சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

சிலிண்டர் திருடிய அறுவர் கைது

சிலிண்டர் திருடிய அறுவர் கைது

பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலிருந்து 80 ஒக்சிஜன் சிலிண்டர்களை திருடி விற்ற ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் வைத்தியசாலை ஊழியர் ஒருவரும் அடங்குவதாகவும், 2020 ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது 208 சிலிண்டர்கள்

காணாமல் போயுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாக அதிகாரி ஒருவரின் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Error: View 9293b2au4w may not exist
கண் அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் பார்வை பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கண் அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் பார்வை பாதிப்பு

கண் அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் பார்வை பாதிப்பு

கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது. இவர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் என தெரியவருகின்றது.

கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட 10 நோயாளர்கள் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கண் அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் பார்வை பாதிப்பு

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் இதில் ஓரளவு கண் பார்வை குறைவாக இருந்து சத்திரசிகிச்சை செய்த பின் முற்றாக பார்வை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட அனைவரும் 50 வயதுக்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தவிடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரட்னவிடம் வினவிய போது.

இவ்விடயம் உண்மை ,தேசிய வைத்தியசாலையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி ப்ரெட்னிசோலோன் செய்தி கொப்பி மருந்தை பயன்படுத்தியமையால் ஏற்பட்ட சிக்கல் காரணமாகும் என நினைக்கின்றோம் என்றார்.

தற்போது அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை செய்கிறோம் இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் குணமடைந்து விடுவார்கள் என நினைக்கின்றேன் .

மேலதிக தகவல்கள் எதுவும் நாங்கள் கூற முடியாது இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது அத்துடன் தற்போது கண் அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்.

பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி

பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி

களுத்துறை சிறிகுருச சந்தியில் உள்ள தற்காலிக விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயதுடைய பாடசாலை மாணவி மேலும் மூவருடன் பிரவேசிக்கும் CCTV காட்சிகள் “அத தெரண” விற்கு கிடைத்துள்ளது.

விசாரணையில், குறித்த சிறுமி நேற்று (06) பிற்பகல் குறித்த பகுதியில் உள்ள விடுதிக்க மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த விடுதிக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்தந்த விடுதியில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும், நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்ததை விடுதி ஊழியர் ஒருவர் பார்த்துள்ளார்.

பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி

பின்னர், ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்ற இளைஞனும் பீதியுடன் விடுதியை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.

அப்போது விடுதிக்கு உணவு எடுக்க வந்த நபர் ஒருவர் விடுதியை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக விடுதி ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

நாகொட பிரதேசத்தை சேர்ந்த களுத்துறை பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக உள்ளதால் வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிசார் இதுவரை பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

திடீரென விடுதி அறையை விட்டு பீதியுடன் வெளியேறிய இளைஞன், முன்னதாக விடுதியில் இருந்து வெளியேறிய இளைஞனையும், யுவதியையும் அழைத்து அவசரம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பாடசாலை மாணவி மர்மமான முறையில் பலி

இறந்த சிறுமி மூன்றாவது மாடியில் இருந்து ரயில் தண்டவாளத்தில் குதித்ததாக கூறிய அவர் பின்னர் காரில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், ரயில் தண்டவாளத்தில் கிடந்த மாணவியின் சடலத்தை மற்றைய இளைஞனையும், யுவதியையும் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறி இரவு 9.30 மணியளவில் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமியுடன் கடைசி நேரம் வரை தங்கியிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை கண்டுபிடிக்க களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சந்தேக நபர் தற்போது இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளதோடு, அவர் இரண்டாவது திருமணம் செய்த பெண்ணிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸுக்கு அனுப்புவதாக மோசடி ஒருவர் கைது

பிரான்ஸுக்கு அனுப்புவதாக மோசடி ஒருவர் கைது

பிரான்சுக்கு அனுப்புவதாக தெரிவித்து இளைஞர் யுவதிகளிடம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் மற்றும் கடவுச்சீட்டுகள் என்பவற்றை பெற்று மோசடி செய்த ஒருவர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகமை பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவரே கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சந்தேகநபருக்கு எதிராக பொலிஸாருக்கு 8 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்தநிலையில் சந்தேகநபர் நீர்கொழும்பு நீதிவானிடம் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவரை எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

கானா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
Posted in இலங்கை செய்திகள்

கானா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

கானா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கானா நாட்டு ஜனாதிபதி நானா அட்டோ அக்குபோ – அட்டோவையும் லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கை மற்றும் கானாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், ருவண்டா ஜனாதிபதி பவுல் ககமேவையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து, கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கை மற்றும் ருவண்டா நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டதோடு, குறிப்பாக விவசாயம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

கிழக்கில் கன மழை 150 M ஆக பதிவு
Posted in இலங்கை செய்திகள்

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்

மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

எகிப்துக்கு பறந்தார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

4 மாகாணங்கள் குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்

4 மாகாணங்கள் குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், இன்னும் சில தினங்களில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (06) இடம்பெற்ற வெசாக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், கிழக்கு மாகாணத்தில் இதுவே தனது கடைசி உரையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

4 மாகாணங்கள் குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 மாகாணங்களின் ஆளுநர்களை தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு அறிவித்துள்ளார்.

சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இது தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலிடம் அத தெரண வினவியது.

இது குறித்து இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அறிவித்தல் வழங்கினால் தனது பதவியை இராஜினாமா செய்யத்
தயார் எனவும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸ்ஸம்மில், தெரிவித்தார்.

ஹப்புத்தளை பத்கொட பகுதியில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து
Posted in இலங்கை செய்திகள்

ஹப்புத்தளை பத்கொட பகுதியில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து

ஹப்புத்தளை பத்கொட பகுதியில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து

ஹப்புத்தளை பத்கொட பகுதியில், இன்று (06) அதிகாலை எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஹப்புத்தளை நோக்கிப் பயணித்த குறித்த எரிபொருள் கொள்கலன் ஊர்தி, வீதியை விட்டுவிலகிச் சென்று அருகில் உள்ள வீடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஹப்புத்தளை பத்கொட பகுதியில் எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து

இதன்போது, காயமடைந்த குறித்த கொள்கலன் ஊர்தியின் உதவியாளர் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்தினால், குறித்த வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டிலுள்ளவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தினால், குறித்த டீசல் கொள்கலனில் கசிவு ஏற்பட்டதை அடுத்து, அதிலிருந்து டீசல் வெளியேறுவதாகவும், குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவானோர் அதனை நிரப்பிச் செல்வதை அவதானிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு சிறையில் இருந்து 14 பேர் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு சிறையில் இருந்து 14 பேர் விடுதலை

மட்டக்களப்பு சிறையில் இருந்து 14 பேர் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் வெசாக் பௌர்ணமி தினத்தையிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 14 ஆண் கைதிகள் நேற்று (05) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் பௌர்ணமி தினத்தில் வருடாவருடம் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுவரும் நிலையில், இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 988 கைதிகளை விடுதலை செய்யும் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகள் 14 பேரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளனர்

Error: View 9293b2au4w may not exist
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அண்ணனுடன் சண்டை தங்கை விபரீத முடிவு

அண்ணனுடன் சண்டை தங்கை விபரீத முடிவு

முகத்துக்கு பூசம் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கதால் பதினோரு வயதுடைய மாணவி தன்னுயிரை‌ மாய்த்துக்கொண்ட சம்பவம் தலவாக்கலை ட்றூப் தோட்டத்தில் துயரமான சம்பவம்.

இச்சம்பவம் நேற்று (05) மாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நேற்று போயா தினம் என்பதால் அண்ணன் தங்கை மற்றும் பாட்டியுடன் ஆலயத்திற்கு செல்ல தயாராகும். போது அண்ணன் பயன்படுத்தும் கிரீமை தங்கை பயன்படுத்தியுள்ளார்.

இதன் போது அண்ணன் தங்கையிடம். ஏன் எனது கிரீமை போடுகின்றாய் என கேட்டுள்ளார்.

அண்ணனுடன் சண்டை தங்கை விபரீத முடிவு

அதன் பின்னர் பாட்டியுடன் குறித்த மாணவன் ஆலயத்திற்கு செல்லும் போது தனது தங்கையையும் அழைத்த போது ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ள வருவதற்கு மறுத்துள்ளார்.

இதை அடுத்து பாட்டியும் மாணவனும் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை முடித்து கொண்ட ஆலயத்தில் வழங்கப்பட்ட ‌ அன்னதானத்தினை தங்கைக்கும் எடுத்துகொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அயலவர்கள் உன்னுடைய சகோதரி இறந்துள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இளைஞன் மற்றும் பாட்டியும் வீட்டுக்கு வந்த போது தனது தங்கை தன்னுயிரை‌ மாய்த்துக்கொண்ட விடயம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக தலவாகலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது எனது தங்கையிடம் அன்பாக இதனை கூறியதாகவும், இவ்வாறு செய்து கொள்ளுவார் என தனக்கு தெரியாது எனவும் எப்போதும் பேசுவது போல் பேசியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

குறித்த மாணவி தரம் 08 கல்வி கற்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவியின் தாய் தந்தை கொழும்பில் தொழில் புரிவதாகவும் மணவியும் தனது சகோதரரும் பாட்டின் அரவணைப்பிலேயே இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

ரூ.12 லட்சம் மதிப்பிலான போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது ஆனையிறவில் வைத்து செய்யப்பட்டுள்ளனர்.

போலி நாணயத்தாள்களுடன் இருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணிப்பது தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலுக்கு அமைவாக ஆனையிறவு பகுதியில் மறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவர்களிடமிருந்து 5,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் போலி நாணயத்தாள்களும் மீட்கப்பட்டதுடன், இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணை முன்னெடுக்கின்றனர்

Error: View 9293b2au4w may not exist
இலங்கை தமிழர்கள் 6 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை தமிழர்கள் 6 பேர் கைது

இலங்கை தமிழர்கள் 6 பேர் கைது

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்வதற்கு முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 6 பேர் இந்தியா செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மன்னார், எருக்குழும்பிட்டி கடற்பகுதியில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 06 பேருடன் டிங்கி படகு ஒன்றை கைப்பற்றினர்.

Error: View 9293b2au4w may not exist
மத்தள விமான நிலைய
Posted in இலங்கை செய்திகள்

மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்ட விமானங்கள்

மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கும் இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நேற்றிரவு கட்டுநாயக்க பிரதேசத்தில் கடும் மழை பெய்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

மத்தள விமான நிலையத்திற்கு திருப்பியனுப்பட்ட விமானங்கள்

அதன்படி, முதல் விமானம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து 15 விமான ஊழியர்களுடன் வந்துள்ள நிலையில் நேற்றிரவு 11.35 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கபபட்டுள்ளது.

விமானத்தில் உள்ள பயணிகளும் ஊழியர்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பஸ் மூலம் அழைத்து வரப்படுவதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், மாலைத்தீவின் மாலேயில் இருந்து வந்த விமானம் ஒன்றும் இன்று அதிகாலை​ 12.02 மணியளவில் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு
Posted in இலங்கை செய்திகள்

988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இறுக்கம்
Posted in இலங்கை செய்திகள்

கடன் மறுசீரமைப்பு நாணய நிதியம் முக்கிய அறிவிப்பு

கடன் மறுசீரமைப்பு நாணய நிதியம் முக்கிய அறிவிப்பு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் நடைபெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தொடரின் போது, ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்கள பணிப்பாளர், கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் இது தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

இலங்கையில் அதிகரித்திருந்த பணவீக்கம் தற்போது குறைவடைந்துள்ள போதும், நிதிக் கொள்கைகள் ஊடாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கிருஷ்ணா ஶ்ரீநிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

Error: View 9293b2au4w may not exist
தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு

வெசாக் பண்டிகையில் விசேட பாதுகாப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு பிரதான நகரங்களிலுள்ள வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் பொது மக்களினது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், நேரில் சோதனை செய்வதற்கும் மேலதிக அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பு விபச்சார விடுதியில் யாழ்பாணத்து பெண்கள்
Posted in இலங்கை செய்திகள்

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பல அழகிகள் கைது

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பல அழகிகள் கைது

ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 6 யுவதிகள் உட்பட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக குருநாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குருநாகல் கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில் தங்குமிடம் என்ற போர்வையில் இந்த விபச்சார விடுதி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, ​​சிறிய அளவிலான ஐஸ் மற்றும் சிறிய அளவிலான கஞ்சாவை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பல அழகிகள் கைது

விபச்சாரத்தில் ஈடுபடும் யுவதிகள் இந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதில், கைது செய்யப்பட்ட யுவதிகள் மொனராகலை, அனுராதபுரம், கொழும்பு மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 19 – 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

குறித்த இடத்தில் அவருடன் தங்கியிருந்த இளைஞர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி

லண்டனில் நடைபெறவுள்ள மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (04) காலை பிரித்தானியாவுக்கு பயணமானார்.

லண்டனின் பழமையான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 6 ஆம் திகதி நடைபெறும் முடிசூட்டு விழாவில் அரச குடும்ப உறுப்பினர்கள், உலகத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது தாயார் 2 ஆம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு மன்னர் சார்ள்ஸ் அரியணை ஏறியமை குறிப்பிடத்தக்கது.

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு

கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி பணிப்புரை விடுத்துள்ளார்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடு முழுவதும் 04ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 06ஆம் திகதி சனிக்கிழமை வரையான 03 நாட்களுக்கு மாடு, ஆடு மற்றும் கோழி என்பன அறுத்து, விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மேற்படி 03 தினங்களும் கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் யாவும் மூடப்பட வேண்டும் என மாநகர ஆணையாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேனைக்குடியிருப்பு நற்பிட்டிமுனை மணல்சேனை மருதமுனை பெரியநீலாவணை பாண்டிருப்பு சாய்ந்தமருது கல்முனை மாநகர பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள், ஆட்டிறைச்சிக் கடைகள் மற்றும் கோழியிறைச்சிக் கடைகள் இயங்கி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதே வேளை, கல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு சில இறைச்சிக்கடை உரிமையாளர்கள் உதாசீனமாக செயற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இறைச்சிக் கடைகள் 03 தினங்கள் மூட உத்தரவு

அண்மையில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இறைச்சிக் கடை உரிமையாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது அவர்களது இணக்கப்பாட்டுடன் கட்டுப்பாட்டு விலை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2,000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கபட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1,800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இவ்விலைப்பட்டியலை அனைத்து இறைச்சிக் கடைகளிலும் காட்சிப்படுத்தும் பொருட்டு குறித்த விலைப்பட்டியல் ஆணையாளரினால் இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

ஆனால் ,சில இறைச்சி கடை உரிமையாளர்கள் குறித்த கட்டுப்பாட்டு விலையை மீறி தான்தோன்றித்தனமாக விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்: தையிட்டியில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்: தையிட்டியில் பதற்றம்

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்: தையிட்டியில் பதற்றம்

யாழ்ப்பாணம் வலிகாமம், வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி நேற்று இரவு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டகாரர்களை அச்சுறுத்தி பொலிஸார் அவர்களை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக தையிட்டி பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

மேலும் குறித்த பகுதிக்குள் உள்நுழைய முடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து போராட்டப்பகுதியினை சுற்றி இராணுவத்தினர் முள் வேலிகளை அமைத்திருந்ததுடன், அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு ஒன்றுக்கூடியதுடன், பதற்றமான சூழல் நிலவியிருந்தது