னால் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்திய குழுவினருடன் நடைபெற்றது
இந்த கலந்துரையாடலில் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி ரஞ்சனி இந்தியாவின் தமிழ் நாட்டை சேர்ந்த திருமதி சசிகலா கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமாசந்திர பிரகாஸ் ஜங்கரன் மீடியா சொலுயூசன் பணிப்பாளர் கார்த்திக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது மலையக மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வியுடன் கூடிய தொழில் கல்வியை பெற்றுக் கொள்வது எப்படி என்று
திருமதி சசிகலா விளக்கமளித்தார். மாணவர்கள் பங்களிப்பு தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள நடைமுறையை போன்று தங்களுடைய கல்வியுடன் தொழில் அனுபவத்தையும் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற வகையில் சில வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து ஐரோப்பாவிற்கு மீளவும் விமான சேவைகள் ஆரம்பம்
இலங்கையில் இருந்து ஐரோப்பாவிற்கு மீளவும் விமான சேவைகள் ஆரம்பம்
இலங்கைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் மீண்டும் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச விமான சேவை சங்கத்துடன் கலந்துரையாடி இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த விமான சேவைகளை மீள ஆரம்பிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ரயில்களில் பிச்சை எடுக்க தடை – கோட்டா அரசு அதிரடி நடவடிக்கை
இலங்கையில் ரயில்களில் பிச்சை எடுக்க தடை – கோட்டா அரசு அதிரடி நடவடிக்கை
இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதியில் இருந்து ரயில்களில் பிச்சை எடுக்க தடை விதிக்க பட்டுள்ளது ,மீறுவோர் கைது செய்யப்படுவதுடன் தண்டமும் அறவிட படும் என புதிய இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது , நாட்டில் தூய்மை என்கின்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற கனடா 2 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கியது
வடக்கில் கண்ணிவெடிகளை அகற்ற கனடா 2 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வழங்கியது
இலங்கை – வடக்கு பகுதியில் சிங்கள இராணுவத்தால் புதைக்க பட்ட கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு கண்டா சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்கா டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது , மீள் குடியேற்றம் மக்கள் பாதுகாப்பை கருத்த்தில் கொண்டு இதனை தாம் வழங்குவதா அந்த நாடு குறிப்பிட்டுள்ளது
சிறுமியை அடித்து கொன்ற யானை -அதிர்ச்சியில் கிராம் மக்கள்
சிறுமியை அடித்து கொன்ற யானை -அதிர்ச்சியில் கிராம் மக்கள்
திம்புலாகம, எல்லேவெவ கிராமத்தில் இன்று (30) அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் 12 வயது பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எல்லேவெவ மகா வித்தியாலத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்த ஹிருஷி நிஷாதி திஸாநாயக்க என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பயங்கரவாதத்தை ஒடுக்க இலங்கைக்கு ரூ.359 கோடி உதவி -மோடி
பயங்கரவாதத்தை ஒடுக்க இலங்கைக்கு ரூ.359 கோடி உதவி -மோடி
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் கடந்த 19ம் தேதி அதிபராக பதவி ஏற்றார். கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததுடன், இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து 3 நாள் சுற்றுப்பயணமாக கோத்தபய ராஜபக்சே நேற்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியும் கோத்தபய ராஜபக்சேவும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘இலங்கையில் பயங்கரவாதத்தை ஒடுக்க ரூ.359 கோடி நிதி (50 மில்லியன் டாலர்கள்) அளிக்கப்படும். இலங்கையின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக 400 மில்லியன் டாலர் வழங்கப்படும். கோத்தபய தலைமையிலான புதிய அரசு ஈழத்தமிழர்களின் நலனுக்காக செயல்படும் என உறுதியாக நம்புகிறேன்’, என்றார்.
பிரபாகரன் படத்தை வெளியிட்ட நபர் கைது
பிரபாகரன் படத்தை வெளியிட்ட நபர் கைது
இலங்கையில் மாவீரர் நாள் ,மற்றும் தலைவர் பிறந்த நாளின் பொழுது முகநூலில் தலைவர் பிரபாகரன் படத்தை பதிவு செய்த நபர் ஒருவரை சிங்கள படைகள் கைது செய்துள்ளனர் . இரத்த காட்டேறி கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெள்ளை வான் கடத்தல்கள் தொடரும் நிலையில் இந்த விடயங்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது
இலங்கையில் கடும் வெள்ளம் ஐந்துபேர் பலி -600 பேர் காயம்
இலங்கையில் கடும் வெள்ளம் ஐந்துபேர் பலி -600 பேர் காயம்
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையில் சிக்கி சுமார் ஐவர் பலியாகியுள்ளார்ந் ,மேலும் 600 பேர்வரை பாத்திக்க பட்டுள்ளனர் .இந்த அர்த்தம் Uva, Eastern, Northern, Western, Southern, Sabaragamuwa and Central பகுதிகளில் இடம்பெற்றுள்ளதுதாக அனர்தமுகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது
பதவி விலகும் தேர்தல் ஆணையர் – ஏன் இந்த அவசரம் ..?
பதவி விலகும் தேர்தல் ஆணையர் – ஏன் இந்த அவசரம் ..?
இலங்கை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய தான் பதவி விலக உள்ளதாக ஜனாதிபதி கோட்டபாயவுக்கு அறிவித்துள்ளார் ,இவரது இந்த அவசர முடிவு ஏன் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்
வட பகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் -தெரிவிப்பு
வட பகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் -தெரிவிப்பு
வட பகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்று (29) காலை முதல் உரிய அட்டவணையின் படி ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கொத்மலை நீர்த்தேக்கத்தில் -இளம் பெண் சடலமாக மீட்பு
கொத்மலை நீர்த்தேக்கத்தில் -இளம் பெண் சடலமாக மீட்பு
கொத்மலை நீர்த்தேக்கத்தில் நேற்று மதியம் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோட்டாபய – பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்
கோட்டாபய – பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார்
இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (29) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியதுவம்வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றுள்ள ஜனாதிபதி இன்று (29) இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
பிறந்த நாளில் இறந்த சிறுவன்- இலங்கையில் நடந்த சோகம்
பிறந்த நாளில் இறந்த சிறுவன்- இலங்கையில் நடந்த சோகம்
இலங்கையில் தனது இரண்டாவது பிறந்த நாளான இன்று சிறுவர்களுடன் இணைந்து தனது பிறந்த நாளை கொண்டாட சென்று கொண்டிருந்த வேளை வீதி விபத்தில் சிக்கி சிறுவன் பலியான ,தந்தை மற்றும் ,அம்மம்மா ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .சிறார் கூடத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுதே இந்த மரணம் இடம்பெற்றுள்ளது
கோட்டபாயவுக்கு எதிராக போராட்டம் நடத்திய வைகோ கைது
கோட்டபாயவுக்கு எதிராக போராட்டம் நடத்திய வைகோ கைது
இந்தியா செல்லும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாயவைற்க்கு எதிராக வைகோ தலைமையில் தொண்டர்கள் டில்லியில் போராட்டத்த்தை நடத்தினர் ,இந்த போராட்டத்தின் பொழுது இவர் டில்லி காவல்துறையினரால் கைது செய்ய பட்டுளளார்
வெள்ளை வானில் பெண் கடத்தல் – விசாரணைகள் தொடர்கிறது
வெள்ளை வானில் பெண் கடத்தல் – விசாரணைகள் தொடர்கிறது
இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரலாயத்தில் பணி புரிந்த பெண் ஒருவர் வெள்ளை வானில் மர்ம நபர்களினால் கடத்த பட்டார் ,இவரது கடத்தல் தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக இலங்கை அறிவித்துள்ளது ,மேற்படி கடத்தல் சம்பவத்திற்கு சுவிஸ் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
பூங்காவில் இருந்து ஆண் சடலமாக மீட்பு
பூங்காவில் இருந்து ஆண் சடலமாக மீட்பு
நாரதென்பிட்ட பூங்காவில் இருந்து ஆன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளது ,இவரது இந்த மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை ,.,போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைதாம்
யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைதாம்
யாழ்ப்பாணம் குருநாகல் பகுதியில் வைத்து நாபா ஒருவர் வெடிகுண்டுகளுடன் கைது செய்ய பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது ,தமக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்
இந்தியா பறக்கும் கோட்டபாய -சீறும் சீனா
இலங்கையின் இரத்த கறை படிந்த காட்டேரியாகவும் ,தமிழர் உயிர் குடித்த பேயாகவும் ,சர்வாதிகாரியாவும் விளங்கும் இலங்கை அதிபர் கோட்டபாய இந்தியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொள்கிறார் ,பதவி ஏற்று முதலாவது பயணமாக இந்தியாவுக்கு செல்கிறார் ,இவரை போலவே மகிந்தவும் இந்தியாவுக்கு பறந்தார் ,அதன் பின்னரே இலங்கையை சீனாவுக்கு தாரை வார்த்து கொடுத்தனர் , தற்போது அவசரமாக இந்தியா பறக்கும் இவருக்கு அங்கு என்ன அதிர்ச்சி காத்துள்ளதோ ..? இவரது முதலாவது பயணம் இந்தியாவாக இருப்பதால் சீன கடுப்பில் உறைந்துள்ளதாம்








