Posted in இலங்கை செய்திகள்

கோர புயலினால் விமான சேவைகள் இரத்து -மக்களுக்கு எச்சரிக்கை

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், இன்று இந்தியாவில் மும்பை அருகே உள்ள அலிபாக் பகுதியில் கரை கடக்கத் தொடங்கியது.

தீவிர புயலாக வலுப்பெற்று தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த நிசர்கா புயல், இன்று பிற்பகல் இந்திய

மாநிலமான மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.

மும்பையில் இருந்து 94 கிமீ தொலைவில் உள்ள அலிபாக் அருகே கரைகடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 11 மணிக்கு பிறகு அலிபாக் அருகே புயல் கரையை கடக்கத்

தொடங்கியது. இதனால் கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. கனமழையும் பெய்கிறது. கிட்டத்தட்ட 2 மணி

முதல் 3 மணி நேரத்திற்குள் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

நிசர்கா புயலால் மகாராஷ்டிராவின் மும்பையும், கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை

நிலையம் தெரிவித்து இருக்கிறது. குஜராத்தை விட மகாராஷ்டிரா தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் கூறி உள்ளது. இதனால் இரு

மாநிலங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், நிசர்கா புயல் எதிரொலியால் மும்பையில் நாளை புறப்பட வேண்டிய 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நாளை 17 விமானங்களை ரத்து செய்துள்ளது. 3 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.


ஏர் ஏசியா, ஏர் இந்தியா, கோ ஏர், ஸ்பைஸ் ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் நாளை மும்பைக்கு வருகை தரும் 12 விமானங்களை மட்டுமே சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன.

      Posted in இலங்கை செய்திகள்

      திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும்- அரசு

      திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பும்- அரசு

      எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுப் போக்குவரத்து சேவையை வழமை போன்று முன்னெடுப்பதற்கு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

      அடுத்துவரும் சில தினங்களில் மக்களின் செயற்பாடுகள் மற்றும் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் சுகாதாரப் பிரிவு

      வழங்கும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாட்டின் பொதுப் போக்குவரத்து சேவையை

      வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

      இலங்கை போக்குவரத்து சபைக்கு உட்பட்ட 5,300 பஸ்களும் தனியார் துறையைச் சேர்ந்த 23,000 பஸ்களும் இருந்தபோதிலும்

      தற்போதைய நிலைமையில் பயணிகளின் போக்குவரத்துக்கு இவை போதுமானதல்ல என்று அமைச்சர் மகிந்த அமரவீர

      தெரிவித்துள்ளார். ரயில் மற்றும் பஸ் சேவைகள் உரிய முறைப்படி இடம்பெறும். இது தொடர்பான கலந்துரையாடல் இன்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றது.

      கொரோனா வைரஸ் காரணமாக ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் போக்குவரத்து கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால்,

      சாதாரண பொதுப் போக்குவரத்துச் சேவையை முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. எதிர்காலத்தில் தற்போதுள்ள

      தனியார் மற்றும் அரச பஸ் போக்குவரத்துச் சேவையை உயர்ந்தபட்ச அளவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

      இது தவிர, பாடசாலை போக்குவரத்து பஸ்கள் சுற்றுலா மற்றும் யாத்திரிகைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பஸ்கள் மற்றும் பதிவு

      செய்யும் ஆவணத்தில் சேர்க்கப்பட்டுள்ள பஸ்கள் தற்காலிகமாக பிரயாணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும். இந்த

      பஸ்களை தற்காலிகமாக பதிவு செய்யும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகும்.

      ரயிலிலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகள் அனுமதிக்கப்படுவதால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்

      போது அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயணங்களை மட்டுப்படுத்துமாறு அமைச்சர் மகிந்த அமரவீர பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்..

          Posted in இலங்கை செய்திகள்

          கிளிநொச்சியில் காற்றினால் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு – நிவாரண கொடுப்பனவு

          கிளிநொச்சியில் காற்றினால் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு – நிவாரண கொடுப்பனவு

          கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் வீசிய கடுமையான காற்றின்

          காரணமாக பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

          இந்த வருடம் கடந்த மே மாதம் கிளிநொச்சி மாவட்டத்தில் வீசிய பலத்த

          காற்றின் காரணமாக 89 வீடுகள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்திருந்தன.

          இவ்வாறு பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும்

          தலா 10000 ரூபா வீதம் முற்பணமாக வழங்குவதற்கான ஏற்பாட்டினை

          கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டிருந்தது.

          அந்த வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் தேசிய அனர்த்த நிவாரண

          சேவைகள் நிலையத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றது.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் பாணின் விலை இன்று இரவு முதல் அதிகரிப்பு

              இலங்கையில் பாணின் விலை இன்று இரவு முதல் அதிகரிப்பு

              இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர்

              மூன்றாவது முறையாக பாணின் விலைகள் அதிகரிக்க படுகின்றன

              இந்த திடீர் விலை அதிகரிப்பால் அடிப்படை பொருளாதாரா வசதி இன்றி

              தவிக்கும் மக்கள் பெரிது பாதிக்க படுகின்றனர் ,ஆனால் அவற்றை எல்லாம்

              கருத்தில் கொளளது வீழ்ந்து போன பொருளாதரத்தை நிமிரத்திட கோட்டபாய ஆட்சி பீடம் இந்த அடாவடியை நடவடிக்கையை தொடர்கிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  சிங்கப்பூரில் தவித்த 291 இலங்கையர் விசேட விமானம் மூலம் நாடு வந்தனர்

                  சிங்கப்பூரில் தவித்த 291 இலங்கையர் விசேட விமானம் மூலம் நாடு வந்தனர்

                  கொரனோ வைரஸ் தாக்குதலினால் சிங்கப்பூரில் சிக்கி தவித்த

                  இலங்கையை சேர்ந்த சுமார் 291 இலங்கையர்கள் ,இலங்கை அரச எயார்லைங்கா விமானத்தின் மூலம் அழைத்து வரப் பட்டுள்ளனர்

                  கட்டு நாயக்க விமான நிலையத்தில் இருந்து சிறப்பு பேரூந்துகளில் ஏற்றி செல்ல பட்டு தனிமை படுத்தல் முகாமில் சிறை வைக்க பட்டுள்ளனர்

                  14 நாட்கள் முடிவடைந்த பின்னரே அவர் தம் உறவுகளுடன் இணைவதற்கு விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இறம்பொடை வௌன்டன் தோட்டத்தில் தீ வீபத்து காரணமாக 03 வீடுகள் பாதிப்பு photo

                      இறம்பொடை வௌன்டன் தோட்டத்தில் தீ வீபத்து காரணமாக 03 வீடுகள் பாதிப்பு photo

                      நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்கு உட்பட்ட வௌன்டன் தோட்டம் தொழிற்சாலை பிரிவில் இலய குடியிருப்பு

                      ஒன்ற்pல் நேற்று (01) இரவு 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ வீபத்தினால் மூன்று வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தீ

                      ஏற்பட்ட உடன் பொது மக்களின் உதவியியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தீ ஏனைய வீடுகளுக்கு

                      பரவாமல் காப்பாற்றபட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கேள்விபட்ட ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு விஜயம்

                      செய்து தீ அணைப்பவர்களுடன் இனைந்து செயற்பட்டதுடன். பாதிக்கபட்டவர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க

                      நடவடிக்கை எடுத்துள்ளார். மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்க் கொண்டு வருவதுடன் மின் ஒழுக்கு காரணமாக

                      இந்த தீ வீபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேக்கப்படுகின்றது. இந்த

                      தீ வீபத்தினால் பெருமளவு பெருமதியான பொருட்கள் சேதமாகி உள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இரண்டு சிங்கள இராணுவத்தினர் பலி – நடந்தது என்ன …?

                          இரண்டு சிங்கள இராணுவத்தினர் பலி – நடந்தது என்ன …?

                          இலங்கை பாதுகாப்பு படையினர் இருவர் பயணித்த ஊந்துருளி விபத்தில் சிக்கியதில்
                          அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

                          இந்த விபத்து Damanayaya in Bakamuna பகுதியில் இடம்பெற்றுள்ளது ,27,மற்றும்

                          28 வயதுடைய இளம் இராணுவ சிப்பாய்கள் இவ்விதம் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                          குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              இறந்த கருஞ் சிறுத்தை மரபணு சோதனைகள் ஆரம்பம்

                              இறந்த கருஞ் சிறுத்தை மரபணு சோதனைகள் ஆரம்பம்

                              சமீபத்தில் பொறியொன்றில் சிக்கி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த கறுஞ்சிறுத்தை தொடர்பான மரபணு பரிசோதனை

                              பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியல் தொழில்நுட்ப நிலையத்தில் நடத்தப்படவுள்ளது.

                              வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய,

                              மரபணு பரிசோதனையை நடத்துவதாக நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி பிரதீபா பண்டார தெரிவித்தார்.

                              உயிரிழந்த கறுஞ்சிறுத்தையின் இரத்த மாதிரியும், தற்போது உயிர்வாழும் ஒருவகை சிறுத்தையின் இரத்த மாதிரியும்

                              பெறப்பட்டு, ஒப்பீட்டு முறையிலான டிஎன்ஏ சோதனைகள் நடத்தப்படும்.

                              இதன் மூலம், இந்தக் கறுஞ்சிறுத்தை பிரத்தியேகமான வகையைச் சேர்ந்த உயிரினமா அல்லது தற்போதுள்ள உயிரினத்தின் தோலில்

                              ஏற்பட்ட நிறமூர்த்த குறைப்பாட்டால் கறுப்பாக இருக்கிறதா என்பது கண்டறியப்படும் என கலாநிதி பண்டாரநாயக்க கூறினார்.

                              இறந்த கருஞ் சிறுத்தை
                              இறந்த கருஞ் சிறுத்தை
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையில் கொரனோவால் 11 பேர் பலி

                                  இலங்கையில் கொரனோவால் 11 பேர் பலி

                                  இலங்கையில் பறவை வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை பதினொரு பேர் பலியாகியுள்ளனர் .இவ்வாறு

                                  பலியானவர்களது சடலங்கள் உரிய முறை பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்ய பட்டுள்ளன

                                  மேலும் இந்த நோயானது பரவாது தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்ட நிலையில் புதிதாக 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்

                                      இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்ட நிலையில் புதிதாக 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்

                                      இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்சிக்கி

                                      கடந்த தினம் பத்து பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதரஅமைச்சு அறிவித்துள்ளது

                                      மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் என சந்தேகிக்க பட்டு

                                      தனிமை படுத்த பட்ட பலர் ,நோயின்றி குணமடைந்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்ட வண்ணம் உள்ளனர்

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          துப்பாக்கியுடன் இளம் பெண் கைது – விசாரணைகள் தீவிரம்

                                          துப்பாக்கியுடன் இளம் பெண் கைது – விசாரணைகள் தீவிரம்

                                          இலங்கை சிலாபத்துறை பகுதியில் இளம் பெண் ஒருவர் துப்பாக்கி

                                          ஒன்றை மாறுது வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்ய பட்டுளளார்

                                          அவரிடம் இருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்ய பட்டுள்ளது ,தொடர்ந்து இதுகுறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              தேர்தலை நடத்த அவசர படும் – கோத்தபாய

                                              தேர்தலை நடத்த அவசர படும் – கோத்தபாய

                                              சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள்

                                              ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

                                              தேர்தலை தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது. எனினும், சுகாதார நிலைமைகள்

                                              சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திரு தேஷப்பிரிய தெரிவித்தார்.

                                              ஜுன் மாதம் 1ஆம் திகதியான இன்றைய வாக்காளர் தினம் தொடர்பாகவும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது

                                              தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு:

                                              1980 அம் ஆண்டு இலக்க 44 வாக்காளர்களை பதிவு செய்தல் சட்டத்தின் கீழ் இலங்கையில் வாக்குரிமையாளர் ஆவதற்கு

                                              தகுதிகளைக் கொண்டவர்கள் பதிவு செய்யப்படுவார்கள். இந்த சட்டத்திற்கு அமைவாக குறிப்பிட்ட தினத்தில் 18 வயதை பூர்த்தி

                                              செய்தல், ஏதாவது ஒருமுகவரியில் பதிவை கொண்டிருத்தல், இலங்கை பிரஜைக்கான ஏனைய தகுதி நீக்கங்களுக்கு

                                              உட்படாதவராக இருந்தால் வாக்காளராக பதிவு செய்வதற்கு தகுதியுண்டு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

                                              இதில் குறிப்பிட்ட திகதி; ஜுன் மாதம் 1ஆம் திகதி என்பதினால் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் முதலாம் திகதி வாக்காளர்களின் தினமாக பெயரிடப்பட்டு தொடர்ச்சியாக வைபவ ரீதியாக

                                              கொண்டாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் வாக்காளராவதன் முக்கியத்துவம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக பல்வெறு

                                              வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
                                              இருப்பினும் துரதிஷ்டவசமாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலினால் அந்த வருடத்தில் ஜுன் மாதம்

                                              1ஆம் திகதியன்று இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு முடியாமல் போனது. இதே போன்று இந்த வருடத்தில் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட ஊழுஏஐனு 19 தொற்று பரவவதை

                                              கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக இம்முறையும் இந்த வைபவத்தை

                                              கொண்டாடுவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முடியாமற்போனது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தி;ல் வாக்காளர்

                                              பட்டியலில் பெயர் உள்வாங்கப்பட்டால் மாத்திரமே உங்களுக்கு வாக்களிப்பதற்கு உரிமை கிட்டும் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

                                              பாராளுமன்றம் பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அவர்களினால் தெரிவிக்கப்பட்ட கருத்து

                                              பாராளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பில் பெரும்பாலானோர் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்கின்றனர். நாம் தற்பொழுது அதாவது தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதி

                                              சட்டத்தரணியூடாக கௌரவ உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளோம். ஜுன் மாதம் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்ற விடயத்தை. தேர்தலை நடத்தவதற்கு பொருத்தமான

                                              தினத்தை குறிப்பிடுவதில் சட்ட ரீதியிலான தடை ஏற்படாவிட்டால் தேர்தல் ஆணைக்குழு இதற்காக வேறொரு தினத்தை குறிப்பிடும்.

                                              சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளுக்கு அமைவாக முடிந்தவரையில் தேர்தலை நடத்துவதே ஆணைக்குழுவின் விருப்பமாகும். இந்த தேர்தலை தொடர்ச்சியாக ஒத்திவைக்கும்

                                              தேவை. தேர்தல் ஆணைக்குழுவிற்கு இல்லை. ஜனநாயக நாட்டில் பொதுமக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றமொன்று இடம்பெற வேண்டும் என்பது

                                              அத்தியாவசியமாகும் என்பதை ஆணைக்குழு மிகவும் ஆணித்தரமாக நம்புகின்றது. இதன் மூலம் நாம் இப்பொழுது

                                              மேற்கொண்டு வரும் அரசியல் யாப்பு பணிகளை அவ்வாறே மேற்கொள்ளுவோம்.

                                              தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்ப செயற்பாடுகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை நாம் சுகாதார பணியாளர் சபை உறுப்பினர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த

                                              எதிர்பார்த்துள்ளோம். என்பதினால் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு கூடுதலான காலம் தேவையாகவுள்ளது. ஜுன் மாதம் 2ஆம்

                                              வாரத்தில் இறுதியளவில் 3ஆம் வாரம் மத்திய பகுதியில் இவற்றை பூர்த்தி செய் முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். சட்ட ரீதியிலான தடை ஏற்படாமல் இருந்தால் தேர்தலை நடத்தவதற்கு எம்மால்

                                              முடியும் சுகாதார வைத்திய ஆலோசனை தொடர்பில் எமக்கு கிடைத்த வழிகாட்டிகளுக்கு அமைவாக தேர்தலை எவ்வாறு

                                              நடத்துவது என்பது தொடர்பில் . நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.. 60 தொடக்கம் 70 நாட்கள் காலப்பகுதி தேவைப்படும். எனெனில் முன்னரிலும் பார்க்க கூடுதலான

                                              பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என்பதினாலாகும். இருப்பினும் பணியாளர் சபையினர் தங்கியிருந்து கடமைகளை மேற்கொள்ளக்கூடிய மணித்தியாலங்கள்

                                              வரையறுக்கப்பட்டிருப்பதனால் முகக்கவசத்தை அணிதல் போன்றவற்றினால் கூடுதலான காலம் தேவைப்படுகிறது. தேர்தலை நடத்துவதை தாமதப்படுத்தும் தேவை

                                              ஆணைக்குழவிற்கு இல்லை என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நாம் எதிர்பார்த்தோம் 650 தொடக்கம் 700 கோடி ரூபா செலவில் பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியுமென்று

                                              சுகாதார பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்தல் ஏனைய சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு அமைவாக உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டால் செலவு ஓரளவு

                                              அதிகரிக்கக்கூடும். இருப்பினும் இந்த அதிகரிக்கும் தொகையை திறைசேறி மூலம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                              இருப்பினும் இந்த சுகாதார நிலைமை சிறப்பாக அமைந்தால் சட்ட தடைகள் இல்லையாயின் மிக விரைவில் கூடிய விரைவாகவும் இந்த தேர்தலை நடத்துதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


                                              இதன் முழுமையான காணொளி , குரல் பதிவு கீழ்கண்ட லிங்கின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  டெங்கு நோய் பரவுவலை கட்டுப்படுத்த நடவடிக்கை – கோட்டா பணிப்பு

                                                  டெங்கு நோய் பரவுவலை கட்டுப்படுத்த நடவடிக்கை – கோட்டா பணிப்பு

                                                  மழையுடன் கூடிய காலநிலை தணிகையில் டெங்கு ஆட்கொல்லி தீவிரமாக பரவக்கூடும் என்பதால், அதனைக் கட்டுப்படுத்தத்

                                                  தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் மாகாண ஆளுநருக்கும், உள்ளுராட்சி

                                                  நிறுவனத் தலைவர்களுக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

                                                  வருடந்தோறும் மேல் மாகாணத்தில் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனங்காணப்படுவது வழக்கம். இந்த மாகாணத்திற்கு

                                                  வெளியிடங்களிலிருந்து பெருமளவு ஆட்கள் வருகிறார்கள். இவர்கள் நோய்க் காவிகளாக வெளியேறிச் செல்லலாம். எனவே,

                                                  மேல் மாகாணத்திற்கு முன்னுரிமை அளித்து, டெங்கு ஒழிப்புத் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

                                                  எதிர்காலத் திட்டங்களை வகுக்கும் நோக்கத்துடன், டெங்கு ஒழிப்பு ஜனாதிபதி செயலணியுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டார்.

                                                  இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் ஒப்பீட்டளவில் குறைவான டெங்கு நோயாளிகளே இனங்காணப்பட்டதாக சுகாதார

                                                  அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்கள். நோய் பரவுவதற்கான காரணிகளை விபரித்து, அவற்றை கட்டுப்படுத்துவதற்கான

                                                  ஆலோசனைகளையும் சுகாதார அதிகாரிகள் முன்வைத்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      புஸ்ஸல்லாவையில் காணமல் போன சிறுவன் மீட்பு பெற்றோரிடம் கையளிப்பு

                                                      புஸ்ஸல்லாவையில் காணமல் போன சிறுவன் மீட்பு
                                                      பெற்றோரிடம் கையளிப்பு

                                                      புஸ்ஸல்லாவ கலுகல்ல தோட்டத்தை சேர்ந்த எம். உமர்டீன் (வயது 10) என்ற சிறுவன் நேற்று (31) காலை 9.00 மணி முதல் காணாமல்

                                                      போய் உள்ளமை தொடர்பில் புஸ்ஸல்லாவ பொலிஸில் முறைபாடு செய்பட்டிருந்தது.

                                                      இந் நிலையில் இந்த சிறுவன் இரட்டைபாதை நீவ்பிகொக் தோட்டத்தில் இருப்பதாக தகவல் கிடைக்கபெற்று பின் சிறுவனை

                                                      பொலிஸ் விசாரணைகள் ஊடாக இன்று (01) பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு சிறுவன் வீட்டுக்கு அழைத்து செல்லபட்டுள்ளான்.

                                                      குறித்த சிறுவன் கண்டி நுவரெலியா பிரதான வீதியில் இருப்பதை கண்டு நீவ்பிகொக் தோட்டத்தை சேர்ந்த நல்லுள்ளம் படைத்த

                                                      ஒருவர் தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். பெற்றோர்கள் தொடர்பிலான விடயங்களை சிறுவனிடம் கேட்ட பொழுது

                                                      முன்னுக்கு பின் முரனான தகவல்களை வழங்கியதால் சிறுவனை உரியவர்களிடம் ஒப்படைக்க கால தாமதம் ஏற்பட்டு உள்ளது இந்த சிறுவன் தனது ஊர் பொகவந்தலாவ என்றும் கூறியுள்ளார்.

                                                      எது எவ்வாறாயினும் சிறுவனை பாதுகாத்து பெற்றோர்களிடம் ஒப்படைக்க எடுத்த முயற்சி பாராட்ட வேண்டிய ஒன்றாகும்.

                                                      புஸ்ஸல்லாவையில் காணமல்
                                                      புஸ்ஸல்லாவையில் காணமல்
                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          மலையக அரசியல்வாதிகளே அறிக்கை வேண்டாம் செயலே வேண்டும்.

                                                          மலையக அரசியல்வாதிகளே அறிக்கை வேண்டாம் செயலே வேண்டும்.

                                                          எமாற்ற நினைத்தால் ஏமாந்து போய் விடுவீர்கள்…..

                                                          ஊடகவியலாளர் என்ற வகையில் மலையக அரசியல் தொடர்பில் சில கருத்துகளை முன் வைக்கலாம் என நினைக்கின்றேன் (பா.திருஞானம் – 0777375053)

                                                          தற்போது மலையகத்திற்கு தேவை பழிவாங்கும் அரசியல் அல்ல. நான் பெரிதா நீ பெரிதா என்று போட்டி போடும் அரசியலும் அல்ல

                                                          இவ்வாறான அரசியல் காரணமாக பாதிக்கபட்டது மலையக பெருந்தோட்ட மக்களே இதை நான் அனுபவ ரீதியாக உணர்ந்தவன்.

                                                          தற்போது மலையகத்தில் அரசியலில் இடைவெளி ஒன்று உருவாகி உள்ளது. மக்களின் நாடி துடிப்பில் சில சலசலப்பு காணப்படுகின்றது.

                                                          இந்த நாடியை சரியாக பிடித்து அரசியல் செய்பவர்களே பொருத்தமாணவர்களாவர். நான் சொல்லுவது தான் சரி நான்

                                                          சொல்வதை தான் கேட்க வேண்டும் என்றும் நானே தலைவன் நான் பெற்றி பெற்றுவிட்டேன் என்று என்ணினால் அது பகல் கனவாகவே இருக்கும்.

                                                          தற்போது மலையகத்தில் படித்தவர்கள் இருக்கின்றார்கள் இவர்களை ஏமாற்ற முடியாது. தொழிலாளர்கள் கூட எல்லா

                                                          விடயங்களும் தெரிந்தவர்களாகவே இருக்கின்றார்கள். இதை எல்லாம் விட இளைஞர்கள் துடிப்பாகவும் விபரமாகவும் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

                                                          ஆரம்பத்தில் சில அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றியவர்களாகவும் பொய் வாக்குறுதிகளை கூறி ஏமாற்றியவர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

                                                          தற்போது மக்கள் இதற்கு பதில் கொடுக்கும் அளவிற்கும்.முன்னேறி உள்ளனர். ஊடகங்களில் அறிக்கை கொடுத்து விட்டால் தான் சரி என்று சொல்பவர்களும் முகபுத்தக அரசியல் செய்பவர்களே

                                                          அதிகமாக இருக்கின்றனர். வாக்காளர்கள் எல்லாவற்றையும் கவனமாக பார்த்து வருகின்றனர் சில முடிவுகளையும் முன் கூட்டியே எடுத்தும் விட்டனர்.

                                                          அதேபோல் மலையகத்தில் ஊடகத்துறையும் திறமாக செயற்பட்டு வருகின்றது. இந் நிலையில் சிந்தித்து செயற்பட வேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும்.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களை மத்தள விமான நிலையம் மூலமாக அனுப்பிட முடிவு

                                                              வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களை மத்தள விமான நிலையம் மூலமாக அனுப்பிட முடிவு

                                                              வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வோரில் அதிகமானவர்களை எதிர்காலத்தில் மத்தள விமான நிலையம்

                                                              மூலமாக அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்தார்.

                                                              கொரியாவில் வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டு விடுமுறைக்காக தாய்நாட்டுக்கு வந்த பணியாளர்கள் விடுமுறை முடிந்த நிலையில்

                                                              மீண்டும் நேற்று கொரியா நோக்கி செல்வதற்காக மத்தள விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் அவர்கள் மத்தியில் பணியகத்தின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

                                                              வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை மீள புத்துயிரூட்டும் வகையில் பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பில்

                                                              ஈடுபடுத்துவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக அமைச்சர் தினேஷ் குணவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.

                                                              அமைச்சர் வழங்கியுள்ள வழிகாட்டுதலுக்கு இணங்கவே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஒரு தொகுதியினர் நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர்.

                                                              தென்கொரியாவில் தொழிலில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் விடுமுறைக்காக தாய்நாட்டுக்கு வந்திருந்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் உரிய தினத்தில்

                                                              மீண்டும் தென் கொரியாவுக்கு செல்லமுடியாத நிலை காணப்பட்டது. அவர்களை மீண்டும் தமது தொழில் தளங்களுக்கு

                                                              அனுப்பிவைக்கும் வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாகவே நேற்று அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

                                                              இந்த நிலையில் அவர்கள் அந்த நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தொழில்களில்

                                                              ஈடுபடுவர். அதற்கான ஏற்பாடுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் கொரிய நாட்டின் மனித வள அபிவிருத்தி நிறுவனமும் இணைந்து முன்னெடுத்துள்ளன.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  இஸ்ரேல் அமைப்பினால் கடற்படைக்கு பாதுகாப்பு மருத்துவ உடைகள் நன்கொடை

                                                                  இஸ்ரேல் அமைப்பினால் கடற்படைக்கு பாதுகாப்பு மருத்துவ உடைகள் நன்கொடை

                                                                  நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு

                                                                  தேவையான பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் கட்டுநாயக்க ஹெலசரண இஸ்ரேல் அமைப்பு மூலம் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

                                                                  நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில்

                                                                  கடற்படை தொடர்ச்சியான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. மேலும்,

                                                                  இந்த தகுதியான காரணத்தை பல்வேறு நபர்கள் பொருள் உதவிகளை வழங்குவதன் மூலம் ஆதரிக்கின்றன.

                                                                  அதன் படி கடந்த மே 30 ஆம் திகதி கட்டுநாயக்க ஹெலசரண இஸ்ரேல் அமைப்பு மூலம் கடற்படைக்கு பல பாதுகாப்பு மருத்துவ

                                                                  உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்காக அமைப்பின்

                                                                  துணைத் தலைவர் திருமதி மெடில்டா சில்வா உட்பட சில உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

                                                                  கடற்படைத் தளபதி குறித்த பொருட்களை ஏற்றுக்கொண்டு, ஹெலசரண

                                                                  இஸ்ரேல் அமைப்பின் அனைத்து நபர்களுக்கும் கடற்படை சார்பில் தனது நன்றியைத் தெரிவித்தார்.

                                                                  இஸ்ரேல் அமைப்பினால்
                                                                  இஸ்ரேல் அமைப்பினால்
                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

                                                                      நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

                                                                      கொரோனா தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகுசேவைகள் இன்றிலிருந்து வழமைக்குத்

                                                                      திரும்பவுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்தியசோதி அறிவித்துள்ளார்.

                                                                      நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான படகு சேவைகள் வழமைபோன்று இடம்பெறும். வட.தாரகை காலை 8 மணிக்கு

                                                                      குறிகாட்டுவானிலிருந்து நெடுந்தீவு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மீண்டும் குறிகாட்டுவானை வந்தடையும் என தெரிவித்த பிரதேச

                                                                      செயலாளர், ஏனைய படகு சேவைகளும் வழமைபோன்று சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

                                                                      மேலும் கொரனோ தொற்று காரணமாக சமூக இடைவெளியை பேணியே பொதுமக்கள் படகுகளில் பயணிக்க வேண்டியுள்ளதன்

                                                                      காரணமாக மேலதிக படகு சேவைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக சத்தியசோதி சுட்டிக்காட்டினார். தற்போது

                                                                      நெடுந்தீவு பகுதிக்கு பொது மக்களின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக மேலதிக படகுசேவை நெடுந்தீவில் இருந்து

                                                                      குறிகட்டுவான் வரை சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

                                                                      குமுதினி, வட தாரகை போன்றவை வழமை போன்று தமது சேவையில் ஈடுபடும் எனவும் சமூக இடைவெளி பேணப்படுவதன்

                                                                      காரணமாக மேலதிக படகு சேவையும் இடம்பெறவுள்ளதாகவும் சத்தியசோதி மேலும் தெரிவித்துள்ளார்.

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          ரயில் பயணங்களை இன்று முதல் அதிகரிக்க நடவடிக்கை

                                                                          ரயில் பயணங்களை இன்று முதல் அதிகரிக்க நடவடிக்கை

                                                                          இலங்கை போக்கவரத்துச் சபை சேவையில் ஈடுபடுத்தும் பஸ் வண்டிகளை இன்று தொடக்கம் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

                                                                          இதன் போது மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு முக்கியத்துவம்

                                                                          வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்தார்.

                                                                          இதேவேளை, ரயில் பயணங்களையும் இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக

                                                                          ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று 33 ரயில் பயணங்களை

                                                                          முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த கூறினார்.

                                                                          நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவையினை

                                                                          வழமை போன்று முன்னெடுப்பது அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                              ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்

                                                                              ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்

                                                                              இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்; தலைவரும் அமைச்சருமான அமர்ர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் 05.55 மணியளவில் நோர்வூட்

                                                                              சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் அக்கினியில் சங்கமமாகியது. கடந்த 26 ஆம் திகதி காலமான அமைச்சர்

                                                                              ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அன்னாரது பத்தரமுல்ல இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர் கொழும்பு ஜயரட்ன மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு

                                                                              பாராளுமன்றத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் இ.தொ.க வின் தலைமை அலுவலக சௌமிய பவனில் வைக்கப்பட்டு அதனையடுத்து அவரது சொந்த ஊரான

                                                                              வௌண்டனுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நுவரெலியா, தலவாக்கலை ஊடாக கொட்டக்கலைக்கு கொண்டுவரப்பட்டு இ.தொ.கவின்

                                                                              தொழில்பயிற்சி நிலையமான CFL இல் இன்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிக்கிரியைகள் நடைபெற்ற நோர்வூட் மைதானத்துகுள் குறிப்பிட்ட

                                                                              எண்ணிக்கையிலானோரேஅனுமதிக்கப்பட்டிருந்ததால் மைதானத்துக்கு வெளியில் தேயிலை மலைகளில் இருந்தும், சமூகவலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடாக

                                                                              தோட்டங்களில் இருந்தும் தமது தலைவரின் இறுதி பயணத்தை கண்ணுற்றனர். இன்று பிற்பகல் கொட்டகலையிலிருந்து அட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான்

                                                                              விளையாட்டு அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இரு மருங்கிலும் சுகாதார இடைவெளியை பேணி நின்று

                                                                              மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலித்தினர். இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்

                                                                              உரையாற்றினார்.அதன்பின்னர் மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான மகாநாயக்க தேரர், இந்து மதகுரு, இஸ்லாம் மௌலவி, அருட்தந்தை ஆகியோர் ஆன்மீக உரை நிகழ்த்தினர்.

                                                                              அனைத்து இன மக்களுக்கும் பாகுபாடின்றி சேவையாற்றிய தலைவர் எனவும் பாராட்டினர். சர்வமத தலைவர்களின் உரைகள் முடிவடைந்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்

                                                                              அனுதாப செய்தி மும்மொழிகளிலும் வாசிக்கப்பட்டது. ஜனாதிபதியின் ஆனுதாப செய்தி, மத்திய மாகாண ஆளுநரால் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர் ஜீவன்

                                                                              தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது. அதன்பின்னர் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அனுதாப உரை இடம்பெற்றது. அமரர். ஆறுமுகன் தொண்டமானின் அரசியல்

                                                                              பயணத்தை பாராட்டிய பிரதமர், இறுதி சந்திப்பின்போது தன்னிடம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து

                                                                              பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இரங்கல் உரையாற்றினார். நுவரெலியா மாவட்டத்திலுள்ள

                                                                              எதிர்க்கட்சிகளின் சார்பில் நவீன் திஸாநாயக்க அனுதாப உரையாற்றினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உட்பட ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியின் சார்பில் பாராளுமன்ற

                                                                              உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே உரையாற்றினார். ஆறுமுகன் தொண்டமானின் குடும்பத்தின் சார்பில் ஜீவன் தொண்டமான் நன்றியுரை ஆற்றினார். நுவரெலியா

                                                                              மாவட்டத்திலுள்ள அனைத்து நகரங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

                                                                              ஆறுமுகன் தொண்டமானின்
                                                                              ஆறுமுகன் தொண்டமானின்