Posted in இலங்கை செய்திகள்

323 கிலோ கஞ்சா மீட்பு – சுற்றிவளைத்து பிடித்த இராணுவம்

323 கிலோ கஞ்சா மீட்பு – சுற்றிவளைத்து பிடித்த இராணுவம்

இலங்கை வன்னி பூநகரி வலைப்பாடு ஊடாக பாரிய கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக உளவுத்துறையினருக்கு


கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியை திடீரென சுற்றிவளைத்த இராணுவத்தினர் டிப்பர் லொறி ஒன்றில்

ஏற்ற பட்டு கொண்டிருந்த சுமார் 323 கிலோ கஞ்சாவை மீட்டனர் .

மேலும் இந்த குற்றவியல் செயல்பாட்டுடன் தொடர்புடைய சிலரும் கைது செய்ய பட்டுள்ளனர் .


மகிந்தா ஆட்சியின் பின்னர் இலங்கையில் கஞ்சா வர்த்தகம் பெருக்கெடுத்துள்ளமை குறிப்பிட தக்கது

323 கிலோ கஞ்சா மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்: ஐ.நாவில் கஜேந்திரகுமார்

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும்: ஐ.நாவில் கஜேந்திரகுமார்

நீதியை நிலைநாட்ட மறுதலிக்கின்ற நாடொன்றில், குற்றவியல் நீதியை அமுல்படுத்துவதற்கான வல்லமைகள் இந்த மனித உரிமை பேரவைக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே

இருக்கின்றது என்பதை ஏற்று, இப்போதாவது சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பிரேரிப்பதற்கு அல்லது விசேட சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கையை

விடுக்கப்படவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43வது

கூட்டத் தொடரின் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை மீதான

பொது விவாதத்தில் 47 நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

30:1 தீர்மானத்தை அமுல்படுத்துவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் நடத்தை குறித்து இந்த வாய்மொழி மூல அறிக்கை கணிப்பீட்டை மேற்கொண்டிருக்கிறது. இந்த பிரேரணையின்

உள்ளடக்கமானது, மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்ற விடயங்களில், இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின்

எதிர்பார்ப்புகளோடு ஒப்பிடுகையில் மிகப்பாரிய குறைகளோடு இருந்தமையால், தமிழர்களால் இப் பிரேரணையானது சந்தேகத்துக்குரியதாகவே பார்க்கப்பட்ட போதிலும், இந்த 30:1

பிரேரணையானது, சிறிலங்கா அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்டு, அது இந்த ஐ.நா மனித உரிமை

சபையின் அங்கத்துவர்கள் பலராலும் பெரிதும் சிலாகிக்கப்பட்டும் இருந்தது.

இந்த 30:1 பிரேரணையானது, சர்வதேச கலப்பு குற்றவியல் பொறிமுறையை கொண்டிருக்கும் என்று தமிழர்களிற்கு

சொல்லப்பட்ட போதும் அதாவது தமிழர்கள் மத்தியில் விற்பனை செய்யப்பட்ட போதும் அதற்கு மாறாக, பொறுப்புக்கூறலை உள்ளக

விசாரணைக்குள் மட்டுப்படுத்தப்படுத்தக்கூடிய வகையில் மிக சாமர்த்தியமான வார்த்தைகள் மூலம் அந்த அறிக்கை

தயாரிக்கப்பட்டிருந்தது என்பதை எமது அமைப்பு இங்கே பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த பிரேரணையை அமுல்படுத்த முடியாது என அப்போதைய சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே மறுதலித்திருந்த போதிலும், தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் கால நீடிப்பு

கொடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த நவம்பரில் சிறிலங்காவில் புதிய அரசாங்கமொன்று பதவிக்கு வந்திருக்கிறது. இங்கு

இழைக்கப்பட்ட அனைத்து குற்றங்களுக்கும் பின்னணியில் இருந்த முக்கிய சூத்திரதாரி எனக் குற்றம் சாட்டப்பட்டிருப்பவரே இப்போது புதிய ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.

இந்த புதிய அரசாங்கமானது, எதிர்பார்க்கப்பட்டபடியே 30:1 பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகிக்

கொள்வதாக உத்தியோகபூர்வமாக இந்த மன்றிற்கு அறிவித்திருக்கின்றதன் மூலம் இந்த பிரேரணையை நிராகரித்திருக்கின்றது.

அவையின் தலைவர் அவர்களே மற்றும் ஆணையாளர் அவர்களே, நீதியை நிலைநாட்ட மறுதலிக்கின்ற நாடொன்றில், குற்றவியல்

நீதியை அமுல்படுத்துவதற்கான வல்லமைகள் இந்த மனித உரிமை பேரவைக்கு மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே

இருக்கின்றது என்பதை ஏற்று, இப்போதாவது சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பிரேரிப்பதற்கு அல்லது விசேட

சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றை நிறுவுவதற்கான கோரிக்கையை விடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை நான் உங்கள்

முன்னிலையில் எமது மக்கள் சாhத்பாக முன்வைக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இரு மாதத்தில் விபத்தில் 3000 பேர் பலி

இலங்கையில் இரு மாதத்தில் விபத்தில் 3000 பேர் பலி

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான கால பகுதியில் வீதி விபத்துக்களில்


சிக்கி மூவாயிரம் பேர் வரை பலியாகியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார் .

அப்படியானால் நாள் ஒன்றுக்கு நாடு தழுவிய ரீதியில் ஐம்பது பேர் பலியாகி வந்துள்ளதாக இது குறிப்பிடுகிறது


இலங்கை காவல்துறையின் சமந்தா போக்கும் ,சாரதிகளுக்கு உரிய வீதி விதிமுறைகளை கடை பிடிக்காமையுமே இந்த் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன .

பாடசாலைகளில் வீதி விதி முறைகளை மேற்குலக நாடுகளை போன்று கற்று கொடுத்தால் இது போல ஏற்படாது என்பதும் .

சட்டங்களை கடுமையாக நடைமுறை படுத்தின் இந்த உயிர் பலிகளை தடுக்கலாம் என்பது மக்கள் கருத்து

இலங்கையில் இரு மாதத்தில்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் இந்தியாவுக்கு இடையில் விரைவில் கப்பல் சேவை

யாழ்ப்பாணம் இந்தியாவுக்கு இடையில் விரைவில் கப்பல் சேவை

இலங்கை யாழ்ப்பாணம் மற்றும் இந்தியா சென்னைக்கு இடையில் விரைவில் புதிய கப்பல் சேவைகளை ஆரம்பிக்க உளளதாக இலங்கை உல்லாசத்துறை அமைச்சு அறிவித்துள்ளது .

உலலாச பயணிகளை கவர்ந்திழுக்கும் நோக்குடன் இந்த கப்பல் சேவைகள் ஆரம்பிக்க படவுள்ளன


இதற்க்காக இலங்கை அரசு பல கோடிகளை செலவு செய்து வருகிறது ,நகர் புறங்களை அழகு படுத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

மகிந்தா ஆட்சியில் பசில் இந்த வேலைத்திட்டத்தை தீவிர படுத்திஇருந்தமை இங்கே கவனிக்க தக்கது .

யாழ்ப்பாணம் இந்தியாவுக்கு
Posted in இலங்கை செய்திகள்

பல்கலைக் கழகத்தில் -கமராவை அகற்றிய 25 மாணவர்கள் சஸ்பெண்ட்

பல்கலைக் கழகத்தில் -கமராவை அகற்றிய 25 மாணவர்கள் சஸ்பெண்ட்

இலங்கை கெலனிய பல்கலைக் கழகத்த்தில் பொருத்த பட்ட cctv காமராவை அகற்றிய சுமார் 25 மாணவர்கள் அந்த நிர்வாகத்தால் அதிரடியாக நீக்க பட்டுள்ளனர் .

பகிடிவதைகளை கண்காணிக்கும் பொருட்டு இந்த கமராக்கள் எங்கும் பொருத்த பட்டன

இதனால் தமது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருதி இந்த அடாவடியில் கல்வி கற்க சென்ற
காவாலி குழு ஒன்று இந்த வேலையை புரிந்துள்ளது

நிர்வாகம் எடுத்த இந்த முடிவு பாராட்டும் படியாக அமைந்துள்ளது

பல்கலைக் கழகத்தில்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் உடனடி இடமாற்றம்: புதிய பணிப்பாளர் பொறுப்பேற்பு

வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் உடனடி இடமாற்றம்: புதிய பணிப்பாளர் பொறுப்பேற்பு

விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வவுனியாமாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபானு அவர்களுக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாமாவட்ட பிரதி மாகாண விவசாய திணைக்களம் மற்றும் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை ஆகியவற்றின் பல்வேறு

குறைபாடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இவ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாமாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அ.சகிலாபானு அவர்களை விவசாய பணிப்பாளர் நாயகம் அவர்களினால் வழங்கப்பட்ட இடமாற்ற கட்டளைக்கு அமைய

பதில் உத்தியோகத்தர் ஒருவரிடம் கடமை பொறுப்புக்களை கையளித்து விட்டு உடனடியாக பேராதனை

விவசாயத்திணைக்களத்தில் கடமையினை பெறுபேற்குமாறு விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாமாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக கடமையாற்றிய அ.சசீகலா பானு அவர்கள் 2015ம் வருடம் பேராதனை விவசாயத் திணைக்களத்திற்கு இடமாற்றம்

செய்யப்பட்டு 2018ம் வருடம் நடுப்பகுதியில் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மீண்டும் வவுனியா மாவட்ட பிரதி

மாகாண விவசாய பணிப்பாளராக பொறுப்பேற்று இன்று (28.02) முதல் மீண்டும் பேராதனை விவசாயத் திணைக்களத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றைய தினம் (28.02) திருமதி அருந்ததி வேல்சிவானந்தன் அவர்கள் வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளராக புதிதாக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் சாதிய சண்டை – சடலத்தை எரிக்க விடாது மோதிய இரு கிராமம்

யாழில் சாதிய சண்டை – சடலத்தை எரிக்க விடாது மோதிய இரு கிராமம்

யாழ்ப்பாணத்தில் மரணித்த ஒருவரது சடலத்தது சுடலை ஒன்றில் எரிக்க விடாது
கலகத்தில் ஈடுபட்ட இரு சாதிய குழுக்கள்

இதனால் அங்கு பல மணி நேரம் போராட்டம் நடை பெற்றது

பின்னர் நீதிமன்று சென்று நீதிபதி வழங்கிய உத்தரவின் பேரில் பிணத்தை எரிக்கவிடாது தடை செய்தவர்கள் கைதுசெ எய்ய பட்டு ஹிந்து பிட்டி மயானத்தில் எரிக்க அனுமதி அளிக்க பட்டது

இப்படி நாறி கிடக்கிறது இன்றைய யாழ்ப்பாணம்

யாழில் சாதிய சண்டை
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் கண்ணிவெடி மீட்பாம் இராணுவம்

முல்லைத்தீவில் கண்ணிவெடி மீட்பாம் இராணுவம்

இலங்கை கடற்படை கடல் சூழலைப் பாதுகாக்க கடலோர தூய்மைப்படுத்தும் திட்டங்கள் மேற்கொள்கிறது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று முல்லைதீவு வட்டுவாகல் கடற்கரையை மையமாக கொண்டு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டமொன்றை ஆரம்பித்தனர்.

இதன்போது குறித்த கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இது எல்.டீ.டீ.ஈ பயங்கரவாதிகள் தயாரித்த குண்டு என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குண்டு குறித்து மேலதிக விசாரணைகள் கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்றன.

முல்லைத்தீவில் கண்ணி
Posted in இலங்கை செய்திகள்

50 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிப்பு

50 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இப்போது உலகளாவிய தொற்றுநோயாக மாறி உள்ளது.

பலரை பலி கொண்டுள்ள இந்த கொரோனோ வைரஸை உலக சுகாதார அமைப்பு ஒரு தொற்று நோயாக அறிவிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸால் இதுவரை 2858 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவின் அழிவை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி

வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுகான் நகரில் இருந்து வைரஸ் பரவத் தொடங்கியது.

இது தற்போது உலகளாவிய ரீதியில் மொத்தம் 83,342 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், கடந்த சில வாரங்களாக குறைந்து வருகின்றன.

சீனாவுக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தாக்கம் தென் கொரியாவில் அதிக அளவில் உள்ளது. தென் கொரியாவில் 2022

பேருக்கு உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளன. மேலும் 13 பேர் இதுவரை வைரஸால் உயிர் இழந்துள்ளனர்.

கடந்த வாரத்தில் மட்டும் 20 நாடுகளில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில்

குறிப்பாக ஈரான் மற்றும் இத்தாலியை கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் இத்தாலியில் கொரோனா

வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் 655 பேர் இருப்பதாகவும், அதை தவிர 17 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஈரானில் 245 பேர்

பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஈரானில் உள்ளூர் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு

சிகிச்சை பெற்று வருகின்றனர். ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின்

தலைவர் மொஜ்தாபா சோனூருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இப்போது உலகில் 50 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் 93, தாய்லாந்தில் 40, தைவான் 32, பஹ்ரைன் 26, குவைத், அவுஸ்திரேலியா 23, மலேசியா 22,

பிரான்ஸ் 18, ஜெர்மனி 18, இந்தியா 3, பிரேசில் 1, எகிப்து 1, ஜார்ஜியா 1 உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த 83,342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

50 நாடுகள் கொரோனா
50 நாடுகள் கொரோனா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியா கடல்படையால் கைது

இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியா கடல்படையால் கைது

இந்திய அக்கடல் பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் ஐந்து இலங்கை மீனவர்களை இந்திய கடல்படை கைது செய்துள்ளது

இது போலவே இந்தியா மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

இலங்கை மீனவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

செட்டிக்குளத்தில் வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம்

செட்டிக்குளத்தில் வீடு புகுந்து மர்ம நபர்கள் அட்டகாசம்

வவுனியா செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தில் அதிகாலை 2.00 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த

பெண்களை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களையும் முழுமையாக சேதப்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

செட்டிகுளம் சின்னத்தம்பனை கிராமத்தில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் குறித்த வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில்

இருந்த தாய் மற்றும் மகளை கடுமையாக தாக்கியதோடு வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த குடும்ப பெண் அயலவர்களின் உதவியுடன் செட்டிகுளம் பிரதேச பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப பெண் கணவனை இழந்து தனது பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

உலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இந்த நாடு முன்னோக்கி நகர முடியாது: றிசாட் பதியுதீன்

உலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இந்த நாடு முன்னோக்கி நகர முடியாது: றிசாட் பதியுதீன்

உலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இந்த நாடு முன்னோக்கி நகர முடியாது என முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவர் ஐ.நா தீர்மானத்தில் இருந்து அரசாங்கம் விலகுவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் என்ற வகையில் தாங்கள் மட்டும் ஒரு நாடாக நினைத்து வாழமுடியாது. இந்த அரசாங்கமோ அல்லது நாடோ ஏனைய நாடுகளுடன் சேர்ந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

சுதந்திரத்திற்கு பின்னர் பாரிய யுத்தத்திற்கு முகம் கொடுத்து அழிவுகளை சந்தித்து இருக்கின்றோம். அந்த அழிவுகள் எமக்கு ஒரு பாடமாக விளங்கி, கடந்த காலத்தில் பேரினவாதிகள் விட்ட தவறை

இன்றைய தலைவர்களும், அரசியல் கட்சிகளும் ஒரு பாடமாக கொண்டு செயற்பட வேண்டும். சிறுபான்மை சமூகத்தினுடைய உள்ளங்களை உடைத்து, அவர்களுக்கு ஆத்திரத்தை ஊட்டி

அசிங்கமான முறையில் செயற்படுகின்ற போது அது இந்த நாட்டிற்கு நல்லதல்ல. சுதந்திரம் பெற்ற போது செல்வந்த நாடான

யப்பானுக்கு அடுத்த இடத்தில் இருந்த இந்த நாட்டின் யுத்தத்தினால் பொருளாதாரம் அதளபாதாளத்திற்குள் சென்றுள்ளது.

இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுடன் பகைத்துக் கொண்டு இந்த நாடு முன்னோக்கி நகர முடியாது. பெற்றோல் வெளிநாடுகளில் இருந்து

வருகிறது. அதேபோல் எமது ஏற்றுமதிப் பொருட்கள் அமெரிக்காவும், ஐரோப்பாவுக்கும் செல்கிறது. 5 பில்லியன் டொலர் பெறுமதியிலான ஆடைகள் அங்கு அனுப்பப்படுகிறது. இலங்கைக்கு எதிரான

பிரேரணையை கொண்டு வருவதில் ஐரோப்பாவும், அமெரிக்காவுமே முன்னுன்று உழைத்தன. அவ்வாறான நாடுகளுடன் நேருக்கு நேர் முட்டி முரண்பட்டுக் கொண்டிருப்பது

இந்த நாட்டிற்கு தான் ஆபத்தானது. பெரும்பான்மை மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக பேரினவாத சிந்தனையோடு இந்த அரசாங்கத்தில் உள்ள ஒரு சிலர் இனவாதத்தை, மதவாதத்தை

விதைப்பதுடன் உலக நாடுகளையும் பகைத்துக் கொள்ளும் வகையில் செயற்படுகின்றனர். அவர்கள் இதனை திருத்திக் கொள்ளாவிட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு நாட்டில் உள்ள 22

மில்லியன் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அரசாங்கம் ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக தமது கருத்தை

சர்வதேசத்தில் சொல்ல வேண்டுமே தவிர, வாக்குகளைப் பெறுவதற்காக மட்டும் பேசுபவர்களாக இருக்க கூடாது எனத் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு மகஜர் கொண்டு செல்வது தொடர்பில் வடக்கு, கிழக்கு புகையிரத கடவை ஊழியர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்! photo

ஜனாதிபதிக்கு மகஜர் கொண்டு செல்வது தொடர்பில் வடக்கு, கிழக்கு புகையிரத கடவை ஊழியர்கள் வவுனியாவில் கலந்துரையாடல்! photo

ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பது தொடர்பில் வடக்கு, கிழக்கு புகையிரதக்கடவை ஊழியர்கள் இன்று (26) வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கு பகையிரதக்கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் றொகான் ராஜ்குமார் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த புகையிரதக்கடவை ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

வடக்கு -கிழக்கு புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தினரும், அகில இலங்கை புகையிரதக்கடவை காப்பாளர் சங்கத்தினரும் இணைந்து தங்களின் கோரிக்கைகளை ஜனாதிபதி மற்றும்

பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முகமாக புகையிரதக்கடவை ஒன்றியத்தின் தலைவரால் சமயத்தலைவர்கள்

ஊடாக புகையிரதக்கடவை காப்பாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்க நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

புகையிரத திணைக்களத்தில் நிரந்தரமாக புகையிரதக்கடவை ஊழியர்களை உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், நீதி

தேவதையின் உருவச்சிலையானது நீதிமன்றங்களில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது பாராளுமன்றத்தின் நிறுவப்பட்டு அங்கு

நாட்டு மக்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் மூன்று இடங்களில் ,வாள்வெட்டு – பீதியில் உறைந்துள்ள மக்கள்

யாழில் மூன்று இடங்களில் ,வாள்வெட்டு – பீதியில் உறைந்துள்ள மக்கள்

கடந்த தினம் யாழ்ப்பாணத்தின் மூன்று ப்குதிகளில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .


யாழ்ப்பாணம் ,கொக்குவில் ,கிழக்கு ,வண்ணார்பண்ணை ,பகுதிகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன .

கோட்டாபாயாவினால இயக்க படும் ஆவா குழுவினரே இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தி வருவதாக கண்டறிய பட்ட

நிலையில் அதே குழுவினர் மீளவும் இவ்வாறான செயலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

யாழில் மூன்று இடங்களில்
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா அரசில் – சூடு பிடிக்கும் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

கோட்டா அரசில் – சூடு பிடிக்கும் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

இலங்கை வெலிகம பகுதியில் மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர் மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுளளார் .
தாக்குதலை மேற்கொண்டு விட்டு குற்றவாளிகள் தப்பி சென்றுள்ளனர்

ஆளும் அரசு ஆட்சியில் அமர்ந்த பின்னர் தற்போது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

கோட்டா அரசில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தொடர்பாக இன்று வெளியாகும் ஐநாவின் அறிவிப்பு – பீதியில் இலங்கை

இலங்கை தொடர்பாக இன்று வெளியாகும் ஐநாவின் அறிவிப்பு – பீதியில் இலங்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்சல் பெச்லெட் இன்று (27) இலங்கை தொடர்பான தனது வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார்.

இந்த கூட்டத்தொடரின் இன்றைய அமர்வின் போதே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் தமது வாய்மூல அறிக்கையை முன்வைக்கவுள்ளார்.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்

ஆணையாளர் நாயகத்தின் அறிக்கைக்கு பதில் வழங்கப்படவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின் நேற்றைய அமர்வில் இலங்கையின் இணை அனுசரணையுடன்

நிறைவேற்றப்பட்ட 30/01 மற்றும் 40/1 ஆகிய பிரேரணையிலிருந்து விலகுவதாக வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

மேற்கண்ட தீர்மானங்கள் இலங்கை அரசியல் அமைப்புக்கு முரணாணவை என அமைச்சர் தமது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அமைச்சரவையினதும், பாராளுமன்றத்தினதும் அனுமதி இன்றி வழங்கப்பட்ட இணை அனுசரனையின் மூலம் கடந்த அரசாங்கம்

வெளிப்படையாக ஜனநாயக விழுமியங்களை மீறியதாக அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கை தொடர்பாக
Posted in இலங்கை செய்திகள்

அதிகாரிகளுக்கு கோட்டபாய அதிரடி உத்தரவு

அதிகாரிகளுக்கு கோட்டபாய அதிரடி உத்தரவு

மீன்பிடிக் கைத்தொழிலை பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கும் நியாயமான விலையில் மீன்களைப் பெற்றுக்கொள்வதற்கான

சந்தர்ப்பத்தை வழங்க ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இழுவைப்படகு உரிமையாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (26) முற்பகல் ஜனாதிபதி

அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இப்பணிப்புரையை விடுத்தார்.

ஏற்றுமதி சந்தை தொடர்பாக, கொள்கை அடிப்படையில் புதிய திட்டங்களை வகுக்கும் போது ஏற்றுமதியாளர்கள், மீன்பிடிப்படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவொன்றின் மூலம்

செயற்படுவதன் அவசியத்தை ஜனாதிபதி தெளிவூட்டினார். சட்டத்திற்கு புறம்பான முறைகளில் மீன்களை பிடிப்பதை

நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.

ஏற்றுமதி நிறுவனங்கள் தமது கப்பல் மூலம் பிடிக்கப்பட்ட மீன்களை மாத்திரமே கொள்வனவு செய்வதாக மீனவ தொழிற்சங்க

பிரதிநிதிகள் தெரிவித்தனர். தாம் ஏற்றுமதி கைத்தொழிலில் மாத்திரம் தங்கியுள்ளதால், தமது விளைச்சலுக்கு உரிய சந்தை

வாய்ப்புக்கள் கிடைக்காமை பாரிய பிரச்சினையாக உள்ளதென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகள் மூலம் இப்பிரச்சினையை தீர்த்து வைக்கும்படி கூறிய ஜனாதிபதி, ஏற்றுமதியாளர்களுடன்

படகு உரிமையாளர்களையும் இணைத்துக்கொண்டு தேவையான எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

அதிகாரிகளுக்கு கோட்டபாய
Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவால் புதிய நீதிபதி ஒருவர் பதவிப்பிரமாணம்

கோட்டாவால் புதிய நீதிபதி ஒருவர் பதவிப்பிரமாணம்

ஆளும் கோத்தபாயாவின் அரசில் அவர்களுக்கு சார்பான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கோட்டாவால் புதிய நீதிபதி
Posted in இலங்கை செய்திகள்

புதையலில் கண்டு பிடிக்க பட்ட புத்தர் சிலை

புதையலில் கண்டு பிடிக்க பட்ட புத்தர் சிலை

இலங்கை மொனராகலை ப்குதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் தங்க வடிவிலான புத்தர் சிலையை மீட்டுள்ளார் .

இந்த சிலையுடன் நடமாடிய ஒருவர் கொழும்பு பகுதியில் வைத்து காவல்துறையினரால் கைது செய்ய பட்டுளளார்

கைதானவரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

புதையலில் கிடைக்க கண்டு
Posted in இலங்கை செய்திகள்

வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் இராணுவம்: பீதியில் இளைஞர், யுவதிகள் photo

வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வில் இராணுவம்: பீதியில் இளைஞர், யுவதிகள் photo

ஒரு இலட்சம்  பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நேர்முகத் தேர்வில் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

புதிய அரசினால் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்கான நேர்முகத்தேர்வுகள் அனைத்து பிரதேச செயலகங்களிலும் இன்று

காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் இவ்வேலை வாய்ப்புக்களுக்கு விண்ணப்பத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த நேர்முக தேர்வில் விண்ணப்பதாரிகளை நேர்முகம் காண்பதற்காக அரச உத்தியோகத்தருடன், இரண்டு

இராணுவ வீரர்களும் இணைக்கப்பட்டுள்ளளனர். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 890 பேர் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில்

ஐந்து கிராம சேவகர் பிரிவிற்கான நேர்முக தேர்வுகள் இன்று உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர்

மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் இடம்பெறுகின்றது.

இவ்வாறு அரச உத்தியோகத்தர்களுடன் இராணுவத்தினரை நேர்முகத் தேர்வ்கு இணைந்துக்கொண்டமை தொடர்பில் சமூக ஆர்வலகர்கள் பலரும் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்பு நேர்முகத்
வேலைவாய்ப்பு நேர்முகத்