Posted in இலங்கை செய்திகள்

தீவக மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு இந்தியா உதவி

தீவக மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு இந்தியா உதவி

தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிளுக்கும் அமைச்சர் டக்ளஸ்

தேவானந்தாவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சரினால் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது. மேலும்,

இந்திய நிதியுதவியுடன் ஆரோ பிளான்ட் திட்டத்தின் ஊடாக தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சரவை

பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அமைச்சரவை அங்கீகாரத்துடன் குறித்த பிரச்சினையை தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு

வரப்பட்ட நிலையில், அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த கூட்டத்திற்கு

அமைச்சரினால் அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு

அமைச்சரனால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழ் கொழும்பு புகையிரத சேவை இன்று ஆரம்பம்

      யாழ் கொழும்பு புகையிரத சேவை இன்று ஆரம்பம்

      நாட்டில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுருந்ததன்

      காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

      இன்றிலிருந்து யாழ்ப்பாணம் கொழும்பு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5.45 மணிக்கு

      கொழும்பிற்கான முதலாவது சேவையும் இரண்டாவது சேவை 9. 45 மணிக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

      எனினும் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய

      ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது புகையிர நிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை

      மேற்கொள்ளப்பட்ட பின்னர் பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.

          Posted in இலங்கை செய்திகள்

          களனிவௌி ரயில் பாதையில் போக்குவரத்து தாமதம்

          களனிவௌி ரயில் பாதையில் போக்குவரத்து தாமதம்

          களனிவௌி ரயில் பாதையில் கொடகம ரயில் நிலையத்திற்கு அருகில்

          மரமொன்று உடைந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக ரயில் தாமதம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

          இதன் காரணமாக இன்று காலை குறித்த பாதையில் பயணிக்கவிருந்த சில ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

          கொடகம பிரதேசத்தை ஊடருத்து இன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் மரமொன்று ரயில் பாதையின் மீது உடைந்து வீழ்ந்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

              Posted in இலங்கை செய்திகள்

              கோயிலுக்குள் உடுப்பு காய போட்ட ஐயர் – கொதிக்கும் மக்கள்

              கோயிலுக்குள் உடுப்பு காய போட்ட ஐயர் – கொதிக்கும் மக்கள்

              இந்த இறம்பொடை சின்மயா மிஷன் வளாகத்தில் ஸ்ரீ பக்த அனுமந்த கோவிலும் பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரின்

              வணக்கஸ்தலமும் இருக்கின்றது இந்த வணக்கஸ்லதத்திலேயே உடைகள் கழுவி காய போடப்பட்டுள்ளன. இது மூடி வைக்கும்

              ஓதுக்கப்பட்ட மண்டபம் கிடையாது பூஜைக்குறிய இடமாகும். உடைகள் கழுவி காய போடும் இடமல்ல. ஸ்ரீ பக்த அனுமந்த

              ஆலயத்தில் எந்தவிதமான பிரச்சனைகளும் தற்போதைக்கு இல்லை என்பது குறிப்பிடதக்கது.

              பணம் படைத்தவர்களின் சர்வாதிகார செயற்பாடுகள் மூலம் இலங்கையில் முன்னெடுக்கபட்டு வரும் சின்மயா மிஷன் ஆன்மீகம்

              என்ற போர்வையில் மலையகத்தில் சீரழிவான செயற்பாடுகளில் செயற்பட்டு வருகின்றது.

              பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரால் ஆன்மீக நிறுவனமான சின்மயா மிஷன் உயர்ந்த ஆன்மீக நோக்கங்களுடன் உலகம்

              முழுவதும் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் வேதாந்தத்தின் ஊடாக மக்களிடம் அமைதியையும் சந்தோஷத்தையும் சேவையின் ஊடாக பரப்புதலை கொள்கையாக கொண்ட நிறுவனமாகும்

              இருந்தும் இலங்கை மத்திய மலைநாட்டில் இறம்பொடையில் அமைந்துள்ள இந்த சின்மயா மிஷன் நிர்வாக தலைவர் உட்பட

              உறுப்பினர்கள் கொள்கைகளை மறந்து புறம்பான வியாபார நோக்கில் செய்பட்டு வருகின்றனர்.ஆரம்பத்தில் சின்மயா மிஷன்

              மலையக மக்களின் நிலை கண்டு சேவை செய்யவே வந்தது. தற்போது முற்றிலும் வேறுபட்ட விதத்தில் செயற்படுகின்றது.

              மலையக மக்களுக்காக பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரால் உறுவாக்கபட்ட இந்த ஆச்சிரமம் மலையக

              பெருந்தோட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய சமய கலாசார விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் ஆகும். இந்த விடயம் இங்கு நடைபெறுவதில்லை.

              இந்த மிஷனில் சேவை செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் மலையகத்தை சேர்ந்த இரண்டு பிரமசாரிகளும் ஒரு

              பிரம்மசாரினியும் இந்தியா சென்று கற்று பயிற்சி பெற்று இலங்கை வந்துள்ளனர். இவர்களையும் இங்கு சேவை செய்ய விடுவதில்லை.

              ஒருவர் கண்டியிலும் ஒருவர் ஹட்டனிலும் வீட்டில் இருக்கின்றனர். நிர்வாகம் முழுவதும் ஒரு கம்பனி நிர்வாகம் போல் வியாபாரத்தை

              நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இந்த பயிற்றப்பட்ட பிரமசாரிகள் மலையக மக்களுக்கு சேவை செய்ய எத்தனித்த போதும் அதற்கான எந்தவிதமான ஒத்துழைப்பும் மிஷனில் இல்லை.

              தற்போது உள்ள நிர்வாகம் தமிழ் மக்களிடையே ஒரு பிரதேசவாத்துடனயே அன்மை காலமாக செயற்பட்டு வருகின்றது.

              மிஷனிலும் மிஷன் வளாகத்தில் காணப்படும் ஸ்ரீ பக்த அனுமந்த ஆலயத்திலும் வேலை செய்வதற்கு மாத்திரமே மலையகத்தில் இருந்து எடுத்துள்ளனர்.

              மலையகத்தின் பிரமசாரியானவர்களையும் மிஷனின் மலையக ஆயுட்கால உறுப்பினர்களையும் ஒதுக்கி வைத்துள்ளனர்.

              இவர்களை எந்தவிதமான நிர்வாக செயற்பாடுகளுக்கோ சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கோ இணைத்துக் கொள்வதில்லை.

              இது பிரதேசவாதம் என்பதை பறைசாட்டுகின்றது. இந்த விடயம் குறித்து உலக சின்மயா மிஷன் தலைவர் இலங்கை வந்திருந்த போது முறையிடப்பட்டாலும் இது வரை எந்த முடிவும் இல்லை.

              குறிப்பாக இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீ பக்த அனுமந்த ஆலயம் அமைப்பதற்கு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின்

              பங்கும் மலைய பெருந்தோட்ட மக்களின் பங்கும் அதிகமாகவே இருந்துள்ளது. இது குறித்து சின்மயா மிஷன் நிர்வாகத்திற்கு தெரியாது போலாகும். இது மலையத்தின் சொத்து.

              இவ்வாறான நிலையில் இறம்பொடையில் அமைந்துள்ள இந்த சின்மயா மிஷனில்; தற்போது வியாபாரமே நடந்து வருகின்றது.

              ஹோட்டல் இருக்கின்றது அறைகள் இருக்கின்றது. வருகின்றனவர்கள் நன்கு உண்டுவிட்டு தங்கிவிட்டு செல்லலாம்.

              அதுமட்டுமல்ல இங்கு பல சமூக சீர்கேடுகளும் பிரதேசவாத செயற்பாடுகளும் இந்த வளாகத்தில் நாளாந்தம் செயற்பட்டு

              வருகின்றது. இது ஒரு சமய அமைப்பு என்பதால் எதனையும் கூற முடியாது. இருந்தும் எல்லையை மீறியதினால் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளோம். மன்னிக்கவும்

              இங்கு பஜன் செய்வதற்கு என அமைக்கபட்ட பிரதான மண்டபத்தில் தற்போது ஊழியர்கள் உடுப்பு காயப்போடும் இடமாக மாறியுள்ளது. இந்த இடத்திற்கு செல்பவர்கள் மிகவும் பயபக்தியுடனே செல்லுவர்.

              இந்த இடத்திலேயே பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தர் குருஜியின் அவர்களின் படங்கள் இருகின்றன. இவருக்கே மறியாதை இல்லை என்றால் மலையக மக்களுக்கு எங்கே இருக்க

              போகின்றது. இந்த விடயம் தொடர்பில் நிர்வாகத்துடன் வினாவுவதற்கு முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை. அவர்கள் தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளனர்.

              இந் நிலையில் இந்த விடயம் குறித்தும் மலையகத்தில் ஆன்மீகம் என்ற போர்வையில் சீரழிக்கபட்டு வரும் செயற்பாட்டு குறித்தும்

              ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர மலையகத்தின் சமூக அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இந்த விடயம் குறித்த

              இந்தியாவில் அமைந்துள்ள சின்மயா மிஷனின் தலைமைய அலுவலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  கொழும்பு யாழ் ரயில் சேவைகள் ஆரம்பம்

                  கொழும்பு யாழ் ரயில் சேவைகள் ஆரம்பம்

                  சில ரயில்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து ரயில்களும் நேர அட்டவணைக்கு அமைவாக இன்று தொடக்கம் சேவையில்

                  ஈடுபடுத்தப்படம் என்று ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வி , ஏ.சி பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

                  திங்கட்கிழமையன்று பொலநறுவை ரயில் நிலையத்திற்கும் கொழம்பு கோட்டைக்குமிடையில் சேவையில் ஈடுபடும் புளத்திசி

                  ரயிலும் யாழ்பானத்திற்கும் கோட்டைக்கும் இடையிலான நகரங்களுக்கிடையிலான ரயிலும் சேவையில் இடம்பெறாது.

                  இதேபோன்று தேநுவர மெனிக்கே என்ற ரயிலும் காலை 7.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கும் பிற்பகல்

                  3.30 மணிக்கு கோட்டைக்குமாக சேவையில் ஈடுபடும் ரயில் மாத்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை சேவையில் ஈடுபடமாட்டா.

                  திங்கட்கிழமை தொடக்கம் பெலியத்த ரயில் நிலையத்திலிருந்து காலை 4.30க்கு சேவையில் ஈடுபடும் தெற்கு அதிவேக

                  நகரங்களுக்கிடையிலான ரயிலும் இந்த ரயில் நியைத்தில் இருந்து காலை 4.40க்கு மருதானை ரயில் நிலையத்திற்கிடையில்

                  சேவையில் ஈடுபடும். மாத்தறை ரயில் நிலையத்தில் அதிகாலை 3.15 மணிக்கும் காலி ரயில் நிலையத்தில் காலை 5.20மணிக்கும்

                  ஹிக்கடுவ ரயில் நிலையம் வரையிலும் 5.20 மணிக்கு மருதானை வரையிலும் ரயில் சேவையில் ஈடுபடும்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு

                      ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு

                      ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து

                      942 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

                      கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல்

                      சட்டத்திற்கமைய நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

                      கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மாலை 6 மணிமுதல் நாடளாவிய ரீதியில்

                      ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்ததுடன் கடந்த மே மாதம் 11ஆம் திகதிமுதல்

                      ஊரடங்கு தளர்த்தப்பட்டு குறிப்பிட்ட காலப் பகுதிக்கு மாத்திரம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

                      இந்நிலையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில்

                      70 ஆயிரத்து 272 பேர் கைது செய்யப்பட்டதுடன் இவர்களிடமிருந்து 19 ஆயிரத்து

                      952 வாயனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கை இராணுவத்தில் 98 பேர் -திடீர் பதவி உயர்வு

                          இலங்கை இராணுவத்தில் 98 பேர் -திடீர் பதவி உயர்வு

                          இலங்கை இராணுவத்தில் 92 பேர் திடீரென பதவி உயர்ரத்த பட்டுள்ளனர்

                          .கோட்டபாய ஆட்சியில் அமர்ந்ததன் பின்னர் திடீரென இராணுவத்தினர்

                          பதவி உயர்வுகள் அதிகரிக்க பட்டு இராணுவம் புதிய நகர்வுக்கு தயார் படுத்த பட்டு வருகிறது

                          61 கப்டன் தர அதிகாரிகள் மேயர்களாகவும் .19 மேயர், லெப்டினன் கேணலாகவும் 14 லெப்டினன் கேணல் ,கேணல்களாகவும் 4 லெப்டினன் கேணல் brevet Colonel ளாகவும் பதவி உயர்ரத்த பட்டுள்ளனர்

                              Posted in இலங்கை செய்திகள்

                              கவிழ்ந்த பேரூந்து – தப்பிய பயணிகள்

                              ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரொசல்ல சந்தியில் தனியார்

                              பயணிகள் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

                              டெம்பஸ்டோ ஹைட்றியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த

                              சிட்டிரைடர் ரக பஸ் இன்று (06) பிற்பகல் 2.15 மணியளவில் விபத்துக்குள்ளனது.

                              டெம்பஸ்டோவிலிருந்து பயணிகளை ஏற்றிவந்த பஸ் ரொசல்ல சந்தியில் ஹட்டன் பிரதான வீதிக்குள்ள நுழைய முற்பட்ட போது

                              சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பின்நோக்கி சென்று குடைசாந்துள்ளது.

                              கவிழ்ந்த பேரூந்து
                              கவிழ்ந்த பேரூந்து
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  லண்டனில் சிக்கிய 278 இலங்கையர் நாடு திரும்பினார்

                                  பிரித்தானியாவில் சிக்கியிருந்த மேலும் 278 இலங்கையர்கள் இன்று (07) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

                                  இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.504 இலக்க

                                  விசேட விமானத்தில் அதிகாலை 2.51 க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

                                  அவர்கள் அனைவரும் லண்டனின் இத்ரோ விமான நிலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

                                  விமானத்தில் வருகைத்தந்தவர்கள், விமான பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும்

                                  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

                                  இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் கிடைக்கும்

                                  வரை அவர்கள் அனைவரும் விமான நிலைய வளாகத்தில் உள்ள 4 விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையை 1814 பேர் கொரனோவால் பாதிப்பு

                                      இலங்கையை 1814 பேர் கொரனோவால் பாதிப்பு

                                      COVID 19 (கொரோனா) தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1814 ஆக அதிகரித்துள்ளது.

                                      COVID 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான இலங்கையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

                                      பரம்பலின் தரவுகள் புதுப்பிக்கப்பட்டது 2020-06-07 07:54:58

                                      1814
                                      உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்,912
                                      சிகிச்சை பெறும் நோயாளிகள்,0
                                      புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

                                      891
                                      குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை,11
                                      இறப்பு எண்ணிக்கை

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று இடம்பெறவுள்ளது.

                                          2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று இடம்பெறவுள்ளது.

                                          காலி மாவட்டத்தில் அம்பலாங்கொடை பிரதேச செயலகப்பிரிவில் தெரிவு

                                          செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவில் இன்று (07) இந்த ஒத்திகை வாக்களிப்பு நடைபெறுகிறது.

                                          சுகாதார சேவைகள் பணிப்பாளர நாயகத்தால் வழங்கப்பட்டுள்ள சுகாதார

                                          வழிகாட்டுதல்களுக்கு அமைவாக புதிய வழிகாட்டலுக்கு அமைவாக

                                          வாக்களிப்பு நிலைமை தொடர்பில் தெளிவை பெற்றுக் கொள்வதே இதன் நோக்கமாகும்.

                                          இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தேர்தல்கள் திணைக்கள ஆணையாளர்

                                          நாயகம் சமன் ஸ்ரீ ரட்நாயக்க, புதிய வழி முறையில் ஒரு வாக்காளர் ஒருவருக்கு

                                          வாக்களிப்பதற்கான காலத்தை மதிப்பீடு செய்வது தொடர்பில் தெளிவை பெற்றுக்கொள்வதே இதன் நோக்கம் என்று தெரிவித்தார்

                                              .

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் அளிக்கின்றார் !

                                              மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் அளிக்கின்றார் !

                                              நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் இணையவழி

                                              நேரலை ‘மக்கள் அரங்கம்’ நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளது.

                                              June 6 , 2020 சனிக்கிழமை நேரம் ( time : USA NY : 12h pm / UK 5h pm / EU 6h pm) நா.தமிழீழ அரசாங்கத்தின் சமூகவலைத்தளத்தில்

                                              https://www.facebook.com/tgteofficial நேரலையாக வர இருப்பதோடு, Facebook நேரலையில் இணைந்து கொண்டுள்ள மட்டுமல்ல,

                                              முன்னராகவே கேள்விகளை பதிவிட்டுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நேரலை நிகழ்ச்சியினை நாடுகடந்த

                                              தமிழீழ அரசாங்கத்தின் http://tgte.tv/ வலைக்காட்சி மூலமும் சமநேரத்தில் காணலாம்.

                                              நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயல்வழிப்பாதை, சமகால அரசியல், உலக அரசியல் என்று ஆரோக்கியமான கேள்விகளை நோக்கி நேரலை காத்திருக்கின்றது.

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  இலங்கையின் மலையகத்தில் சின்மாய மிஷன் ஆன்மீகத்தை சீரழிக்கின்றது

                                                  இலங்கையின் மலையகத்தில்
                                                  சின்மாய மிஷன் ஆன்மீகத்தை சீரழிக்கின்றது

                                                  பணம் படைத்தவர்களின் சர்வாதிகார செயற்பாடுகள் மூலம் இலங்கையில் முன்னெடுக்கபட்டு வரும் சின்மயா மிஷன் ஆன்மீகம்

                                                  என்ற போர்வையில் மலையகத்தில் சீரழிவான செயற்பாடுகளில் செயற்பட்டு வருகின்றது.

                                                  பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரால் ஆன்மீக நிறுவனமான சின்மயா மிஷன் உயர்ந்த ஆன்மீக நோக்கங்களுடன் உலகம் முழுவதும் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனம் வேதாந்தத்தின்

                                                  ஊடாக மக்களிடம் அமைதியையும் சந்தோஷத்தையும் சேவையின் ஊடாக பரப்புதலை கொள்கையாக கொண்ட நிறுவனமாகும்
                                                  இருந்தும் இலங்கை மத்திய மலைநாட்டில் இறம்பொடையில்

                                                  அமைந்துள்ள இந்த சின்மயா மிஷன் நிர்வாக தலைவர் உட்பட உறுப்பினர்கள் கொள்கைகளை மறந்து புறம்பான வியாபார

                                                  நோக்கில் செய்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் சின்மயா மிஷன் மலையக மக்களின் நிலை கண்டு சேவை செய்யவே வந்தது. தற்போது முற்றிலும் வேறுபட்ட விதத்தில் செயற்படுகின்றது.

                                                  மலையக மக்களுக்காக பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தரால் உறுவாக்கபட்ட இந்த ஆச்சிரமம் மலையக

                                                  பெருந்தோட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய சமய கலாசார விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் ஆகும். இந்த விடயம் இங்கு நடைபெறுவதில்லை.

                                                  இந்த மிஷனில் சேவை செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் மலையகத்தை சேர்ந்த இரண்டு பிரமசாரிகளும் ஒரு பிரம்மசாரினியும் இந்தியா சென்று கற்று பயிற்சி பெற்று இலங்கை

                                                  வந்துள்ளனர். இவர்களையும் இங்கு சேவை செய்ய விடுவதில்லை. ஒருவர் கண்டியிலும் ஒருவர் ஹட்டனிலும் வீட்டில் இருக்கின்றனர்.

                                                  நிர்வாகம் முழுவதும் ஒரு கம்பனி நிர்வாகம் போல் வியாபாரத்தை நோக்காக கொண்டு செயற்பட்டு வருகின்றது. இந்த பயிற்றப்பட்ட

                                                  பிரமசாரிகள் மலையக மக்களுக்கு சேவை செய்ய எத்தனித்த போதும் அதற்கான எந்தவிதமான ஒத்துழைப்பும் மிஷனில் இல்லை.

                                                  தற்போது உள்ள நிர்வாகம் தமிழ் மக்களிடையே ஒரு பிரதேசவாத்துடனயே அன்மை காலமாக செயற்பட்டு வருகின்றது.

                                                  மிஷனிலும் மிஷன் வளாகத்தில் காணப்படும் ஸ்ரீ பக்த அனுமந்த ஆலயத்திலும் வேலை செய்வதற்கு மாத்திரமே மலையகத்தில் இருந்து எடுத்துள்ளனர்.

                                                  மலையகத்தின் பிரமசாரியானவர்களையும் மிஷனின் மலையக ஆயுட்கால உறுப்பினர்களையும் ஒதுக்கி வைத்துள்ளனர்.

                                                  இவர்களை எந்தவிதமான நிர்வாக செயற்பாடுகளுக்கோ சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளுக்கோ இணைத்துக் கொள்வதில்லை. இது பிரதேசவாதம் என்பதை பறைசாட்டுகின்றது. இந்த விடயம்

                                                  குறித்து உலக சின்மயா மிஷன் தலைவர் இலங்கை வந்திருந்த போது முறையிடப்பட்டாலும் இது வரை எந்த முடிவும் இல்லை.

                                                  குறிப்பாக இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீ பக்த அனுமந்த ஆலயம் அமைப்பதற்கு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பங்கும் மலைய பெருந்தோட்ட மக்களின் பங்கும் அதிகமாகவே

                                                  இருந்துள்ளது. இது குறித்து சின்மயா மிஷன் நிர்வாகத்திற்கு தெரியாது போலாகும். இது மலையத்தின் சொத்து.


                                                  இவ்வாறான நிலையில் இறம்பொடையில் அமைந்துள்ள இந்த சின்மயா மிஷனில்; தற்போது வியாபாரமே நடந்து வருகின்றது. ஹோட்டல் இருக்கின்றது அறைகள் இருக்கின்றது.

                                                  வருகின்றனவர்கள் நன்கு உண்டுவிட்டு தங்கிவிட்டு செல்லலாம். அதுமட்டுமல்ல இங்கு பல சமூக சீர்கேடுகளும் பிரதேசவாத செயற்பாடுகளும் இந்த வளாகத்தில் நாளாந்தம் செயற்பட்டு

                                                  வருகின்றது. இது ஒரு சமய அமைப்பு என்பதால் எதனையும் கூற முடியாது. இருந்தும் எல்லையை மீறியதினால் சுட்டிக்காட்ட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளோம். மன்னிக்கவும்


                                                  இங்கு பஜன் செய்வதற்கு என அமைக்கபட்ட பிரதான மண்டபத்தில் தற்போது ஊழியர்கள் உடுப்பு காயப்போடும் இடமாக மாறியுள்ளது. இந்த இடத்திற்கு செல்பவர்கள் மிகவும் பயபக்தியுடனே செல்லுவர்.

                                                  இந்த இடத்திலேயே பூஜைக்குரிய ஸ்ரீ சுவாமி சின்மயானந்தர் குருஜியின் அவர்களின் படங்கள் இருகின்றன. இவருக்கே

                                                  மறியாதை இல்லை என்றால் மலையக மக்களுக்கு எங்கே இருக்க போகின்றது. இந்த விடயம் தொடர்பில் நிர்வாகத்துடன்

                                                  வினாவுவதற்கு முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை. அவர்கள் தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளனர்.


                                                  இந் நிலையில் இந்த விடயம் குறித்தும் மலையகத்தில் ஆன்மீகம் என்ற போர்வையில் சீரழிக்கபட்டு வரும் செயற்பாட்டு குறித்தும்

                                                  ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வர மலையகத்தின் சமூக அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இந்த விடயம் குறித்த

                                                  இந்தியாவில் அமைந்துள்ள சின்மயா மிஷனின் தலைமைய அலுவலகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                  இலங்கையின் மலையகத்தில்சின்மாய
                                                  இலங்கையின் மலையகத்தில்சின்மாய

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      கொரானாவின் தாக்குதலில் இருந்து 443 கடற்படையினர் குணமடைந்தனர்

                                                      கொரானாவின் தாக்குதலில் இருந்து 443 கடற்படையினர் குணமடைந்தனர்

                                                      கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 17 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட

                                                      பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 04 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

                                                      கொவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக இந்த கடற்படை வீரர்கள் அனைவரும் ஹோமகம, ஐ.டி.எச், வெலிகந்த மற்றும்

                                                      மினுவங்கொடை ஆகிய வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். சிகிச்சையின் போது அவர்கள் மீது

                                                      நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் அவர்களின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பது தெரியவந்ததுடன் அவர்கள் 2020 ஜூன் 04 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

                                                      அதன்படி, இந்த 17 நபர்களும் உட்பட 443 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து

                                                      வெளியேறினர். வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் உலர் உணவு பொருட்கள்

                                                          பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராணுவத்தினரால் உலர் உணவு பொருட்கள்

                                                          இராணுவ அதிரடிப் படை சேவை வனிதையர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மாத்தளை இராணுவ அதிரடிப் படை

                                                          தலைமையகத்தின் படையினர் எல்கடுவை தோட்டத்தின் 29 வது பிரிவின் 23 ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள், உலர்

                                                          உணவு பொருட்கள் மற்றும் மரக்கறிகளை நன்கொடையாக வழங்கும் செயற்றிட்டம் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

                                                          இராணுவ அதிரடிப் படை மற்றும் இராணுவ சேவை வனிதையர் சங்க தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களின்

                                                          முன்மொழிதலுக்கு அமைவாக இராணுவ சேவை வனிதையர் சங்கம் இச் சமூகத் திட்டத்திற்கு குறுகிய அறிவித்தலுக்கு

                                                          அமைவாக இராணுவ அதிரடிப் படைத் தலைமையகத்திற்கு தேவையான வளங்களை பெற்றுக் கொடுத்தது.

                                                          நன்கொடையில் குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு போதுமானதான பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த சமூக நலத்திட்டத்தில் இராணுவ

                                                          அதிரடிப் படையின் நிலையத் தளபதி, அதிகாரிகள் மற்றும் கலந்து கொண்டனர்.

                                                          பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
                                                          பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              மர்மமாக இறந்த நிலையில் இளம் பெண் சடலமாகே மீட்பு

                                                              மர்மமாக இறந்த நிலையில் இளம் பெண் சடலமாகே மீட்பு

                                                              இலங்கை மெதகம திவியாபொல பகுதியில் மர்மமாக இறந்த

                                                              நிலையில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார்


                                                              வீடு ஒன்றுக்குள் இறந்த நிலையில் மீட்க பட்ட சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                                                              விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  கருணாவுக்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள்

                                                                  கருணாவுக்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள்

                                                                  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும்

                                                                  விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

                                                                  எதிர்வரும் தினங்களில் 2020 ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வாழ் இளைஞர்கள்

                                                                  திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான கட்டவுட்களை முக்கிய சந்திகளில் வைத்துள்ளனர்.

                                                                  அம்பாறை- கல்முனை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் எங்கும் செல்வோம் எதிலும்

                                                                  வெல்வோம் என்ற வாசகத்துடன் கப்பல் இலட்சனையுடன் கல்முனை நகர பகுதியிலுள்ள மக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

                                                                  இத்துண்டுப்பிரசுரங்களை பாண்டிருப்பு சந்தை தாளவட்டுவான் சந்தி நீலாவணை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

                                                                  எதிர்வரும் தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      அங்கொடை தேசிய தொற்று நோய்கள் -ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான புதிய கட்டிடம்

                                                                      அங்கொடை தேசிய தொற்று நோய்கள் -ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான புதிய கட்டிடம்

                                                                      அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்காக (CT

                                                                      Scanner Unit) கடற்படையின் பங்களிப்புடன் கட்டபட்ட இரண்டு மாடி கட்டிடம் 2020 ஜூன் 04 அன்று அதிகாரப்பூர்வமாக குறித்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

                                                                      கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மேலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒரு பாராட்டத்தக்க வேலையைச்

                                                                      செய்து வரும் சுகாதாரப் பணியாளர்களின் வசதிகளை மேம்படுத்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் நேரடி

                                                                      மேற்பார்வையின் கீழ் பல திட்டங்கள் கடற்படை மேற்கொண்டு வருகிறது.

                                                                      கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முதன்மை கவனிப்பை வழங்குவதில் பெரும் பங்கு வகிக்கும் அங்கொடை

                                                                      தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்திற்கு நீண்டகால தேவையாக இருந்த கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு இயந்திரம் (CT

                                                                      Scanner) சுகாதார அமைச்சகம் மூலம் வழங்க முடிவு செய்யப்பட்ட பின்னர் 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி கடற்படை

                                                                      கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான கட்டடத்தின் கட்டுமானத்தை ஆரம்பித்ததுடன் 50 நாட்களுக்குள்

                                                                      கட்டுமானத்தை முடித்து, மருத்துவ உபகரணங்களை நிறுவுவதற்காக 2020 மே 29 அன்று வைத்தியசாலை ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளது.

                                                                      பூர்த்தி செய்யப்பட்ட கட்டிடத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு இயந்திரம் நிறுவப்பட்ட பின்னர், கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவு 2020 ஜூன் 4

                                                                      ஆம் திகதி அதிகாரபூர்வமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம் அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னியராச்சி, சுகாதாரத்

                                                                      துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படைத் தலைமை பணியாளர் ஆகியோர் முன்னிலையில் வைத்தியசாலைக்கு

                                                                      ஒப்படைக்கப்பட்டன, இந் நிகழ்வுக்காக அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் அதிகாரிகள், மருத்துவ

                                                                      பணியாளர்கள் மற்றும். கடற்படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

                                                                      இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சுகாதார அமைச்சர், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு முப்படையினர்

                                                                      வழங்கிய பங்களிப்புக்கு தனது நன்றியைத் தெரிவித்ததோடு, இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் கடற்படை வழங்கிய சுகாதார சேவைகளைப் பாராட்டினர்.

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          மணல் கொள்ளையர்களுக்கு வைக்க பட்டுள்ள ஆப்பு

                                                                          மணல் கொள்ளையர்களுக்கு வைக்க பட்டுள்ள ஆப்பு

                                                                          கூடுதலான விலையில் மணலை விற்பனை செய்வோரின் மணல் நில உரிமையாளர்களுக்கான சுரங்க அனுமதிப்பத்திரம்

                                                                          இரத்துச்செய்யப்படும் என்று புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் அறிவித்துள்ளது.

                                                                          பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல இதுதொடர்பாக அறிக்கை ஒன்ரை விடுத்துள்ளார்.

                                                                          அனுமதிபத்திரம் பெற்ற மணல் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட கட்டணத்திலும்

                                                                          பார்க்க கூடுதலான விலைக்கு மணலை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்

                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                              பத்தாவது ஆண்டில் உச்சங்களை தொட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

                                                                              பத்தாவது ஆண்டில் உச்சங்களை தொட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

                                                                              பத்தாவது ஆண்டில் காலடி வைத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், புதிய உச்சங்களை தொட்டவாறு தனது அரசவை

                                                                              அமர்வினை கடந்த மே22,23ம் தேதிகளில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.

                                                                              2009, போரின் இறுதிக்கட்டத்தில் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற போராட்ட வடிவத்தின் ஊடாக

                                                                              ஜனநாயக வழியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவித்திருந்தனர். மதியுரைஞர்

                                                                              குழுவின் வழிகாட்டுதலுக்கு அமைய 2010ம் மே18ம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலாவது அரசவையினைக் கூட்டி இற்றைக்கு பத்து ஆண்டுகளை தொட்டுள்ளது.

                                                                              இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக அரசவை அமர்வினை நேரடியாக கூட்ட முடியாத நிலையில், இணையவழி தொழில்நுட்பத்தின் மூலம் கூட்டி, எத்தகைய

                                                                              சவாலான காலத்திலும் விடுதலைக்கான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்ற உறுதியினை வெளிப்படுத்தியுள்ளனர்.

                                                                              இந்த அமர்வின் தொடக்க நிகழ்வில் மத்திய தென்னமெரிக்க கயானா நாட்டு முன்னாள் அதிபர் Donald Ramotar அவர்கள் சிறப்பு

                                                                              அதிதியாக கலந்து கொண்டு, ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான போராட்டத்துக்கான தமது தேசத்தின் தோழமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

                                                                              முன்னராக மே18 தமிழீழத் தேசிய துக்க நாளின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் அதிபர்

                                                                              முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா அவர்கள் கலந்து கொண்டு, தமிழீழ விடுதலைப் போராட்டதுக்கான தனது தோழமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

                                                                              இதேவேளை அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் சிறப்பு பிரதிநிதிகளாக

                                                                              • Stephen J. Rapp (அமெரிக்க அரசாங்கத்தின் போர்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் சிறப்புத்தூதர் United States Ambassador-at-Large for War Crimes Issues )
                                                                              • Arvin Boolell (மொறிசியஸ் நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய எதிர்கட்சித்தலைவர்)
                                                                              • Professor David.L .Phillips ( அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழகம் (Director,Peace-building and Rights Program
                                                                              • Institute for the study of Human Rights- Columbia University,) பங்கெடுத்திருந்தனர்

                                                                              இவ்வாறு தனது பத்தாவது ஆண்டில் தனது கடந்த கால இராஜதந்திர செயற்பாட்டின் உச்சத்தினை வெளிப்பாடுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இடம்பெற்றிருந்தது.

                                                                              மேற்சபை உறுப்பினர்களுக்கும், அரசவை உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்றிருந்த கூட்டு கருத்துபரிமாற்றத்தின் போது, பல்வேறு செயற்திட்டங்கள் உரையாடப்பட்டிருந்தன. இதில்

                                                                              குறிப்பாக தமிழர்களுக்கான உலகளாவிய வங்கி ஒன்றினை நிறுவுவது, கொரோனா வைரஸ் நெருக்கடியான நாடுகளுக்கு

                                                                              தமிழர்களின் தோழமையினை வெளிப்படுத்தும் வகையில் தமிழர் மருத்துவ குழுவினை அனுப்புவது என செயற்திட்டங்கள் இனங்காணப்பட்டிருந்தன.

                                                                              உலக அரசியல் வெளியில் நாடுகடந்த அரசியல் (Transnational Politics) என்ற கோட்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த வந்த பாதை, அதன் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில்

                                                                              கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. ஒவ்வொரு அமைச்சுக்களும் தமது செயற்பாட்டு அறிக்கையினை சமர்பித்திருந்ததோடு,

                                                                              அரசவை உறுப்பினர் பலரும் தமது கருத்துக்களையும் சபையில் முன்வைத்திருந்தனர்.

                                                                              பல்வேறு அரசியல் பரிமாணங்களை கொண்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்பினை இணைய

                                                                              ஊடகங்கள் ஊடாகவும், சமூகவலைத்தளங்கள் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்ததோடு பலரும் தமது

                                                                              பாராட்டுதல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தெரிவித்து வருகின்றனர்.

                                                                              பத்தாவது ஆண்டில் உ
                                                                              பத்தாவது ஆண்டில் உ