Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
திரிஷாவுக்கு இது முதல்
திரிஷாவுக்கு இது முதல்
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் திரிஷா முதல் முறையாக இதனை தேர்வு செய்துள்ளார். இது அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
திரிஷாவுக்கு இது முதல் முறை!
திரிஷா
சாமி, கில்லி, பீமா, சர்வம் போன்ற பல படங்களில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்து
வந்தார். இவவர் திரைத்துறைக்கு வந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நாயகியாக நடித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
திரிஷா
திரிஷா
இவர் சமீபத்தில் தெலுங்கு மொழியில் பிருந்தா என்ற இணையத் தொடரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.
காவல்துறை அதிகாரியாக முதன் முதலில் நடிக்கும் நடிகை திரிஷா சீருடையுடன் படப்பிடிப்பு
தளத்தில் நாய்களைக் கொஞ்சும் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
பிரிந்த பிறகு ஒரே ஹோட்டலில் தங்கிய தனுஷ்–ஐஸ்வர்யா!
பிரிந்த பிறகு ஒரே ஹோட்டலில் தங்கிய தனுஷ்–ஐஸ்வர்யா!
நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அண்மையில் அறிவித்தனர்.
பிரிவை அறிவித்த பிறகு ஐதராபாத்தில் பிஸியாக இருக்கும் ஒரே ஹோட்டலில் இருவரும் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது பற்றி விசாரித்த போது, பிரிவை அறிவித்த பிறகு அவர் மீண்டும் தனது வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனராம்.
அந்த வேலைகளுக்காக இருவரும் ஐதராபாத்தில் தங்கி இருக்கிறார்களாம். தனுஷ் நடித்த 3 உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ள ஐஸ்வர்யா தற்போது மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளாராம்.
லேட்டஸ்ட் தகவலின்படி காதலர் தினத்திற்காக ரொமான்டிக் பாடல் ஒன்றை இயக்கி வருகிறாராம் ஐஸ்வர்யா. இதற்கான ஷுட்டிங் ஜனவரி 25ம் திகதி துவங்கி 27ம் திகதி நிறைவடைய உள்ளதாம்.
இதே போல் தனுஷும் மாறன், திருச்சிற்றலம்பலம், வாத்தி உள்ளிட்ட பல படங்களில் ஒரே சமயத்தில் நடித்து வருகிறார்.
இதற்கான ஷுட்டிங்கிற்காக அவரும் ஐதராபாத் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா – தனுஷ் இருவருமே தங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதாக கூறப்பட்டது.
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை இலியானாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் ஹிட் அடித்து வருகிறது.
கவர்ச்சி உடையில் கலக்கும் இலியானா… வைரலாகும் புகைப்படம்
இலியானா
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’
திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
இலியானாஇலியானா
இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இலியானா, தற்போது அவருடைய புதிய கவர்ச்சி
புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளது.
இலியானா
இலியானா
இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ஜெயராமுக்கு கொரனோ
நடிகர் ஜெயராமுக்கு கொரனோ
மலையாளம், தமிழ் போன்ற பல மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகர் ஜெயராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் ஜெயராம்
ஜெயராம்
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயராம்
நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், விஷ்ணு விஷால், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர்
தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வருகிறார்கள். இந்நிலையில், பிரபல நடிகர் ஜெயராமுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பிரியங்கா சோப்ரா.
வாடகைத் தாய் மூலம் கிடைத்த குழந்தையால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்று பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனாசும் தெரிவித்துள்ளனர்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ்
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ்
இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார். இந்த தகவலை அவரது கணவர் நிக் ஜோனஸ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நிக்கை டேக் செய்து ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ள பிரியங்கா, “நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில்
மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்பு நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத்துவதால் தனியுரிமையை விரும்புகிறோம், மிக்க நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் முன்னணி நடிகையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர்
, தற்போது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
ஆண்ட்ரியா
இவர் கைவசம் கா, பிசாசு 2 போன்ற படங்கள் உள்ளன. இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் பாத்ரூம் டப்பில் குளிக்கும்
புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பாவனிக்கு வந்த சோதனை
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பாவனிக்கு வந்த சோதனை
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவ்னிக்கு வீட்டில் இருந்து வந்தவுடன் சோதனை வந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பாவ்னிக்கு வந்த சோதனை
பாவ்னி
தெலுங்கு சினிமாவில் உறுதுணை கதாபாத்திரங்களிலும் சீரியவிலும் நடித்து வந்த நடிகை பாவ்னி தமிழில் ‘ரெட்டை வால் குருவி’ சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து
பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளவர், ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பாவ்னி
கடைசிநாட்கள் வரை சிறப்பாக விளையாடி மூன்றாவது இடத்தினைப் பிடித்தார். பிக்பாஸ் வீட்டில்
இருந்து வெளியே வந்த இவர், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தனது சமூக வலைத் தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
நடிகர் சித்தார்த் ஆஜராக சென்னை காவல்துறை சம்மன்
நடிகர் சித்தார்த் ஆஜராக சென்னை காவல்துறை சம்மன்
கொரோனா அதிகரிப்பு சூழலில் நடிகர் சித்தார்த்திடம் எந்த முறையில் அறிக்கை பெறுவது
என்பது குறித்து ஆலோசிக்கப் படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சாய்னா நேவால் குறித்து அவதூறு கருத்து – நடிகர் சித்தார்த் ஆஜராக சென்னை காவல்துறை சம்மன்
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகர் சித்தார்த்
சென்னை:
பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பே சமரசமாக்கப்பட்டுள்ளபோது எந்த ஒருநாடும் பாதுகாப்பாக இருப்பதாக கூற முடியாது.
பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலை நான் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கிறேன் என்றார்.
இதற்கு பதில் அளித்து நடிகர் சித்தார்த் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு இரட்டை அர்த்தத்துடன் சாய்னா நேவாலை தரக்குறைவாக விமர்சனம் செய்வதாக புகார் எழுந்தது.
சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. ஜதராபாத் சைபர் கிரைம் காவல்துறையிலும் புகார்
கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தனது டுவிட்டர் பதிவு தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரினார்.
இதற்கு பதிலளித்த சாய்னா, சித்தார்த் மன்னிப்பு கோரியது மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களை நீங்கள் இவ்வாறு குறி வைக்கக்கூடாது. பரவாயில்லை. நான் இதுபற்றி கவலை கொள்ளவில்லை.
நான் இப்போது இருக்கும் நிலை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவரை கடவுள் ஆசீர்வதிப்பார் என்றார். இந்த நிலையில், சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரில்
நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்ளிடம் அவர் பேசியதாவது:
இரண்டு புகார்கள் வந்துள்ளன. இதில் ஒன்று கிரிமினல் வழக்கு அல்ல. அவதூறு வழக்கு உள்ளது. சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது. எங்களுக்கு அவரது அறிக்கை மட்டுமே தேவை.
கொரோனா அதிகரிப்பால் சித்தார்த்திடம் எந்த முறையில் அறிக்கை பெறுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து இல்லை… சண்டைதான் – தனுஷ் தந்தை
விவாகரத்து இல்லை… சண்டைதான் – தனுஷ் தந்தை
பிரபல இயக்குனரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, தனுஷ் ஐஸ்வர்யா இருவரின் விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார்.
விவாகரத்து இல்லை… சண்டைதான் – தனுஷ் தந்தை
ஐஸ்வர்யா – தனுஷ்
தமிழ் திரையுலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர், கஸ்தூரி ராஜா. இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கிறார்கள். மூத்த மகன், டைரக்டர் செல்வராகவன். இரண்டாவது மகன் தனுஷ்.
இவருக்கும், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இது, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும்.
மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 மகன்கள் இருக்கிறார்கள். மூத்த மகன் யாத்ராவுக்கு 15 வயது ஆகிறது.
இந்த நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து விட்டார்கள். இரண்டு பேரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாகவும்
அறிவித்தார்கள். இதுபற்றி தனுசின் தந்தையும், டைரக்டருமான கஸ்தூரிராஜா கூறியதாவது:-
‘‘தனுசும், ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது, கணவன்-மனைவி இடையே நடக்கும் வழக்கமான குடும்ப சண்டைதான். இருவரும்
விவாகரத்து செய்யவில்லை. இரண்டு பேருமே இப்போது சென்னையில் இல்லை. ஐதராபாத்தில்
இருக்கிறார்கள். நான் போனில் தொடர்புகொண்டு பேசினேன். இருவருக்கும் சில அறிவுரைகளை சொன்னேன்’’ என்றார்.
சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி
சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி
மனைவி சமந்தாவை பிரிவதாக அறிவித்த நடிகர் நாகசைதன்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தனக்கு ஏற்ற ஜோடி அவர்தான் என்று கூறியிருக்கிறார்.
சமந்தாதான் எனக்கு ஏற்ற ஜோடி – நாக சைதன்யா
சமந்தா – நாக சைதன்யா
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பு வெளியாகி நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.
ஆனாலும், இவர்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பேட்டியளித்த நாகசைதன்யா விவாகரத்து என்பது இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு
என்றும் விவாகரத்துக்கு பின் சமந்தா சந்தோசமாக இருந்தால் தனக்கும் சந்தோசம்தான் என்றும் தெரிவித்திருந்தார்.
நாக சைதன்யா – சமந்தா
இந்த நிலையில் தற்போது அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‘திரையில் தனக்கு சரியான ஜோடி சமந்தா தான் என்றும் அவருக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒத்துப்போகும் என்றும்
கூறியிருக்கிறார். மேலும் சமந்தா நடித்த ’மஜ்லி’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து- கஸ்தூரி காட்டம்
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து- கஸ்தூரி காட்டம்
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்த நிலையில், பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத் தளத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து… பிரபல நடிகை கருத்து
தனுஷ் – ஐஸ்வர்யா
கடந்த 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி திடீரென பிரியப்போவதாக நேற்று சமூக வலைதளங்கள் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
இது அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரையுலக பிரபலங்களுக்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த முடிவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
விவாகரத்து என்பது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அது ஒரு தவறான முடிவு.
குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக வாழ வேண்டும் என நமது முன்னோர்கள் சரியாக கூறி
இருக்கிறார்கள். குடும்பத்தில் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களுக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்று கஸ்தூரி பதிவு செய்து இருக்கிறார்
மனைவியை விவகாரத்து செய்தார் -தனுஷ் – அதிர்ச்சியில் ரஜனி
மனைவியை விவகாரத்து செய்தார் -தனுஷ் – அதிர்ச்சியில் ரஜனி
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்தார் தனுஷ்
ஐஸ்வர்யா – தனுஷ்
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு
நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக தனுஷ் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 18 வருடங்களாக நண்பர், தம்பதி, பெற்றோர் மற்றும் நலம் விரும்பியாக நாங்க இருந்து
இருக்கிறோம். எங்கள் வாழ்க்கை பயணம் பல புரிதல்களோடு நெடுந்தூர பயணமாக இருந்தது.
இன்று முதல் எங்களுடைய பயணம் வெவ்வேறாக இருக்க முடிவு செய்து இருக்கிறோம். நானும்
ஐஸ்வர்யாவும் சேர்ந்து முடிவு எடுத்து இருக்கிறோம். எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவு செய்துள்ளார்.
விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை
விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடித்த பிரபல நடிகை ஒருவர், அவரிடம் கற்றுக் கொண்ட பழக்கத்தை தற்போதும் பின்பற்றுவதாக கூறி இருக்கிறார்.
விஜய் கற்றுக் கொடுத்ததை இப்போதும் பின்பற்றுகிறேன் – பிரபல நடிகை
விஜய்
விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் உலக அழகி பிரியங்கா சோப்ரா. அதன்பிறகு பாலிவுட் சென்றவர் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டார். ஆனால்
விஜய்யிடம் தான் கற்ற பழக்கம் ஒன்றை இப்போது வரை கடைபிடித்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் பிரியங்கா சோப்ரா.
விஜய் – பிரியங்கா சோப்ரா
இதுபற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது, “தமிழன் படத்தில் நடித்தபோது சினிமா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒவ்வொரு காட்சி முடிந்தாலும் கூட கேரவன் பக்கமே போகாமல்
செட்டிலேயே அமர்ந்திருப்பார் விஜய். அப்போது அவரிடம் நான் கண்டு வியந்த அந்த பழக்கத்தை இப்போதுவரை கடைபிடித்து வருகிறேன். படக்குழுவினரே வந்து அடுத்த காட்சிக்கு இன்னும் அதிக
நேரம் ஆகும் என்று சொன்னால் மட்டுமே கேரவனுக்கு செல்வேன். மற்றபடி படப்பிடிப்பு தளத்தில் எதுபற்றியாவது தெரிந்து கொள்வதற்காக சுற்றிக் கொண்டே தான் இருப்பேன்” என கூறியுள்ளார்
இனிமேல் நான் வில்லிதான் – வனிதா
இனிமேல் நான் வில்லிதான் – வனிதா
விஜய்க்கு ஜோடியாக படங்களில் நடித்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும்
கவர்ந்தவர் வனிதா விஜயகுமார் இவர் சமிபத்தில் நடந்த விழாவில் பேசிய வீடியோ வைரலாக பரவிவருகிறது.
இனிமேல் நான் வில்லிதான் – வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான வனிதா விஜயகுமார் சமீபத்தில் தில்லு இருந்தா
போராடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசியது வைரலாக பரவி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது,
சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை நான் கோட்டை விட்டுவிட்டேன். முட்டாள்தனம் பண்ணி விட்டேன். இதை மிக தாமதமாக உணர்ந்தேன். இனிமேல், விட்ட இடத்தை பிடிக்கப் போகிறேன்
. இந்த படத்தின் டைரக்டர் முரளிதரன் என்னிடம் வந்து கதை சொன்னபோது, ‘பஞ்சாயத்து
பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கி தயங்கி கேட்டார். நடிக்கிறேன் என்று நான் சொன்னதும், அவர் முகம் மலர்ந்தது.
வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தொடர்ந்து வில்லியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். இந்த படத்தில் எனக்கு ‘பஞ்சாயத்து பரமேஸ்வரி’ என்ற வில்லி வேடம்.
இதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றார்கள். எனக்கு கார் ஓட்ட தெரியும். வேகமாக ஓட்டுவேன். ஆனால், ‘பைக்’ ஓட்ட தெரியாது. படத்துக்காக புல்லட் ஓட்ட ஒரு நண்பரிடம்
கற்றுக்கொண்டேன். படத்தில் நான் புல்லட் ஓட்டி வரும் காட்சி, ‘பந்தா’வாக இருக்கும். உலக மகா வில்லியாக தெரிவேன்.
இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பேசினார்.
பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனின் வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 5-இன் வெற்றியாளர் யார் தெரியுமா?
ராஜு ஜெயமோகன்
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. இதன் வெற்றியாளர் அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்ததுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்கள் யார் என்ற
ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் களம் இறங்கி பெரிய ரசிகர்களை கவர்ந்த ராஜு, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் அந்த வீட்டின் டப் காம்பட்டீட்டராக இருந்து வந்தார். இந்த சீசனில் வெற்றி
பெற்றது ராஜு என்று கூறப்படுகிறது. தொகுப்பாளராக பணியாற்றி பெரிய ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா 2வது இடத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
3வது இடத்தை பாவனியும், 4வது இடத்தை அமீரும், 5வது இடத்தை நிரூப் பிடித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிகினி உடையில் வலம் வரும் கிரண்
பிகினி உடையில் வலம் வரும் கிரண்
ஜெமினி, வின்னர், வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பிகினி உடையில் வலம் வரும் கிரண்… வைரலாகும் வீடியோ
கிரண்
ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண். தொடர்ந்து அஜித்துடன்
‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன் ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த ‘வின்னர்’ படம் சூப்பர் ஹிட்டானது.
இதில் அதிக கவர்ச்சியில் கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது பிகினி உடையில் கடற்கரையோரம் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வின்னர் படம் நியாபகம் வருகிறது என்றும், வயதானாலும் இளமை குறையவில்லை என்றும் பதிவு செய்து வருகிறார்கள்.
ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்… ரஜினி
ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்… ரஜினி
பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்… ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
ரஜினி
பொங்கல் தினத்தையொட்டி பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் வாழ்த்து
தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு ஆரோக்கியமான பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினியின் பதிவு
தனது சமூக வலைத் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் வணக்கம், ஒரு கஷ்டமான ஒரு ஆபத்தான சூழ்நிலையிலேயே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா தொற்று
நாளுக்கு நாள் அதிகமாகிட்டுருக்கு. இதுலேருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எல்லா
கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு
மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் தின நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி
கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள காயத்ரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
கவர்ச்சிக்கு மாறிய காயத்ரி… வைரலாகும் புகைப்படம்
காயத்ரி
சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காயத்ரி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார்.
காயத்ரி
இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கிவிட்டார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் – பார்த்திபன் நெகிழ்ச்சி
காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் – பார்த்திபன் நெகிழ்ச்சி
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவருடைய சமூக வலைத்தளத்தில் காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் இதனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
காதல் காட்சிகளே இல்லாத காதல் படம் – பார்த்திபன் நெகிழ்ச்சி
பார்த்திபன்
இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் “அழகி”. இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, மோனிகா உட்பட பல நடிகர்கள்
நடித்திருந்தார்கள். மேலும், அழகி படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்
வசூலையும் பெற்றுத் தந்தது. அதுமட்டும் இல்லாமல் சிறந்த திரைப்படத்திற்கான பல விருதுகளையும் குவித்தது.
இப்படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகியிருக்கும் நிலையில், இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், தனது சமூக வலைத்தள பக்கத்தில், அழகி age 20! ஊரான் காதலை ஊட்டி வளத்தா,
தன் காதலி தானா வளருவான்னு காதலூர் பக்கம் கா(த்)து வாக்குல சொல்லுவாங்க.. அப்படி ஆகச்சிறந்த கலைஞன் தங்கர் பச்சானின் அழகியை நான் ஜீவனூற்றி காதலிக்க, அந்தக் காதலை ஊரே போற்றி கொண்டாடி இரு பத்து ஆண்டுகள் இன்றோடு. (எனக்கோ என்றும் காதல் தாண்டா
கவிமனது!) எப்டி^ Bracket ^ பண்றதுங்கிறதை கத்துக்கிறதுதான் மைய(ல்) பகுதி of காதல்! சரி matterக்கு வருவோம்.. அழகிக்கு கிடைத்த பாராட்டு முத்தம் ஒவ்வொன்றும் நண்பர் தங்கரையே
சேரும். அவரின் அழகிய கன்னி முயற்சியை திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்து திக்குமுக்காட வைத்தது. காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படம்-காலத்திற்கும் கொண்டாட
காரணம், ஒப்பனையில்லா நிஜதன்மை நிறைந்த காதல். எல்லோர் வாழ்விலும் வந்துப் போன (அ) நொந்துப் போன காதல் வடு ‘அழகி’! தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி
என்றளவில் இன்றளவும் இதயத்தை (20)வருட சண்முகத்தின் part 1, part 2 ஆகி இறுதிவரை இணைப்பற்று போனதால்,Part 2 எடுத்தாவது அத்துப்போன காதலை அர்த்தப்படுத்த
முயற்சிக்கிறார் திரு தங்கர்.ஒரு காவிய தயாரிப்பாளர் சிக்கினால் விரைவில் அழகி 2 ! என்று நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார்.
சமந்தாவை பிரிவு – மவுனம் கலைத்தார் நாக சைதன்யா
சமந்தாவை பிரிவு – மவுனம் கலைத்தார் நாக சைதன்யா
இது குறித்து வெளியாகி உள்ள வீடியோவில் அவள் சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம் என்று நடிகர் நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.
சமந்தாவை பிரிந்தது தொடர்பாக முதல்முறையாக மவுனம் கலைத்தார் நாக சைதன்யா
நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா
தெலுங்கு திரைப்படங்களில் ஜோடி சேர்ந்த நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் கடந்த
2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தவ முறைப்படி மற்றும் தென்னிந்திய இந்துமத சடங்குகளின்படி அவர்களது திருமணம் இரண்டு முறை நடைபெற்றது.
திடீரென அவர்களது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்ட கூட்டறிக்கையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
எங்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும். நீண்ட ஆலோசனை மற்றும் சிந்தனைக்குப் பிறகு, சாமும் நானும் எங்கள் சொந்த பாதையில் செல்ல கணவன்-மனைவியாகப் பிரிந்து செல்ல முடிவு
செய்தோம். நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். எங்கள் உறவின் அடிப்படையானது எங்களுக்கிடையில்
எப்போதும் ஒரு சிறப்புப் பிணைப்பைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் நாக சைதன்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தந்தை நாகர்ஜுனாவும் சேர்ந்து நடித்திருக்கும் பங்கராஜு திரைப்படம் தொடர்பாக பேட்டி அளித்த நாக சைதன்யா அதில் சமந்தாவை பிரிந்தது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
அந்த வீடியோவில், “பிரிந்திருப்பது பரவாயில்லை. அது அவர்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக
எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. அவர் (சமந்தா) மகிழ்ச்சியாக இருந்தால், எனக்கு மகிழ்ச்சிதான். அது போன்ற சூழலில் விவாகரத்து தான் சிறந்த முடிவு என்று அவர் தெரிவித்துள்ளார். சமந்தாவை
பிரிந்தது தொடர்பாக முதன் முறையாக நடிகர் நாக சைதன்யா பேசியிருப்பது குறித்த வீடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.














